Category: குடி அரசு 1935

தேசபக்தி

தேசபக்தி

  தேசபக்தி  என்னும்  பேரால்  இத்தாலியும்  அபிசீனியாவும்  போர்  தொடங்கி  இத்தாலி  மக்களும்  அபிசீனிய  மக்களும்  குளுமாயி  கோயிலில்  ஆட்டுக்குட்டி  பலியிடப்படுவதுபோல்  பதினாயிரக்கணக்காய்ப்  பலியிடப்பட்டு  வருகிறார்கள்.  அதை  (அந்த  யுத்தத்தை)  நீதியும்  சமாதானமும்  என்னும்  வல்லரசுகள்  பத்திரமாய்  காப்பாற்றி  வருகிறார்கள். இன்னும்  தேசபக்தி  வலுக்க  வலுக்க  1000ம்  10000 மாகி, 10000ம்  1000000ம்  கணக்கான  மக்கள்  பலியிடப்படப்போகிறார்கள். நீதியும்  சமாதானமும்  வலுக்க  ஆரம்பித்தால்  1000000  கணக்கான  மக்கள்  கோடிக்கணக்காக  பலியிடப்படப்  போகிறார்கள். ஆகவே  தேசபக்தியின்  பெருமைதான்  என்ன!  கடவுள்  பெருமைதான்  என்ன! அபிசீனிய  மன்னன்  தனது பலி  ஆடுகளைத்  தேசபக்தி  என்ற  சங்கை  ஊதித்தான்  கூப்பிடுகிறான். இட்டாலி  சர்வாதிகாரி  தன்னுடைய  பலி  ஆடுகளையும்  தேசபக்தி  என்கின்ற  சங்கை  ஊதித்தான்  அழைக்கிறான். ஆகவே  தேசபக்தி  என்பது  மக்களை  மக்கள்  பலிகொடுப்பதும்  மக்களை  மக்கள்  பலி  வாங்குவதும்  தவிர  வேறு  ஒன்றையும்  காணோம்.  அப்படி  வேறு  ஏதாவது  இருக்கக்  கூடுமானால்  அது  ஜான்சன்  என்னும் ...

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  நிதி  வசூல்

ஜஸ்டிஸ்  கட்சிக்கு  நிதி  வசூல்

  குண்டூர்  ஜஸ்டிஸ்கட்சி  மகாநாட்டில்  கட்சிப்பிரசாரத்துக்கு  ஒரு  லட்சத்துச்  சொச்ச  ரூபாய்  வரை  கையொப்பமிடப்பட்டிருக்கிறது.  இதில்  கட்சித்  தலைவர்  பொப்பிலி  ராஜா  அவர்கள்  25000 ரூபாய்க்குக்  கையொப்பமிட்டிருக்கிறார்.  இது  தவிர  பொப்பிலிராஜா  அவர்கள்  தலைமை  ஸ்தானம்  பெற்றது  முதல்  மாதம்  1க்கு  5000 ரூபாய்  முதல்  7500 ரூபாய்  வரை  மாதந்தோறும்  கட்சிக்காக  என்று  செலவழித்து  வந்திருக்கிறார்.  இவர்  கட்சியின்பேரால்  ஒரு  சின்னக்  காசு  பயன்  அடைந்தவர்  அல்ல  என்பதோடு  அவருக்கு  ஏற்கனவே  ராஜா  பட்டமும்,  அவர்  தகப்பனாருக்கு  மகாராஜா  பட்டமும்,  பல  லட்சக்கணக்கான  சொத்துக்களும்  வருவாய்களும்  இருந்து  வருகின்றன. மற்றும்  நான்கு  ராஜாக்கள்  தலைக்கு  15000 ரூபாய்  வீதம்  அதாவது  செல்லப்பள்ளி,  வெங்கிடகிரி,  மீர்சாபூர்,  பர்வாக்கிமிடி  ஆகியவர்கள் 6000 ரூபாய்க்கு  கையொப்பமிட்டிருக்கிறார்கள்.  மற்றும்  மந்திரிகளாகிய   தோழர்கள்  பி.டி.  ராஜன்  அவர்கள் 5000மும்,  திவான்பகதூர்  குமாரசாமி  செட்டியார்  5000மும்  கையொப்பம்  செய்திருக்கிறார்கள்.  ஆக  நபர்  7க்கு  ரூபாய் 95000 கையொப்பமாகி  இருக்கின்றது....

காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம்

காங்கிரஸ் வெற்றியின் வண்டவாளம்

  காங்கிரஸ்காரர்கள் சிதம்பரம், மதுரை முதலிய முனிசிபல் தேர்தல்களில் தாங்களே வெற்றியடைந்ததாகத் தப்பட்டை அடித்து மக்களை ஏமாற்றி வந்தார்கள். இந்த ஏமாற்றம் ஒரு 15 நாட்களுக்குக்கூட நிலைக்க முடியாத தன்மையில் வெற்றியின் வண்டவாளம் வெட்டவெளிச்சமாகிவிட்டது. சிதம்பரம் முனிசிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் அக்கிராசனராய் வர முடிந்தது என்பது ஒருபுறமிருந்தாலும் மற்ற காரியங்களில் ஜஸ்டிஸ் கட்சியே வெற்றி பெற்று வருகிறது. உதாரணமாக சிதம்பரம் முனிசிபாலிட்டியில் இருந்து செனட்டுக்குத் தெரிந்தெடுக்கப்படும் ஸ்தானத்துக்கு ஒரு ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் தோழர் வேணுகோபால் பிள்ளை அவர்களே ஒரு காங்கிரஸ் பார்ப்பனருக்கு விரோதமாய் நின்று பெருமித ஓட்டுகளால் வெற்றி பெற்று விட்டார். மற்றும் மதுரை முனிசிபல் கவுன்சிலில் “”காங்கிரஸ்காரர்களே வெற்றி பெற்று விட்டார்கள்” என்றும், “”மதுரை காங்கிரஸ் கோட்டையாக ஆகிவிட்டது என்றும், மதுரையில் ஜஸ்டிஸ் கட்சி மாண்டுவிட்டதால் சென்னை மாகாணம் முழுவதிலும் ஜஸ்டிஸ் கட்சி புதைக்கப்பட்டு விட்டது” என்றும் பார்ப்பனக் கூலிகளும் தோழர் சத்தியமூர்த்தி முதலிய பார்ப்பனர்களும், பார்ப்பனப் பத்திரிகைகளும்...

காங்கிரசின் யோக்கியதை

காங்கிரசின் யோக்கியதை

  இந்திய தேசிய காங்கிரஸ் ஏற்பட்டு சுமார் 50 வருஷமாகிறது. அது ஆரம்பமானது முதல் சுமார் 35 வருஷ காலம் வரையில், அரசாங்கத்தினிடமிருந்து பல உத்தியோகங்கள் பெறுவதும், உத்தியோகங்களுக்குச் சம்பளங்கள் உயர்த்தப்படுவதும், புதிய உத்தியோகங்கள் கற்பிக்கப்படுவதும், புதிய கோர்ட்டுகள், புதிய அரசாங்க ஆபீசுகள், புதிய இலாக்காக்கள், அவற்றிற்கு புதிய புதிய உத்தியோகஸ்தர்கள் முதலியவைகளை ஏற்படுத்த வேண்டுமென்று கோரி அந்தப்படி அதிகப்படுத்துவதும், இதற்கு வேண்டிய செலவிற்காக அரசாங்கத்தைக் கொண்டு பொது ஜனங்களின் மீது புதிய புதிய வரிகள் போடச் செய்து வசூலிப்பதும், இந்தப்படி புதிதாக போடப்படும் வரிகள் பணக்காரர்களையோ, பெரிய உத்தியோகம் பார்த்து அதிக சம்பளம் வாங்கும் பணக்கார உத்தியோகஸ்தர்களையோ பாதிக்காமல் பெரிதும் ஏழை மக்கள் சாதாரண மக்கள், தொழிலாளிகள், கூலிகள் ஆகியவர்களையே பாதிக்கும்படியான மாதிரியில் வரி விதிக்கப்படுவதுமான காரியங்களையே செய்து வந்திருக்கிறது. இவ்வளவு மாத்திரமல்லாமல் காங்கிரஸ் ஏற்பட்டு 35 வருஷ காலம் வரை இந்திய தேசீய காங்கிரஸ் மகாநாடு என்பவைகள் கூட்டப்பட்டவுடன்...

தற்கால அரசியல் நிலை

தற்கால அரசியல் நிலை

  தோழர்களே! தற்கால அரசியல், ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சிகள், ஜில்லா போர்டு தேர்தலும் அரசியல் கட்சிகளும் என்கின்ற தலைப்புகளானது வெவ்வேறாகக் காணப்பட்டாலும் அவற்றைப் பற்றிய விஷயங்கள் இன்றைய நிலையில் பெரிதும் ஒரே தத்துவமும் ஒரே கருத்தும் கொண்டதாகத்தான் இருக்கிறது. தற்கால அரசியலானது ஜஸ்டிஸ் காங்கிரஸ் கட்சி போராட்டங்களாகவும், அப்போராட்டங்கள் பெரிதும் தேர்தல்களையும், பதவிகளையும், உத்தியோகங்களையும் பற்றியதாகவும் இன்று அவை குறிப்பாக ஜில்லா போர்டு தேர்தல்களையும் பிரசிடெண்டு பதவிகளையும் பொருத்ததாகவுமே இருக்கின்றன. அரசியலும் கட்சிப் போர்களும் ஸ்தல ஸ்தாபனங்களில் என்று பிரவேசித்ததோ அன்று முதலே ஸ்தல ஸ்தாபனங்களின் யோக்கியதைகளும் நாணயங்களும் அடியோடு ஒழிந்து யோக்கியப் பொறுப்பற்றவர்களுக்கும் சுயநலக்காரர்களுக்கும் தாயகமாகவும் பிழைப்புக்கிடமாகவும் ஏற்பட்டு விட்டது. ஸ்தல ஸ்தாபனம் ஸ்தல ஸ்தாபன நிர்வாகம் சம்மந்தப்பட்ட வரையில் அரசியல் கட்சியும் தேசாபிமான சூட்சியும் பிரவேசிக்கக் கூடாது என்பது எனது வெகுநாளைய அபிப்பிராயம். சுமார் 15 வருஷ காலமாகவே இதை நான் வலியுறுத்துகிறேன். ஸ்தல ஸ்தாபன நிர்வாகங்களைப் பொறுத்தவரை...

இராசீபுரம் தாலூகா

இராசீபுரம் தாலூகா

தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு எந்தக் கட்சியிலும் நீங்கள் சேரக் கூடாது என்று சொல்ல வேண்டியவனாய் இருக்கின்றேன். உங்களுக்குள் தேசாபிமானம் என்கின்ற யோக்கியமற்ற சூட்சிக்கு நீங்கள் ஆளாகக் கூடாது. அது சோம்பேறிகள், காலிகள் ஆகியவர்கள் பிழைப்புக்கு ஏற்படுத்தப்பட்ட மோக்ஷ நரகம் என்பது போன்ற மூடநம்பிக்கையாகும். உங்களுக்கு இன்று சுயமரியாதை அபிமானம் தான் உண்மையாய் வேண்டும். தேசாபிமானம் என்பதைப்போல் அர்த்தம் தெரியாததும் சூட்சி நிறைந்ததுமான வார்த்தை அல்ல நான் இப்போது உங்களுக்குச் சொல்லும் சுயமரியாதை என்கின்ற வார்த்தை. நீங்கள் மனித சமூகத்தில் கீழானவர்களாய் இழி மக்களாய் கருதப்படுகிறீர்கள். மிருகங்களில் மிக மிகக் கீழாகவும், இழிவாகவும், கருதப்படுகின்ற நாய், கழுதை, பன்றி ஆகியவைகளை மதிப்பது போலக்கூட நீங்கள் மதிக்கப்படுவதில்லை என்று உங்கள் வரவேற்புத் தலைவர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்தீர்கள். அதைத்தான் நானும் சொல்லி அந்தக் காரணத்தாலேயே உங்கள் சமூகத்துக்கு முதலில் சுயமரியாதையையும், மனிதத் தன்மையையும் ஏற்படுத்த வேண்டும் என்று சொல்லுகிறேன். இதை நீங்கள் மனதில் கெட்டியாய்ப்...

பகிஷ்கரியுங்கள்!

பகிஷ்கரியுங்கள்!

  இராஜேந்திரப் பிரசாத்தைப் பகிஷ்கரியுங்கள்!! தென்னாட்டில் பார்ப்பனச் செல்வாக்கு ஒழிந்ததும், பார்ப்பனச் சூட்சியைத் தென்னாட்டு மக்கள் அறிந்து கொண்டார்களென்றும், தெரிந்த தென்னாட்டுப் பார்ப்பனர்கள் வடநாட்டிலிருந்து தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைக் கொண்டு வந்து, தாங்கள் இழந்த செல்வாக்கையும், சூட்சியையும் மீண்டும் தென்னாட்டில் நிலைநிறுத்த, தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களுக்குப் பார்ப்பனீய மந்திரோச்சாடனம் செய்வித்து, ஊர் ஊராக அழைத்து வந்து, பார்ப்பனரல்லாத கட்சியையும், இயக்கத்தையும், தலைவர்களையும் தூற்றித் தங்கள் சூழ்ச்சியை நிலைநிறுத்தவும் பணந் திரட்டவும் வருகிறார்கள். தென்னாட்டுப் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களே! சுயமரியாதைத் தோழர்களே! நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுக்கு உண்மையுள்ள பார்ப்பனரல்லாத இரத்தமும், சுயமரியாதை இரத்தமும் ஓடுமானால், தோழர் இராஜேந்திரப் பிரசாத் அவர்களைப் பகிஷ்கரித்து நமது வெறுப்பைத் தோழர் பிரசாத் அவர்கள் அறியும்படி செய்ய வேண்டும். சுயமரியாதைச் சங்கங்களும், பார்ப்பனரல்லாத சங்கங்களும் உடனே கூட்டங்கள் கூட்டி, பகிஷ்காரத் தீர்மானங்கள் நிறைவேற்றி வெளியிட்டுப் பகிஷ்காரஞ் செய்ய வேண்டுகிறோம். குடி அரசு  வேண்டுகோள் ...

மற்றொரு சூழ்ச்சி

மற்றொரு சூழ்ச்சி

  எச்சரிக்கை  எச்சரிக்கை தமிழ் மக்களிடத்தில் பார்ப்பனர்களுக்குச் செல்வாக்கற்றுப் போய்விட்டது என்பதும், பார்ப்பனர்கள் செய்து வந்த சூழ்ச்சியை மக்கள் உணர்ந்து கொண்டார்கள் என்பதையும், நமது பார்ப்பனர்கள் உணர்ந்து விட்டார்களே யானால் உடனே வேறு மாகாணத்தில் இருந்து யாரையாவது பிடித்து வந்து அவரை இந்திரன், சந்திரன், மகாத்மா என்றெல்லாம் ஆக்கி விளம்பரப் படுத்தி, அதன் மூலமாகத் தங்கள் சூழ்ச்சிக்கு ஆக்கம் தேடிக் கொள்ளுவது வழக்கம் என்பதை நாம் பல தடவை எடுத்துக்காட்டி வந்திருக்கிறோம். அதுபோலவே இப்போது சென்ற வருஷத்திய இந்திய சட்டசபைத் தேர்தல் நடந்ததில், அவர்கள் பெற்ற வெற்றியானது பார்ப்பனர்களின் சூழ்ச்சியையும், நாணயத்தையும் பளிங்கு போல் விளக்கிவிட்டதாலும், இப்படிப்பட்ட நிலைமை ஏற்படும் என்று கருதி, தோழர் ராஜகோபாலாச் சாரியார் போன்ற ஆசாமிகள் தாங்கள் காங்கிரஸ் நிர்வாகத்தில் இருந்து விலகிக் கொண்டதாக வேஷம் போட்டுத் தங்கள் ஜவாப்தாரித்தனத்தில் இருந்து நழுவிக் கொண்டாலும், தோழர் சத்தியமூர்த்தி போன்றவர்கள் மாகாணத் தலைவர்களாகிக் கண்டபடி உளறிக் கொட்டி, காங்கிரசின்...

இராசீபுரம் தாலூகா

இராசீபுரம் தாலூகா

தாழ்த்தப்பட்ட மக்கள் மகாநாடு தோழர்களே! இந்நாட்டில் இன்று எங்கு பார்த்தாலும் தாழ்த்தப் பட்டவர்கள் மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகள் கூட்டித் தாழ்த்தப்பட்ட மக்கள் குறைகளைப் பற்றி பேசப்படுகின்றது. தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்கள் சுதந்திரம் பெற வேண்டும் என்றும், சுயமரியாதை பெற வேண்டும் என்றும், இந்த 10, 18 வருஷ காலமாகத்தான் வெளிப்படையாகவும், தைரியமாகவும் கிளர்ச்சி செய்யச் சந்தர்ப்பமும் சௌகரியமும் பெற்றிருக் கிறார்கள் என்பதோடு, உங்களுக்கே இந்த உணர்ச்சியும் இப்போதுதான் ஏற்பட்டிருக்கிறது. இந்த நாட்டில், புராண காலங்களில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் மேம்பாட்டிற்காகப் பொதுவாக உழைத்ததாகவோ, உழைக்க ஆசைப்பட்ட தாகவோ காண முடியவில்லை என்றாலும், ஏதோ இரண்டொருவர் நந்தன், பாணன், சொக்கன் என்பதாகச் சிலர் தங்கள் தங்கள் சொந்தத்தில் முக்தி அடையவோ, கடவுளைத் தரிசிக்கவோ என்று பாடுபட்டதாகப் புராணங்களில் காணலாம். அவை வெற்றி பெற்றதாகக் கதைகள் இருந்த போதிலும் அவை நம்ப முடியாததும், சாதிக்க முடியாத பெரிய நிபந்தனைகள் மீது அதாவது நெருப்பில்...

தர்மராஜ்ய தர்பார்

தர்மராஜ்ய தர்பார்

  ஒரு  கனவு யார் எழுதினால் என்ன? 1.9.35ந்தேதி “”குடி அரசில்” “”தர்மராஜ்ய விளம்பரம்” என்று ஒரு கட்டுரையும், 15.9.35 ந் தேதி “”குடி அரசில்” “”தர்மராஜ்ய ஸ்தாபனம்” என்ற கட்டுரையும் எழுதி இருந்தேன். இப்போது “”தர்மராஜ்ய தர்பார்” என்ற கனவைப் பற்றி எழுதுகிறேன். தர்மராஜ்ய பூபதி, ராமராஜ, கிருஷ்ண தேவ, மஹாவீர, புஷ்யமித்ரவர்மன், ஆடையாபரண அலங்கிருதனாய், அப்ஸர ஸ்தீரிகள் முன் செல்ல, நாற்படைகள் அணி வகுத்து நிற்க, வேதப்பிராமணர் ஆசி கூற, பல சிற்றரசர்கள் புடை சூழ, தர்பார் மண்டபத்தில் பிரவேசித்தார்.  சபையில் இருந்த எல்லோரும் எழுந்து நின்று நமஸ்கரித்து, “”ஜயவிஜயீபவ! ஜயவிஜயீபவ!! ஜயவிஜயீபவ!!!” என்று ஜய கோஷஞ் செய்தனர். இரத்தினங்கள் ஒளி வீச ஒய்யார நடை நடந்து, அரசன் சிங்காதனத்தமர்ந்தனன். மந்திரிகள்@ வந்தனந் தந்தோம் மஹாராஜ்! அரசன்@ கல்யாண்! கல்யாண் மந்திரிகளே! மந்@ ராஜபூபதி! நமது தர்மராஜ்யம் ஸ்தாபனமாகி இன்றைக்கு இரண்டு தினங்களாகின்றன. நேற்றைய தர்பாரில் அரசியல் விஷயங்களைக்...

கீழ் மேல்  என் கை கீழே:  உன் கை மேலே

கீழ் மேல் என் கை கீழே:  உன் கை மேலே

  ஒரு பார்ப்பன யாசகக்காரன்:  ஐயா பிரபுவே யேதாவது தர்மம் கொடுங்கள் உங்களுக்கு மகா புண்ணியமுண்டு. பிரபு:  போம் வோய், போய் எங்காவது பாடுபடுமேன்.  மண்ணு வெட்டினாலும் தினம் 8அணா சம்பாதிப்பீரே.  கொட்டாப்புளியாட்டமாய் இருந்துகொண்டு வடக்கயிறாட்டமாக பூணூல் போட்டுக் கொண்டு பிச்சைக்கு வறீரே வெட்கமில்லையா? யாசகக்காரன்: என்னமோ பிரபுவே தங்கள் கை மேலாகி விட்டது, என் கை கீழாகிவிட்டது என்ன வேண்டுமானாலும் தாங்கள் சொல்லக்கூடும். பிரபு: மேலென்ன, கீழென்ன. இதற்காக நீர் ஏன் பொறாமைப்படுகிறீர்.  கடையில் 10அணா போட்டால் ஒரு ஜர்மன் (க்ஷவரக்) கத்தி கிடைக்கும். வாங்கிக் கொண்டுபோய் வாய்க்கால் கரையில் உட்காரும்; எத்தனை பேர் தலைக்கு மேல் உம்ம கை போகுது பாரும். உமக்கென்னத்துக்கு உம்ம கைக்கு மேல் நம்ம கை போகிறதே என்கின்ற பொறாமை. யாசகக்காரன்: சரி நான் போய் வருகிறேன்.  பகவான் இப்படி தங்களைச் சொல்லவைத்தான்,  நம்மளைக் கேள்க்க வைத்தான். தங்களை நொந்து என்ன பயன். பிரபு: ...

திருவள்ளுவர் நாஸ்திகர்  கடவுள் ஒழிய வேண்டும்

திருவள்ளுவர் நாஸ்திகர் கடவுள் ஒழிய வேண்டும்

  பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்.   அதாவது, “”இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து கெடுக உலகியற்றி யான்” என்று 1062 வது குறளாகச் சொல்லி இருக்கிறார். இன்று இவ்வுலகில் பிச்சை எடுத்து வாழும் மக்கள் எந்த மதத்தினராயினும் எந்தக் கடவுளை வணங்குபவராயினும் அவரவர்கள் அந்தக் கடவுளால் பிரப்பு விக்கப்பட்டவர்களாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய அவனவன் தாய் தகப்பன் முயற்சியால் பிறந்து அவனவன் புத்திக் கேட்டால் சோம்பலால் குறும்புத்தனத்தால் பிச்சை எடுக்கிறார்கள் என்று எந்த ஆஸ்திகனும் சொல்லமாட்டான். அப்படிச் சொல்வாராயின் எந்த ஆஸ்திகனும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்ய முன் வரவுமாட்டான்.  அது மட்டுமா, எந்த வேதமும் சாஸ்திரமும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்யும்படி சொல்வும் முன்வராது.  அவ்வளவோடு மாத்திரமா! எந்தக் கடவுளும், பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்தவர்களுக்கு, மோக்ஷமோ, சன்மானமோ கொடுக்கவும் முன்வராது. ஆகவே, பிச்சைக்காரர்களும் அவர்களது தொழில்களும் கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதுதான்...

கடவுள் சக்தி

கடவுள் சக்தி

  விதண்டாவாதம் நமது கடவுள்கள் சக்தி மிகவும் அதிசயமானதாகும். அதாவது நமது கடவுள்கள் உலகில் மக்களை அக்கிரமங்கள் செய்யவொட்டாமல் தடுக்க முடியாதாம். *  *  * ஆனால், மக்கள் சந்து பொந்துகளிலும், மூலை முடுக்குகளிலும் யாருக்கும் தெரியாமல் செய்த குற்றங்களையும் மனதினால் நினைத்த அக்கிரமங்களையும் பார்த்தும் ஒன்று கூட விடாமல் பதியவைத்தும், அதற்குத் தகுந்தபடி தீர்ப்புகூறி, தண்டனை கண்டனை கொடுக்கவும், அதற்காக நரகத்தில் ஆழ்த்தி வைக்கவும், மற்றும் பல ஜன்மங்கள் கொடுத்து, அவைகளில் கஷ்டப்படுத்திவைக்கவும் முடியுமாம். *  *  * நமது கடவுள்கள் சக்தி எவ்வளவு அதிசயமானது! *  *  * அதிலும் மகமதியர்களுடைய கடவுளும், கிறிஸ்தவர்களுடைய கடவுளும் மனிதன் செத்தபிறகு,  எல்லார் குற்றம் குறைகளையும் ஒன்றாய் பதியவைத்திருந்து, ஏதோ அதற்கு இஷ்டப்பட்ட நாளில் அதாவது, ஒரு குறிப்பிட்ட நாளில் எல்லா மக்களையும் அவர்கள் புதைக்கப்பட்ட புதை குளியிலிருந்து எழுப்பிக் கணக்குப்பார்த்து ஒரே அடியாய் தீர்ப்புச் சொல்லி விடுமாம். *  * ...

மதமின்றி மக்கள் வாழமுடியாதா?

மதமின்றி மக்கள் வாழமுடியாதா?

  (ஜோசப் மெக்காப் எழுதியதை அனுசரித்து எழுதப்பட்டது) மக்கள் வாழ்க்கை நாகரீகமாய் நடத்தப்பட மதம் வேண்டுமென்பது மதக்காரர்களுடைய வாதமாகும். இப்படிப்பட்ட வாதமும் தங்கள் தங்கள் மதம்தான் மனித சமூக நாகரீக வாழ்க்கைக்கு ஏற்றது என்பது ஒவ்வொரு மதக்காரர்களின் பிடிவாதமுமாகும். மதமில்லாமல் உலகில் எவ்வளவோ ஜீவகோடிகளும், பல மக்களும் வாழ்க்கை நடத்தவில்லையா என்று கேட்போமேயானால் அதற்கு பதில் சாதாரண அசேதன வாழ்க்கை வாழலாமே ஒழிய நாகரீகமான வாழ்க்கை நடத்தமுடியாது என்றும், அதற்காகத்தான் மதமில்லாவிட்டால் மக்கள் நாகரீக வாழ்க்கை நடத்தமுடியாதென்று சொல்லப்படுவதாகவும் சொல்லுவார்கள். அதற்காகவேண்டியே மதவாதிகள் மதத்தைப் பற்றி பிரசாரங்களும், விளம்பரங்களும் செய்து வருகிறார்கள். இப்படிப்பட்ட விளம்பரங்களும், பிரசாரங்களும், புராணங்களாலும், படங்களாலும், கதைகளாலும், நடிப்பு களாலும், கோவில்களாலும் மற்றும் பல சாதனங்களாலும் செய்து வருகிறார்கள். இவ்வளோவோடு நிற்காமல், கடவுளற்ற, மதமற்ற உலகத்தில் மக்கள் பல கொடுமைகளையும், தீமைகளையும், ஹிம்சைகளையும் அடைவது போலவும், அசுர ஆட்சியே நடைபெருவதாகவும் கட்டுகள் கட்டி மக்களைப் பயமுறுத்துகிறார்கள். மேலும்,  கொள்ளை...

காங்கிரஸ்  கட்சியினரும்

காங்கிரஸ்  கட்சியினரும்

  ஸ்தல  ஸ்தாபன  பரிசுத்தமும் ஸ்தல  ஸ்தாபனங்களில் பல  ஊழல்களிருப்பதாகவும்,  காங்கிரஸ்காரர்கள்  தேர்தலில்  வெற்றிபெற்று  நகர  பரிபாலன  சபைகளிலும்,  ஜில்லா  “போர்டு’களிலும்  அங்கத்தினர்களானால்,  அவ்வூழல்கள்  சூரியனைக்  கண்ட  பனிபோல  மறைந்து விடும்  என்று  காங்கிரஸ்  தலைவர்கள்  சிலர்  பிரசாரம்  செய்துவருவதை  நமது  வாசகர்கள்  அறிவார்கள்.  நேற்றை  “”இந்து”  பத்திரிக்கையில்  திருநெல்வேலி  ஜில்லா  “போர்டு’  தேர்தல்களைக்  குறித்து  தோழர்  சத்தியமூர்த்தி  ஒரு  அறிக்கை  வெளியிட்டிருக்கிறார்.  அந்த  அறிக்கையில்  ஸ்தல  ஸ்தாபனங்களைப்  பரிசுத்தப்படுத்தும்  வேலையை  காங்கிரஸ்காரர்கள்  கைக்கொண்டிருக் கிறார்கள்  என்றும்  ஆகையால்  அவர்களுக்கு  “ஓட்’டுக்  கொடுக்க வேண்டும்  என்றும்  கூறியிருக்கிறார்.  காங்கிரஸ்காரர்கள்  இவ்வேலையைச்  செய்வதற்குச் சிறிதேனும்  யோக்கியதையுடையவர்களல்லர்  என்ற  விஷயம்  அவர்களுடைய  பொது  வாழ்க்கையைக்  கவனித்து  வருபவர்களுக்கு  நன்கு  தெரியும்.  டாக்டர்  சுப்பராயனின்  மந்திரி  சபையை  ஆதரித்த  காலத்தில்  சென்னைக்  காங்கிரஸ்  கட்சியினர்  எவ்வளவு  பரிசுத்தமாயிருந்தார்கள்  என்பது  நாடறிந்து,  நாடு  நகைத்த  விஷயம்.  இன்றைக்கும்  காங்கிரஸ்காரர்  பலருடைய  யோக்கியதையும்,  பரிசுத்தமும்  எவ்வளவிலிருக்கிறதென்பது  ஒரு  சிலருக்கே ...

காங்கிரஸ்காரர்களின்  தகுடுதத்தம்

காங்கிரஸ்காரர்களின்  தகுடுதத்தம்

  கராச்சியில் காங்கிரஸ்காரர்கள் கூடிச் செய்த தீர்மானங்களில் ஒன்று சம்பளத் திட்டத்தைக் குறித்ததாகும். அதில் இந்தியாவிலே உயர்ந்த சம்பளம் எனப்படுவது ரூ.500க்கு மேற்படக் கூடாது என்றும், இப்பொழுது கொடுத்து வரும் சம்பளக் கொள்ளையைக் குறைக்க வேண்டுமென்றும் எந்தக் காங்கிரஸ் காரர்கள் பேசினார்களோ அதே காங்கிரஸ்காரர்கள் இன்று பம்பாய் நகரசபை (இணிணூணீணிணூச்tடிணிண)யில் உதவிக் கமிஷனர் பதவியிலிருந்து வரும் தோழர் எ.பி.சிவதாஷனி என்பவர் வாங்கி வந்த ரூ.1750 ஐ ரூ.2000மாக மாற்று வதற்காக ஒரு தீர்மானத்தைக் காங்கிரஸ்காரர்களே ஆதரித்தவர்களுமாய்ப் பொறுப்பாளிகளுமாயிருக்கிறார்கள் என்று அறிவீர்களேயானால், அக்காங்கிரஸ் காரர்களின் தகுடுதத்தத்தை என்னென்று நினைக்கிறீர்கள். அகில இந்திய சட்டசபையில் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள் சகலரும் கராச்சித் தீர்மானத்தின்படி சம்பளத் திட்டத்தை ரூ.500 றாகக் குறைக்க வேண்டும் என்று வாய் வீச்சு வீசுகிறார்கள். ஆனால் அவர்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் பம்பாயில் இன்று அவர்கள் அதிகாரவர்க்கத்தில் இருக்கிற தங்களது கட்சிக்காரர் என்ற ஒரு எண்ணத்திற் காகவே இம்மாதிரிக் காரியங்கள்...

   தேசாபிமானம்

  தேசாபிமானம்

  தேசாபிமானம், தேச பக்தி என்பவைகள் சுயநலச் சூட்சி என்றும், தனிப்பட்ட வகுப்பு மக்கள் தங்கள் வகுப்பு நலத்துக்கு ஆக பாமர மக்களுக்குள் புகுத்தப்படும், ஒரு (வெறி) போதையென்றும் பல தடவை நாம் சொல்லி வந்திருக்கிறோம். மற்றும் “”தேசாபிமானம் என்பது காலிகளுக்கு ஏற்பட்ட கடைசி ஜீவனமார்க்கம்” என்று மேனாட்டு அறிஞர் ஒருவர் கூறிய ஆப்த மொழி என்றும் பல தடவை எடுத்துக்காட்டி இருக்கிறோம். இவற்றை எந்த ஒரு தேசபக்தனும், தேசாபிமானியும் இதுவரை மறுக்கவே இல்லை என்பதோடு இவ்வாப்த வாக்கியங்கள் நிறைந்த ஆங்கிலப் புத்தகங்கள் பாடப் புத்தகங்களாகவும் வைக்கப்பட்டு வந்திருக்கின்றன. இனியும் யாருக்கு ஆவது இவற்றில் சந்தேகங்களிருக்குமானால் இன்றை அபிசீனியா, இத்தாலி யுத்த மேகங்களையும், இடியையும், மின்னலையும் பார்த்தால் கண்ணாடியில் முகம் தெரிவதுபோல் விளங்கும். மற்றும் தேசாபிமான விஷயமாயும், தேசங்களைக் காப்பாற்றும் விஷயமாயும் பல தேசக் காவலர்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற சர்வதேச பாதுகாப்புச் சங்கத்தின் யோக்கியதையைப் பார்த்தாலும் தெரியும். இளைத்தவனை வலுத்தவன் கொடுமைப்படுத்துவதும்,...

காங்கிரஸ்காரனுக்கும் ஜஸ்டிஸ்காரனுக்கும்  சம்பாஷணை

காங்கிரஸ்காரனுக்கும் ஜஸ்டிஸ்காரனுக்கும் சம்பாஷணை

  சித்திரபுத்திரன் ஜஸ்டிஸ்காரன்@ காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரபிரசாத் அவர்கள் சென்னைக்கு வரும்போது அவருக்கு உபசாரப் பத்திரம் படிக்கக் கூடாது என்று சென்னைக் கார்ப்பரேஷன்காரர்கள் தீர்மானித்தார்கள் அல்லவா? காங்கிரஸ்காரர்கள்@ ஆம்; ஜ@ அப்படியானால் அத் தீர்மானத்திற்குச் சென்னைவாசிகள் காங்கிரசையும், காங்கிரஸ் தலைவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், மரியாதை செய்ய இஷ்டம் இல்லை என்றும் தானே அருத்தம்? கா@ அப்படி அருத்தமாகுமா? கார்ப்பரேஷன் மெஜாரிட்டி கவுன்சிலர்கள் ஜஸ்டிஸ் கட்சிக்காரராய் இருப்பதால் ஜஸ்டிஸ் கட்சிக்காரருக்கு காங்கிரஸ் தலைவருக்கு மரியாதை செய்ய இஷ்டமில்லை என்று தான் அருத்தம். ஜ@ கார்ப்பரேஷனில் எந்தக் கட்சி மெஜாரிட்டியாய் இருந்தாலும் சரி, அவர்கள் செய்யும்  தீர்மானம் கார்ப்பரேஷன் தீர்மானம் என்று தானே அருத்தம்? கா@ ஆம் அது சரிதான். இருந்தாலும் அது சென்னை வாசிகள் தீர்மானம் என்று சொல்ல முடியுமா? ஒரு நாளும் முடியாது. ஜ@ ஏன் அப்படிச் சொல்ல முடியாது. கார்ப்பரேஷனில் மெஜாரிட்டியாய் இருக்கும் ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் சென்னை ஓட்டர்களால்...

சீட்டாட்டத்தின் தீமைகள்

சீட்டாட்டத்தின் தீமைகள்

  உண்மை விளம்பி முன்பு ஒரு தடவை சீட்டாட்டத்தின் ஒரு பகுதியைப் பற்றி ஆடி  N 6ந் தேதி “குடி அரசில்’ வெளியாயிருப்பது வாசகர்களுக்கு ஞாபகமிருக்கலாம்! ஆனால் இப்பொழுது மேற்படி விளையாட்டினால் ஏற்படும் மிக முக்கியமான கெடுதல்களைப் பற்றிக் கூறுவோம். அக்கெடுதல்கள் என்னவென்றால் @ பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. தேக ஆரோக்கியத்திற்குக் கெடுதலாயிருக்கிறது. தன் மரியாதையை இழக்க நேருகிறது. ஆகையால் இம்மூன்று அதி முக்கியமான தீமைகளையும் தெளிவாய் உலகுக்கறிவிக்க வேண்டியது எனது கடமையாய் விட்டது. சீட்டாடுவதால் பலவிதமான மார்க்கங்களில் பொருள் நஷ்டம் ஏற்படுகிறது. சீட்டாடும் செல்வச் சிகாமணிகள் பெட்டியில் பணமிருக்கிற வரையில் நோட்டு நோட்டாய் வெளியில் விடுவார்கள். பெட்டியிலுள்ள பணமும் எத்தனை நாட்களுக்குத்தான் வரும்! பணப் பெட்டியிலுள்ள கரன்ஸி நோட்டுகளும் ரொக்கம் சில்லரைகளும் சிறுகச் சிறுக வெளியே போய்க் கொண்டிருந்தால்  கொஞ்ச நாட்களுக்குள் பெட்டியும் காலியாய் விடுமென்பது திண்ணம். பிறகு பணத்திற்கு என்ன செய்வார்கள் என்றால் ஒன்று நான்காகப் பிராமிசரி நோட்டெழுதி...

ஈரோடு பெற்றோர் சங்கம்  கமிஷனருக்குப் பாராட்டு

ஈரோடு பெற்றோர் சங்கம் கமிஷனருக்குப் பாராட்டு

  தலைவர் அவர்களே! தோழர்களே!! இன்று இங்கு கூடியிருக்கும் கூட்டம் நம் நகரை விட்டுப் போகும் கமிஷனரைப் பாராட்டுவதற்காகக் கூடியிருக்கும் கூட்டமாகும். இதுவரை பல கூட்டங்களில் அவரைப் பாராட்டிப் பேசப்பட்டுவிட்டது. இன்று கமிஷனர் நம் முன் அவர் செய்த வேலைகளையும், செய்யவிருந்த வேலைகளைப் பற்றியும் பேசினார். இங்கு பேசிய பலர் கமிஷனர் வந்து பல காரியங்கள் செய்துவிட்டார் என்று புகழ்ந்து பேசினார்கள். ஆனால் கமிஷனர் வந்தபின்தான் இந்த வேலைகள் செய்ய முடிந்தது என்றால் சேர்மனும், கௌன்சிலர்களும் இதுவரை தூங்கினார்களா என்று நீங்கள் நினைக்க வேண்டாம். இம்மாதிரி வேலைகள் கமிஷனர்களால்தான் முடியும். கடைவீதி கமிஷனர் வந்தவுடன்தான் அகலமாகவிருக்கிறது என்று ஒரு நண்பர் பேசினார். கடைவீதி அகலம் செய்யும் விஷயம் சேர்மனோ, கவுன்சிலர்களோ செய்தால், செய்ய முயற்சித்தால் அடிவிழுகும். ஏனெனில் கடைவீதியில் பாதிக் கடைகள் கௌன்சிலர்கள் கடைகள். கடைவீதியில் பழக்கடை வைத்திருந்ததை எடுப்பதற்கு கமிஷனர் பட்ட கஷ்டங்கள் சொல்ல முடியாது. அதற்காக அவரை இரவில்...

ஈரோடு  வெங்கிட  நாயக்கர்  வைத்தியசாலைத்  திறப்பு  விழா

ஈரோடு வெங்கிட  நாயக்கர் வைத்தியசாலைத்  திறப்பு  விழா

  எங்களது  தகப்பனார்  பேரால்  இந்த  வைத்தியசாலை  ஒன்று  ஏற்படுத்த  வேண்டுமென்று  இப்பொழுதுதான்  நாங்கள்  வெளிப்படையாய்  காரியங்கள்  செய்தபோதிலும்,  வெகு  காலமாகவே  எங்கள்  வீட்டில்  ஒரு  அளவுக்கு  பொதுஜனங்களுக்கு  வைத்திய  வசதி  செய்து  வரப்பட்டிருக்கிறது. எனது  தமையனார்  அவர்களுக்கும் வைத்தியத்தில்  20,  30  வருஷ மாகவே  அனுபவமுண்டு.  அனேக நல்ல  மருந்துகள்  செய்யும்  முறைகளும்  பிரயோசிக்கும்  முறைகளும்  தெரியும்.  அனேக  மருந்துகள்  செய்யப்பட்டு  இப்போதும்  தயாராக  இருக்கிறது. இருந்தபோதிலும்  இந்த  வைத்தியசாலையானது  எங்களுடைய  முயற்சி யிலேயே  நன்றாக  நடைபெறுமென்று  நாங்கள்  கருதி  இதைத்  தொடங்கவில்லை. இதற்குப்  பொதுஜனங்கள்  ஆதரவு  பெரிதும்  வேண்டும்.  அதற்காகவே தான்  உங்களையெல்லாம்  நாங்கள்  வரவேண்டுமென்று  கோரினதும்,  நிலம்பூர்  ராஜா  அவர்களை  இந்த  வைத்தியசாலையைத்  திறந்து  வைக்க  வேண்டுமென்றும்  கேட்டுக்கொண்டதே  ஒழிய  விளம்பரத்திற்காக  அல்ல  என்று  வணக்கத்தோடு  கேட்டுக்கொள்கிறேன். பெரியோர்கள்  ஆசீர்வாதம்  என்பதில்  எனக்கு  எப்பொழுதும்  நம்பிக்கை  கிடையாது.  அவர்கள்  ஆதரவு  பெற  வேண்டுமென்பதற்கு  அவர்களுடைய  ஆசி  கூறப்பெறுவது ...

சிவில் ஜெயில்

சிவில் ஜெயில்

  கடன்காரர்கள் கடன் கட்ட முடியாமல் போவதற்கு ஆக அவர்களைச் சிறைப்படுத்துவது என்னும் வழக்கம் காட்டுமிராண்டித்தனமானது என்றும் அது ஒழிக்கப்பட்டு விடவேண்டும் என்றும் பல தடவை எழுதியும், பேசியும் வந்திருக்கிறோம். சிவில் ஜெயில் ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஆகவே தோழர் ஈ.வெ. ராமசாமி அவர்களும் முக்கியமாய் தான் சிவில் ஜெயில் செல்வதாய்ச் சொல்லி வேலூர் சிவில் ஜெயிலுக்குச் சென்று சில காலம் ஜெயிலில் இருந்துவிட்டும் வந்தார். (அக்கடன் பிறகு தீர்க்கப்பட்டு விட்டது) ஒரு மனிதன் கடன்காரனாகிவிட்டால் அதனால் அவனுக்கு ஏற்படும் கஷ்டங்கள் தவிர அவனைக் குற்றவாளிபோல் மதித்துச் சிறையில் அடைத்து வைப்பது என்பது முதலாளித்துவத்துக்கு அனுகூலமான காரியமே ஒழிய, சாதாரண ஜனங்கள், ஏழைகள் ஆகியவர்களுக்கு சிறிதும் அனுகூலமான காரியமாகாது. ஒரு நாணையமான  யோக்கியமான  சத்தியவானான மனிதன் கடன்காரனாகிவிடலாம். கடன்காரனாவதற்கு துஷ்டத்தனமோ குற்றமானதனமோ எதுவும் வேண்டியதில்லை. மேலும்  ஒருவன் கெட்டவனாகவோ, அயோக்கியனாகவோ இல்லாமலிருப்பதற்கு ஆகவே கடன்காரன் ஆனாலும் ஆகலாம். ஏனெனில் பணக்காரர்கள், பணம்...

ஸ்தல ஸ்தாபனங்களும் காங்கிரஸ்காரர்களும்

ஸ்தல ஸ்தாபனங்களும் காங்கிரஸ்காரர்களும்

  இந்திய தேசியக் காங்கிரஸ் என்பது பார்ப்பன ஆதிக்க ஸ்தாபனமென்றும், பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்க ஸ்தாபனமாய் வெகுகாலமாய் இருந்து வந்த மத ஸ்தாபனங்களுக்கு யோக்கியதையற்றுப் போனவுடன் அதற்குப் பதிலாய் காங்கிரஸ் ஸ்தாபனத்தைத் தங்கள் ஆதிக்கத்துக்குப் பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் நாம் 10, 12 வருஷ காலமாகவே சொல்லி வருகிறோம். அதற்கும் 7, 8 வருஷங்கள் முன்பு இருந்தே வெகுகாலமாகப் பிரபல காங்கிரஸ்வாதிகளாய் இருந்த டாக்டர் நாயர், சர்.பி.தியாகராய செட்டியார் போன்ற அறிஞர்களும் அந்தப் படியே சொல்லி காங்கிரசுக்கு எதிராகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் என்பதாக ஒரு ஸ்தாபனத்தைத் தென்னிந்தியா வெங்கும் ஏற்படுத்திப் பார்ப்பன ஆதிக்கத்துக்கும் சூழ்ச்சிக்கும் காங்கிரஸ் ஆயுதமாய் இருப்பதை வெளிப்படுத்தி வந்திருக்கிறார்கள். இது இம்மாகாண மாத்திரமல்லாமல் மற்ற சில மாகாணங்களிலும் பரவி இருக்கிறது. மேற்கண்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கம் ஆரம்பித்த காலத்தில் காங்கிரசுக்குத் தென்னிந்தியாவில் அடியோடு செல்வாக்கற்றுப் போய், செல்வமும், பொறுப்பும் வரி செலுத்தும் தன்மையும் உள்ள...

காங்கிரஸ் கொள்கை நாடகம்

காங்கிரஸ் கொள்கை நாடகம்

  பழைய காங்கிரஸ்காரன் காங்கிரஸ் உத்தியோகமேற்கும் விஷயத்தில் அபிப்பிராய பேத மேற்பட்டதற்காக சர்தார் சாதுல்சிங் அவர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து ராஜினாமாச் செய்து விட்டாராம். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் செல்வதை பற்றியோ காந்தியார் சம்மதித்து விட்டார். அந்தப்படி பலர் சட்டசபைக்குச் சென்றும் விட்டார்கள். சர்க்காரார் காக்காய் கருப்பு என்றால் காங்கிரஸ்காரர்கள் வெள்ளை என்று சொல்லிச் சர்க்காருக்குத் தொந்திரவு கொடுத்து அவர்களுடைய தீர்மானங்களையெல்லாம் எதிர்ப்பதே தங்கள் வேலை என்றால் இனி மாகாண சட்டசபைகளில் அந்த ஜபம் சாயாது. இந்த மாதிரி முன் காங்கிரஸ்காரர்கள் நடந்து கொண்ட விஷமத்தனமான காரணத்தாலேயே அரசாங்கம் நல்ல அரசாட்சிப் புரிய வேண்டும் என்னும் காரணத்துக்காக அனேக பாதுகாப்புகளை ஏற்படுத்திக் கொண்டது. எவ்வளவு தீர்மானங்களைத் தோற்கடித்தாலும் அவை குப்பைத் தொட்டிக்குத்தான் போகுமே ஒழிய தீர்மானத்தால் ஒன்றும் செய்துவிட முடியாது. ஆகவே அரசாங்கத்தைப் பல தீர்மானங்களில் தோற்கடித்துவிட்டதாகக் காங்கிரஸ்காரர்கள் கணக்குப் போட்டுக் கொண்டு இருக்க வேண்டியதும், “”பொறுப்பில்லாத சட்டசபை மெம்பர்கள் செய்த காரியத்தைச் சர்க்கார்...

சட்டியில் இருந்தால் தானே  அகப்பையில் வரும்   அபேதவாதி  எழுதுவது

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்  அபேதவாதி  எழுதுவது

  50 வருஷ காங்கிரசினால் இந்தியாவுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்று தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் காங்கிரஸ்காரர்களை ஒரு கேள்வி கேட்டார். அதற்கு எந்தக் காங்கிரஸ்வாதியும், எந்தக் காங்கிரஸ் பத்திரிகையும் யோக்கியமாய் பதில் சொல்ல முன்வரவில்லை. “”சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்.” வெறுங்கையில் முழம் போட்டால் கணக்கு ஏற்படுமா? என்பதுபோல் ஒன்றும் பதில் சொல்லுவதற்கு இடமில்லாமல் போய்விட்டது. இருந்த போதிலும் இக்கேள்விக்குப் பதில் சொல்ல காங்கிரஸ்காரர் களுக்குத்தான் யோக்கியதை இல்லாமல் போய்விட்டதே ஒழிய மற்றப்படி நமக்கு யோக்கியதை இல்லாமல் போகவில்லை. என்னவென்றால், முதல்முதலாக சும்மா “”சுந்தரமூர்த்தி சுவாமிகள் வேலை” செய்து கொண்டிருந்தவர்கள் எல்லாம் தேசபக்தர்களானார்கள். பச்சைப் பச்சையான வக்கீல்கள் எல்லாம் லோகமான்யர், மகாத்மா, தேசபந்து, தேசோத்காரணர், ராஜாஜி ஆனார்கள். மற்றும் வேறு வழியில் ஜீவிக்க முடியாமல் தங்கள் வாழ்க்கை இன்னது என்று குதிர்பாடு இல்லாத காரணத்தால் சர்க்காருக்கு ஜாமீன் கொடுத்துவிட்டு வாழ வேண்டியவர்கள் எல்லாம் பெரியதொரு...

எது பிற்போக்கான கட்சி?

எது பிற்போக்கான கட்சி?

7.9.35ந் தேதி தூத்துக்குடியில் கூடிய திருநெல்வேலி ஜில்லா அரசியல் மகாநாடு என்னும் பார்ப்பன ஆதிக்க மகாநாட்டில் தலைமை வகித்த தோழர் சி.ஆர்.ரெட்டி அவர்கள் காங்கிரசின் உண்மை சொரூபத்தையும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு உண்மையான மார்க்கத்தையும் வெட்டவெளிச்சமாய் கொட்டி விட்டார். இன்று காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் முக்கிய நோக்கமெல்லாம் ஜஸ்டிஸ் மந்திரி சபையைக் கவிழ்க்க வேண்டும், அதைப் பார்ப்பன ஆதிக்க மந்திரிசபையாக ஆக்க வேண்டும் என்பதேயாகும். அதற்காக வேண்டியே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி பதவிக்கு வந்தவுடன் காங்கிரஸ்காரர்கள் தங்கள் வேலைத் திட்டமாக அதி தீவிர தத்துவங்களை எடுத்துச் சொல்லி பாமர மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதை முக்கிய கருத்தாய் கொண்டு 15 வருஷ காலம் வேலை செய்தும் அது சிறிதும் பயன்படாமல் போனதால் அடியோடு அவற்றைக் கைவிட்டு விட்டு இப்போது எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியைக் கவிழ்த்து மந்திரி பதவிகளை அடைய வேண்டும் என்கின்ற கவலையில் இருக்கிறார்கள். காங்கிரசுக்காரர்கள் இந்த நிலைமைக்கு வந்தவுடன் தங்களுடைய பழைய பாடங்களை...

சமதர்மம்

சமதர்மம்

  தலைவரவர்கள் சமதர்மம் பொதுவுடமை என்பதைப் பற்றி பேசுவது குற்றமல்ல என்றும், ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருவர் தீர்ப்புக் கூறிவிட்டதாகச் சொன்னார். அந்த மாதிரி பல தீர்ப்புகள் இருக்கின்றன. ஆனால் அவை காகிதத் தீர்ப்பேயொழிய நடைமுறைத் தீர்ப்பல்ல. அந்தத் தீர்ப்புகளுக்கு எல்லா மேஜிஸ்ட்ரேட்களும் மதிப்புக் கொடுக்க வேண்டுமென்கிற அவசியமில்லை. அந்தந்த சந்தர்ப்பம் அந்தந்த இடத்து அவ்வப்போதைய நிலமை, சர்க்காரின் மனப்பான்மை, பேசிய ஆளின் தன்மை ஆகியவைகளைக் கவனித்துத்தான் அமுல் நடத்துவார்கள்.  ஜட்ஜி தீர்ப்பை விட சட்டமே பிரதானமானது. பொது உடைமை சட்ட விரோதம் என்று சர்க்கார் ஒரு பக்கத்தில் சட்டம் செய்துவிட்டு மற்றொரு பக்கம் பொது உடைமைப் பிரசாரம் குற்றமல்ல என்று தீர்ப்புச் செய்தால் இதில் ஏதாவது இரகசியம் இருக்கத்தான் வேண்டும். சட்டம் பொது ஜனங்களுக்கு, தீர்ப்போ குறிப்பிட்ட நபருக்கு. தலைவர் போன்ற வக்கீல்கள் பொது உடைமை பிரசாரமல்ல, ரஷ்ய பிரசாரமே செய்தாலும் எந்த ஜட்ஜியும் குற்றமல்ல என்றுதான் சொல்லுவார்கள். மற்றபடி உண்மையான...

   தர்மராஜ்ய ஸ்தாபனம்

  தர்மராஜ்ய ஸ்தாபனம்

  (ஒரு ஜோஸ்யம்) எவர் எழுதினால் என்ன? 1.9.35ந் தேதி குடி அரசில் தர்ம ராஜ்ஜிய விளம்பரம் என்று ஒரு கட்டுரை எழுதி இருந்தோம். இப்போது தர்மராஜ்ய ஸ்தாபனத்தைப் பற்றி ஒரு மானச ஜோசியம் எழுதுகிறோம். 1936ம் வருஷம் ஆகஸ்டு மாதம் 8ந் தேதி டெல்லியில் தர்மராஜ்ய ஸ்தாபனம் என்பதாக எங்கும் ஒரே முழக்கம். நாலு பேர் சேர்ந்த இடத்தில் எல்லாம் அதே பேச்சு. பத்திரிகைகளில் எல்லாம் அதே எழுத்து. தர்மராஜ்ய பூபதியாகத் தெரிந்தெடுக்கப்பட்ட ராமராஜ கிருஷ்ண தேவ புஷ்ய மித்திர வர்மனுடைய வம்ச பரம்பரைப் பழமையைப் பற்றியும், அவருடைய குலப் பெருமையைப் பற்றியும், அவரது குணாதியசங்களைப் பற்றியும், பத்திரிக்கைகளில் எல்லாம் வானமளாவிய புகழ் மாலைகள். தர்மராஜ்யத்தின் அமைப்பு, அதன் சட்ட திட்டங்கள், அதன் புதிய அதிகாரிகள், அவர்களின் யோக்கியதாம்சங்கள், அன்று நடைபெறவிருக்கும் மகுடாபிஷேக வைபவத்தின் சிறப்பு, நிகழ்ச்சிக் குறிப்பு, நகரில் அதற்காகச் செய்யப்பட்டுள்ள அலங்காரங்கள் முதலானவற்றைப் பற்றிய செய்திகளும், வர்ணனைகளும்,...

மடச் சட்டமும்

மடச் சட்டமும்

மதிப்பற்ற உத்தியோகமும் நமது நாட்டு சுயராஜ்ஜிய முறையைப் பற்றி பல தடவை எழுதி வந்திருக்கிறோம். சிறப்பாக இன்று ஜனநாயக முறை என்று சொல்லப் படுவதைக் கொண்ட எந்த அரசியலும் பாமர மக்கள் நன்மைக்குப் பயன்படாது என்று எடுத்துக்காட்டி வந்திருப்பதோடு குறிப்பாக நம் நாட்டுக்கு அவை அடியோடு பொருந்தாது என்றும் சொல்லி வந்திருக்கிறோம். பல மத, சாதி பேதங் கொண்ட சமூகமும், பலவித வாழ்க்கை லட்சியம், தொழில் முறை லட்சியம் முதலியவை கொண்ட சமூகமுமாகிய நம் நாட்டுக்குக் கண்டிப்பாக அப்படிப்பட்ட எந்தவித ஜனநாயக முறையும் பொருந்தாது என்பதே நமது அபிப்பிராயம். ஜனநாயகம் என்பது பொது ஜனங்களுக்காக, பொது ஜனங்களால் பொது ஜனங்களுடைய ஆட்சியால் நடத்தத் தகுதி உள்ள நாட்டுக்குத்தான் பொருத்தமுடையது என்று சொல்லப்படும். அப்படிப்பட்ட ஆட்சி அதன் உண்மைத் தத்துவத்தில் நம் நாட்டில் நடைபெற முதலாவது இன்னமும் அரசாங்கத்தார் ஒப்புக் கொள்ளுவது என்பது சுலபத்தில் எதிர்பார்க்கக் கூடியதல்ல என்பதோடு, நம் மக்களின் பிரதிநிதிகள்...

கேள்வியும் உத்தரமும்  தம்பிக்கும்  அண்ணனுக்கும்  தம்பிக்கும்  வாசக்காரிக்கும்  சம்பாஷணை

கேள்வியும் உத்தரமும் தம்பிக்கும்  அண்ணனுக்கும் தம்பிக்கும்  வாசக்காரிக்கும்  சம்பாஷணை

  சித்திரபுத்திரன் தம்பி@ அடே அண்ணா உன்னை சில கேள்விகள் கேட்க வேண்டும் என்று வெகுநாளாக ஆசை, தயவு செய்து பதில் சொல்லுகிறாயா? அப்புறம் மார்க்கு தருகிறேன். அண்ணன்@ அய்யா தம்பி கேள் பார்ப்போம். ஒரு கை பார்க்கிறேன். தம்பி@ அடேய் அண்ணா பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர் களைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா? அண்ணன்@ இது தானா பெரிய கேள்வி இதற்கு பதில் நம்ம வீட்டு வாசக்காரி அம்மா சொல்லி விடுவார்களே. தம்பி@ எனக்குத் தெரியவில்லையே. அண்ணன்@ சொல்லச் சொல்லுகிறேன் கேள். அம்மா வாசக்காரி  தம்பிக்கு சில கேள்விகளுக்குப் பதில் வேண்டுமாம் சொல்லுகிறாயா? வாசக்காரி@ தெரிஞ்ச வரையில் சொல்லுகிறேன். அண்ணன்@ தம்பி பார்ப்பனரல்லாதார்களில் அயோக்கியர்களைக் கண்டுபிடிக்க ஏதாவது தர்மா மீட்டர் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு பதில் சொல்லம்மா பார்ப்போம். வாசக்காரி@ இதுதானா ஒரு பிரமாதமான கேள்வி? சொல்லுகிறேன் கேளுங்கோ தம்பி! எந்த எந்தப் பார்ப்பனரல்லாதாரைப் பற்றி பார்ப்பனப் பத்திரிகைகள்,...

தோட்டத்தில்  பகுதி  கிணறா?

தோட்டத்தில்  பகுதி  கிணறா?

  பிரஞ்சு  தேசத்தில்  கத்தோலிக்க  குருமார்கள்  மாத்திரம்  47015  பேர்கள்  இருப்பதாக  ஒரு  பிரஞ்சு  அறிக்கை  கூறுகிறது.  அன்னாட்டு  ஜனத்தொகை  4  கோடி  இதை  வீகித்துப்  பார்த்தால்  குழந்தை,  குஞ்சு,  கிழடு, கிண்டு,  மொண்டி,  முடம்  உள்பட  850  உருப்படிக்கு  ஒரு  கத்தோலிக்க  குரு  இருக்கிறார்  என்று  தெரிகின்றது. கத்தோலிக்க  பிரிவு  போலவே  பிரஞ்சு  தேசத்தில்  இன்னம்  பல  பிரிவுகளும்  உண்டு.  அந்தப்  பிரிவுகளுக்கும்  இது  போன்ற  அளவுள்ள  குருமார்கள்  இருப்பார்களேயானால்  கிட்டத்தட்ட  2  கோடி  குருமார்களுக்கு குறையாமல்  ஆய்விடக்கூடும். அப்படியானால்  “”தோட்டத்தில்  பகுதி  பாகம்  கிணறு”  என்பது  போல  ஜனத்தொகையில் பகுதி  குருமார்களாகத்தான்  காணப்படும். பெண்களையும், குழந்தைகளையும் குறைத்துவிட்டால் “”ஒரு  கூடை  கல்லும்  பிடாரி  ஆனது”  போல  எல்லா  மக்களும்  குருமாராய்த்தான்  இருக்க  வேண்டும். இந்து  மதத்தில்  22  கோடி  மக்களில்  33 கோடி  தெய்வங்கள்  உண்டு.  இது  ஆள்  ஒன்றுக்கு  1லீக்  கடவுள்  ஆகிறது.  ஆனால்  இந்த  குருமார்கள் ...

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம்

  வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்றால் நம் பார்ப்பனர்களுக்கு இழவு சேதிகள் போல் காணப்படுகின்றது என்பது நமக்குத் தெரியும். வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் கோருவதே பார்ப்பனரல்லாத சமூகங்களின் (ஜஸ்டிஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்ப்பதையே பார்ப்பன சமூக (காங்கிரஸ் கட்சி) அரசியல் கிளர்ச்சியாகவும் இருந்து வருகின்றது என்பதை அனேக ஆதாரத் துடன் எடுத்துச் சொல்லலாம். இன்று இந்நாட்டில் மதங்களின் பேரால் உள்ள ஸ்தாபனங்களான இந்து, முஸ்லீம், கிறிஸ்துவ, சீக்கிய ஸ்தாபனங்களும், வகுப்புகளின் பேரால் உள்ள மேல் ஜாதி, நடு ஜாதி, கீழ் ஜாதிகள் என்று சொல்லப்படும் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார், தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்ட வகுப்பு ஸ்தாபனங்களும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே கண்ணாகக் கொண்டு கிளர்ச்சிகள் செய்வதை யாரும் மறுக்க முடியாது. அன்றியும், வெள்ளையாய்ச் சொல்ல வேண்டுமானால் காங்கிரஸ், ஜஸ்டிஸ், சுயமரியாதை, மிதவாதம் முதலாகிய கட்சிகள் என்பவைகளில் சிலது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை எதிர்த்தும், சிலது ஆதரித்தும், கிளர்ச்சி செய்வதைத்தான் முக்கியமாகவும் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகவும்...

தர்மராஜ்ய விளம்பரம்

தர்மராஜ்ய விளம்பரம்

  யார் எழுதினால் என்ன? “”சுயராஜ்யம்” “”சுயராஜ்யம்” என்று இதுவரை சொல்லிக் கொண்டு வந்த காங்கிரஸ்காரர்கள், கொஞ்சகாலமாக, “ராமராஜ்யம்’ “தர்ம ராஜ்யம்’ என்று  மாற்றி  மாற்றிச்  சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். கேட்கப் போனால், “”வெறும் பெயரில் என்ன இருக்கிறது. சுயராஜ்யம் என்றும் சொல்லலாம், ராம ராஜ்யம் என்று நாங்கள் சொல்லுவதும் அதுதான். குடி அரசு என்று வேண்டுமானால் நீங்கள் சொல்லிக் கொள்ளுங்கள். பெயரைப் பற்றி நமக்குள் சண்டை வேண்டாம். பின்னால் பார்த்துக் கொள்வோம்” என்று எல்லாம் ஒன்றுதான் என்று பொருள்படும்படி பதில் சொல்லுகிறார்கள். பெயரில் என்ன இருக்கிறது என்பது நாணயமான பேச்சாகாது. சீவக் கட்டைக்கு விளக்குமாறு என்றும் சொல்லலாம். திருவலகு என்றும் சொல்லலாம்! கோவிலில் கூட்டுவதும் குப்பைதான் என்றாலும் திருவலகு என்று எளிதில் அர்த்தம் விளங்காத பெயரைச் சொல்லி, சீவக்கட்டையின் தகுதிக்கு அதிகப்படியான மதிப்பை அதன் தலையில் ஏற்றி ஏமாற்றுவது சுலபமாயிருந்து வருகிறது. இதைப் போலவே, பார்ப்பான் ஐயனாகிப், பூசுரனாகி, மனிதத் தன்மையில்...

கோர்ட்டில் பிரமாணம்

கோர்ட்டில் பிரமாணம்

  சித்திரபுத்திரன் மேஜிஸ்ட்டேட்@ (சாக்ஷியைப் பார்த்து) உன் பேரன்ன? சாக்ஷி@ என் பேர் சின்னசாமிங்கோ. மே@ உன் தகப்பன் பேர் என்ன? சா@ என் தகப்பன் பேர் பெரியசாமிங்கோ. மே@ உன் வயது என்ன? சா@ என் வயசு 36ங்கோ. மே@ உன் மதம் என்ன? சா@ இந்து மதமுங்கோ. மே@ உன் ஜாதி என்ன? சா@ சாதியா? மே@ ஆமா. சா@ சாமி குடியான சாதிதாங்கோ. மே@ சரி, சத்தியமாய் சொல்கிறேன் என்று சொல்லு. சா@ சத்தியமாச் சொல்றனுங்கோ. மே@ நீ இப்ப சத்தியம் செய்திருக்கிறே, உண்மையைச் சொல்ல வேணும், எது உனக்கு நல்லா தெரியுமோ எதை நீ கண்ணில் பார்த்தாயோ அதைத்தான் சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் தண்டனை கிடைக்கும் தெரியுமா? சா@ சாமி அப்படியே ஆகட்டுங்கோ. நான் நேர்லெ பார்த்ததைத்தான் சொல்லணுமே? காதுலே கேட்டதைக்கூட பெரியவங்க சொன்னதைக்கூட சொல்லக் கூடாதா சாமி? மே@ நேரில் பார்த்ததை மாத்திரம் சொல்லு...

மதப்  போட்டி

மதப்  போட்டி

  யாரைப்பார்த்து யார் காப்பியடித்தார்? சித்திரபுத்திரன் மதங்கள் என்பவைகளுக்கெல்லாம் ஒரு கடவுள் இருந்தாக வேண்டும்,  மோக்ஷம், நரகம் இருந்தாக வேண்டும், கடவுள் தன்மை பொருந்திய அவதார புருஷர்கள், குருமார்கள் இருந்தாக வேண்டும். இவை இல்லாமல் உலகில் எந்த மதமும் இருக்க முடியாது.  இந்து மதத்துக்கோ இவைகள் மாத்திரம் போதாது. அதாவது பல கடவுள்கள் வேண்டும். பலவிதமான மோக்ஷங்கள் பலவிதமான நரகங்கள் வேண்டும். மற்றும் பலவிதமான பிறப்புகள், முன்பின் ஜன்மங்கள் வேண்டும், பலவிதமான அவதாரங்கள், பலவிதமான குருமார்கள் வேண்டும். இவ்வளவும் போராமல் கடவுளை நேரில் கண்டு மோக்ஷத்திற்குப் போன பலவிதமான பக்தர்கள் வேண்டும். இந்தக்காரியங்கள் சிறப்பாக இந்துமதத்தின் உட்பிரிவு மதங்களான சைவ மதம், வைணவ மதம் என்று சொல்லப்படும் இரண்டு உட்பிரிவு மதங்களுக்கும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்து வருகின்றன. பெயர்களைப் பொருத்தவரையில் சில மாறுதல்கள் இருக்கலாமே ஒழிய காரியங்களைப்  பொருத்தவரையில் ஏறக்குறைய ஒருவரைப்பார்த்து ஒருவர் காப்பியடித்தது போலவேதான் இருக்கிறது. உதாரணமாக வைணவத்தில் ராமாயணம்...

மூடநம்பிக்கை

மூடநம்பிக்கை

  வெள்ளிக்கிழமை விளக்கு வைத்த நேரம் சித்திரபுத்திரன் நகை வியாபாரி:  ஐயா, தாங்கள் என்னிடம் காலையில் காசுமாலை வாங்கிவந்தீர்களே அது தங்களுக்குத் தேவையா இல்லையா என்பதைத் தெரிவித்துவிட்டால் அதை வேறு ஒருவர் வேண்டுமென்று சொல்லி மத்தியானமிருந்து கடையில் காத்துக்கொண்டிருக்கிறார். அவருக்காவது கொடுத்துவிடலாம் என்று வந்திருக்கின்றேன். எனக்குப் பணத்துக்கு மிகவும் அவசரமாயிருப்பதால் தயவு செய்து உடனே தெரிவித்துவிடுங்கள். வைதீகர்:  செட்டியாரே, அந்த நகை தேவையில்லை.  வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வரும்போது பூனை குருக்கே போச்சுது, அப்பொழுதே வேண்டியதில்லை என்று தீர்மானித்துவிட்டேன்.  வீட்டில் பெண்டுகள் பார்த்து மிகவும் ஆசைப்பட்டு மாலையிலுள்ளக் காசை எண்ணிப்பார்த் தார்கள்.  அதில் 68காசுகளிருந்தது.  எட்டு எண்ணிக்கைக் கொண்டது எதுவும் எங்கள் குடும்பத்திற்கு ஆயி  வருவதில்லை.  அதனால் அவர்களும் உடனே கீழே போட்டுவிட்டார்கள். ஆனதினால் அது எங்களுக்கு வேண்டியதில்லை. நகை வியாபாரி:  அப்படியானால், தயவு செய்து கொடுத்துவிடுங்கள்.  வேறு ஒருவர் காத்துக்  கொண்டிருக்கின்றார். வைதீகர்:  ஆஹா, கொடுத்துவிடுவதில் ஆ÷க்ஷபனையில்லை.  காலமே நேரத்தில்...

ஜோசிய விதண்டா வாதம்

ஜோசிய விதண்டா வாதம்

  சித்திரபுத்திரன் வெள்ளைக்காரர்கள் ஜோசியத்தில் இந்தியர்களைப்போல் எத்தனை பெண்சாதி என்பதை அறிய இடம் இருக்குமா? ஃ  ஃ  ஃ திபேத்தில் இருக்கிற பெண்கள் ஜாதகத்தில் இத்தனை புருஷன் என்பதை அறிவதற்கு வசமிருக்கிறதுபோல் இந்தியாவில் விதவை மணமில்லாத பெண்களுக்கு இத்தனை புருஷர் இருக்கிறார்கள் என்று அறிய முடியுமா? ஃ  ஃ  ஃ இந்தியாவில் உள்ள மக்களுக்கு பூமி, கன்று காலி, வீடு வாசல், சொத்து இவ்வளவு என்று கண்டுபிடிக்க வசமிருப்பதுபோல் ரஷியர்களுக்கும் கண்டுபிடிக்க வசமிருக்குமா? பகுத்தறிவு (மா.இ.)  துணுக்குகள்  ஆகஸ்ட்டு 1935

ஜோசியம்

ஜோசியம்

  ஜோசியம் என்பது ஒரு மனிதனுடைய பிரந்த நேரத்தைக்கொண்டு அந்தச்சமயம் கிரகங்கள் இருந்த நிலைமைக்கேற்ப மனிதனுடைய பலா பலன்களைக் குறிப்பதென்பதாகும், இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் மனிதனின் வாழ்க்கை, அவனது பிரப்பு, இறப்பு, இன்பம், துன்பம், சுகம், அசௌக்கியம், செல்வம், தரித்திரம், தொழில், மேன்மை, கீழ்மை, புத்திர களத்திர தன்மை, எண்ணிக்கை, ஆயுள் முதலியவைகளைக் குறிப்பதாகும். இதைக் கூர்ந்து பார்ப்போமானால் மேல் கண்ட பலன்கள் ஜோசியத்தின் மூலம் உணரலாம் என்பது உண்மையாய் இருக்குமாயின் ஒரு மனிதனின் பிரந்த நேரத்தைக்கொண்டு அப்போதிருந்த கிரகங்களின் நிலையை அறிந்து பலன்களை கணிப்பது என்பதில் குறிப்பிட்ட ஜாதகனுடைய பலன் மாத்திர மல்லாமல் அவனது பலாபலனுக்குச் சம்பந்தப்பட்ட மற்ற அனேகருடைய பலன்களும் அதில் அத்துபடி ஆகிவிடவேண்டும் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் ஒரு ஜாதகனுக்கு செல்வம் வரவேண்டுமானால், வியாதி வரவேண்டுமானால், உத்தியோகம் வரவேண்டுமானால், சாவு வரவேண்டுமானால் அவை வருவதற்கு ஹேதுவான மாற்றங்களும் இந்த ஜோசியத்தின் மூலம் அறிந்தாகவேண்டும்.  இவனால்...

சம்பளக் கொள்ளை

சம்பளக் கொள்ளை

  இன்று நாடெங்கும் படித்த மக்களின் கஞ்சிக்கில்லாத் திண்டாட்டங்கள் நெஞ்சைப் பிளக்கின்றன. இக்காட்சி பாமர மக்கள் திண்டாட்டத்தைப் பார்க்கும் காட்சியைவிட மிக மிக பரிதாபகரமாகவே இருக்கிறது. படித்த மக்களென்போரும், பாமர மக்களென்போரும் 100க்கு 90 பேர்கள் பார்ப்பனரல்லாதார்களாகவே இருக்கிறார்கள். பாமர மக்கள் என்பார்களிலாவது பலருக்கு பட்டினி கிடந்து பழக்கமுண்டு. பலர் இரண்டு நாள் மூன்று நாள்களுக்கு ஒருமுறை சமையல் செய்கின்றவர்களாகவும் ஒரு நாள் செய்த சமையலில் தண்ணீரை ஊற்றி வைத்து தினம் தினம் அந்தத் தண்ணீரை வடித்து அதில் உப்பைப் போட்டுக் குடித்துவிட்டு, மறுபடியும் தண்ணீரை ஊற்றிப் பாத்திரத்தை நிரப்பி வைத்து மறு நாளைக்கு அந்த மாதிரியே செய்பவர்களுமாவார்கள். ஆனால் படித்தவர்கள் நிலை என்பதோ அப்படி இல்லை. படிப்புக்கு செலவாக வேண்டிய நாள் கு.கு.ஃ.இ. ஆனாலும் குறைந்தது 11 வருஷம் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இதற்குப் பணமோ பட்டணவாசியானால் 1000 ரூ. முதல் 1500 ரூபாயுக்குக் குறையாமலும் கிராமவாசியானால் 2000 ரூ....

சென்னை கலாசாலைகளில்

சென்னை கலாசாலைகளில்

  பார்ப்பனராதிக்கம் சென்னையிலுள்ள  உயர்தரக்  கலா சாலைகளான  தொண்டை  மண்டலம்  துலுவ  வேளாளர்  உயர்தரக்  கலாசாலை,  இந்து  தியாலாஜிகல்  ஹைஸ்கூல்,  பச்சையப்பன்  கல்லூரி  முதலியவிடங்களில்  பார்ப்பனர்,  பார்ப்பனரல்லாத  உத்தியோகஸ்தர்களின்  எண்ணிக்கை  வருமாறு; தொண்டமண்டலம்  துலுவ வேளாளர்  உயர்தர  கலாசாலை தலைமை  உபாத்தியாயர்  பார்ப்பனர்.  பி.ஏ.எல்.டி. பாஸ்  செய்த  உபாத்தியாயர்  13ல்  12  பார்ப்பனர்,  1  பார்ப்பனரல்லாதார்,  சக்கண்டரி  கிரேட்  பாஸ்  செய்த  உபாத்தியாயர்  27ல்  22 பார்ப்பனர்,  5 பார்ப்பன ரல்லாதார்கள்.  பண்டிதர்கள்  7ல்  3  பார்ப்பனர்,  4  பார்ப்பனரல்லாதார்,  டிரில்,  டிராயிங்  உபாத்தியாயர்கள்  4ல்  2  பார்ப்பனர்,  2  பார்ப்பனரல்லாதார்.  இங்கு மொத்தம் 52 உத்தியோகஸ்தர்களில் 40 பார்ப்பனர் 12  பார்ப்பனரல்லாதார். இந்து  தியாலாஜிக்கல்  ஹைஸ்கூல் தலைமை  உபாத்தியாயர்  பார்ப்பனர்.  பி.ஏ.எல்.டி.  பாஸ்  செய்த  உதவி  உபாத்தியாயர்கள்  14ல்  13 பார்ப்பனர்,  ஒரு  பார்ப்பனரல்லாதார்,  சகண்டரிகிரேட்  டிரெயினிங்  பாஸ்செய்த  உபாத்தியாயர்களில்  19ல்  15  பார்ப்பனர்,  4 பார்ப்பனரல்லாதார்,  பண்டிதர்கள்  6ல் ...

மறைமலையடிகளின்

மறைமலையடிகளின்

  “”அறிவுரைக்கொத்து” “”விடுதலை”யின்  அபிப்பிராயம் சில  நாட்களாக  சுயநலக்  கூட்டத்தாரிற்  சிலர்,  மறைமலையடிகளின்  “”அறிவுரைக்கொத்து”  என்ற  நூல்  சென்னை  சர்வகலாசாலை  “இண்டர்மிடியேட்’  வகுப்பு  மாணவர்களுக்கு  பாடப்  புத்தகமாக  வைத்திருப்பது  கண்டு,  அழுக்காறு  கொண்டு,  அற்பத்தனமான  கிளர்ச்சி  செய்து  வருவதை  நமது  வாசகர்கள்  அறிவார்கள்.  அவர்களுடைய  முக்கியமான  வாதம்,  அடிகள்  தம்முடைய  “”தமிழ்நாட்டவரும்,  மேல்நாட்டவரும்”  என்ற  ஒரு  கட்டுரையில்  பிராமணர் களுடைய  குற்றங்  குறைகளைப்  பற்றிக்  கூறியிருக்கிறார்கள்  என்பதாகும்.  பிராமணர்,  பிராமணரல்லாதார்,  சைவர்,  வைணவர்,  மாத்துவர்  முதலிய  சாதி,  சமய  வகுப்பினர்கள்,  பெரும்பாலான  ஏழை  மக்களின்  வறுமையையும்  அறியாமையையும்  நீக்குவதற்கு  வேண்டியன  செய்யாமல்  வாளா  இருப்பது  கண்டு,  அடிகள்  மனம்  புழுங்கி,  அவர்களைக்  கண்டித்து  எழுதியிருக்கிறார்கள்.  சில  விஷயங்களில்  பிராமணர்களைவிட   பிராமணரல்லாதார்  மிகக்  கொடியரா யிருக்கிறார்கள்  என்றும்  அடிகள்  அடித்துரைத்துக்  கூறியிருக்கிறார்கள்.  இவ்வுண்மையை  நமது  வாசகர்கள்  அறியும்  பொருட்டும்,  சுயநலக்  கூட்டத்தாரின்  கிளர்ச்சியினால்  ஏமாறாமலிருக்கும்  பொருட்டும்,  கிளர்ச்சியின்  காரணமான  “”தமிழ்நாட்டவரும்,  மேல்நாட்டவரும்”  என்ற ...

சபாஷ் திவான்பகதூர்

சபாஷ் திவான்பகதூர்

சென்னைக்குச் சமீபத்தில் காங்கிரஸ் பிரசாரத்துக்காக வரப்போகும் காங்கிரஸ் தலைவர் தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்களுக்கு சென்னை கார்ப்பரேஷன் சபையில் உபசாரப் பத்திரம் வாசித்துக் கொடுக்க வேண்டும் என்று கொண்டு வரப்பட்ட ஒரு தீர்மானத்தை தோழர் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் எதிர்த்துத் தோற்கடித்தார் என்கின்ற சேதியைக் கேட்டு மிகுதியும் மகிழ்ச்சியடைந்ததோடு திவான் பகதூர் அவர்களின் தீரத்துக்காக மெச்சி அவரை மிகுதியும் பாராட்டுகின்றோம். தோழர் ராஜேந்திர பிரசாத் அவர்கள் நாமறிந்த வரை ஒரு துணிந்த தியாகியேயாவார். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்களைப் போலவே காங்கிரசில் சேர்ந்ததின் பயனாய் உண்மையான கஷ்டமும் நஷ்டமும் அடைந்தவர். தோழர் ராஜகோபாலாச்சாரியாரிடம் அவர் அதிபுத்திசாலியாய் இருக்கும் காரணத்துக்காகவும், அதிக யுத்திசாலியாய் இருக்கும் காரணத்துக்காவும் காங்கிரஸ்காரர்கள் பலருக்கே அதிருப்தியும், வெறுப்பும் உண்டாகி யிருக்கலாம். ஆனால் ராஜேந்திரரிடம் அப்படி இருக்காது. எப்படியோ இவ்விருவர்களது வாழ்வானது அவர்களுக்கும் பிரயோஜனப்படாமல், பொது மக்களுக்கும் பிரயோஜனப்படாமல் பெரும் ஏமாற்றமாய் போய்விட்டதே ஒழிய மற்றப்படி பெரியார்களிலேயே...

பதினோறாவது ஆண்டு

பதினோறாவது ஆண்டு

  நமது குடி அரசுக்கு ஒன்பதாமாண்டு நிறைந்த பிறகு இப்போது இரண்டு வருஷம் கழித்து பதினோறாவது ஆண்டில், பதினோறாவது மாலையின் முதல் மலராக இவ்வார இதழ் ஆரம்பமாகின்றது. இதுவும் இந்தப்படி மே மாத முதல் வாரத்திலேயே ஆரம்பமாகி இருக்க வேண்டியதானது பல காரணங்களால் தவறிவிட்டது. கூடிய சீக்கிரம் குடி அரசின் பத்தாமாண்டு விழா நடத்த உத்தேசித்துள்ளோம். பத்தாவது ஆண்டிற்கும் குடி அரசு மாலையாய் இல்லாமல் “”புரட்சி” மாலையாகவும், “”பகுத்தறிவு” மாலையாகவும் வெளியாக்க வேண்டி ஏற்பட்டுவிட்டதால் அவ்விரண்டின் பேரால் உள்ள மலர்களை 10 வது ஆண்டு மாலையாக வைத்துக் கொண்டு இப்போது குடி அரசு பதினோறாவது ஆண்டு மாலையாக இதைப் பிரசுரிக்கின்றோம். குடி அரசு தோன்றிய காலம் முதல் நாளது வரை அது எப்படிப்பட்ட கொள்கையுடன் நிலவி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும், குடி அரசு இந்த பதினோறு வருஷ காலத்தில் எவ்வளவு கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகி வந்திருக்கின்றது என்பதைப் பற்றியும் வாசகர்களுக்கு ஞாபக...

வேண்டுகோள்

வேண்டுகோள்

  தோழர் சாமி வேதாசலம் அவர்கள் எழுதிய “”அறிவுக்கொத்து” என்னும் நூலை சென்னை சர்வகலாசாலை இண்டர்மிடியேட் வகுப்பு மாணவர்களுக்குப் பாட புத்தகமாக வைத்திருப்பது கண்டு பார்ப்பனர்கள் அற்பத்தன கிளர்ச்சிகளும், விஷமப் பிரசாரங்களும் செய்து கொண்டு வருகிறார்கள். அதற்குக் காரணம் அந்நூலில் “”தமிழ்நாட்டவரும், மேல் நாட்டவரும்” என்ற கட்டுரையில் பார்ப்பனர்களுடைய குற்றங் குறைகளைப் பற்றிக் கூறியிருப்பதாகும். ஆனால் அக்கட்டுரையில் பெரும்பான்மையான ஏழை மக்களின் வறுமையையும், அறியாமையையும் நீங்குவதற்கு வேண்டியன செய்யாமல் வாளாவிருப்பது கண்டு, கண்டித்து எழுதப்பட்டிருக்கிறது. ஆதலால் ஒவ்வொரு ஊரிலுள்ள சுயமரியாதைச் சங்கங்களும் பார்ப்பனரல்லாத சங்கங்களும் பார்ப்பனர்களுடைய விஷமப் பிரசாரத்தைக் கண்டித்து சர்க்காருக்குத் தீர்மானங்கள் அனுப்பும்படி வேண்டுகிறோம். குடி அரசு  வேண்டுகோள்  11.08.1935

போக்கிரித்தனமான புகார்

போக்கிரித்தனமான புகார்

  சென்ற வாரம் நமது “”குடிஅரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் தோழர் சுந்தராம்பாள் அம்மாள் விஷயமாகப் பார்ப்பனர்கள் பொறாமை கொண்டு தம் பத்திரிகைகளில் செய்து வரும் விஷமத்தனமான பிரசாரத்தைப் பற்றி எழுதியிருந்தோம். இவ்வாரம் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனப் பத்திரிகை களினுடையவும், போக்கிரித்தனமான புகார்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு மிகுதியும் வருந்துகின்றோம். நம் நாட்டு பார்ப்பனர்களை நாம் பகைக்கவோ, வெறுக்கவோ, சிறிதுகூட ஆசைப்படுவது கிடையாது என்பதோடு, எப்படியாவது அவர்களுடன் கலந்து ஐக்கியப்பட்டு தொண்டாற்ற ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்றே சிறப்பாக சிறிது காலமாய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் பார்ப்பன விஷமம் எல்லைக்கடங்காது. மேலும் மேலும் பெருகிக் கொண்டே  போவதுடன் இந்நாட்டில் இனி தமிழ் மக்கள் வாழ்வதா? அல்லது பார்ப்பனர் வாழ்வதா? என்கின்ற இரண்டிலொன்றைக் கரைகாண பார்ப்பனர் ஒருங்கே கூடி முனைந்து விட்டார்கள். அது பற்றி எதையுஞ் செய்யத் துணிந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. நாடகக் கலையில் ஒரு தமிழ் மாது...

குற்றாலத்தில் பொதுக் கூட்டம்

குற்றாலத்தில் பொதுக் கூட்டம்

  தோழர்களே! இன்று இங்கு பேசிய தோழர்களான பொன்னம்பலம், ஜீவானந்தம் ஆகியவர்கள் வெகு விளக்கமாகவும், எழுச்சியாகவும் பேசியதைக் கேட்டீர்கள். அவர்கள் பெரிதும் கடவுள், மதம், ஜாதி, செல்வவான்கள் ஆகிய தன்மைகள் ஒழிபட வேண்டும் என்று கருத்துப்படப் பேசினார்கள். இப்படிப் பேசியது உங்களில் அநேகருக்குப் பிடிக்காமலிருக்கலாம். சிலருக்கு மன வருத்தமும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் உங்களுக்கு வெறுப்போ, அதிருப்தியோ ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு பேசவில்லை. இன்றுள்ள இந்நாட்டு மக்கள் நிலையையும், உலக நிலையையும் உணர்ந்து பார்த்து இன்று நடைமுறையிலுள்ள மதம், ஜாதி, கடவுள் முதலியவைகள் ஒழியாமல் மனித சமூகத்துக்கு விமோச்சனமும், சாந்தியும் இல்லை என்பதை உணர்ந்து அதற்காகப் பேசினார்களே ஒழிய வேறில்லை. என்னைப் பொருத்தவரை நானும் அவைகள் ஒழியப்பட வேண்டும் என்று சொல்வதோடு அவற்றையெல்லாம் ஆதரிக்கும் அரசியல் கிளர்ச்சிகளும், அரசியல்களும் ஒழிய வேண்டும் என்றும் சொல்லுபவன். ஏனெனில் அரசியலும், அரசியல் கிளர்ச்சிகளுமே மேற்கண்டதான கெடுதிகளை ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன. இந்தப்படி சொல்லுவதற்காக...

காங்கிரசின் துரோகம்

காங்கிரசின் துரோகம்

  தோழர் சத்தியமூர்த்தி ஐயர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரானது முதற் கொண்டு தென்னிந்தியாவில் காங்கிரஸ் பிரசாரம் வெகு உற்சாகமாகவும் நடைபெறுகின்றது. காங்கிரஸ் பிரசாரம் என்றால் என்ன என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. அது கதரைப் பற்றியோ, தீண்டாமை விலக்கைப் பற்றியோ, இந்து முஸ்லீம் ஒற்றுமையைப் பற்றியோ, மது விலக்கைப் பற்றியோ, கல்வியைப் பற்றியோ அல்லது ஏழை எளிய மக்களின் துயரத்தைப் போக்குவதைப் பற்றியோ அல்ல. மற்றென்னவென்றால் “”ஜஸ்டிஸ் கட்சியார் தேசத் துரோகிகள்” “”அவர்கள்  மந்திரிகளாய் இருக்கிறார்கள்” எப்படியாவது அவர்களை மந்திரி பதவியில் இருந்து இறக்கிவிட  வேண்டும் என்பதேயாகும். இந்தப் பிரசாரம் இன்று தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார் முதற்கொண்டு எல்லாக் காங்கிரஸ்காரர்களும் செய்து வருகிறார்கள். இதுவே இன்று காங்கிரசின் கொள்கையாக ஆகிவிட்டது. இதற்கு ஆக மட்டில்லாத பொய்களைச் சொல்லி மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களது பொய்களை எடுத்துக் காட்டி எவ்வளவு அறிவுறுத்தினாலும் அவர்களுக்கு ஆசை வெட்கமறியாது என்கின்ற பழமொழிபோல் சிறிதும் வெட்கமின்றி மறுபடியும் மறுபடியும்...

சூக்ஷியும் விஷமமும் பொறாமையும்

சூக்ஷியும் விஷமமும் பொறாமையும்

  தோழர் சுந்திராம்பாள் இந்துமத தர்மப்படி கொடுமைப்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். இந்தியாவில் சிறப்பாகத் தென்னாட்டில் சமீபகாலம் வரை தேவதாசி வகுப்பு என்பதானது அவர்கள் எவ்வளவு ஒழுக்கத்துடனிருந்தாலும், எப்படி மதிக்கப்பட்டு வந்தது என்பதை ஐம்பது, அறுபது வயதுக்கு மேற்பட்ட மக்களைக் கேட்டுப் பார்த்தால் விளங்கும். மற்றும் அந்த வகுப்பார் எவ்வளவு வித்வானாயிருந்தாலும், எவ்வளவு மேதாவியாய், செல்வவானாய் இருந்தாலும் மற்றவர்கள் அவர்களைத் தாழ்த்தப்பட்ட மக்களை நடத்துவது போல் ஒருமையில் அதாவது அடி அடே என்று அழைக்க வேண்டியதும், மற்றவர்களை அவர்கள் பன்மையில், எஜமான்றே, சாமிகளே என்று அழைக்க வேண்டியது நட்டத்தில் நின்று கைகட்டி வாய் பொத்திக் கொண்டு பேச வேண்டிய ஜாதியாய் இருந்து வந்தது. உதாரணமாக கோவை ஜில்லாவில் அந்த வகுப்பைச் சேர்ந்த பல லக்ஷத்திற்கு அதிபதியாய் இருந்த ஒரு பிரபுவை நல்ல தர்ம சிந்தை உள்ள பெரியாரை அந்த வகுப்பு என்கின்ற காரணத்துக்காக பார்ப்பனர்களும், மற்ற குடியானவர்களும் கூட ஒருமையிலேயே அழைத்து வந்தார்கள்....

கடவுள் ?

கடவுள் ?

  என்ன சமாதானம்? கடவுள் என்ற வார்த்தை ஒரு குறிப்பற்றதாய் இருந்து வருகிறது. கடவுள் என்ற வார்த்தை தோன்றி எவ்வளவு காலம் இருக்கும் என்று யாராலும் சொல்லமுடியாது. அப்படியிருந்தும் கடவுள் என்றால் என்ன? என்று இன்று எப்படிப்பட்ட ஆஸ்திகராலும் சொல்லமுடிவதில்லை.  ஆகவே ஒவ்வொரு ஆஸ்திகனும், தனக்குப் புரியாத ஒன்றையே தன்னால் தெரிந்துகொள்ள முடியாததும், பிறருக்கு விளக்க முடியாததுமான ஒன்றையே, குரங்குப் பிடியாய்ப் பிடித்துக்கொண்டு கடவுள் கடவுள் என்று கட்டி அழுகிறான். கடவுளுக்கு லக்ஷணமோ, இலக்கியமோ, குறிப்போ ஏதாவதொன்று விளக்கமாய்ச் சொல்லக்கூடிய நிலைமை ஏற்பட்டிருந்தால், இவ்வளவு காலத்துக்குள்ளாக கடவுள் சங்கதியில் இரண்டிலொன்று, அதாவது உண்டு, இல்லை  என்கின்ற ஏதாவது ஒரு முடிவுக்கு உலக மக்கள் வந்திருப்பார்கள். கம்பர்கூட சீதையின் இடையை வர்ணிக்கும்போது, “”சீதையின் இடையானது கடவுள்போல் இருந்தது” என்று வர்ணிக்கிறார்.  அதாவது கடவுள் எப்படி “”உண்டோ, இல்லையோ” என்பதாகச் சந்தேகப்படக் கூடியதாய் இருக்கின்றதோ, அதுபோல் சீதையின் இடையானது கண்டு பிடிக்க முடியாத அவ்வளவு...

புராண மரியாதைக்காரனுக்கும்  சுயமரியாதைக்காரனுக்கும்

புராண மரியாதைக்காரனுக்கும்  சுயமரியாதைக்காரனுக்கும்

  சம்பாஷணை சித்திரபுத்திரன் விஷயம்: மோக்ஷமடைய காசிக்குப் போவது. சுயமரியாதைக்காரன்:  ஐயா தாங்கள் இவ்வளவு அவசரமாக எங்கு சென்றுவிட்டு வருகிறீர்கள்? புராண மரியாதைக்காரன்:  எங்கும் இல்லை, ஒரு இடத்தில் கொஞ்சம் கடன் கேட்டிருந்தேன்; அதற்காகப் போய் விட்டு வருகிறேன். சு.ம:  தங்களுக்குக் கடன் வாங்க வேண்டிய அவசியமென்ன? தங்கள் பிள்ளைகள் எவ்வளவோ நல்ல நிலையில் இருக்கும்போது நீங்கள் கூடவா கடன் வாங்கவேண்டும்? பு. ம:  நான் யாத்திரை போகப்போகிறேன்;  அதற்காகப் பணம் வேண்டும். பிள்ளைகளைக்கேட்டால் கொடுக்க மாட்டான்கள். சு.ம:  இப்பொழுது என்ன யாத்திரை வந்தது தங்களுக்கு? பு.ம:  கொஞ்ச காலமாகவே எனக்குக் காசிக்குப்போக வேண்டும் என்கின்ற அவா; கடவுள் செயலால் அது இப்போதுதான் முடிந்தது.  ஆதலால் காசிக்குப்போகிறேன். சு.ம: என்ன அய்யா இது அதிசயமாய் இருக்கிறது! இந்தப்பண நெருக்கடியான சமயத்தில் கடன் வாங்கிக்கொண்டு காசிக்குப்போகிறேன் என்று சொல்லுகிறீர்களே!  அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? பு.ம:  ஒரு அவசரமும் புதிதாய் வந்து விடவில்லை;...