Category: திருப்பூர்

நிமிர்வோம் வாசகர் வட்டம் – சந்திப்பு 10092017 திருப்பூர்

திருப்பூர் மாநகர செயலாளர் சி. மாதவன் அவர்கள் சகோதரர் சி.நாகராசு – ம. அசுவிதா, வாழ்க்கை துணை ஒப்பந்த விழா முடிந்தவுடன் இன்று நண்பகல் 3:00 மணிக்கு மனிதம் வாசகர் வட்டம் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்களின் தலைமையில் 2வது கூட்டம் நடைபெற்றது நிகழ்ச்சியில் 15 தோழர்கள் பங்குபெற்றார்கள். வாசகர் வட்ட நோக்கத்தினை எடுத்துக் கூறி இனி கழக நிகழ்வுகளில் எங்கெங்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் தோழர்கள் 1 மணிநேரம் வாசிப்பு வட்டத்தை கூட்டுவது என்று முடிவெடுக்கப்பட்டது. நிகழ்வில் ஆகஸ்ட் மாத நிமிர்வோம் இதழில் வெளிவந்த “வந்தே மாதரம்” பாடல் குறித்த தலையங்கம் படித்துக் காண்பிக்கப்பட்டு விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும் இதழின் ஒவ்வொரு கட்டுரையும் அதன் ஆசிரியர் பற்றிய தகவலோடு அனைவரும் தத்தமது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர் இறுதியாக அடுத்த வாரம் 16/9 அன்று மாலை பொள்ளாச்சியில் வாசகர் வட்ட சந்திப்பு நடத்துவதென்றும் தோழர்கள் ஒவ்வொருவரும்...

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! 10092017

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! 10092017

திருப்பூரில் வாழ்க்கைத் துணை ஒப்பந்த விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இணையர் : அசுவிதா – நாகராசு. நாள் : 10.09.2017 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை. இடம்: ஸ்ரீஸ்டி மஹால், (சிக்கண்ணா கல்லூரி பின்புறம்) கல்லூரி சாலை, திருப்பூர்.  

ஈரோடு பெரியார் சிலை முன் கழக தோழர்கள் நீட் தேர்விற்கு எதிரான உறுதிமொழி 03092017

திராவிடர் விடுதலைக் கழக மேற்கு மாவட்ட தோழர்கள் 03092017 மாலை ஈரோடு வீரப்பன் சத்திரம் பேருந்து நிலையத்தில் கல்வி உரிமை போராளி டாக்டர் அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் முடிந்த பின்னர் பன்னீர் செல்வம் பூங்காவில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் நீட் தேர்வை ரத்து செய்யும் வரை பெரியாரிய வழியில் போராட்டம் நடைபெறும், ஓயமாட்டோம் என்று உறுதிமொழி எடுத்தனர். நீட் தேர்வுக்கு எதிரான உறுதிமொழியை தோழர் கனல்மதி படிக்க அனைத்து தோழர்களும் உடன் சேர்ந்து உறுதியேற்றனர். தேர்வு உள்ளிட்ட தகுதி, திறமை என்று சொல்லி தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்வி வேலை வாய்ப்பை பறிக்கும் எல்லாவித நுழைவுத் தேர்வுகளையும் தமிழ்நாட்டிலிருந்து விரட்டி அடிப்போம், தமிழக மக்களின் கல்வி நலம் காப்போம் மாநில பரப்புரை செயலாளர் தோழர் பால் பிரபாகரன் அவர்கள்...

அனிதா தற்கொலைக்கு நீதி வேண்டி கண்டன ஆர்ப்பாட்டம் திருப்பூர் 02092017

திருப்பூரில் மாணவி அனிதாவின் மரணத்திற்கு காரணமான மத்திய பா.ஜ.க. மோடி அரசை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் 02.09.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொருளாளர் தோழர் துரைசாமி தலைமை தாங்கினார்.  த.வா.க. மத்திய மாவட்ட செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மாவட்டத் தலைவர் தோழர் முகில் ராசு, மாவட்டச் செயலாளர் நீதிராசன், இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார்,மாநில அறிவியல் மன்றத்தலைவர் சிவகாமி, மற்றும் கழக நிர்வாகிகள், தோழர்கள், தனகோபால், சங்கீதா,மாதவன்அருண் த.நா. மக்கள் கட்சி,கெளதம், மாதவன், ராஜசிங்கம்,ரவி,கனல் மதி,தேன்மொழி த.நா.மாணவர் கழகம்,பார்வதி, முத்து, கருணாநிதி,சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

அரியலூர் அனிதாவை தற்கொலைக்கு தூண்டிய மத்திய அரசை கண்டித்து திவிக சார்பில் மாநிலம் முழுதும் முற்றுகைப் போராட்டம் 02092017

நீட் தேர்வை திணித்து தமிழக கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்து, அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமான பா.ஜ.கவின் தமிழக தலைமையகம் கமலாயத்தை முற்றுகையிடும் போராட்டம்.. நீட் தேர்வை ரத்து செய் மாணவி அனிதாவின் கொலைக்கு நீதி வழங்கு! நேரம்:மாலை 3.00 மணி நாள்:02.09.2017 திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை   நீட் தேர்வினை திணித்த மத்திய மாநில அரசுகளை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது காலை 10 மணிக்கு, கோவை இரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 4 மணிக்கு, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாலை 3 மணிக்கு, சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை மாலை 5 மணிக்கு, மன்னார்குடி பெரியார் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஈரோடு, திருப்பூரில் இணைய தள செயல்பாட்டாளர்கள் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோடு மாவட்டத்தின் சார்பாக இணையதள கலந்துரையாடல் கூட்டம் திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி ஒருங்கிணைப்பில் ஆக.20 அன்று சூரம்பட்டி வலசுவில் பெரியார் ஜேசிபி பணிமனையில் நடைபெற்றது. இரத்தினசாமி அறிமுக உரை நிகழ்த்தினார். முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், தற்போதைய சூழலில் பெரியாரியல்வாதிகள் இணையத்தில் எவ்வாறு இயங்கவேண்டும் என்றும் மதவாத சக்திகளுக்கு எதிராக இளைஞர்களை ஒருங்கிணைப்பது பற்றியும் எடுத்துக் கூறினார். முகநூலில் கழகத் தோழர்கள் எப்படி தத்தம் கருத்துகளை சிறப்புற எடுத்துக்கூற வேண்டும் என்பதையும் விளக்கினார். கழக இணையதள பொறுப்பாளர் விஜய்குமார், கணினி மற்றும் கைபேசியில் தமிழ் உள்ளீடு முறைகளை குறித்தும் கழக இணையதளம் செயல்படும் விதம் குறித்தும் விளக்கினார். தொடர்ந்து திருச்செங்கோடு பூபதி மீம்ஸ் பதிவிடுதல் குறித்து விளக்கினார். 20க்கும் மேற்பட்ட தோழர்கள் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிந்தது....

விநாயகர் சதுர்த்தி – திருப்பூர் திவிக மனு 23082017

திருப்பூர்மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23082017 அன்று, விநாயகர் சதுர்த்தி என்னும் நிகழ்ச்சியில், காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் நீதிமன்ற மற்றும் தமிழக அரசின் ஆணைகளை நிறைவேற்றி அவர்களின் கடமைகளை தவறாமல் செய்திட வலியுறுத்தி, மனுக்களை ஆணை நகல்களுடன் இணைத்து (அரசு அதிகாரிகளிடம்) திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர், காவல் துணைக் கண்காணிப்பாளர்,  காவல்ஆய்வாளர்,  மாநகராட்சி ஆணையாளர், போக்குவரத்து துறைஅதிகாரிகள், இந்து அறநிலையத்துறை செயல்அலுவலர் ஆகியோரிடம் வழங்கி தங்களது கடமையை தவறாமல் செய்யவும் இவற்றை மீறி செயல்படுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டது. தோழர் துரைசாமி மாநிலப்பொருளாளர், தோழர் முகில்இராசு, திருப்பூர்மாவட்டதலைவர், தோழர் நீதிராசன் மாவட்டச்செயலாளர், தோழர் வீ. தனபால் திவிக மாநகரத்தலைவர், தோழர் மாதவன் மாநகரச்செயலாளர், தோழர் முத்து மாநகர அமைப்பாளர் மற்றும் தோழர் இராமசாமி திருப்பூர் தெற்கு பகுதிசெயலாளர் ஆகியோர் சேர்ந்து மனு வழங்கப்பட்டுள்ளது.

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

சிறு குறுந் தொழில்களை நசுக்சி, மாநில உரிமைகளைப் பறிக்கும் ஜி.எஸ்.டி. வரி

ஏன்  இந்த பரப்புரைப் பயணம்?, சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் ‘ஒற்றை ஆட்சி; ஒற்றைப் பண்பாடு’ நோக்கி நாட்டை இழுத்துச் செல்லும் மத்திய பார்ப்பனிய ஆட்சி – நீட் வழியாக மாநில கல்வி உரிமையை பறித்ததுபோல், ‘ஜி.எஸ்.டி.’ வழியாக மாநிலங்களின் வரி விதிப்பு உரிமையையும் பறித்துவிட்டது. இந்திய அரசியல் சட்டம் இந்தியா வின் மாநிலங்களின் உரிமைகளில் வரிவிதிப்பு உரிமைகளையும் வழங்கியிருக்கிறது. நாடு முழுதும் ஒரே வர்த்தக சந்தை – ஒரே வரி என்று கூறி மோடி மத்திய சரக்கு மற்றும் சேவை வரியை ஜூலை முதல் தேதி முதல் அமுல்படுத்திவிட்டார். அம்பானி, அதானி போன்ற பெரும் பணமுதலைகள் இதை ஆதரிக்கிறார்கள் என்பதிலிருந்தே இது யாருக்கு சாதகமானது என்பதை புரிந்து கொள்ளலாம். இந்த ஜி.எஸ்.டி. சிறிய நடுத்தர நிறுவனங்கள், வர்த்தகர்கள் சாமான்ய மக்கள் தலை மீது சுமையை ஏற்றியிருக்கிறது. ஜவுளி, பீடி, மருந்துத் தொழில்கள், கட்டுமானம், போக்குவரத்து, தையல், தீப்பெட்டித் தொழில்கள்,...

சமூக நீதி சமத்துவ பரப்புரை பயணம் கோவை அணி கலந்துரையாடல் திருப்பூர் 16072017

“இழந்து வரும் உரிமைகளை மீட்போம்; தமிழகத்தின் தனித்தன்மை காப்போம்” என்ற முழக்கத்தை முன் வைத்து, “சமூக நீதி – சமத்துவ பரப்புரைப் பயணம்” என்ற தலைப்பில் தொடங்கும் நிகழ்வை ஒட்டி கோவை திருப்பூர் மாவட்ட கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 16072017 அன்று பிற்பகல் 3 மணிக்கு தோழர் துரைசாமி, மாநில பொருளாளர் அவர்களின் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இந்த கலந்துரையாடலில் 35 தோழர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர்கள் தோழர் சூலூர் பன்னிர்செல்வம், நிர்மல் மதி அவர்கள்  பயண ஏற்பாடுகளுக்கு தங்களின் கருத்துக்களை முன்வைத்தனர். 5 நாட்களிலும் 18 தோழர்கள் கலந்துகொள்வதாக உறுதியளித்தனர்.  

திருப்பூரில் எழுச்சியுடன் நடந்த காமராசர் விழா

திருப்பூரில் காவல்துறை ஒலி பெருக்கியை சரியாக இரவு 10 மணிக்கு துண்டித்தது. அதன் பிறகு ஒலிபெருக்கி இல்லாமலேயே கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய காட்சி திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய “பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா – பொதுக் கூட்டம்” 16.07.2017 அன்று மாலை 5 மணியளவில் திருப்பூர் இடுவம்பாளையம் பகுதியில் தெற்கு பகுதி செயலாளர் மா இராமசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பள்ளத்தூர் நாவலரசு கலைக் குழுவினர் சமூக நீதி பாடல்களை பாடி மக்களை எழுச்சியூட்டினர். அதன் தொடர்ச்சியாக,  திருப்பூர் மாவட்ட செயலாளர் நீதிராசன் மற்றும் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் “கல்விவள்ளல் காமராசரின் வரலாறு மற்றும் தற்கால நீட் தேர்வு சீரழிவு” பற்றி சிறப்பாக பேசினார். முகில்ராசு (திருப்பூர் மாவட்ட தலைவர்) பொதுக் கூட்டத்திற்கான தொடர் களப்பணியில் ஈடுபட்ட தோழர்களை பாராட்டி, பொதுக்கூட்டத்திற்கு சிறப்புரை யாற்ற வந்திருந்த பேச்சாளர்களை வரவேற்றும், பொதுக் கூட்டத்திற்காக உதவிய பகுதி மக்களுக்கு நன்றி கூறியும்...

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! திருப்பூர் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், கழகத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 16.07.2016 ஞாயிறு நேரம் : மாலை 6 மணி. இடம் : இடுவம்பாளையம், திருப்பூர் சிறப்புரை: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறும். மந்திரமல்ல தந்திரமே ! காவை. இளவரசன் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்சியும் நடைபெறும்.

பெரியாரியல் பயிலரங்கம் உடுமலை 11062017 மற்றும் 12062017

“பயிற்சியாளர்கள் – தலைப்புகள்” பெரியாரியல் பயிலரங்கம் ! ஜூன் 11,12 – உடுமலை. திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை முதல் மாலை வரை. இடம்: கிருஷ்ணா விடுதி,படகுத்துறை, திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிலரங்கிற்கு வரும் தோழர்கள் சனிக்கிழமை இரவே பயிலரங்கு நடக்கும் விடுதிக்கு வந்து விடும்படி கேட்டுக் கொள்கிறோம். இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 200/= (ரூபாய் இருநூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி...

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

பெரியாரியல் பயிரங்கம் ! திருப்பூர் 1106017 மற்றும் 12062017

திருப்பூர், கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில், நாள் : 11.06.2017 ஞாயிறு, 12.06.2017 திங்கள், இரண்டு நாட்கள். நேரம் : காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. இடம்: திருமூர்த்தி அணை, உடுமலைப்பேட்டை பல்வேறு தலைப்புகளில் இப் பெரியாரியல் பயிலரங்கம் நடைபெறுகிறது. தலைப்புகள் மற்றும் பயிற்சியாளர்கள் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். இரண்டு நாள் நடைபெறும் இப் பயிலரங்கில் கலந்து கொள்ளும் தோழர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாள் பயிற்சிக் கட்டணம் : Rs 300/= (ரூயாய் முன்னூறு மட்டும்) முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய தோழர்கள் : திருப்பூர் : முகில் இராசு – 9842248174 நீதிராசன் – 9003430432 உடுமலை : மடத்துகுளம் மோகன் – 8883488222 இயல் – 9842933064 பொள்ளாச்சி : ஆனந்த் – 9842815340 சபரி – 9095015269 கோவை...

திருப்பூரில் மே தின விழா, விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சி,பொதுக்கூட்டம் 01052017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 01052017 அன்று காலை முதல் இரவு வரை முழு நாள் நிகழ்வாக காலை தொடங்கி மாலை வரை விளையாட்டுப் போட்டிகள், மாலை பறை இசை, கலைநிகழ்ச்சி, இரவு  பரிசளிப்பு விழா மற்றும் மே தின விழா பொதுக்கூட்டம் திருப்பூர் இராயபுரம் மேற்கு திருவள்ளுவர் திடலில் மிக சிறப்பாக நடைபெற்றது. கழகத் தலைவர் அவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். காலை 10 மணிக்கு கழக கொடியினை கழக பொருளாளர் தோழர் சு.துரைசாமி அவர்கள் கழக கொடியினை ஏற்றி இனிப்பு வழங்கி மே தின விழாவை துவங்கி வைத்தார்.  விளையாட்டு போட்டிகளை மாநகர செயலாளர் தோழர் மாதவன் தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளில் அப்பகுதி மாணவ, மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாலை 5 மணிக்கு மேடை நிகழ்வாக தோழர் காவை . இளவரசன் அவர்களின் மந்திரமா,தந்திரமா?அறிவியல் விளக்க நிகழ்வு நடைபெற்றது. மே...

தோழர் ஃபாரூக் குடும்ப நிதி திருப்பூர் இயற்கைக் கழகம் வழங்கியது

திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பு கழகத் தோழர் ஃபாரூக் குடும்ப நிதி வழங்கியது. இசுலாமிய மத அடிப்படைவாதிகளால் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கழகத்தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்திற்கு கழகம் நிதியை திரட்டி வருகிறது. அவ்வகையில் ஃபாரூக் குடும்பத்திற்கு நிதியாக திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பின் தோழர்கள் 29.03.2016 அன்று மாலை Rs40,500/= (ரூபாய் நாற்பதினாயிரத்து ஐநூறு)ஐ கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களிடம் வழங்கினார்கள். அப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,கழகத்தோழர் பரிமளராசன் ஆகியோர் உடனிருந்தனர்

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13032017 ! காணொளி

உடுமலை சங்கர் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் ! கழகத் தலைவர் அவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று ஆற்றிய உரை.(காணொளி) ஜாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் அவர்களின் முதலாமாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் 13.03.2017 அன்று உடுமலைப்பேட்டையில் உள்ள ராணி வாணி மஹாலில் பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோழர் கெளசல்யா அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு உரையாற்றினார். பல்வேறு இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வை மக்கள் விடுதலை முன்னணி ஒருங்கிணைப்பு செய்திருந்தது.

‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் உடுமலைப்பேட்டை 13032017

13032017 அன்று மாலை உடுமலைப்பேட்டையில் ‘சங்கர் நினைவு நாள்’ கருத்தரங்கம் . கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் “ஜாதி ஒழிப்புச் சமூகத்திற்காக அண்ணல் அம்பேத்கர் பெரியார் செய்ததும்-  நாம் செய்ய வேண்டியதும்” எனும் தலைப்பில் கருத்துரையாற்றினார். நாள் : 13.03.2017 திங்கட் கிழமை. நேரம் : மாலை 4.00 மணி இடம்: பாலாஜி திருமண மண்டபம், கல்பனா திரையரங்கு பின்புறம், உடுமலைப்பேட்டை. ஜாதி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணி திரள்வோம் வாரீர்! நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : பெரியார் அம்பேத்கர் மார்க்ஸ் வாசகர் வட்டம் . திருப்பூர் மாவட்டம்.

திருப்பூரில், அரியலூர் நந்தினிக்கு நீதி வழங்கக்கோரி கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர்,மாநகராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்துமுண்ணனி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! என முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த தோழர்களும் பங்கெடுத்தனர்.ஆதித்தமிழர் பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண்குமார்,இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநில பொருளாளர் திருப்பூர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, மாவட்டத்தலைவர் முகில்ராசு,மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகரசெயலாளர் மாதவன்ஆகியோர் கண்டன உரையாற்றினர். தோழர் சங்கீதா,கொளத்துப்பாளையம் ராமசாமி, முத்து,தனபால்,கருணாநிதி,அகிலன்,பரிமளராசன் உள்ளிட்ட கழகத்தோழர்கள் கலந்து கொண்டனர்.

ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் ! திருப்பூர் 20022017

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு,சடங்கு மறுப்புத்திருமணம் மாவட்டகழகத்தலைவர் முகில்ராசு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதிசெயலாளர் இரா.கோபிநாதன், கழகத்தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தந்தத்தை இணையர்கள் கழகத்தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த்,மாநகர தலைவர் தனபால்,அமைப்பாளர் முத்து, தோழர் ஜெயா,நசீர்,பாலுசந்தர் கணேசன் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

ஜாதி மறுப்பு இணையர்களுக்கான பாராட்டு விழா திருப்பூர் 12022017

ஜாதி ஒழிய சமத்துவம் படைக்க புதிய உலகை உருவாக்க ஆதலால் காதல் செய்வீர்…. ஜாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிப்போம் சமத்துவ சமூகம் படைப்போம்….. தோழர்கள் முன்பதிவு செய்து தவறாமல் கலந்து கொள்ளவும்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

திருப்பூருக்கு புதிய பொறுப்பாளர்கள்

முகில் ராசு – மாவட்டத் தலைவர். நீதிராசன் – மாவட்டச் செயலாளர். அகிலன், சங்கீதா- மாவட்ட அமைப் பாளர்கள் . தனபால் – மாநகரத் தலைவர் மாதவன் – மாநகரச் செயலாளர். முத்து, யமுனா – மாநகர அமைப் பாளர்கள். கருணாநிதி – வடக்குப் பகுதி அமைப் பாளர். ராமசாமி – தெற்கு பகுதி அமைப்பாளர் . 11.12.2016 அன்று கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கழகத் தலைவரால் அறிவிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 02022017 இதழ்

திருப்பூரில் பொங்கல், தைப்புத்தாண்டு விழா ! 22012017

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திருப்பூர் மாஸ்கோ நகர் பெரியார் திடலில் 22.01.2017 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மாலை வரை 8 ஆம் ஆண்டு திராவிடர் பெருவிழாவாக பொங்கல்,தைப்புத்தாண்டு விழா கொண்டாடப்பட்டது. 22.01.2017 அன்று காலை 8 மணிக்கு பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டு நிகழ்ச்சி ஆரம்பமானது.தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டுப்போட்டிகள்,உரி அடித்தல்,குழு விளையாட்டுப்போட்டிகள் ஆகியன நடைபெற்றன. மாலை 6 மணிக்கு நிமிர்வு கலைக்குழுவினரின் ஜாதி ஒழிப்புப் பறையிசை நிகழ்ச்சி மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்றது.பின் காலை நடந்த விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.பரிசுகளாக பெரியாரிய புத்தகங்கள்,வெற்றிக்கோப்பை,நாள்காட்டி ஆகியன வழங்கப்பட்டன. இவ்விழா அப்பகுதி பொதுமக்களிடம் பெரும் வரவேற்ப்பைப்பெற்றது. விழாவினை தோழர் அகிலன்,மாதவன்,நாகராசு,கணபதி, பிரவீன்குமார், நீதிராசன்,கருணாநிதி,தனபால்,ராஜசிங்கம் உள்ளிட்ட தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். பரிசளிப்பு விழாவில் கழக பொருளாளர் துரைசாமி,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி,மாவட்டத்தலைவர் முகில்ராசு,பாண்டியநாதன்,முத்துலட்சுமி,சங்கீதா,முத்து,பிரேம் குமார்,தனகோபால்,பல்லடம் சண்முகம்,மணி ஆகியோர் கலந்துகொண்டனர். உணவு ஏற்பாட்டினை மாதவன் குடும்பத்தினர்,அகிலன் குடும்பத்தினர்,கோமதி குடும்பத்தினர் ஆகியோர் செய்திருந்தனர். தோழர்...

கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் திருப்பூர் 11122016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கழக தலைவரிடம் முதல் தவணையாக ரூ.1,67,500(ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர், வீரபாண்டி பிரிவு, கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, தோழர் சூலூர் பன்னீர்செல்வம், சங்கீதா, யமுனா, கோவை கிருஷ்ணன், நிர்மல், அகிலன், நீதிராசன், கார்த்தி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிதி வழங்கியவர்கள் விவரம் : முகில் ராசு – 70,000 (முதல் தவணை) துரைசாமி – 50,000 ராமசாமி – 10,000 முத்து – 10,000 பார்வதி, நீதிராசன் – 5000 சாலினி, சத்யமூர்த்தி – 2000. பிரசாந்த் – 1000 அகிலன் -5,000 இளஞாயிறு...

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” 23102016

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நாள் : 23.10.16 ஞாயிற்றுக்கிழமை இடம் : தோழர் சிவகாமி ஆசிரியர் இல்லம், பெரியார் காலனி, (T.T.P மில் பின்புறம்)திருப்பூர். நேரம் : காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்புக்கு : தோழர் சிவகாமி ஆசிரியர், அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். 9842448175. வாய்ப்பு உள்ள பெண்கள் இச்சந்திப்பு நிகழ்வில்கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். தோழர்கள் இச்செய்தியை பரவலாக்கி தங்கள் இல்ல பெண்களையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம் திருப்பூர் 16102016

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம். 16.10.16 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூர்,பல்லடம் சாலை, DRG CLASSIC ஹோட்டலில் “கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழக தலைவர் கலந்து கொண்டு திருப்பூர் குணா அவர்கள் எழுதியுள்ள “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்” நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல் அறிமுகம் நடைபெற்றது.இந்நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் அவர்கள் எழுதியுள்ளார்,இந்நூலை தோழர் பழனி சஹான் அவர்கள் தொகுத்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, பதியம் பாரதிவாசன்,எழுத்தாளர் திருப்பூர் குணா,வழக்கறிஞர் உமர்கயான் (தமிழக மக்கள ஜனநாயக கட்சி),அருண் (திருவள்ளுவர் பேரவை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் , தோழர் பழனி சஹான்,ஷேக் பரீத்,வழக்கறிஞர் ராமராஜ்,தங்கராஜ் பாண்டியர், செல்வாபாண்டியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, தமிழர் நடுவம்,...

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...

கோவை கலவரம் செய்த இந்து முன்னணியை தடை செய் – திருப்பூரில் ஆர்ப்பாட்டம் கழகத் தலைவர் உரை

கழக தலைவர் உரை! (காணொளியை காண சொடுக்கவும்) மதவாதத்திற்கெதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் 30.09.2016 அன்று மாலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் நடைபெற்றது. கலவரத்தில் ஈடுபட்டு பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இந்து முன்னணியை தடை செய்! தமிழகம் குஜராத் தாக மாறும் என அச்சுறுத்திய இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியை கைது செய் என வலியுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அதில் ஒரு பகுதியினர் காவல் வைக்கப்பட்ட திருப்பூர் காதர் சலீமா திருமண மண்டபத்தில் கூடியிருந்த பல்வேறு அமைப்பு தோழர்கள் மத்தியில் கழக தலைவர் ஆற்றிய உரை.  

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்!

மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்ற திருப்பூர் ஆர்ப்பாட்டம்! 2500க்கும் மேற்பட்டோர் கைது ! இந்து முன்னணியை தடைசெய் ! தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுருத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது ! 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கழக தோழர்களுடன் கலந்து கொண்டு கைதாகினார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழக தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும்,...

இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 30092016

கோவையில் திட்டமிட்டு பொதுமக்கள் மீதும், வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்திய இந்துத்துவ பயங்கரவாதிகளை கண்டித்து வரும் வெள்ளிக்கிழமை(30.09.2016) திருப்பூரில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் தோழமை இயக்கங்களை இணைத்து மாலை 3 மணிக்கு பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழகத் தோழர்கள் ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு அவசியம் பங்கேற்கவும்.

கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம் திருப்பூர் 25092016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா! கொடியேற்று விழா, வாகன ஊர்வலம், பொதுக்கூட்டம். நாள் : 25.09.2016. ஞாயிறு. நேரம் : காலை 8 மணி ஊர்வலம் தொடங்குமிடம்: இராயபுரம், திருப்பூர் பொதுக் கூட்டம் ! நேரம் : மாலை 6.00 மணி இடம்: வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . சிறப்புரை : தோழர் கோபி வேலுச்சாமி. தோழர் காவை இளவரசன் அவர்களின் மந்திரமா? தந்திரமா? நிகழ்சி இடம் பெறும்.

அறிவியல் பரப்புரை பயண திருப்பூர் அணியில் பயணத்தில்கலந்து கொண்டோர்

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கத்தோடு திவிக சார்பில் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணம் 5 நாட்கள் தமிழகமெங்கும் நடந்தது திருப்பூர் அணியில் கலந்துகொண்டு வழிநடத்தியவர்கள் தலைமை தோழர் திருப்பூர் சுதுரைசாமி பொருளாளர் திவிக பயணவிளக்கவுரை தோழர். கோபி வேலுச்சாமி தலைமைக் கழகப்பேச்சாளர் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கவுரை தோழர் காவை இளவரசன் பயணஒருங்கிணைப்பாளர் தோழர் சூலுர் பன்னிர் செல்வம்   அய்ந்து நாள் கலந்துகொண்டவர்கள் தோழர் நிர்மல்குமார் கோவை மாவட்டசெயலாளர்/வசூல் குழு தோழர் ஆனைமலை மணிமொழி தோழர் உக்கடம். கிருஷ்ணன் அவர்கள் /விடியோ புகைபடம் தோழர் திருப்பூர் நீதிராசன் மாநகர தலைவர் திருப்பூர் தோழர் பார்வதி   திருப்பூர் ,புத்தகவிற்பனை பொருப்பு தோழர் சங்கீதா  இயக்க பாடல்கள் இளம்தோழர் சங்கீதா மகள் யாழ் இசை தோழர் முத்துலட்சுமி அவர்கள் துண்டறிக்கை /புத்தகவிற்பனை தோழர் மாப்பிள்ளைசாமி அவர்கள் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் சக்தி அவர்கள் திருப்பூர் ராயபுரம்,...

திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அரசு துறைகளுக்கு மனு !

வருகிற விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்படுவதற்காக தடைசெய்யப்பட்ட ரசாயண பூச்சு பூசப்பட்ட,பிளாஸ்ட் ஆப் பாரிசால் செய்யப்பட்ட ,சுட்ட களிமண்ணால் செய்யப்பட்ட சிலைகளை கண்டறித்து பறிமுதல் செய்யவேண்டும்,சட்டவிரோதமாக ஒலிபெருக்கிகளை அலறவிடும் கோயில் நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது மோட்டார் வாகன சட்டத்தை கடுமையாக அமுல் படுத்த வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர்,மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்,இந்து அறநிலையத்துறை ஆனையர்,மாநகராட்சி ஆனையர் ஆகியோரிடம் கழக பொருளாளர் துரைசாமி அவர்கள் தலைமையில் மனு அளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, தோழர்கள் தனபால், மாப்பிள்ளைசாமி, முத்து, கார்த்திக், கமலக்கண்ணன், பரிமளராசன், மாணவர் கழகத்தின் மணிகண்டன், ஹரீஷ்குமார் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.

திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு

090816 செவ்வாய்   காலை 1030 மணி கிணத்துக்கடவு தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர் தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள் வாழ்த்துரை  தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள் இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம் தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர் தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர். நன்றியுரை தோழர்  வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர...

நம்புங்கள் அறிவியலை, நம்பாதிங்க சாமியார்களை – திருப்பூர் அணியின் பயண தொகுப்பு

08.08.16 திங்கள்  பல்லடம் அனுப்பட்டியில் 3.30மணிக்கு தலைமை; தோழர்.சீனி.செந்தேவன் அவர்கள் முன்னிலை;தோழர்.சண்முகம் தி,வி.க.ஒன்றியச்செயலாள்ர்அவர்கள் மந்திரமா?தந்திரமா?; தோழர்.காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை; தோழர்.முகில் ராசு அவர்கள் திருப்பூர் மாவட்டச்செயலாளர் அவர்கள், தோழர் திருப்பூர்.சு.துரைசாமி .மாநில பொருளாளர்.தி.வி க. அவர்கள் நன்றியுரை; தோழர்; அனுப்பட்டி.சுந்தரராசன் தி.விக.அவர்கள். மதியம் உணவு வழங்கி சிறப்பு செய்தவர்கள்  பல்லடம் நகர திவிக தலைவர் மற்றும் இயக்க தோழர்கள்  காரணம் பேட்டை நால் ரோடு  மாலை; 05, 30 மணிக்கு    தலைமை; தோழர்; நீதி ராசன் திருப்பூர்.மாநகரதலைவர் தி.விக  தொடக்கவுரை; தோழர். மணிமொழிஅவர்கள்   மந்திரமா? தந்திரமா? தோழர்.காவை இளவரசன் அவர்கள்  சிறப்புரை; தோழர்; கோபி வேலுச்சமி அவர்கள் தலைமைக்கழகபேச்சாளர்  நன்றியுரை; தோழர். மாப்பிள்ளை சாமி அவர்கள் சூலூர் ஊர்வேலாங்குட்டை ,கலைஞர் நகர்  இரவு பொதுக்கூட்டம்  தலைமை தோழர் சூ.அ. முருகேசன் .தி.மு.க.அவர்கள், முன்னால் பேருராட்சி துனைத்தலைவர். மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் தோழர் காவை இளவரசன் அவர்கள் சிறப்புரை தோழர்; திருப்பூர்...

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூரில் நிமிர்வு கலைக்குழுவினருக்கு பாராட்டு !

திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் நிமிர்வு கலைக்குழுவினரின் பறையிசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.இந்நிகழ்ச்சி கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கலை நிகழ்சியாக மட்டுமல்லாமல்இசையிலும் நடைபெற்றுவரும் தீண்டாமை குறித்தும் விளக்கங்களுடன் நிகழ்சியை நடத்தினர்.சிறப்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் பங்கேற்ற கலைஞர்களுக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் புத்தகங்கள் பரிசளிக்கப்பட்டன. பொருளாளர் துரைசாமி அவர்களும்,அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி அவர்களும் தோழர்களை பாராட்டி பரிசளித்தனர்.

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண தொடக்க விழா திருப்பூர் 07082016

திருப்பூர் அணி வேலம்பாளையத்தில் துவக்க விழா பொதுக் கூட்டம் பறை இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. தலைமை தனபால் வரவேற்புரை தோழர் முத்து பறை முழக்கம் நிமிர்வு கலைக்குழு விளக்க உரை: தோழர் சு. துரைசாமி மாநில பொருளாளர் தோழர் வீ.சிவகாமி அமைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் நிர்மல்குமார் கோவை மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு மாவட்டக் செயலாளர் தோழர் நீதிராசன் மாநகர தலைவர் திருப் பூர்

திருப்பூரில் அறிவியல் பரப்புரை பயண சுவர் விளம்பரங்கள்

திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் பெற்றோருக்கு ஆறுதல்

23-7-2016 அன்று இரவு 7-00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருலாளர் திருப்பூர் துரைசாமி, மாவட்ட செய்லாளர் முகில் ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் ஆகியோர் மருத்துவர் சரவணின் இல்லம் சென்று அவரது பெற்றோர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிவிட்டு ஏறத்தாழ ஒரு மணி நேரம் அவர்களோடு உரையாடி வந்தனர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தி

எய்ம்ஸ் மருத்துவ மாணவர் சரவணன் கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

23-7-2016 அன்று மாலை 4-30 மணியளவில், திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக, தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ஒருங்கிணைப்பில், புது தில்லி அனைத்திந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (AIIMS) மருத்துவ முதுநிலை (பொது மருத்துவம்) படிப்பில் இந்திய அளவில் நுழைவுத் தேர்வில் 77ஆம் இடம் பெற்று, அனுமதியான பத்தே நாட்களில் மர்மமான முறையில் இறந்துபோன திருப்பூரைச் சேர்ந்த மருத்துவர் சரவணனின் கொலையைக் கண்டித்தும், வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வு விசாரணைக்கு மாற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு, திருப்பூர் மாவட்ட தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் குண கோகுல் தலைமையேற்றார். ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பின் மூர்த்தி, வி.சி.க.வின் மாநிலத் துணைச் செயலாளர் துரை வளவன், ஆதிதமிழர்ப் பேரவையின் வழக்கறிஞர் அணிச் செயலாளர் கனகசபை, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட சரவணின் தந்தை கணேசன் சரவணனின்...

எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 23072016 திருப்பூர்

நாளை 23.07.2016 அன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். நாள் : 23.07.2016 சனிக்கிழமை மாலை 4 மணி. இடம் : மாநராட்சி அலுவலகம் முன்பு,திருப்பூர். கண்டன உரை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் துரை.வளவன், மாநில துணைச் செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர் கனகசபை, வழக்கறிஞர் அணிச்செயலாளர், ஆதித்தமிழர் பேரவை. தோழர் சு.மூர்த்தி. ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக்குழு. தோழர் மா.பிரகாசு, மாவட்ட செயலாளர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை. நிகழ்சி ஒருங்கிணைப்பு : தமிழ்நாடு மாணவர் கழகம்.

திருப்பூரில் பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு 24072016 அழைப்பிதழ்

காலை 10 மணிக்கு பொன்னுலகம் பதிப்பகம் கடை திறப்பு மதியம் 2.30 மணிக்கு கௌதம் கோஷ் இன் அந்தர் ஜாலி ஜாத்ரா வங்காள படம் திரையிடல் மாலை 5.30 மணிக்கு நூல்கள் அறிமுகம்  

திருப்பூர் சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர செயலாளர் தோழர் நீதி ராசன் தலைமை தாங்கினார்.கழக பொருளாளர் தோழர் துரைசாமி,மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,பல்லடம் நகர தலைவர் கோவிந்த ராசு, பல்லடம் ஒன்றிய தலைவர் சண்முகம்,அகிலன், தனபால்,மாதவன், சங்கீதா,முத்து, ராமசாமி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் கூட்டம் !

29/5/2016 அன்று காலை 10 மணிக்கு திருப்பூரில் வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பகத்தில் தமிழ்நாடு மாணவர் கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட திவிக செயலாளர் முகில்ராசு வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்தில்,இடஒதுக்கீடு, தனியார்துறையில் இடஒதுக்கீடு, பொதுநுழைவுத் தேர்வு, அரசாணை 92, தனியார் பள்ளிகளில் 25%மாணவர் சேர்க்கை, தனியார் கல்விக்கொள்ளை, தாய்மொழிக்கல்வி, கட்டாய கல்வி உரிமைச்சட்டம் ஆகியவை குறித்தும் இன்னும் பிற கல்விஉதவித்தொகை வழங்கும் அரசாணை குறித்தும் தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி.சிவக்குமார் தொடக்கஉரையாற்றினார். இதனை தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு திவிக பரப்புரை செயலாளர் தோழர் பால்.பிரபாகரன் விளக்கம் அளித்தார். காலை நிகழ்வு மதியம் 1.30 மணிவரை நடைபெற்றது. மதிய உணவு மாட்டுக்கறி பிரியாணி வழங்கப்பட்டது. மீண்டும் மதியம் 2 மணிக்கு தோடங்கிய கூட்டம் 6.30 வரை தொடர்ந்தது .மதிய அமர்வில் திவிக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு தோழர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் புதிதாக...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் ‘மாநில கலந்துரையாடல் கூட்டம்’. நாள் : 29/5/2016,ஞாயிறு. நேரம் :காலை 10 மணி. இடம் : பெரியார் படிப்பகம், வீரபாண்டி பிரிவு, திருப்பூர் . ▪தமிழ்வழி கல்வியின் முக்கியத்துவம், ▪மருத்துவப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு, ▪பள்ளிகளில் சமஸ்கிருத திணிப்பு, ▪மாநில பள்ளிக் கல்வித்துறை இயக்குனரகத்தின் இடஒதுக்கீட்டுக்கெதிரான உத்தரவு, ▪சமச்சீர் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் ▪தமிழ்நாடு மாணவர் கழகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விசயங்கள் விவாதிக்கப்படுகின்றன. இக்கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்குகிறார் . ஆகவே தமிழ்நாடு மாணவர் கழக பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தவறாமல் கலந்துகொள்ளவும். தொடர்புக்கு : பாரி.சிவக்குமார், மாநில அமைப்பாளர் 9688310621. முகில், அமைப்பாளர், திருப்பூர் மாவட்டம் 9566835387. முகில் ராசு,திருப்பூர் மாவட்ட செயலாளர் (திவிக) 9842248174

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் விழா திருப்பூர்

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக புரட்சியாளர் அறிஞர் அம்பேத்கர் அவர்களின் 125வது பிறந்த நாள் விழா ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு 14042016 காலை 10 மணியளவில் காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமை தாங்கினார்.அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நடைபெற்றவுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்சி நடைபெற்றது. கவிஞர் கனல்மதி அவர்கள் ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை கூற கூடியிருந்த தோழர்கள் திரும்பசொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு,மாநகர செயலாளர் தோழர் நீதிராசன்,மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி, மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் மாப்பிள்ளைசாமி,தோழர் அகிலன் உள்ளிட்ட தோழர்கள்,குழந்தைகள் ஆகியோர் 30 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்சியின்போது இன்று பிறந்த நாள் காணும் கழக தோழர் சங்கீதா -தனபால் இணையரின் மகள் யாழினி...