Category: கருவூல கட்டுரைகள்

அம்பேத்கர் மதமாற்றத்தை வரவேற்று  அண்ணா எழுதியக் கட்டுரை

அம்பேத்கர் மதமாற்றத்தை வரவேற்று அண்ணா எழுதியக் கட்டுரை

அம்பேத்கர் இந்து மதத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டு 3 இலட்சம் மக்களுடன் புத்த மார்க்கம் தழுவியதை வரவேற்று அறிஞர் அண்ணா ‘திராவிட நாடு’ ஏட்டில் எழுதிய கட்டுரை. இந்து மதத்தைவிட்டு உளம் வெந்து கூட்டம் கூட்டமாக வெளியேறுகிற மக்களை, தனது அரவணைப்புக்குள் அன்புடன் தழுவிக் கொள்ளும் பணியினை, இப்போது புத்தநெறி ஆற்றி இருக்கிறது. ஒரே இடத்தில், ஒரே நாளில், ஆடவரும் பெண்டிரும் சிறார்களுமாகச் சேர்ந்து மூன்று இலட்சம் மக்கள், ஒரு மதத்தைவிட்டு வேறொரு மதம் புகுந்த சம்பவம், அதிலும் இந்து மதத்தைவிட்டுப் புத்த மதம் தழுவிய செய்தி, இதுவரை வரலாற்றில் இடம்பெற்றிருக்கவில்லை. இம்மத மாற்றச் செய்தியைச் சித்தரித்துள்ள ஒரு நிருபர், “உலகில் வேறு எங்கும் நடைபெறாத இந்தச் சம்பவம் நடைபெற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார். மூன்று இலட்சம் மக்கள் கூடியிருந்த காட்சியை யும், அந்த இடத்தின் பரப்பையும், அதே நிருபர், “நகருக்கு வெளியே 10 இலட்சம் சதுர அடி விஸ்தீரணமுள்ள மைதானம் என்றும், மைதானம்...

அறிவியலுக்கு எதிரான வினாயகன் கதை! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

அறிவியலுக்கு எதிரான வினாயகன் கதை! வினாயகன் பிறப்புப் பற்றி பெரியார் எழுதிய கட்டுரை.

சதுர்த்தி விநாயகர் எனும் கடவுள் இந்த நாட்டிலே உற்பத்தியான கடவுள் என்றும் சொல்ல முடியாது. வடநாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டு இங்கே இவ்வளவு கூத்தடிக்கப் படுகிறது. ஆற்றங்கரையோரம், அரசமரத்தின் கீழ், குளத்தங்கரையிலும், வீதிகளின் சந்தியிலும் வைக்கப்பட்டு இருக்கும் இந்தக் கடவுளின் யோக்கியதையைச் சொல்லப் போனால் அது ஏனைய `கடவுள்’களுக்கு மிகவும் வெட்கக் கேடாகும். அதாவது, இவருடைய பிறப்பின் வரலாறு அந்தப் பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்ட புராணங்களில் இருந்து பார்த்தாலும் கூட மிக மிக மோசமாக உள்ளது. விநாயகர் பிறப்புப் பற்றி மூன்று வரலாறு உள்ளது. நம் மக்களுக்கு இவற்றில் இருந்து `இது உண்மையில் கடவுள்’ என்று சொல்ல முடியுமா என்பதை அறிய முடியவில்லை. சிவன் என்ற கடவுளின் மனைவி பார்வதி குளிக்கப் போனாளாம். தான் குளிக்கின்றபோது யாராவது அந்த அறைக்குள் புகுந்துவிடக்கூடாதே என்று பயந்து குளிக்கும் அறைக்கு வெளியே காவல் வைப்பதற்கு ஒரு உருவத்தை உற்பத்தி செய்தாளாம். அந்த உருவத்தை எப்படி உற்பத்தி...

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஜாதி சங்க மாநாடுகளில் ஜாதியை எதிர்த்த பெரியார் (1)

ஆதி திராவிடர்களுக்கு யாராவது நன்மை செய்ய வேண்டுமென நினைத்தால், பொதுக் கிணறு, கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் நம்மோடு கலந்து வாழ்வதற்கு அனுமதிப்பதுதான்! பெரியாரியலுக்கு வலிமை சேர்க்கும் அண்மைக்கால வரவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றிருப்பது, பெரியாரிய ஆய்வாளர் வீ.எம்.எஸ். சுபகுணராஜன் தொகுத்து வெளியிட்டள்ள ‘நமக்கு ஏன் இந்த இழிநிலை’ நூலாகும். ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார் நிகழ்த்திய உரைகளைத் தொகுத்து சுமார் 400 பக்கங்களோடு இந்த நூல் வெளி வந்திருக்கிறது. இந்த நூலுக்கு தொகுப்பாசிரியர் 60 பக்கங்களுக்கு அய்ந்து அத்தியாயங்களைக் கொண்ட ஆழமான முன்னுரை எழுதியிருக்கிறார். இதில் ஜாதி சங்க மாநாடுகளில் பெரியார் எனும் தலைப்பில் எழுதியுள்ள பகுதியை இங்கு வெளியிடுகிறோம். ஜாதி சங்கங்களில் ஜாதியைக் கடுமையாக விமர்சித்துப் பேசக்கூடிய நேர்மையும் துணிவும் கொண்ட தலைவராக பெரியார் இருந்திருக்கிறார் என்பதை இதைப் படிக்கும்போது உணர முடியும். இப்போதும் ஜாதி ஒழிப்புக்கான கருத்தாயுதங்களாக இவை திகழ்கின்றன. பெரியார் சாதி சங்க...

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

தமிழ் இலக்கியங்களில் மூட நம்பிக்கைகள் – சு. அறிவுக்கரசு

பழந்தமிழ் இலக்கியங்கள் என்பதற்காகக் கொண்டாடப்பட வேண்டிய அவசியமில்லை. நல்ல கருத்துகளை ஏற்பதும் பழமையான மூடநம்பிக்கைகளைப் புறந்தள்ளுவதுமே அறிவார்ந்த சமூகத்தின் அடையாளமாக முடியும். தம் மொழி இழந்து, நம் மொழி பேசும் நிலைக்கு ஆளாகியும்கூட, பார்ப்பனர் தம் பழக்க வழக்கங்களை விடாது கைக் கொள்கின்றனர். தொல்காப்பியம் கூறிய சின்னங்களுக்குப் பதிலாக சிகரெட்டும், விஸ்கி தம்ளரும் தம் கையில் ஏந்தி இன்று இருந்தாலும் மார்பில் முப்புரி நூலை விடாது அணிந்து தம் உயர்வைக் காட்டியே வருகின்றனர் என்பதை மறக்க முடியுமா? தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா, ஆப்ரிக்கா, அண்டார்டிகா போன்ற இன்றைய நிலப் பகுதிகள் ஒரு காலத்தில் ஒன்றாக இணைந்து இருந்ததாகவும் அது கோண்ட்வானா என அழைக்கப்படலாம் எனவும் அதன் வடபகுதியில் ‘லெமூரியா’ இருந்தது என்றும் அதுவே தமிழ் இலக்கியம் கூறும் ‘நாவலந்தண்பொழில்’ என்றும் கூறுவர். 340 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல்கோள் ஒன்றினால் இந்நிலப்பரப்பில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டு லெமூரியா அழிந்ததாகவும்...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?(2)

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) நில உரிமையாளர் தனது நிலத்தை திரும்பக் கேட்டால் குத்தகைதாரர் மிகக் குறைவாக கேட்பது மூன்றில் ஒரு பகுதி நிலமோ அல்லது அதற்கு ஈடான பணமோ. நில உரிமையாளர் அதிகாரம் மிக்கவராக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி நிலத்தை வழங்கிவிட்டு மீதி நிலத்தை எடுத்துக் கொள்ளலாம். நில உரிமையாளரின் அதிகார பலம் குறையக் குறைய குத்தகைதாரரின் பங்கு கூடும். நில உரிமையாளர் உள்ளூர்க்காரராக இல்லாமலும் சாதி மற்றும் இதர பலம் இல்லாதவராக இருந்தால் ஒரு சென்ட் நிலம் கூட பெற முடியாது. ஆக, இந்தப் பேரத்தை தீர்மானிப்பது இவர்கள் இருவரது பலங்கள்தான். பதிவுபெற்ற...

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

தஞ்சை மாவட்டத்தில் பார்ப்பன-பண்ணையார் ஆதிக்கம்-முடிவுக்கு வந்தது எப்படி?

அசோகா பல்கலைக்கழகமும் (டெல்லி), அம்பேத்கர் பல்கலைக்கழகமும், திராவிடியனிஸம் என்ற தலைப்பில் சென்ற ஜனவரி மாதம் ஒரு கருத்தரங்கை ஒழுங்கு செய்திருந்தார்கள். இந்தக் கருத்தரங்கம் திராவிட இயக்கம் தோன்றி ஒரு நூற்றாண்டு ஆனதையொட்டி ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. அக்கருத்தரங்கில் பேராசிரியர் ஜெயரஞ்சன் வாசித்த கட்டுரையின் சுருக்கம். தமிழகம் ஒரு முன்னேறிய மாநிலமாகச் சமீப காலங்களில் அங்கீகரிக்கப்பட்ட போதும், நிலச் சீர்திருத்தம் இம்மாநிலத்தில் சரிவரச் செயல்படுத்தப் படவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டு ஒரு சாரரால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. இக்குற்றச் சாட்டின் அடிப்படையில் நோக்கினால், நிலப் பிரபுத்துவம் தமிழகத்தில் தொடர்கிறது என்றுதான் எவரும் ஊகிப்பர். அதன் விளைவாகப் பெரும்பான்மையான சாகுபடி நிலங்கள் குத்தகைக்கு அடைக்கப்பட்டும் வேளாண் வருமானத்தில் பெரும் பகுதி குத்தகையாக வசூலிக்கப்படும் சூழலும் நிலவ வேண்டும். குறிப்பாகக் காவிரி டெல்டா போன்ற செழிப்பான பகுதிகளில் இத்தகைய நிலச் சுவான்தார் முறை உக்கிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், நடைமுறை என்ன? நிலப் பிரபுத்துவம் பெருமளவு...

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

ஒரே மேடையில் பெரியார்-காமராசர் பங்கேற்ற விழா

“நாயக்கர் அடிக்கடி என்னைப் புகழ்ந்து  பேச வேண்டாம் என்று சொல்லுங்கள்.  அதனால் பல பேர்கள் எனக்கு எதிரிகள் ஆகின்றனர் என்று நண்பர் திரு.வி.க.விடம் ஓமந்தூரார் கூறி அனுப்பினார்.” 1955ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் வரதராஜூலு நாயுடு பிறந்த நாள் விழாவில் பெரியாரும் முதலமைச்சர் காமராசரும் ஒரே மேடையில்  பேசினார்கள். தமிழர் சமுதாயத்தின் உரிமைக்கும் விடுதலைக்கும் தன் ‘சுயத்தை’யே இழந்து உழைத்தவர் பெரியார் என்பதை வெளிப்படுத்தும் ஆழமான உரையை காமராசர் பிறந்தநாளை யொட்டி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. தலைவர் காமராசர் என்னைப் பற்றிக் குறிப்பிட்டார் அதற்கு எனது நன்றி. திரு. காம ராசரிடம் நான்அன்பு கொண்டு, என்னால் ஆன வழிகளில் ஆதரவு கொடுத்து வருகிறேன். காரணம், அவர் சில விஷயங்களில் தமிழன் என்கிற உணர்ச்சியோடு ஆட்சி நடத்துகின்றார். அதனால் அவருக்கு, பொறாமை காரணமாகக் காங்கிரஸ் வட்டாரத்திலும், வகுப்பு காரணமாக இரண்டொரு வகுப்பாரிடையிலும் சில எதிரிகள் இருந்துகொண்டு அவருக்குத்  தொல்லை கொடுத்து...

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை  இழிவு செய்கிறார்

ஆமைக் கறியிலிருந்து ஆஸ்திரேலியாக் கப்பல் வரை… சீமான் – பிரபாகரனை இழிவு செய்கிறார்

இன்றைக்கு சமூக வலைத்தளங்களிலும் இணையங்களிலும் பேசப்படுகின்ற ஆமைக் கறிக் கதை ஒன்றும் புதிது இல்லை. என்னுடைய ஞாபகப் பதிவுகள் சரியாக இருந்தால், இந்தக் கதை 2006, 2007களில் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. அன்றைக்கு அது ஆமைக் கறி அல்ல. ஈழத் தமிழர் வழக்கில் ‘ஆமை இறைச்சி’. சமாதான காலத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான தமிழ் இணைய ஊடகங்கள் திடீர் என்று அதிகரித்தன. இந்த ஊடகங்கள் குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் சில நோக்கங்களைக் கொண்டு செயற்பட்டன. அதில் முக்கிய நோக்கமாக தலைவர் பிரபாகரனை உல்லாச வாழ்க்கை வாழ்பவராக சித்தரிப்பது என்பதாக இருந்தது. ‘ஏழைப் பிள்ளைகள் களத்தில் சாக, தலைவர் பிரபாகரன் நீச்சல் தடாகத்துடன் கூடிய மாளிகையில் உல்லாச வாழ்க்கை வாழ்கிறார்’ என்று இந்த ஊடகங்கள் தொடர்ச்சியாக எழுதின. அப்படியே தலைவர் பிரபாகரன் ஆமை இறைச்சி விரும்பி உண்கிறார் என்றும், அதற்காக தாய்லாந்தில் இருந்து ஆமை இறைச்சி கொண்டுவரப்படுகிறது என்றும் பொய்யாக எழுதின. ஆமை...

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

இந்தியாவில் ஏன் புரட்சி நடக்கவில்லை? சுயமரியாதையும் பொதுவுடைமையும் (1)

மார்க்ஸ்-ஏங்கல்ஸ் சமதர்ம அறிக்கையை 1931லேயே ‘குடிஅரசு’ வெளியீடாக பெரியார் வெளியிட்டார். அதற்கு பெரியார் எழுதிய முன்னுரையில் வேறு நாடுகளில் இல்லாத இந்தியாவில்   கூடுதலாக ஜாதி என்ற அமைப்பு இருப்பதை எடுத்துக்காட்டி ஜாதி முதன்மையானதாகவும் பணக்கார – ஏழை தத்துவத்துக்குக் கோட்டையாகவும் இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டி யுள்ளார். பெரியார் தீட்டிய முன்னுரை: தற்காலம் உலகில் ரஷியாவிலும், ஸ்பெயினிலும், மற்றும் சைனா முதலிய இடங்களிலும் சமதர்மம், பொதுவுடைமை தர்மம் ஆகியவைகளின் பேரால் அரசாட்சிகளும் கிளர்ச்சிகளும் நடைபெற்று வருவது யாவரும் அறிந்த ஒரு  உண்மையாகும். இவ்வுணர்ச்சியானது ரஷியாவில் தான் முதல் முதல் தோன்றியதாக நமது மக்களில் அனேகர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். சமதர்ம உணர்ச்சி சம்பந்தமான சரித்திரத்தைக் கவனித்து ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இக்கருத்து சரியானதல்ல என்பதாகத் தோன்றும். ஏனெனில், உலகில் சமதர்ம உணர்ச்சி என்பதானது பல நூற்றாண்டு களுக்கு முன்பே தோன்றியிருப்பதற்கு அத்தாட்சிகளிருக்கின்றன. சமதர்ம உணர்ச்சி ஒரு எண்ணமாய் ஏற்பட்டு அதன் தத்துவங்களைப் பற்றியும், கொள்கைகளைப் பற்றியும்...

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம்   பேராசிரியர் அருணன்

தமிழகத்தில் வைகுண்ட சுவாமிகள் நடத்திய வைதீக எதிர்ப்பு இயக்கம் பேராசிரியர் அருணன்

ஜாதி தீண்டாமை பார்ப்பனிய எதிர்ப்புடன் தமிழ்நாட்டில் பெரியாருக்கு முன்பே 1833இல் இயக்கம் தொடங்கியவர் வைகுண்டசாமி. அவரது இயக்கத்தின் வழி வந்தவர்களுக்கு தலைமை தாங்கும் பால பிரஜாதிபதி அடிகளார் ‘அய்யா’ வைகுண்டசாமி வழி வந்தவர்களை தனி மதமாக  அறிவிக்க வேண்டும்; அவர்கள் ‘இந்துக்கள்’ அல்லர் என்று வலியுறுத்தி வருகிறார் கருநாடகத்தில் ‘லிங்காயத்து’க்களை தனி மதமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் முன் வைத்த கோரிக்கைக்காக ஆர்.எஸ்.எஸ்.சின் எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். வைகுண்ட சாமிகளின் வரலாற்றை சுருக்கமாக அறிமுகப் படுத்துகிறது இக்கட்டுரை. கன்னியாகுமரிக்கு அருகேயுள்ள பூவண்டன் தோப்பு (சாஸ்தான் கோவில்விளை என்றும் சாமிதோப்பு என்றும் கூறுவர்) எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டில் பிறந்தவர் வைகுண்ட சுவாமிகள். இவருக்கு பெற்றோர்கள் வைத்த பெயர் முடிசூடும் பெருமாள் என்பது. அந்தக் காலத்தில் மன்னர்கள் அல்லது உயர்சாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை தாழ்ந்த சாதியினர் வைத்துக் கொள்ளக் கூடாது என்றிருந்தது. எனவே இப்படிப் பெயர்...

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

விதிகளைப் பின்பற்றாத வேதாந்த குழுமம்

தூத்துக்குடியில் போராட்டம் தொடங்கிய முதல் 4 நாட்கள் கழிந்த உடன் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும், தூத்துக்குடி கோட்ட வளர்ச்சி அதிகாரியும் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்துக்குள் 7 இடங்களிலும், அதைச் சுற்றி உள்ள 8 கிராமங்களிலும் நிலத்தடி நீரை எடுத்து சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு நிலத்தடி நீர் மாசுபட்டு இருந்தது தெரிய வந்தது. அதாவது அதிக அளவு ஈயத் தாது தண்ணீரில் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மடத்தூர், காயலூரணி, தெற்கு வீர பாண்டியபுரம், குமரெட்டியபுரம், சில்வர்புரம், பண்டாரம் பட்டி, மீளவிட்டான் ஆகிய கிராமங்களில் இவ்வாறு நிலத்தடி நீர் மக்களின் உடல்நலத்தை கெடுக்கும் வகையில் மாசுபட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டு, கிராம மக்களிடம் இந்த தண்ணீரை பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கை செய்து இருக்க வேண்டும். ஆனால், அது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியே வரும் வரை இரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்...

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் போராட்டம் கடந்து வந்த பாதை…

ஸ்டெர்லைட் ஆலை தொடங்கப்பட்டது மற்றும் அதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள், நடைபெற்ற போராட்டங்கள்: 1992 குஜராத், கோவா, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ஸ்டெர்லைட் ஆலை விரட்டி அடிக்கப்பட்டது. மராட்டிய மாநிலம் இரத்தினகிரி மாவட்டத்தில் இந்த ஆலையை அமைக்க அரசாங்கத்தால் 500 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மக்கள் ஆலையை அடித்து நொறுக்கினர். 15.7.1993 – இரத்தினகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்டெர்லைட் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட்டார். 1.8.1994 – தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க அனுமதித்தது. தொடர்ச்சியாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கியது. 16.1.1995 – மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனம் அமைச்சகம் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கியது. 14.10.1996 – தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இந்த தொழிற்சாலை இயங்க அனுமதி வழங்கியது. 20.8.1997 – ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகேயுள்ள தமிழ்நாடு மின்சார வாரிய கிளை நிலைய ஊழியர்கள், ஸ்டெர்லைட்...

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

மரணத் தருவாயிலும் பயணத்தை நிறுத்தாதவர்!

பெரியாருக்கு 19.12.1973 அன்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. 20.12.1973 அன்று பொது மருததுவமனையில் சேர்க்கப்பட்டார்கள். 21.12.1973 அன்று திருவண்ணாமலையில் பெரியார் பேசுவதாக இருந்தது. 30ந் தேதி மாலை சுற்றுப்பயணத்தை எல்லாம் இரத்து செய்து விடலாமே என பெரியார் அவர்களிடம் கேட்டேன். ‘ஏன்?’ எனக் கேட்டார். “அய்யா அவர்களுக்கு உடல்நலம் சரியாக இல்லையே. டாக்டர்கள் பயணம் செய்யக் கூடாது எனச் சொல்லுகிறார்களே. அதனால்தான்  கேட்கிறேன்” எனச் சொன்னேன். எவ்வளவு நெருக்கடியிலும் நிகழ்ச்சிகளை இரத்து செய்ய விரும்பாத பெரியார், “கூட்டத்தில் பேசப் போவது நான் தானே! நீயோ, டாக்டர்களோ அல்லவே? போய் வேலையைப் பார்” எனக் கடுமையாகச் சொல்லிவிட்டார்கள். பெரியாருடைய முடிவுக்கே காரணமான நோயில் சிக்கி இருந்தபோதுகூட மரணத்தைச் சந்திக்கும் மூன்று நாட்களுக்கு முன்புகூட தன் சுற்றுப் பயணத்தைத் தொடர்வதில் எவ்வளவு கருத்தாக இருந்தார்கள் என்பதைப் பொது வாழ்வில் இருப்பவர்கள் அனைவரும் நினைவில் நிறுத்த  வேண்டும். – விடுதலை மேலாளர் என்.எஸ். சம்பந்தம், ‘உண்மை’...

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும்  சொல்லாடலும்

பெரியார் – உ.வே.சா. சந்திப்பும் சொல்லாடலும்

தமிழ்ப் புலவர்களை, மேதாவிகளைத் தெரியாதவன் அல்ல; தமிழ் இலக்கியங்களின் தன்மையை உணராதவனல்ல. இன்றைய புலவர்கள், தமிழ் அபிமானிகள் தியரிடிகல், புத்தகம் படித்த புலவர்கள் என்றால், நான் பிராக்டிகல் (அனுபவ) தமிழ் அறிவு உடையவன் என்று கருதியிருப்பவன். (பெரியார்)   ஓர் இலக்கியச் சர்ச்சை ஒரு பக்கம் தமிழகத்தில் உயிர்ப்பான மிகப் பெரிய மக்கள் திரள் போராட்டங்கள் நடந்துவருகின்றன. மறுபக்கத்தில் அதற்குக் குறைவில்லாமல் இலக்கியச் சர்ச்சைகளும் நடந்துவருகின்றன. அதிலொன்று கடந்த பிப்ரவரி மாதம் காலச்சுவடு இதழில் வெளிவந்த ப.சரவணனின் “ஐயருக்கு எதிரான அபவாதம்” என்ற கட்டுரை. இந்தக் கட்டுரையின் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான ஒரு பிரச்சினையை, பொ.வேல்சாமி தனது முகநூல் பக்கத்தில் கிளப்பினார். மார்ச் மாதம் காலச் சுவடு இதழில் ப. சரவணனும் சான்றாதாரக் குறிப்பு தொடர்பான கேள்விக்கு விரிவான எதிர்வினையை ஆற்றியுள்ளார். அத்துடன் அவ்விதழின் வாசகர் கடிதப் பகுதியில் பொ.வேல்சாமியும், பா.மதிவாணனும் பார்ப்பனர்-வேளாளர் கூட்டு மற்றும் விலகல், கருத்து நிலை சார்பு,...

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

சமூக நீதிக்கான கொடியை உயர்த்திப் பிடித்த நீதிபதி

அண்மையில் முடிவெய்திய உச்சநீதிமன்ற நீதிபதி இரத்தினவேல் பாண்டியன், திராவிட இயக்க அடையாளத்தில் உயர்ந்து, சமூகநீதிக்கான வரலாற்றுச் சிறப்பு கொண்ட தீர்ப்புகளை வழங்கியவர். சமூகநீதி வரலாற்றில் எத்தனையோ நீதிபதிகளின் பங்களிப்பு இருந்திருக்கிறது ஆனால் இரண்டு தமிழ் நீதிபதிகளுடைய பங்களிப்பை அத்தனை எளிதில் தவிர்த்துவிட இயலாது. நீதிக்கட்சி காலம் தொட்டு நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டு அரசாணையை  (கம்யூனல் ஜீ.ஓ ) எதிர்த்து செண்பகம் துரைராஜன் மற்றும் சீனிவாசன் என்ற இருவர் தனித்தனியே தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது ( இந்த வழக்கில் தான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக இருந்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த அல்லாடி கிருஷ்ணசாமி, சீனிவாசனுக்கு ஆதரவாக ஆஜரானார், நிலைமையின் தீவிரத்தன்மையை உணர்ந்த பெரியார் பெரும் கிளர்ச்சி நடத்தி இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் முதல் சட்டதிருத்தத்தை மேற்கொள்ள வைத்தார்) செண்பகம் துரைராஜன் வழக்கில் ஐந்து நீதிபதிகளை கொண்ட சென்னை உயர்நீதிமன்ற அமர்வு இடஒதுக்கீட்டு அரசாணை செல்லாது என்று தீர்ப்பளித்தது.....

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

‘இராமன்’நேர்மையின் உருவமா? பெரியார்

இராமன் தன்மையைச் சற்று ஆராய்வோம். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே, தசரதன் நாட்டைக் கைகேயிக்கு சுல்கமாகக் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும், இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும் கைகேயிக்கும் குடிகளுக்கும் நல்லபிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில், பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது கெடுதி செய்துவிடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்ளு கிறேன், நீதான் நாட்டை ஆளப்போகிறாய் என்று தாஜா செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ நடக்காதோ என்ற ஒவ்வொரு நேரமும் கவலைப் பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். நாடு உனக்கு இல்லை. நீ காட்டுக்குப் போகவேண்டும் என்று தசரதன் சொன்னவுடன் மனதுக்குள் துக்கப்படு கிறான். நாட்டை இழந்து, சுகத்தை இழந்து, நல்ல மாமிசப் பட்சணங்களை இழந்து, காட்டிற்குச் சென்று காய்கறிகளைப் புசிக்க...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) சைவத்தைப் பரப்பிய அப்பர், சம்பந்தர் ஆகியோர் குறித்த உண்மை வரலாறுகள் குழப்பம் நிறைந்தவை. தேவாரத்தில் உள்ள சில பாடல்கள்  பெரிய புராணம் கூறும் சில சம்பவங்கள், சமணர்களின் கிராமங்களில் வழங்கப்பட்ட வாய்மொழிக் கதைகள்தான் இவர்களைப் பற்றி பேசுகின்றன. புத்தர்களையும், சமணர்களையும் கடுமையாகத் தாக்கி அழிப்பது குறித்து தேவாரம், பெரிய புராணம் நூல்கள் பேசுகின்றன.  இதில் சைவமும் வைதீகமும் கைகோர்த்து நின்றிருக்கின்றன. ‘அப்பரும் சம்பந்தரும்’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை தமிழறிஞர் அ. பொன்னம்பலனார் எழுதினார். 1944இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. சமணம் தழைத்தோங்கி வைதிகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலத்தில் சோழ நாடான சீர்காழியில்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (8) மனுநீதி கொன்ற சோழனா? மனுநீதி கொண்ட சோழனா?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) ஆண்டாள் – தேவதாசி மரபு என்று ஆய்வாளர் கூறிய கருத்தைக்கூட  பேசினால் அது இந்துமத அவமதிப்பு என்று கூப்பாடு போடுகிறவர்களுக்கு அவாளின் வேதம் ஒன்றையே பதிலாக எடுத்துக் காட்டலாம். “வேஸ்யா தரிசனம் புண்யம் ஸ்பர்சனம் பாப நாஸம் சம்பனம் சர்வதீர்த்தா னாம் மைதுனம் மோஷ சாதனம்” – என்பது ஒரு சுலோகம். வேசிகளைப் பார்த்தால் புண்ணியம்; அவர்களைத் தொட்டால் பாவம் போய்விடும்; முத்தம் கொடுத்தால் சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடியதற்குச் சமமான புண்ணியம்; உடலுறவு கொண்டால் மோட்சத்தை அடையும் வழி – இதுவே மேற்குறிப்பிட்ட சுலோகத்தின் பொருள். இந்த சுலோகங்களைத் தடை செய்ய வேண்டும் என்று சொன்னால்கூட...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்? வரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள்...

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று ஹெச்.ராஜாவின் விரல் வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கர் என்றும் இரு தரப்புகள் கருத்து மோதல் நடத்துகின்றன. ஒரு வகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட் டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக் கிறார்கள். ‘அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?’ என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டு களாக… பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக் கொட்ட...

பெரியாரும் ,சபை நாகரீகமும்

பெரியாரும் ,சபை நாகரீகமும்

பெரியாரும் ,சபை நாகரீகமும் . =================== அவர் தான் பெரியார்! வடலூர் சத்தியஞான சபைக்கு வந்தார் பெரியார். ஒருகட்டம் வரை வந்தவர் ஜோதி எரிந்து கொண்டிருக்கும் இடத்துக்குள் நுழைய மறுத்தார். அங்கே, ‘கொலை, புலை தவிர்த்தவர்கள் மட்டுமே உள்ளே வரவும்’ என எழுதப்பட்டிருந்தது. எவ்வளவோ வலியுறுத்தினார்கள். ‘நான் எல்லா அசைவ உணவையும் சாப்பிடுபவன். உள்ளே வர மாட்டேன்’ என மறுத்த மாண்பாளர் பெரியார். *** சைவப்பழமான திரு.வி.க-வுடன் பெரியாரின் நட்பு உருக்கமானது. ‘நான் செத்தால் அழுவதற்கு என நீங்கள்தான் இருக்கிறீர்கள்’ என இறப்புக்குச் சில நாட்களுக்கு முன் பெரியாரிடம் சொன்னவர் திரு.வி.க. …. அவர் மறைந்தபோது தனது தொண்டர்களுடன் மயானக் கரைக்கு வந்தார் பெரியார். திராவிடர் கழகத்தினர், திரு.வி.க-வுக்குக் கொள்ளி வைக்கத் தயாராக இருந்தனர். …அப்போது தமிழ் அறிஞர் களான அ.ச.ஞானசம்பந்தனும், மு.வரதராசனாரும் வந்து, ‘திரு.வி.க. எங்கள் இருவரைத்தான் கொள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார்’ எனச் சொன்னார்கள். …. ‘சரி’ என, தன்...

பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி

பெரியார் பற்றி பாவாணர் கூறிய அரிய செய்தி

பெரியார் ஒரு பெரியார். அவர் தொண்டு எழுத்துமாற்றமன்று . செயற்கரிய செய்வதே பெரியார் இயல்பு. பிராமணியத்தைப் போக்குவதும் பகுத்தறிவைப் புகட்டுவதும் மூடப் பழக்கவழக்கங்களை ஒழிப்பதும் தமிழரைத் தன்மானத்தோடு வாழச் செய்வதுமே பெரியாரின் உண்மைத் தொண்டு. விடுதலை, குடியரசு முதலிய கிழமையன்களின் எழுத்து மாற்றம் சிக்கனம் பற்றியதே. இன்று பெரியாரின் படைத்தலைவர் போல் தம்மைக் காட்டிக் கொள்பவர் இளையரும் முளையருமாயிருந்த காலத்தே நான் பெரியாரோடு நெருங்கிய தொடர்பு கொண்டவன். என்றைக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கும் தொடங்கப்பட்டதோ அன்றைக்கே எனக்குப் பெரியார் தொடர்பு தொடங்கிற்று. நான் தமிழ்நலம் பற்றி ஏதேனும் சொன்னால், ‘ அதெல்லாம் நீங்களே தமிழ்ப்பண்டிதர்களாகச் சேர்ந்து கொண்டு கிளர்ச்சி செய்யுங்கள். நான் உங்களைப் போலப் பண்டிதனல்லேன். படியாத (பாமர) மக்களிடம் சென்று அவர்களுடைய அறியாமையை எடுத்துக்காட்டி என்னாலியன்ற வரை சமுதாயத் தொண்டு செய்பவன்’ என்பார். ஒரு முறை என் ஒப்பியன் மொழிநூல் பற்றி ஈரோட்டிலிருந்து 5 பக்கம் தம் கைப்பட எழுதியிருந்தார்....

பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பெரியாரும் தமிழும் – பாவலரேறு பெருஞ்சித்திரனார். தந்தைப் பெரியார் ஒரு முழுப் பகுத்தறிவாளர். குமுகாயச் சீர்சிருத்தக்காரர். பழமை உணர்வுகளையும் கொள்கைகளையும் அறிவியல் கண்ணோட்டத்தோடு ஆராய்ந்து, அவற்றைத் தவறு சரியென்று தேர்ந்து, நன்மை தீமைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் மக்கள் அறிவியலாளர். புதுமை விரும்பி. எனவே, தமிழ் மொழியையும் அவர் அறிவியல் கண்ணோட்டத்துடன் தான் அணுகினார். அது ஒரு பழைமையான மொழி என்பதற்காகவோ, சிறந்த இலக்கண இலக்கியச் செழுமை வாய்ந்தது என்பதற்காகவோ, அவர் அதைப் பாராட்டவில்லை. அதில் உள்ள பாட்டு இலக்கியங்களையும், கதை இலக்கியங்களையும், வேறு சில கூறுகளையும் மக்கள் மனநலன் அறிவுநலன் இவற்றுக்குப் பயன் தரும் வகையில் ஆராய்ந்தார். அவற்றிலுள்ள மூட நம்பிக்கைகளையும் மக்களுக்குதவாத பழமைக் கருத்துகளையும் அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தார். அவற்றைக் கடுமையாகச் சாடினார். பொதுவாக மக்கள் வாழ்க்கைக்குப் பயன் தராத எந்த மொழிக் கூறையும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. மேலும் தமிழ்மொழி புலவர்கள் பாங்கிலேயே அடைபட்டுக் கிடந்து, பொதுமக்கள்...

பெரியாரிய-அம்பேத்கரிய-மார்க்சிய சிந்தனைகள் ஒரு புள்ளியில் இணைய வேண்டும் நேர்காணல்: பசு கவுதமன்

‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரி புத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந் தொகுப்பு களினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமன் பேட்டி. (சென்ற இதழ் தொடர்ச்சி) தங்களின் அடுத்த படைப்புகள் பற்றி… அடுத்ததாக மீண்டும் பாரதி புத்தகாலயத்தின் வெளியீடாக மார்ச் 8 அன்று சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி ‘பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள்’ தொகுப்பினை கொண்டு வரவேண்டும் எனும் வேலையை துவக்கியுள்ளேன். அது சமகாலத் திற்கு தேவைப்படும் மிக முக்கிய பதிவு என கருதுகிறேன். அதே போல பெரியாருக்கும் கம்யூனிஸ்ட் களுக்குமான உறவு அல்லது சொல்லாடல் எனும் அடிப்படையில் பல அம்சங்களைக் கொண்ட புரிதலோடு ஒரு தொகுப்பையும் உருவாக்க வேண்டும் என எண்ணியுள்ளேன். வெண்மணி பற்றிய என்னுடைய கள ஆய்வுகள் மூலம் அச்சம்பவம் குறித்து வெளிவராத பல தகவல்கள் கிடைத்திருக்கின்றன. அதை பச்சைத் தீ என்ற தலைப்பில் ஆவணப்...

பெரியாரின் ‘இதழில்’ தனித்துவமானது

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்ற பசு. கவுதமனிடம் ஒரு நேர்காணல். (சென்ற இதழ் தொடர்ச்சி) பெரியாரின் அறிவியல் பார்வை குறித்து…? அவர் தான் சொன்ன அனைத்திற்கும் அறிவியல் பார்வை கொண்டே விளக்கமளித்துள்ளார்… தமிழர்களின் பண்பாட்டு விசயங்களில் அவர் பார்வையே இன்னும் நமக்கு உறுதுணையாக இருக்கிறது என்றால் மிகையல்ல. குறிப்பாக தீபாவளி குறித்து அவர் பல சூழலில் பேசியுள்ளார் என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த நிகழ்வு நம் பண் பாட்டின் அடையாளமா என்பதை அறிவியலின் துணை கொண்டே விளக்கினார். அது குறித்த விவாதங்கள் இன்றளவிலும் நடைபெறுவதையும், இக்கால தலைமுறையினர் பலர் அதை எவ்வாறு ஏற்றுக் கொண்டு பல மூடபழக்கங்களை புறந்தள்ளு கின்றனர் என்பதையும் பார்க்க முடிகிறதே. அது போலவே பெண்கள் கர்ப்பத்தடை குறித்து அவரின் பதிவுகள், அவரின் அறிவியல் தொலைநோக்குப்...

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…? என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க,...

தமிழர் திருநாள் – தந்தை பெரியார்

திராவிடத்தின் மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்குள்ள கலைகள் என்பன-வெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு...

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு

‘கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு. இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி...

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – பசு.கவுதமன்

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – பசு.கவுதமன்

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு.கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம் ! 44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “ அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக…, ” – இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில் , ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “...

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலை : பெரியார் மீது குறை கூறுவோருக்கு பதில் – தியாகு –

கீழ்வெண்மணி படுகொலையின்போதுபெரியார் அமைதி காத்தார் என்ற குற்றச்சாட்டை மறுத்து தியாகு தனது முகநூலில் வெளியிட்டுள்ள பதிவு: கீழ்வெண்மணி படுகொலையின்போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா? இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வெண்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத் தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி ‘விடுதலை’ சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால...

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு. இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி...

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

“அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!”

பெரியார் இறுதி ஊர்வலம் நடந்த  டிசம்.25, 1973 நாளில் ‘மக்கள் குரல்’ நாளேட்டில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய உணர்ச்சிகர கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். ஆர். சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சரித்திர நாயகர்கள் பலரை வரலாறு சந்தித்திருக்கிறது. சமுதா யத்தில் மறுமலர்ச்சி காண போதி மரத்திலிருந்து புறப்பட்ட புத்தன் வெற்றி பெறவில்லை. அவனது சமுதாய மறுமலர்ச்சி சமயத்தின் ஒரு கிளையானது. தென்னகத்தே ஒரு இராமலிங்கன் தோன்றினான். முடை நாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டான். கடைசியில், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்று கடையை மூடி நடையைக் கட்டினான். அவனது இயக்கமும் சமயத்தின் ஒரு வடிகாலானது. ஆனால் இந்த நூற்றாண்டில் ஈரோட்டிலிருந்து ஒரு வெண்தாடி வேந்தன் ஊன்றிய தடியோடு ஊர் முழுக்கச் சுற்றுலாக் கிளம்பினான். அவன் தனது சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு சமுதாயத்தை, கடவுளை, சாஸ்திரத்தை அடித்தளமாகக் கொள்ளவில்லை. அத்தனைத் தீமைகளுக்கும் அவைகளே ஊற்றுக்கண் என்பதை உணர்ந்தான்! எனவே சாதியைச்...

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

அக்டோபர் புரட்சிக் குறித்து பெரியார்

1917இல் நிகழ்ந்த சோவியத் அக்டோபர் புரட்சிக் குறித்து 1933இல் பெரியார் எழுதிய கட்டுரை ருஷியாவில் 1917ல் நிகழ்ந்த புரட்சிக்குப் பின்னர்அந்நாடு உலக மக்களின் கவனத்தைப் பெரிதும் தன்பால் இழுத்துக் கொண்டது.  சமதர்ம நோக்கமுடைய ஆன்றோர்களும், பொருளாதார நெருக்கடியால் கஷ்டப்படும் ஏழை மக்களும் ரஷ்ய சமதர்மத் திட்டத்தின் நுண்பொருளை நன்குணர்ந்து தத்தம் நாடுகளிலும் அத்திட்டங்களைப் புகுத்தி மிகுந்த தீவிரமாய் ஒரு பக்கம் பிரச்சாரம் செய்துவர, ஊரார் உழைப்பில் உடல் நோவாதுண்டு வாழும் சோம்பேறிச்செல்வவான்களும் அவர்களின் தரகர்களான புரோகிதர்களும், அவர் தம் பத்திரிகைகளும் முதலாளித்துவ அரசாங்கமும் சமதர்ம உணர்ச்சியை ஒழிக்கப் பற்பலசூழ்ச்சி முறைகளையும், மிருகத்தனமான பயங்கர ஆட்சிமுறையையும் கையாண்டு வருவதும் ருஷியாவைப் பற்றிப் பொய்யும் புழுகுமான வியாசங்களை உலமெங்கும் பரப்பிஅந்த ஆட்சி முறையை பலவாறு குற்றஞ் சொல்லி அங்கு பட்டினியும், பஞ்சமும் நிறைந்திருக்கின்றன வென்று கூறியும் வேறு பல தீய முறைகளைக் கையாடி வருகின்றனர்.  ருஷியாவின் சமதர்மக் கொள்கை ஒரு பொழுதும் நடைமுறையில் சாத்தியமாகாது...

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா?  வெளிச்சத்துக்கு  வராத  வரலாற்றுத்  தகவல்கள்

காந்தி ஜாதி ஆதரவாளரா? எதிர்ப்பாளரா? வெளிச்சத்துக்கு வராத வரலாற்றுத் தகவல்கள்

வர்ணாஸ்ரமத்தையும் ஜாதியமைப்பையும் நியாயப்படுத்தி எழுதிவர்தான் காந்தி. அவர் தீண்டாமையை மட்டும் எதிர்த்தார் என்பது உண்மைதான். ஆனால் ஜாதி அமைப்புக் குறித்து காந்தியின் கருத்துகளை அவரது எழுத்துகளின்அடிப்படையில் மட்டுமே தீர்மானித்து விட முடியுமா? மூன்று கண்ணோட்டங்களில் இந்தப் பிரச்சினையை அணுக வேண்டும் என்கிறது இக்கட்டுரை. ஜாதி தொடர்பாக காந்தி பின்பற்றிய வாழ்க்கை நடைமுறை; காந்தியின் ஆசிரமங்களில் சமூக வாழ்க்கை எப்படி ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது? காந்தியின் செயல்பாடுகள், எழுத்துகளுக்கிடையே நிலவிய முரண்பாடுகள், இந்த மூன்று காரணிகளையும் முன் வைத்து காந்தியின் ஜாதியக் கொள்கைகளை அலசுகிறார் இக்கட்டுரையாளர் நிஷிகாந்த் கோல்கே. ஜாதி அமைப்பு இயற்கையானது. மதத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த அமைப்பு, சமூகத்தில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் பேணுவதற்காகவே உருவாக்கப் பட்டது என்று தனது எழுத்துகளில் பதிவு செய்துள்ள காந்தி, தனது எழுத்துக்களைப் பற்றி கூறும்போது, “என்னுடைய செயல்பாடுகளில் காண முடியாத எதையும் என் எழுத்துக்களில் தேட முடியாது” என்று கூறியதோடு, “நான் எதைக் கூற வருகிறேன் என்று புரிந்து...

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்!  மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

“மதம் சாராதவனாய் வாழ விரும்பினேன்! மதம் சாராதவனாய் மடியவும் விரும்புகிறேன்!”

மக்கள் கவிஞர் இன்குலாப் 2016ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முடிவெய்தினார். 2009ஆம் ஆண்டிலேயே தனது மரணம் குறித்து அவர் கைப்பட எழுதிய கடிதம் இது. என் தன் நினைவோடு எழுதும் கடிதம் எப்பொழுதும் இறப்பு நேரலாம் என்ற சூழலில் என் இறுதி விருப்பங்களைப் பதிவு செய்கிறேன். என் அன்புக்குரிய குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி, தோழமைக்குரிய நண்பர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் இது. என்னை முழுமையாக என் மக்களுக்கு உரித்தாக்க விரும்பினேன். ஆனால் நேர்ந்த வாழ்க்கை அதற்கான முழு வாய்ப்பையும் தரவில்லை. இறப்பு என்பது வாழ்வின் தவிர்க்க முடியாத கூறு. இறப்புக்குப் பிறகு மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கை இல்லை. வாழ்ந்த மட்டும் சமயச் சார்பற்றவனாகவே வாழ்ந்தேன். அதனால் எல்லார்க்குமானவனாக என்னை உணர முடிந்தது. உடலால் வாழ்ந்த இவ் வாழ்க்கை இறப்போடு முடி கிறது. மக்களுக்கு முழுமையாக உரித் தாக்கும் வண்ணமே என் சிந்தனை யும் செயலும் அமைய வேண்டு மென விரும்பிய போதிலும்,...

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள்  உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று  பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

பெரியார் காந்தி நேரடி விவாதம் இந்து மதத்தை மாற்ற முயற்சித்தால் பார்ப்பனர்கள் உங்களை விட்டு வைக்க மாட்டார்கள் என்று பெரியார் காந்தியிடம் எச்சரித்தார்.

சுயமரியாதை இயக்கத்தை உருவாக்கிக் கொண்டிருந்த நேரத்திலும் பெரியாருக்கு காந்தி மீதிருந்த மரியாதையும், கதர் பிரச்சாரத்திலிருந்த நம்பிக்கையும் குறைய வில்லை. அவரைப் பொறுத்தவரை மனதளவில் காங்கிரஸ்காரராகவே இருந்தார். ஆனால் 1927ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதேசமித்திரன்’ நாளிதழில் வெளியான காந்தியின் உரை ஒன்று, பெரியாரை அதிர்ச்சியடையச் செய்து விட்டது. மைசூரில் காந்தி நிகழ்த்திய அந்த உரையானது பின்வருமாறு இருந்தது: “ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வர்ணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் உயர்ந்தவர்கள் ஆகிறார்கள்.” “பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவைகளை அவன் சரிவர நிறைவேற்றும்போது அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம்.” “எளியவர்களைப் பாதுகாப்பது சத்திரியனுடைய முக்கிய தர்மம். அந்த தர்மத்தை அவன் செய்யும்போது அவன் மற்றெல் லோரிலும் மேம்பட்டவனாகிறான்.” “இம்மாதிரியே இதர வர்ணத்தார்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களைக் கடமைகளைச் செய்கையில் அவர்கள் உயர்ந்தவர்களாகிறார்கள்.” “இப்படியிருக்கையில் உயர்வு தாழ்வு எங்கிருந்து வருகிறது?...

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் –  பெரியார்

நீதிமன்றத்திலும் தமிழ்’ வேண்டும் – பெரியார்

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக்கப்பட வேண்டும் என்று போராட்டம் நடக்கும் சூழலில் இந்த கருத்தை ஆதரித்து பெரியார் 1956இல் எழுதிய தலையங்கம். முதலமைச்சர் திரு.காமராசர் அவர்கள் நேற்று மாலை சட்டக் கல்லூரித் தமிழ் இலக்கிய சங்கத்தை திறந்து வைத்துப் பேசுகையில், தமிழ்நாட்டின் நீதி மன்றங்களிலும் தமிழிலேயே நடவடிக்கை நடக்கப் போகிறது, இக்கல்லூரி மாணவர்கள் இப்போதே தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும் என்று பேசியிருக்கிறார். மகிழ்ச்சிக்குரிய செய்தி இது. வைத்தியம், எஞ்சினியரிங் போன்ற விஞ்ஞானத் துறைகளில் தமிழ் உடனடியாக நுழைய முடியாவிட்டாலும் சட்டத்துறையிலாவது நுழைவது எளிதும், அவசரமும் ஆகும். ஏனெனில், சட்டமன்றங்களின் நடவடிக்கைகள் தமிழில் நடக்குமானால், ஏழை எளியவர்களில் பலர் இன்றைய பட்டதாரி வக்கீல்களைக் காட்டிலும் பல மடங்கு திறமையாக சட்ட நுணுக்கங்களை எடுத்துக்காட்டி வாதிடுவர் என்பதில் அய்யமில்லை. இன்றைய வக்கீல் உலகம் கொழுத்த பணம் சம்பாதிப்பதற்குக் காரணம், சட்டப் புத்தகங்கள் இங்கிலீஷில் இருக்கின்ற ஒரே காரணம் தவிர வேறல்ல. இவைகளைத் தமிழில்...

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

‘பராசக்தி’க்கு எதிராக வந்த ‘அவ்வையார்’ கலைஞரின் ‘பராசக்தி’ உருவாக்கிய புயல்-3 எம்.எஸ்.எஸ். பாண்டியன் தமிழில் : சுப. குணராஜன்

பராசக்தி திரைப்படம் வெளியாகிப் பத்து நாள்களுக்குள், சென்னை மாகாண அரசின் உள்துறை, இத்திரைபடத்தைச் சிக்கலுக்கு உள்ளாக்கும் வழிமுறையைத் தேடத் தொடங்கியது. இதனைக் கட்டுப்பாட்டுடன் தொடர்ந்த மனிதர் உள்துறைச் செயலாளராகிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஓ. புல்லாரெட்டி ஆவார். அக்டோபர் 27ஆம் தேதியன்று. சென்னைக் காவல்துறை ஆணையர் ஜெ.தேவசகாயம் அவர்களிடம், ஒரு உள்துறை அதிகாரியைத் திரைப்படத்தைப் பார்க்கும்படி செய்து, அதன் உள்ளடக்கத்தையும், அதில் ஏதேனும் ஆட்சேபகரமானதாக உள்ளதா என்று அறிந்து ஒரு அறிக்கை சமர்ப்பிக்கச் செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பராசக்தி திரைப்படத்தைப் பார்த்த சென்னை காவல்துறை உளவுப்பிரிவைச் சேர்ந்த அதிகாரியின் விரிவான அறிக்கை, அப்படத்திற்கு ஆதரவாக இருந்தது. அவரது அரசியல் நிலைப்பாடு தி.மு.க. சார்பானதாக இருந்திருந்தால்கூட ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. திரைப்படம் குறித்த தன்னுடைய கருத்துகளை மறைக்காது பதிவு செய்திருந்தார். அவரது அறிக்கையில், ‘திரைப்படத்திற்கான வசனங்கள், திராவிட முன்னேற்றக்கழகத்தின் பிரபல தலைவர்களில் ஒருவராக மு.கருணாநிதி அவர்களால், வலிமையாக எழுதப்பட்டுள்ளது. இப்படம் கையில் குழந்தையுடன் இருக்கும் ஒரு இளம்விதவை...

தமிழ்நாடு பெயர்  சூட்டிய வரலாறு

தமிழ்நாடு பெயர் சூட்டிய வரலாறு

சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ் நாடு’ என்று பெயர் சூட்டப்பட்ட சுருக்கமான வரலாற்றுப் பதிவு இது. அண்ணாவின் பிறந்த நாளையொட்டி (செப்.15) அவரது வரலாற்றுச் சாதனையை ‘நிமிர்வோம்’ பதிவு  செய்கிறது. ‘திராவிட கட்சிகள்’ தமிழருக்கு துரோகம் இழைத்து விட்டதாகப் பேசுவோரும் இந்த வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டுகிறோம்.   அண்ணா தலைமையில் 15 பேர் தி.மு.க. சார்பில் சட்டமன்ற உறுப்பினர் களாக மக்களால் தேர்வு செய்யப்பட்டு, முதன் முறையாக 1957 இல் தி.மு.க. சட்டமன்றம் சென்றது. சட்டமன்ற திமுக தலைவராக அண்ணா அவர்களும், துணைத் தலைவராக க.அன்பழகன், கொறாடாவாக கலைஞர் மு.கருணாநிதி நியமிக்கப்பட்டனர். பேரவையின் முதல் கூட்டத்திலேயே ஆளுநருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு க.அன்பழகன்அவர்கள் ஒரு திருத்தம் கொண்டு வந்தார். அத்திருத்தத்தில் “இம்மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’என்ற பெயர் மாற்றம் செய்யப் படாதது வருத்தத்திற்குரியது” என மொழிந்தார். விவாதத்தில் பல உறுப்பினர்கள் மாநிலத்திற்கு ‘தமிழ்நாடு’ எனப்பெயரிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். அண்ணா அவர்கள் பேசும்போது, “திராவிட...

நரகாசுரன் எதன் மீது நின்று பூமியை பாயாக சுருட்டினான்? – பெரியார் –

நரகாசுரன் எதன் மீது நின்று பூமியை பாயாக சுருட்டினான்? – பெரியார் –

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும்  வருகின்றேன்.  இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும்,  இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள்  இழிநிலையை  மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ்  மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை.  அவனது தலைமைக்கு அடிமை,  மீட்சிபெற விருப்பமில்லாத மானங் கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்”  என்ற  அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு  ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (4) பவுத்தத்தை – பார்ப்பனியம் அழித்த வரலாறு

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (4) பவுத்தத்தை – பார்ப்பனியம் அழித்த வரலாறு

புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (சென்ற இதழ் தொடர்ச்சி) புத்த மார்க்கம் பார்ப்பனர்களையும் ஏற்றுக் கொண்டதால் அதற்கான கடும் விலையை அது தர வேண்டியிருந்தது. புத்த மார்க்கப் புரட்சியால் யாகம், சடங்குகளின் செல்வாக்குகள் வெகுவாகக் குறைந்துவிட்டதால் வருமானமில்லாத நிலையில் பல பார்ப்பனர்கள், பார்ப்பன உணர்வுகளைவிட்டு விடாமலேயே புத்த மார்க்கத்தில் இணைந்துக் கொண்டனர். புத்த பிட்சுக்களாக உருவாக்கப்பட்ட ‘ஆஸ்ரமங்களில்’ அவர்கள் சுகவாழ்வு வாழத் தொடங்கினர். பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் அதிகார மய்யங்களைப் பார்ப்பனர்கள் தங்கள் வசமாக்கிக் கொண்ட அதே கதைதான்.  புத்த பிட்சுவாக மாறிய பிறகும் பார்ப்பனர்கள் தங்கள் ‘தீண்டாமை’யை விட்டு விடவில்லை என்பதை சீனப் பயணியாக இந்தியாவுக்கு வந்த ஃபாஹியான் தனது பயணக் குறிப்பில் பதிவு செய்திருக்கிறார். “புத்த மார்க்கத்தைத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வந்த ஒரு பார்ப்பன...

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை (3) ‘பார்ப்பன’ வாதங்களை முறியடித்தார், புத்தர்

புத்தர் விழா கொண்டாடி, அதில் விநாயகன் சிலைகளை பெரியார் உடைக்கச் சொன்னார் என்ற வரலாற்றை விடுதலை இராசேந்திரன், கைத்தடி கண்டன ஊர்வலத்தில் கைதான கழகத்தினரிடம் சுட்டிக் காட்டினார். (14.9.2017 இதழ் தொடர்ச்சி) “கடவுள் உண்டா இல்லையா என்பது பற்றி புத்தர் கவலைப்படாதவராக அது பயனற்ற வாதம் என்ற கருத்துடையவராக இருந்தாலும் அனைத்தையும் உருவாக்கி ஆட்டிப் படைக்கும் சக்தி ஒன்று உண்டு என்ற நம்பிக்கை புத்தரிடம் இருந்திருக்குமானால், அவர் போதித்த கருத்துகள் எல்லாம் தலைகீழாக வேறு திசையில் சென்றிருக்கும்” என்கிறார், தலைசிறந்த இந்திய தத்துவ ஆய்வாளர் தேவி பிரசாத் சட்டோ பாத்யாயா. “அப்படி ஒரு ‘சக்தி’ இருக்கிறது என்ற நம்பிக்கையி லிருந்துதான் அந்தக் கடவுளை மகிழ்வித்தால் கருணை காட்டுவார் என்ற நம்பிக்கை உருவாகிறது; அந்த நம்பிக்கையில்தான் கடவுளை வேண்டுதல்; காணிக்கை செலுத்துதல்; பலியிடுதல் என்ற சடங்குகள் வந்தன. இறைவனை இவற்றின் வழியாக மகிழ்வித்து கருணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கை, புத்தர் காலத்திலும்...

தன்னை பற்றி பெரியார்

தந்தைபெரியார் தன்னை யார் என்பதை எப்படி சொல்லியிருக்கிறார் என்பதை படியுங்கள் இவ்வுலகில் உள்ள உயிர் உள்ள பிராணிகளைப் போல நானும் ஒரு பிராணியே! அவைகளை எப்படி நாய் என்றும் ,குதிரை என்றும் ,கழுதை என்றும் பெயரிட்டு இருக்கிறார்களோ ,அதே போல எனக்கு மனிதன் என்று பெயரிட்டு இருக்கிறார்கள் அதனால் தன்னையும் ஒரு உயிருள்ள பிராணியாகவே அறிவித்துக்கொண்டார் ஆனால் அந்த நாய் ,குதிரை ,கழுதை இவைகளுக்கு சாதி கிடையாது ,மதம் கிடையாது ,நாடு கிடையாது எங்கிருந்தாலும் அவைகள் நாய் ,கழுதை , குதிரை தான் ஆனால் மனிதனுக்கு மட்டும் சாதி ,மதம் ,இனம் ,நாடு என்று பல்வேறு பிரிவுகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் அதனால்தான் நான் ஒரு நாட்டுக்காரனோ ,ஒரு இனத்துக்காரனோ ,ஒரு மதத்துக்காரனோ ,ஒரு சாதிக்காரனோ, ஒரு மொழிக்காரனோ கிடையாது உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் ஒரு மனித இனத்தை சார்ந்தவர்களே என்கிற அடிப்படையில் வாழ்ந்து வருகின்றவன் ஆனால் ஒருநாடு இன்னொரு நாட்டின்மீது...

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது – பெரியார் மீதான அவதூறு

ஏன் துணி விலை உயர்ந்து விட்டது என்று பெரியாரிடம் கேட்டார்களாம்.. அதற்கு பெரியார் பறைச்சி, பள்ளச்சியெல்லாம் ஜாக்கெட் போட ஆரம்பிச்சுட்டாங்க அதான் துணி விலை உயர்ந்து விட்டதுனு சொன்னாராம்.. அந்த செய்தி 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளிதழில் வெளிவந்த மாதிரி ஒரு போட்டோஷாப் பன்னிவச்சுக்கிட்டு பெரியார் மீது சேற்றை வாரிஇறைப்பவர்களுக்கு 12.06.53 அன்று வெளியான விடுதலை நாளேட்டின் நாலு பக்க செய்தி தாளும் இங்கிருக்கு… நீங்கள் குறிப்பிடுவது போல் விடுதலையில் அந்த செய்தி எங்க இருக்குனு சொல்லுங்க பாக்கலாம்…  

‘குடிஅரசு’ வெளியிட்ட செய்திகள் 1931 – விருதுநகர் சுயமரியாதை மாநாடும் தீர்மானங்களும்

ஈரோட்டில் 1931ஆம் ஆண்டு விருதுநகர் 3ஆவது சுயமரியாதை மாநாடு ஜூன் 8, 9 தேதிகளில் நடந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக டபிள்யூ.பி.ஏ. சவுந்திரபாண்டியன் மாநாட்டுக்கு முழு பொறுப்பு ஏற்று நடத்தினார். மாநாட்டுக்கு பொருளாதார மேதையும் சுயமரியாதைக்காரருமான ஆர்.கே. சண்முகம் தலைமை தாங்கினார். இரண்டாவது சுயமரியாதை பெண்கள் மாநாடும், மூன்றாவது சுயமரியாதை , வாலிபர் மாநாடும் இதே மாநாட்டில் நடந்தன. மாநாடு குறித்து ‘குடிஅரசு’ விரிவாக செய்திகளை பதிவு செய்திருக்கிறது. ஊர்வலத்தில் 15,000 பேர் பங்கேற்றனர். மாநாட்டில் 5000 பிரதிநிதிகள் பங்கேற்றனர். பெண்கள் மாநாட்டில் 3000 பெண்களும், வாலிபர் மாநாட்டில் 2000 வாலிபர்களும் பங்கேற்றனர். இரண்டு யானைகள் ஊர்வலத்தில் வந்தன. 6 குதிரைகள் பூட்டிய ரதத்தில் தலைவர்கள் ஊர்வலமாக வந்தனர். பெரிய மைதானத்தில் 5 ஏக்கர் சுற்றளவில் அடைப்பு தட்டிகள் போட்டு மாநாட்டு பந்தல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. கடைகளும் கட்டப்பட்டிருந்தன. மாநாட்டு பந்தலில் 200 கம்பங்களில் சுயமரியாதை கொள்கைகள், புராண மரியாதைக்...

கலைஞரின்‘பராசக்தி’உருவாக்கிய புயல்2 தணிக்கைக் குழுவினர் மீது சீறிப் பாய்ந்த பார்ப்பனர்கள்!

பராசக்தி திரைப்படம் வெளிவந்தவுடன், கடும் எதிர்ப்பையும், தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் எதிர்கொண்டது. அத்திரைப்படத்திற்கு எதிரான கண்டனக் கடிதங்கள், சென்னைக் காங்கிரஸ் அரசாங்கத்திடம் குவிந்தன. பார்ப்பனர்களின் கட்டுப் பாட்டில் இருந்த பத்திரிகைகள், பராசக்தியைக் கடுமையாக விமர்சித்தன. பராசக்தி படத்தைத் திரையிட அனுமதித்த திரைப்பட தணிக்கைக் குழுவும், தாக்கு தலுக்கு இலக்கானது. கடித முகப்பில் (letter Head) ) ‘கொச்சி உயர்நீதி மன்ற முன்னாள் நீதிபதி, கொச்சி மாகாணத்தின் முன்னாள் அமைச்சர், கோயம்புத்தூர் இந்தியக் கத்தோலிக்கர் சங்கத்தின் தலைவர், சென்னை மற்றும் கொச்சி மாகாண உயர்நீதிமன்றங்களின் வழக்கறிஞர்” எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்ட பரம்பிலோனப்பன், பராசக்தி திரைப்படம் வெளியானதும், சென்னை மாகாண முதல்வர் ராஜகோபாலாச்சாரிக்கு ‘முற்றிலும் ரகசியம்” என்ற குறிப்பிட்ட கடிதமொன்றை அனுப்பினார்: ‘எனது தட்டச்சு எழுத்தருக்குக்கூடத் தகவல்கள் கசிந்து விடுவதைத் தவிர்ப்பதற்காக நான் என் கைப்படவே எழுதுகிறேன். கடந்த சில நாட்களாகக் கோயம்புத்தூர் ‘டைமண்ட்” திரையரங்கில் பராசக்தி திரைப்படம்...

ஆச்சாரியார் அரசுக்கு குவிந்த புகார் மனுக்கள் கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்! எம்.எஸ்.எஸ்.பாண்டியன் (தமிழில் வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்)

(கலைஞர் -சட்ட மன்றத்தில் 60 ஆண்டுகள் பணியாற்றியுள்ள சாதனை 94ம் அகவையில் அடி எடுத்து வைக்கும் அவரது நீண்ட பொதுவாழ்வு குறித்து தமிழினம் பாராட்டி மகிழும் நிலையில் கலைஞரின் திரைக்கதை வடிவத்தில் உருவாகிய 1952ல் வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் சந்தித்த எதிர்ப்புகளை ஆழமாக பதிவு செய்யும் கட்டுரை இது. இளைய தலைமுறைகளுக்கு திராவிடர் இயக்கங்கள் சந்தித்த எதிர் நீச்சல் களையும் அக்காலத்தில் நிலவிய சமூக சூழலையும் உணர்த்துகிறது இந்த ஆய்வு கட்டுரை; கட்டுரையின் முதல்பகுதி.) 1952ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அன்றைய ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் பிரதமர் சி.ராஜகோபாலாச்சாரிக்குத் ‘தமிழன்” என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவரிடமிருந்து நாளிடப்படாத கடிதம் ஒன்று வந்தது. கவனமாகத் தேர்வு செய்யப்பட்ட ‘தமிழன்” என்னும் புனை பெயரில், கடிதம் எழுதியவர் தன் நிஜ உலக அடையாளத்தை மறைத்துத் தமிழினத்தின் பிரதிநிதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார். அக்கடிதம் அக்டோபர் 17, 1952 தீபாவளி தினத்தன்று தி.மு.க கொள்கைகளின்...

இராமன் சுவைத்த மாட்டுக்கறி

இவர் பிறப்பால் வேதியர்; ஒழுக்கம் குன்றி வேடருடன் கூடிக் களவு செய்து வாழ்ந்தவர். இவரே இராமாயணம் இயற்றிய வால்மீகி. அயோத்தியா கண்டம் அதில் தசரதர் ராமருக்கு முடி சூட்ட நினைத்தது; கைகேயி அதனை மறுத்தது; வரம் கேட்டது; இராமன் காடு சென்றது; அங்கு சித்திரக் கூடத்தில் தங்கியிருந்தது; பாரத்து வாசமுனிவரிடம் விருந்துண்டது போன்ற விவரங்களைத் தருவது அயோத்தியா கண்டமாகும். முல்லக்குடி எம்.ஆர். ஸ¨ந்தரேச சாஸ்திரி பிரபல – ராமாயண பிரச்சாரர் முல்லக் குடி எம்.ஆர்.! ஸ¨ந்தரேச சாஸ்திரிகள் மொழிபெயர்த்த ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யா காண்டம் நூல் தரும் செய்தி இதோ: ‘அஸ்தமனஸமயத்தில்கங்கையும், யமுனையும் சேருமிடத்தில் பரத்வாஜருடைய ஆசிரமத்திற்குச் சென்றார்கள். வேற்று மனிதர்களைக் கண்டு ஆசிரம மிருகங்களும் பசஷிகளும் (பறவைகளும்) ஓடின. மஹரிஷியை தரிசிக்க விரும்பி, ஸாயங்காலம் (மாலைநேரம்) அக்னிஹோத்ர வேளையானதால் அது முடியும் வரையில் ஆசிரமத்திற்குச் சற்று தூரத்தில் நின்றார்கள். பிறகு ஆசிரமத்திலிருந்து ஓர் சிஷ்யன் தீடீரென வெளியில் வர,...

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

மாலை நேரத்தில் சுயமரியாதை திருமணங்களை மட்டுமே நடத்தும் தஞ்சை கிராம மக்கள்

தஞ்சை மாவட்டத்தில் பல கிராமங்களில் பெரியார் இயக்கம் உருவாக்கிய பண்பாட்டுப் புரட்சி – வாழ்க்கை நெறியாகியிருப்பதைக் காண முடிகிறது. புரோகிதர் இல்லாத சுயமரியாதை திருமணங்களை மாலை நேரத்தில் நடத்துவது பல கிராமங் களில் வழக்கமாக மாறியிருக்கிறது. இப்பகுதியில் வாழ்ந்த, வாழும் பெரியார் தொண்டர்கள் இதை வாழ்க்கை நடைமுறையாக மாற்றி யிருக்கிறார்கள். இது குறித்து ‘தமிழ் இந்து’ நாளேடு (ஜூலை 19) வெளியிட்டுள்ள செய்திக் கட்டுரை. ஆயக்காரன்புலம், கருப்பம்புலம், பஞ்சநதிக்குளம், வாய்மேடு, தகட்டூர் உள்ளிட்ட கிராமங்களில் நடக்கும் 99 சதவிகித திருமணங்களுக்கு மாலை 6 மணி முதல் 7.30-க்குள் தான் நேரம் குறிக்கிறார்கள். நாம் போயிருந்த போதும் ஆயக்காரன்புலம் காசி வீரம்மாள் திருமண மண்டபத்தில் தனது அண்ணன் மகளின் (மாலை நேர) திருமணத்துக்கு அட்வான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் பஞ்சநதிக்குளம் கிழக்கைச் சேர்ந்த சி.ஆர்.வெங்கட். “காலையில் திருமணம் செய்யுறது தானே உலக வழக்கம், நீங்க மட்டும் ஏன் உல்டாவா மாலையில் திருமணம் செய்கிறீர்கள்?” என்று...