1949இல் ஆர்.எஸ் .எஸ் . தந்த உறுதி

காந்தி, கோட்சே எனும் ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனரால் படுகொலை செய்யப்பட்ட வுடன், இந்திய அரசால் ஆர்.எஸ் .எஸ் . தடை செய்யப்பட்டது. தடையை நீக்க, ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர்கள், நேரு, பட்டேலுடன் பேரம் பேசினார்கள். இந்திய அரசு பல நிபந் தனைகளை முன் வைத்தது. ஆர்.எஸ் .எஸ் . ஒரு ரகசிய அமைப்பாக செயல்படக் கூடாது; அதற்கான கொள்கைத் திட்டங்களை வகுத்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என்பதெல்லாம் விதிக்கப்பட்ட நிபந்தனை. அந்த நிபந்தனையை ஆர்.எஸ் .எஸ் . ஏற்றுக் கெண்டு தனது அமைப்புக்கு சட்ட திட்டங்களை உருவாக்கியதோடு, அரசியல் நடவடிக்கைகளிலிருந்து முழுவதுமாக விலகி நிற்கும் என்றும், (ஆர்.எஸ் .எஸ் . ஸின் சட்ட திட்டப் பிரிவு 4(பி)) உறுதியளித்தது. அரசியலில் ஒதுங்கியிருப்பதாக உறுதி கூறிய அதே ஆர்.எஸ் .எஸ் . தான் இப்போது பிரதமர் வேட்பாளராக மோடியை நிறுத்தி யிருக்கிறது. இந்த விவரங்களை ‘இந்து’ நாளேட்டில் (அக்.8, 2013) வித்யா சுப்ரமணியன் விரிவாக பதிவு செய் துள்ளார். ஆர்.எஸ் .எஸ் . பார்ப்பனர் குருமூர்த்தி இதை மறுத்து ஒரு கட்டுரை எழுதினார். அதே நாளில் வித்யா சுப்ரமணியன், தனது கருத்தை மீண்டும் உறுதி செய்து, ஆதாரங்களை வெளி யிட்டார். பா.ஜ.க.வையும், ஆர்.எஸ் .எஸ் .ஸை யும் பசுத்தோல் போர்த்தி அகிம்சையும் அன்பும் நிறைந்தவர்களாக சித்தரிக்க ஒரு பார்ப்பனர் கூட்டம் புறப்பட்டிருக்கிறது. இவர்களின் முகத்திரை கிழித்தெறியப்படுவது மட்டும் உறுதி.

பெரியார் முழக்கம் 30102013 இதழ்

You may also like...