சாரதா சட்டத்திற்கு அழிவா? வைதீகர்கள் கூக்குரல் காந்தியின் குட்டித் தலைவர்கள் இதற்கென்ன பரிகாரஞ் செய்கிறார்கள்?
இந்திய நாட்டின்கண் வாழும் மக்களே! “வைதீகம்” செய்யும் கொடுமைகளை பிறந்த நாள் முதல் இறக்கும் வரை கண்கூடாகக் காணும் மானிடர்களே! நம்மை ஆதிக்கத்தில் ஆழ்த்தி வைத்திருக்கும் கொடுமை களை கண்ணுற்றும், போதாக்குறைக்குப் பிராமணர்கட்குத் தாசராய் அடிமை கொண்டு சுற்றித்திரியும் தலைவர்களே! காந்தியின் குட்டித்தலைவர் கள் என்று சொல்லி, ஊர் ஊராய் பிரசங்கம் செய்யும் ராஜகோபாலாச் சாரியின் அடிச்சுவட்டை பின்பற்றும் தலைவர்களே! அடியேன் கீழே கொடுக்கும் உறையை நன்றாய் கவனித்து சுயமரியாதைக்காரர்கள் சொல்வது உண்மையா-பொய்யா என்று ஆராய்ந்து அதன்பின் வசைப் புராணம் தொடங்குவதை ஆரம்பியுங்கள். கூலிக்கு உண்மையையும், மானத்தையும் விற்கும் பேர்வழிகளைக் கொண்டு, பத்திரிகை நிரப்ப வேண்டி, வியாசம் எழுதும் சாம்பராணிகளே! கவனியுங்கள்! மந்தப் புத்தியை அகற்றி சொந்தப் புத்தியை கொண்டு பார்த்தால் அடியேன் சொல்லுவது உண்மை என்பது நன்கு புலப்படும்; இனி நாம் எடுத்துக் கொண்ட விஷயத்தை ஆராய்வோம். தென்னிந்திய நாட்டிலே தஞ்சை, திருச்சினாபள்ளி ஜில்லாக்களின் இந்திய சட்டசபை அங்கத்தினரான...
