கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலைஞர் இல்லம் சென்று நலம் விசாரித்தனர்

தமிழினத்தின் மூத்த தலைவர் கலைஞர் உடல் நலம் விசாரிக்க கழகத் தலைவர் பொதுச் செயலாளர் ஜன. 2ஆம் தேதி, பகல் 11 மணியளவில் கலைஞரின் இல்லமான கோபாலபுரம் சென்றனர். தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, இராசா, எ.வ. வேலு, மருத்துவர் எழிலன் ஆகியோர் உடனிருந்தனர். கழகத்தின் வெளியீடுகள்

மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் வழங்கப்பட்டன.

தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, தலைவர் வேழவேந்தன், செயலவை உறுப்பினர் அன்பு தனசேகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் உடன் சென்றிருந்தனர்.

பெரியார் முழக்கம் 05012017 இதழ்

You may also like...