Category: பெரியார் முழக்கம் 2017
4.1.2017 அன்று மாலை 3 மணிக்கு ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், கொலையை ஆதரித்தும், ஒடுக்கப்பட்ட மக்களின் உடைமைகளை கொளுத்த வேண்டும் என்று பேசியதோடு, தேவர் சமூக இளைஞர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்ற முயற்சித்த தமிழ்நாடு தேவர் பேரவை தலைவர் முத்தையா என்பவரை கைது செய்யகோரியும், இது போன்ற ஜாதி சங்கங்களை தடை செய்யக் கோரியும், மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர்.மா.பா. மணிகண்டன் தலைமையில், மாவட்ட காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட பொறுப்பாளர் கணேஷ் குமார் புரட்சிப் புலிகள் அமைப்பு தோழர்கள் பீமாராவ், பகலவன், ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி உள்ளிட்டோர் சென்றனர். இதைத் தொடர்ந்து தலித் மக்கள் உடைமைகளை அழிக்க வேண்டும்; கொலை செய்ய வேண்டும் என்று வெறியூட்டும் பேச்சுகளை பேசிய முத்தையா...
மனு நீதி : ஒரு குலத்துக்கொரு நீதி- பெரியார், விலை-ரூ.10. தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு?-விடுதலை இராசேந்திரன் விலை-ரூ.30. இந்து மதப் பண்டிகைகள்-பெரியார். விலை-ரூ.30. கடவுளர் கதைகள்- சாமி. விலை-ரூ.20. இளைஞர்களே உங்களுக்குத் தெரியுமா? விலை-ரூ.20. உயர் எண்ணங்கள்-பெரியார். விலை-ரூ.30. பெரியாருக்கு எதிரான முனைமழுங்கும் வாதங்கள்-கொளத்தூர் மணி. விலை-ரூ.50. இவர்தான் பெரியார்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.20. திராவிட இயக்க வரலாற்றுச் சுவடுகள்-தஞ்சை மருதவாணன். விலை-ரூ.30 ஈழம் முதல் அணுஉலை வரை-கொளத்தூர் மணி. விலை-ரூ.30 பண்பாடு-சமூகம்-அரசியலில் ‘மனு’வின் ஆதிக்கம்- விடுதலை இராசேந்திரன், விலை-ரூ.10 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஜாதி ஒழிப்பு மலர். விலை-ரூ.100 பேய், பில்லி-சூன்யம், பொய். விலை – ரூ.30. ‘சமஸ்கிருத’ படையெடுப்பு. விலை – ரூ.30. விஞ்ஞானிகளை அழித்த மதவெறி. விலை – ரூ.30. வளர்ந்தது விஞ்ஞானம்; வீழ்ந்தன மூடநம்பிக்கைகள். செங்குட்டுவன்-விலை-ரூ.20. வரலாற்றில் பார்ப்பனிய வன்முறைகள்? அப்துல் சமது உரை- விலை-ரூ.10. தொடர்புக்கு: தலைமைக் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம்...
விஞ்ஞானி – கல்வியாளர் – இலக்கியவாதி என்று பன்முகத் திறமையோடு வாழ்ந்த முனைவர் வி.சி. குழந்தைசாமி, கடந்த டிசம்பர் 10ஆம் தேதி 87ஆம் அகவையில் முடிவெய் தினார். அண்ணா பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், இந்திரா தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தராக திறம்பட பணியாற்றியவர். சாகித்ய அகாடமி, பத்மஸ்ரீ விருதுகளைப் பெற்ற அவர் கோவை மாவட்ட கிராமம் ஒன்றில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு பெரியாரிஸ்ட். பெரியார் வாழ்ந்த காலத்தில் அவருடன் நெருக்கமாக இருந்த இன உணர்வாளர். பெரியார் மறைந்த 1973ஆம் ஆண்டில் சிந்தனையாளர் பேரவை, சென்னை மத்திய நூலகக் கட்டிடத்தில் நடத்திய பெரியார் இரங்கல் கூட்டத்தில் அவர் நிகழ்த்திய உரையை இங்கு வெளியிடுகிறோம். இந்த உரை நிகழ்த்தியக் காலத்தில் அவர் தமிழ்நாடு அரசின் தொழில்நுட்பக் கல்வி இயக்குனர். “தென்னகத்தின் ஒரு தலைவர்; ஒரு நூற்றாண்டு, திராவிடத்தின் வளர்ச்சிக்கே, தன்னைத் தந்த தன்னிகரில்லாத் தமிழர்;...
பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட 1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத் தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...
7 நீதிபதிகளடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு மதச்சார்பின்மை குறித்து அளித்துள்ள தீர்ப்பு மிகவும் முக்கியத்துவமானது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 1990ஆம் ஆண்டு பா.ஜ.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அபிராம் சிங், ‘இந்து ராஜ்யம்’ அமைப்பேன் என்று கூறி வாக்கு கேட்டார். மதத்தின் அடிப்படையில் வாக்கு கேட்பது தேர்தல் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு (பிரிவு 123(3)) எதிரானது. மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. தேர்தல் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் கூறியது. 1995இல் உச்சநீதிமன்ற மேல்முறையீட்டுக்கு வந்தபோது வழக்கை விசாரித்த ஜே.எஸ். வர்மா தலைமையிலான அமர்வு அளித்த தீர்ப்பு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “இந்துமதம் அல்லது இந்துத்துவா என்பது இந்திய உபகண்டத்தில் மக்களின் வாழ்க்கை நெறி, அதை மதமாகக் கருத முடியாது” என்று கூறிவிட்டது. சங்பரிவாரங்கள் ஆனந்தக் கூத்தாடின. அன்றிலிருந்து இன்றுவரை “இந்து என்பது வாழ்க்கை நெறி” என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்டது என்று வாதிட்டு வருகிறார்கள். இந்தத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் தெளிவான விளக்கம் தரவேண்டும் என்று சில...
திரைப்பட இயக்குனர் பா. இரஞ்சித், ஜன.11, ‘ஆனந்த விகடனில்’ பெண் விடுதலை குறித்து எழுதிய கட்டுரை யிலிருந்து சில பகுதிகள். நாம் சாதி சமூகமாக இருப்பதில் ஆண்களைப் போலவே பெண் களுக்கான பங்கும் அதிகம். ஆண்கள் சொல்கிற எதையுமே தட்டிக் கழிக்கிற பெண்கள், சாதி, மதம், அடிப்படை யிலான நம்பிக்கைகளை, உணர்வுகளை, சடங்குகளை மட்டும் இன்னமும் தாங்கிப் பிடிக்கிறவர்களாக ஏற்றுக் கொள்கிறவர்களாக இருக் கிறார்கள். அப்பா கண்டிப்பான முறையில் கற்றுத் தருகிற சாதியைவிட, நிதானமாக சாதிக்குக் கொடி பிடிக்கிற அம்மா ஆபத்தானவராக இருக்கிறார். சாதி என்பது தவறானது என்றே தெரிந்தாலும், அதைத் தவறு என்று தன் பிள்ளைகளுக்கு அம்மா உணர்த் தாமல் இருப்பது ஆபத்தானது தான். பகுத்தறிவுள்ள அம்மாக்களால்தான் சாதி, மத, பாலின பேதமற்ற சமூகத்தை உருவாக்க இயலும். * * * பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லும் வரை பெண் குறித்த என்னுடைய நம்பிக்கைகள், பார்வைகள் என அனைத்தும் கல்வியும்...
தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க கழகத் தலைவர் பொதுச் செயலாளர் ஜன. 2ஆம் தேதி, பகல் 11 மணியளவில் கலைஞரின் இல்லமான கோபாலபுரம் சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, இராசா, எ.வ. வேலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். கழகத்தின் வெளியீடுகள் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டன. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், செயலவை உறுப்பினர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் சென்றிருந்தனர். பெரியார் முழக்கம் 05012017 இதழ்
அவசர சூழலில் ‘ஆம்புலன்ஸ்’ வந்து நிற்பதுபோல் கழகத் தோழர்கள் உடனடியாக களமிறங்கிய செயல்பாடுகளும் கடந்த காலத்தில் நிகழ்ந்தன. அவற்றுள் சில: ஈரோடு மாவட்டம் ஆர்.எஸ். புதூர் பகுதியிலுள்ள சி.எம். நகரில் பொது சுடுகாட்டில் ஒரு அருந்ததியப் பெண் சடலத்தை எரியூட்ட ஜாதி ஆதிக்க வெறியர்கள் தடுத்தனர். சடலத்தை பாதி வழியில் நிறுத்திய நிலையில் செய்தி அறிந்த ஈரோடு, கோபி கழகத் தோழர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து போராடிய உள்ளூர் மக்களுடன் இணைந்து அதிகாரிகளிடம் வாதாடி வழக்கறிஞர்களையும் வரச் செய்து 7 மணி நேரம் போராடிய பிறகு ஜாதி வெறியர்கள் பணிந்தனர். தலித் பெண் சடலம் ஜாதி எதிர்ப்பு முழக்கங்களுடன் பொது சுடுகாட்டில் எரியூட்டப்பட்டது. 2016, ஏப்.27 அன்று இது நடந்தது. நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் காவல் நிலையத்தில் அக்டோபர் மாதம் ஆயுத பூஜை நாளில் பார்ப்பனர்களைக் கொண்டு யாகங்கள் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. செய்தி அறிந்து நாமக்கல் மாவட்ட கழகத் தோழர்கள்...
பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்; பெரியார் பயிலரங்கங்கள்; மூட நம்பிக்கை களுக்கு எதிரான பரப்புரைப் பயணம்; ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு; கண்டன ஆர்ப் பாட்டங்கள்; கைதுகள் என்று 2016ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் தொய்வின்றி களப்பணியாற்றியது. சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கி நிற்கும் சமூக சூழலில், பெரியார் இலட்சியங்களை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் – சமுதாயக் கவலையோடு உழைப்பு, நேரம், சொந்தப் பொருளை செலவிட்டு, பெரியார் கொள்கைப் பணிகளுக்காக தங்களை அர்ப் பணித்திருக்கிறார்கள். இத்தகைய தோழர் களின் கொள்கை உணர்வும் களப் பணிகளுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் உண்மை யான வலிமை என்று பெருமையோடு, கடந்த ஆண்டில் கழகத்தின் களப்பணிகள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. ஜனவரி 24 அன்று திருச்சியில் கழக செயலவை கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களை வழங்கினர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் உயர்...
சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்
தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...
புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துனை செயலாளர் பிலால் ராஜா வாழ்த்துரை வழங்கினார். கழக தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர்கட்சித் தலைவர் கு. ஜக்கையன் ,கழக மாநில பரப்புரை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலூர் சத்திய மூர்த்தி நன்றி தெரிவித்தார். காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் திருப்பதி, அழகர், பேரையூர் ராஜேஷ்,தளபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதிமுக நகர செயலாளர், இளங்குமரன் மதிமுக ஒன்றிய செயலாளர், ஜெயராஜ் ஆகியோர் ,தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழக தோழர்கள்...