Category: பெரியார் முழக்கம் 2024

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சியில் தெருமுனைக் கூட்டங்கள்

திருச்சி : திருச்சி மாவட்டக் கழக சார்பில் வைக்கம் நூற்றாண்டு மற்றும் எது திராவிடம்? எது சனாதனம்? என்ற தலைப்பில்  3.2.2024 அன்று திருவெறும்பூர் பேருந்து நிலையம், காட்டூர் கைலாஷ் நகர், காட்டூர் கடைவீதி உள்ளிட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். கூட்டத்தை குணராஜ் தொடங்கி வைத்தார். டார்வின் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தாமோதரன், மந்திரமில்லை! தந்திரமே!  பகுத்தறிவுக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் சங்கீதா கருத்துரையாற்றினார். நிறைவாக குமரேசன் நன்றி கூறினார். நிகழ்வில் மணிகண்டன், சர்மிளா, ஜெய சீனிவாசன், அசோக், ஆறுமுகம், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 15.02.2024

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் மாவட்டக் கழகம் சார்பில் 525 சந்தாக்களை ஒப்படைப்பு

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்  10.02.2024 அன்று சேலம் கருப்பூர் சக்தி இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2024 ஆம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா தொகை ஒப்படைப்பு மற்றும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் பரப்புரையாக  “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ;சமூக ஒற்றுமையைக் காப்போம்” என்ற தலைப்பில் தெரு முனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது. 11.02.2024 ஞாயிறு அன்று நங்கவள்ளியில் பொதுக் கூட்டத்துடன் பரப்புரையை தொடங்கி, சேலம் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டு பெரியார் முழக்க சந்தா முதல் தவணையாக சேலம் மாவட்டத்தின் சார்பாக (கிழக்கு – மேற்கு) 525 சந்தாவிற்கு தொகையினை கழகத் தலைவரின் முன்னிலையில் தோழர்கள் ஒப்படைத்தனர். வருகின்ற 18.2. 2024 ஞாயிற்றுகிழமை எஞ்சிய பெரியார் முழக்க சந்தாக்களையும் மாவட்ட தலைமையிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேலம் மாவட்டத்திற்கான...

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

இன அழிப்புக்கு துணைபோகும் அதானி?

காஸா நகரில் பாலஸ்தீனிய மக்களையும், படைகளையும் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் கடந்த 4 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை வைத்து இஸ்ரேலிய படைகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 28,000 பேர் உயிரிழந்தனர். அதில் 10,000க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இனப்படுகொலைக்கு ஒப்பான இக்கொடூரச் செயலுக்கு சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் வழக்கை எதிர்கொள்ளும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. இந்த ஹெர்ம்ஸ் 900 வகை டிரோன்களை அதானி குழுமம் தற்போது தயாரித்து அனுப்பியிருக்கிறது என்ற தகவல்  வெளியாகியிருக்கிறது. 20-க்கும் மேற்பட்ட டிரோன்கள் இதுவரை அனுப்பப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு உபகரணங்கள் சார்ந்த பிரபல ஊடகமான ஷெப்பர்டு மீடியா கூறியுள்ளது. இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, 2018ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் 15 மில்லியன் டாலர் முதலீட்டில் அதானி குழுமம் பாதுகாப்பு உபகரணங்கள் தயாரிப்பு ஆலையை நிறுவியது. அந்த ஆலையில் இருந்துதான் இந்த டிரோன்கள் தயாரித்து அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அதானி குழுமத்திற்கு எதிராக...

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

பாஜகவின் சவப்பெட்டிக்கு ஆணி அடிக்கிறார் ஆளுநர்!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் ஒரு நாடகத்தை சட்டப்பேரவையில் அரங்கேற்றி இருக்கிறார். அரசு எழுதிக்கொடுத்த உரையை படிக்காமல் தனது உரையை இரண்டு நிமிடத்திற்குள்ளாகவே முடித்துக் கொண்டார். அவர் எதையுமே முழுமையாக படிப்பதில்லை. அது திராவிடம் என்றாலும் சரி, வள்ளுவர் என்றாலும் சரி, சனாதனம் என்றாலும் சரி எதையும் அவர் முழுமையாக படிக்காமல் தனக்கு தெரிந்ததையெல்லாம் பேச வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒருவர். அதேபோல அரசே எழுதிக்கொடுத்து சட்டப்படி படிக்க வேண்டிய ஆளுநர் அதில் எனக்கு முரண்பாடு இருக்கிறது என்று கூறி தானே ஒரு உரையை எழுதிப் படிக்க வேண்டும் என்று விரும்புகிறார் போல. அப்படியானால் தமிழ்நாடு சட்டமன்றத் தொகுதிகளில் எதாவது ஒன்றில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதலமைச்சராகி, அவர் அமைக்கிற அமைச்சரவையில் ஒரு உரையை தயாரித்த பின்னர் அவர் விரும்புகிற உரையை படிக்கலாம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி, அமைச்சரவையின் வழிகாட்டுதலில் செயல்படக்கூடிய ஒரு ஆளுநர் தமிழ்நாடு அரசின் உரையில் தனக்கு...

வினா விடை

வினா விடை

நாங்கள் ஆட்சியில் இருந்த போது கவர்னருடன் எந்த பிரச்சனையும் இல்லை – எடப்பாடி பாஜக ஆட்சிகளுக்கு எல்லாம் அவர்கள் பிரச்சினை கொடுப்பதில்லை. ஆளுநர் உரையில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன் தேசியகீதம் பாட வேண்டும் என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. இது ஆளுநருக்கும், திமுக ஆட்சிக்கும் உள்ள பிரச்சினை                                                                  – எடப்பாடி சத்தியமாக எனக்கு தெரியாது; நான் நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்த போது ஆளுநர் உரையாற்றும் போது சட்டசபையிலேயே தூங்கிவிடுவேன். திருவேற்காடு கருமாரியம்மன் தாலியை திருடிய அர்ச்சகர்கள் கைது – செய்தி ஆகம விதிப்படி நியமனம்; கிரிமினல் சட்டப்படி கைது! காங்கிரஸ் ஆட்சி தயாரித்த உரையை முழுமையாகப் படித்தார் கருநாடக கவர்னர் கெலாட் – செய்தி நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு ஓட்டுக்கள் விழ வேண்டும் என்ற கவலை அந்த கவர்னருக்கு! பெரியார் முழக்கம் 15.02.2024

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

இழிவு நீங்கவே திராவிட அடையாளம் (5) – பேராசிரியர் ஜெயராமன்

(08.02.2024  இதழில்   வெளியான உரையின் தொடர்ச்சி) 1892-இல் ஆங்கிலக் கல்வி வந்தபோது சென்னை மாகாணத்தில் சர்வீஸ் கமிசன் முதன்முதலில் தொடங்கப்பட்டது. இந்த 1892-க்கும் 1904-க்கும் இடையில் அய்.சி.எஸ். அதிகாரிகளாக 16 இந்தியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதில் 15 பேர் பிராமணர்கள். அந்த காலகட்டத்தில் ஆளுநர் நிர்வாக கவுன்சிலில் 3 இந்தியர்கள், அதில் இருவர் பிராமணர்கள். 1900-ஆம் ஆண்டு ஐந்து பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டனர். அதில் நால்வர் பிராமணர்கள். 1907-இல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினர்களாக 12 நியமிக்கப்பட்டனர். அதில் 11 பேர் பிராமணர்கள். அவர்கள் பின்னாளில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி இருக்கக்கூடாது என்று கூறி அதை எடுத்துவிட்டனர். அதற்குப் பின்னர் ஆட்சியமைத்த பனகல் அரசர் தலைமையிலான நீதிக்கட்சி காலத்தில்தான் தமிழ் மீண்டும் கொண்டுவரப்பட்டது. திராவிடம் என்ற சொல் 7ஆம் நூற்றாண்டில் குமரில பட்டர் எழுதிய தாந்திர வார்த்திகா என்பதில் ஆந்திரா திராவிட பாஷை என்று வருகிறது. இந்த மண்ணில்...

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநரின் ‘மனசாட்சி’ உரை இப்படி…

ஆளுநர் உரை : மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர்களே, உறுப்பினர்களே, அவைத் தலைவரே உங்கள் அனைவருக்கும் குடியரசு தலைவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுநரின் நமஷ்காரம். ஜெய் சிரி ராம் என்று நான் இப்போது கூறுவேன். அதை நீங்கள் திருப்பி முழங்க வேண்டும் (அவையில் நான்கு பேர் மட்டுமே திருப்பி முழங்குகிறார்கள்) சரி அனைவரும் இதை முழங்காவிட்டாலும், நான் அனைவரும் முழங்கியதாக பேரவைக் குறிப்பில் பதிவு செய்ய உத்தரவிடுகிறேன். தமிழ்நாட்டில் இப்போது மாநில உரிமை என்ற கூச்சல் காதை துளைக்கிறது. இப்போதைய தேவை மாநில உரிமை அல்ல, ஆளுநர்களின் உரிமை. அதுவும் எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களுக்கான உரிமை. இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இதுதான் சனாதன தர்மம். இந்த சனாதன தர்மம் இல்லாவிட்டால் ஜனநாயகமே இல்லை என்று நமது முன்னோர்களும், ரிஷிகளும், தேவர்களும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அடித்து கூறிவிட்டார்கள். சூத்திரர்கள், பஞ்சமர்கள் அன்னிய மதத்தினர் ஓட்டு போட்டதாலேயே மக்கள் பிரதிநிதியாகிவிட...

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

தலையங்கம் – சோதனைக்கூட எலிகளா மக்கள்?

அயோத்தியில் ராமர் கோயிலை கட்டிவிட்டோம், காஷ்மீருக்கான சிறப்பு உரிமையை பறித்து விட்டோம் என்ற மிதப்போடு பொது சிவில் சட்டத்தை திணிக்க துணிந்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி. அதற்கு முன்னோட்டமாகத்தான் உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதன்படி உத்தரகாண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும் திருமணம், விவகாரத்து சார்ந்த நடைமுறைகளில் இனி ஒரே சட்டம்தான் இருக்கப் போகிறது. அந்தந்த மத வழக்கப்படி திருமணம் செய்யலாம், ஆனால் யார் யாரைத் திருமணம் செய்ய வேண்டுமென்பதற்கு பொது சிவில் சட்டம் பல நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. திருமணம் செய்யாமல் இணைந்து வாழ்வதற்கும், விவாகரத்து செய்வதற்கும்கூட பொது சிவில் சட்டத்தில் விதிகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இசுலாமியர்களின் திருமண விவகாரங்களில் மூக்கை நுழைப்பதாக நினைத்து பாஜக அரசு உருவாக்கிய இந்த சட்டத்தால் இந்துக்கள் மத்தியிலும் கடும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. யார் யாரை திருமணம் செய்ய வேண்டுமென்று பாஜக அரசு முடிவு செய்யக்கூடாது, இந்த சட்டத்தின் கூறுகள் பெரும்பாலும்...

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமைக்கு எதிரான சுற்றறிக்கை – கழகத் தலைவர் கண்டனம்

கருத்துரிமை – பேச்சுரிமைக்கு எதிரான சுற்றறிக்கையை பெரியார் பல்கலைக்கழகம் திரும்பப் பெற வேண்டும் என்று கழகம் வலியுறுத்தல்! இதுகுறித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு:- பெரியார் பல்கலைக்கழகம் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை கடந்த 5.2.2024 ஆம் நாளன்று அனைத்து பணியாளர்களுக்கும் விடுத்துள்ளது. பெரியார் பல்கலைக்கழகத்தின் பணியாளர்கள் நடத்தை விதிகளின் 14 (1) (2) என்ற விதிகளைக் காட்டி, இதுவரை பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவோர் முன்னனுமதி பெற்றோ, பெறாமலோ நூல்கள் வெளியிட்டிருந்தால் அச்சிட்ட நூல்களின் எண்ணிக்கை, தலைப்பு, பதிப்பாளர் முகவரி, பெற்ற பணப் பலன்கள் என்றெல்லாம் பல விவரங்களை அந்த சுற்றறிக்கை கோருகிறது. ஆனால் பல்கலைக்கழகப் பதிவாளர் சுற்றறிக்கையில் சுட்டிக் காட்டி இருக்கும் விதிகள் தொலைக்காட்சி வானொலி விவாதங்களில் பங்கேற்பது குறித்தும்,  செய்தி ஏடுகளுக்கு, வார ஏடுகள் போன்ற பருவ வெளியீடுகளுக்கு எழுதுவது குறித்தும் உள்ள விதிகளைத்தான் அவர்கள் காட்டியிருக்கிறார்கள். அந்த விதிகளின்படி கூட இலக்கியம், கலை, அறிவியல்,...

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

நாடாளுமன்றத் தேர்தலில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் எழுச்சியோடு தொடங்கியது கழகத்தின் பரப்புரை

பிப்ரவரி 2-ஆம் தேதி சேலத்தில் நடைபெற்ற கழகத் தலைமைக் குழுவில், “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்!” என்ற முழக்கத்தோடு நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி பல்வேறு மாவட்டங்களிலும் கழகத்தின் பரப்புரைக் கூட்டங்கள் பொதுமக்களின் வரவேற்போடு எழுச்சியோடு தொடங்கி நடைபெற்று வருகின்றன. சென்னை: சென்னை மாவட்டத்தின் முதல் பரப்புரைக் கூட்டம் 10.02.2024 அன்று வேளச்சேரி காந்தி சாலையில் பொதுக்கூட்டமாக நடைபெற்றது. கூட்டத்திற்கு தோழர் எட்வின் பிரபாகரன் தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். பாடகர் கோவன் பங்கேற்ற ம.க.இ.க கலைக்குழுவின் கலை நிகழ்ச்சிகளுடன் பொதுக்கூட்டம் தொடங்கியது. கழகத் தோழர் பேரன்பு ராப் பாடல்கள் பாடினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் இரா.உமா, கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியின் பேராபத்துக்களை மக்களிடம் விளக்கிப் பேசினர். திராவிட முன்னேற்றக்...

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

பெரியார் நினைவுநாள்; கழகத்தின் சார்பில் மரியாதை

தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அது பின்வருமாறு:- சென்னை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை மாவட்டக் கழக சார்பில்  இராயப்பேட்டை, சிம்சன், எம்ஜிஆர் நகர், தியாகராயர் நகர், மயிலாப்பூர், கலைஞர் கருணாநிதி நகர், நங்கநல்லூர், பிவி நகர், சேத்துப்பட்டு உள்ளிட்ட இடங்களில் கழகம் சார்பில் பெரியார் சிலைகளுக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.   இந்நிகழ்வில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமார் மற்றும் மாவட்டக் கழக நிர்வாகிகள், பகுதிக் கழக பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோவை : தந்தை பெரியாரின் 50வது நினைவுநாளை முன்னிட்டு கோவை மாவட்டக் கழக சார்பில் காந்திபுரம் பெரியார் சிலைக்கு கழகத் தோழர் கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை...

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார். மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு...

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

அம்பேத்கர் மணி மண்டபத்தில் – கழகம் வீரவணக்கம்

சென்னை : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவுநாளை முன்னிட்டு சென்னை அம்பேத்கர் மணிமண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்டத் துணைத் தலைவர் சுகுமார், இராஜேசு, அசோக் ஆகியோர் கலந்துகொண்டனர். மயிலாப்பூர் : புரட்சியாளர் அம்பேத்கரின் 67வது நினைவு நாளை ஒட்டி மயிலைப் பகுதிக் கழகம் சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மயிலைப் பகுதித் தலைவர் இராவணன், அய்யா உணவகம் சுரேஷ், பிரவீன், உதயா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சேத்துப்பட்டில் ராஜேந்திரன் தலைமையில் கழகத் தோழர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சேலம் மேற்கு : புரட்சியாளர் அம்பேத்கர் 67வது நினைவுநாளை ஒட்டி 06.12.23 காலை 10 மணியளவில் சேலம் மேற்கு...

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

“தமிழ் மீது எனக்கு வெறுப்பில்லை” – பெரியார் அறிக்கை

1970ஆம் ஆண்டில் “தமிழ்ப் பாடமொழித் திட்டத்தை” கலைஞர் அமல்படுத்தியபோது அதனை வரவேற்று பெரியார் அளித்த அறிக்கை. தமிழ்நாட்டில் வீழ்ச்சி அடைந்த காங்கிரஸ் இயக்கம் தலை எடுக்க, வளர நான் காரணமாக இருந்தேன். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டு  நீதிக்கட்சித் தலைவரானதன் காரணமே பார்ப்பனரல்லாத தமிழர்களின் எதிர்கால வாழ்வை ஒளிமயமாக ஆக்குவதற்காகவேயாகும். அதற்காக அன்றிலிருந்து இன்றுவரை நான் ஓய்வெடுக்க டாக்டர்கள் கூறியும் ஒரு நிமிடமும் ஓய்வு கொள்ளாமல் பணியாற்றிக்கொண்டுள்ளேன். லட்சியங்களில் வெற்றி பலருக்குக் கிடைத்தது போல், எனக்கு இளமைக் காலத்தில் கிடைக்காவிட்டாலும் எனது முதுமைக் காலத்திலாவது கிடைத்தது என்பதற்கு அடையாளமாகத்தான் என்னோடு  இருந்து  வளர்ந்தவர்களால்  ஆட்சி இன்றைக்கு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்ப் பாட மொழி என்ற யுத்த தளவாடம்: இந்த ஆட்சியுனுடைய சாதனைகளில் எந்தவித ஓட்டை உடைசல்களையும் குறிப்பிட்டுக்காட்டி எதிர்க்கமுடியாமல்  தமிழ்ப் பாட மொழிப் பயற்சியைத் தங்கள் யுத்த தளவாடமாக எடுத்துக்கொண்டு, ஆச்சாரியாருடைய சுதந்திராக்கட்சியும், ஆரிய ஏடுகளும் இந்த ஆட்சியைக்...

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

சென்னை, கடலூரில் பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டங்கள்

கடலூர் : கடலூர் மாவட்டக் கழக சார்பில் கடந்த 30.12.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு புவனகிரியில் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கடலூர் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் மாணிக்.முருகேசன் தலைமை தாங்கினார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன், மற்றும் வெங்கடேசன் ஆகியோரின் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. அ.மதன்குமார் வரவேற்றார், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் க.ராமர், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் ஒன்றிய செயலாளர் சதானந்தம், கழக கடலூர் மேற்கு மாவட்ட அமைப்பாளர் ந.கொளஞ்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் தேன்மொழி, தியாகி பாலா பேரவையின் பொதுச்செயலாளர் கார்ல் மார்க்ஸ், தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி ஆகியோர் கருத்துரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கடலூர் மாவட்ட கழகச் செயலாளர் அ.சதிசு நன்றி கூறினார். சென்னை :  தந்தை பெரியாரின் 50வது நினைவுநாள் பொதுக்கூட்டம், 20.12.2023, புதன்கிழமை...

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

மயிலாப்பூரில் மார்கழியில் மக்களிசை

வகுப்புவாரி பிரதிநிதித்துவத்திற்கான தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி ஏற்காதபோது பெரியார் விவாதத்தில் ஈடுபட்டார். அப்போது கீழே இருந்த பார்ப்பனர்கள் கூச்சலிட, அவர்களைப் பார்த்து, “நீங்கள் கூச்சலிட்டு நான் அமைதியாக வேண்டுமா? நாங்கள் திரும்பி கூச்சலிட்டால் நீங்கள் என்ன ஆவீர்கள் என யோசித்துப் பாருங்கள்” என்றாராம் பெரியார். அப்படித்தான் மார்கழி மாதம் வந்துவிட்டாலே போதும்… பார்ப்பனர்கள் சில நூறு பேர் சபாக்களை நடத்துவதும், பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக நடத்தப்பட்ட இந்த சபாக்கள் இல்லாவிட்டால் சென்னைக்கு இசையே இல்லை என்பதுபோல, பார்ப்பன ஏடுகள் பக்கம், பக்கமாக சிலாகித்து எழுதுவதும் காலங்காலமாக தொடர்ந்து கொண்டிருந்தது. இப்போதும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், இப்போதெல்லாம் மார்கழி மாதம் வந்துவிட்டாலே “மார்கழியில் மக்களிசை” எங்கே நடக்கிறது என்று மக்கள் தேட ஆரம்பித்துவிடுகிறார்கள். இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பில், 4-வது ஆண்டாக மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பகுதியில் டிசம்பர் 30, 31 ஆகிய 2 நாட்கள் “மார்கழியில் மக்களிசை” நிகழ்ச்சி...

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

தலையங்கம் – கீதையில் இருக்கிறது சனாதனம்!

சனாதனத்தை ஒழிக்க வேண்டும், அது மனிதர்களிடையே ஏற்றத்தாழ்வை விதைக்கிறது என்று அமைச்சர் உதயநிதி கூறியபோது, “இந்துக்களை ஒழிக்க வேண்டும்” என்று பேசுகிறார் என திரிபுவாதம் செய்து தேசிய அளவிலான விவாதப்பொருளாக இந்துத்துவா கும்பல் மாற்றியது. சனாதனத்தில் ஏற்றத்தாழ்வுக்கே இடமில்லை, அது ஒரு வாழ்வியல் நெறி என்றெல்லாம் அவரவருக்கு தோன்றியதை, வாய்க்கு வந்ததையெல்லாம் பேசினார்களே ஒழிய, எவரும் சனாதனம் என்றால் இதுதான் என தெளிவாக விளக்கவே இல்லை. பாஜகவை சேர்ந்த முதலமைச்சர் ஒருவரே, இப்போது தெள்ளத்தெளிவாக விளக்கியிருக்கிறார். அசாம் மாநில முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா தனது X பக்கத்தில் (டிவிட்டர்) கீதையில் குறிப்பிடப்பட்டுள்ள சில வரிகளைப் பதிவிட்டிருந்தார். “பகவத் கீதையின்படி, பிராமணர்கள், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் ஆகிய மூன்று சாதியினருக்கும் சேவை செய்வது சூத்திரர்களின் இயற்கையான கடமை” என்று அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது. பிற்படுத்தப்பட்டோரை பிரதமர் ஆக்கிவிட்டோம், பழங்குடியினரை குடியரசுத் தலைவர் ஆக்கிவிட்டோம், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரான எல்.முருகனை ஒன்றிய அமைச்சராக்கிவிட்டோம்,...

பெரியார் பல்கலை-யை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். வேண்டும் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

பெரியார் பல்கலை-யை நிர்வகிக்க ஐ.ஏ.எஸ். வேண்டும் – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகளுக்காக துணைவேந்தர், பொறுப்பு பதிவாளர் உட்பட நால்வர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ளார். தனக்கு இதய வலி இருப்பதாகச் சொல்லி (அதன் உண்மைத் தன்மையையும் ஒரு மருத்துவக் குழு உறுதி செய்ய வேண்டும்) மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருக்கிறார். 2024 ஜனவரி 2ஆம் நாள் பல்கலைக்கழகம் விடுமுறை முடிந்து திறக்கப்பட்டு விட்டது.ஆனால் துணைவேந்தர் பதிவாளர் யாரும் இல்லாமல் எந்த முன்னெடுப்புகளும் தீவிரமாய் எடுக்க முடியாமல் நிலை தடுமாறி நிற்கிறது பல்கலைக்கழகம். இன்னொரு பக்கம் பிணையில் இருந்தாலும் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரின் செயல்பாடுகள் தொடர்ந்து நடப்பதாகவே நாம் அறிகிறோம்.வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வழக்குக்கு தொடர்பான ஆவணங்கள் பல்கலைக்கழகத்தில் தான் இருக்கின்றன என்ற நிலையில் அவர் பல்கலைக்கழகத்திற்குள் வரக்கூடாது என்றோ, வழக்கின் ஆவணங்களை, சாட்சியங்களைக் கலைக்கக் கூடாது எனும் இயல்பான நிபந்தனைகளைப் பற்றிய அக்கறையில்லாமல் அங்கு இருக்கிற பல்வேறு பதிவேடுகள்...

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

நிர்மலாவின் பொய்யுரைகளுக்கு அமைச்சர் பதில்

சென்னை மேற்கு மாம்பலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2014-2023 வரை ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு வழங்கிய வரி ரூ.6.23 இலட்சம் கோடி. ஆனால் ஒன்றிய அரசு தமிழகத்துக்கு வழங்கிய நிதி ரூ.6.96 கோடி. தமிழ்நாட்டில் இருந்து பெற்ற வரியை விட கூடுதலான நிதியினை நாங்கள் வழங்கிவருகிறோம் என்று உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார். கடுமையான நிதி நெருக்கடியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற திமுக அரசு, கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 கல்வி உதவித்தொகை, நிறைவேற்றவே முடியாது என்று எதிரிகளால் விமர்சிக்கப்பட்ட மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசாக ரூ.1000 என ஒன்றிய அரசின் எந்தவித ஒத்துழைப்புமின்றி தமிழ்நாடு அரசு தொடர்ந்து தனது திட்டங்களை செயல்படுத்திவருகிறது....

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.   முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப்...

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர். மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும். வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும்...

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

குஜராத் கலவரத்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த குஜராத் அரசின் விடுதலை செல்லாது என்றும் அவர்களை மீண்டும் இரண்டு வார காலத்துக்குள் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் 08.01.2024 அன்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அந்தத் தீர்ப்பில், குற்றவாளிகளின் விடுதலைக்கு பின்னால் இருக்கிற அரசியலையும் அம்பலப்படுத்தியிருக்கிறது. ஒன்றிய ஆட்சியும், குஜராத் ஆட்சியும் இணைந்து குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்பட்டுள்ளனர் என்று கூறிய உச்சநீதிமன்றம் இதில் நடந்திருக்கிற மோசடிகளையும் சுட்டிக்காட்டியுள்ளது. இதில் ஃபிராடு நடந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் பயன்படுத்திய வார்த்தையை சுட்டிக்காட்ட வேண்டும். அது என்ன ஃப்ராடு? இந்த வழக்கு குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றப்பட்டது. எனவே குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் முடிவு மகாராஷ்டிரா மாநில அரசுக்குத்தான் உண்டே தவிர குஜராத் மாநில அரசுக்கு சட்டப்படி கிடையாது. ஆனால் குஜராத் மாநில அரசு எப்படி இவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யமுடிந்தது? தண்டனை...

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை –   எட்வின் பிரபாகரன்

பேராபத்து சட்டங்களுக்காக ஜனநாயகப் படுகொலை – எட்வின் பிரபாகரன்

வரலாற்றில் இல்லாத வகையில் இந்திய நாடாளுமன்றத்தில் 11 கட்சிகளின் 140 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.மோடிக்கு எதிராக, நாட்டின் பாதுகாப்பு நலனைக் கருதி, பதாகைகளை ஏந்தி வந்ததற்காக இந்த அக்கிரம நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. INDIA கூட்டணியின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல்,  சங்கிகள் செய்த வெறிச்செயல் இதுவாகும். இனி நம்முடைய நாடாளுமன்றம் வடகொரிய நாடாளுமன்றத்தைப் போல இருக்கப் போகிறது என கார்த்தி சிதம்பரம் (காங்) விமர்சித்துள்ளார். எம்பிக்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு பல்வேறு சர்ச்சைக்குரிய மசோதாக்களை ஒன்றிய சனாதன அரசு, எந்த எதிர்ப்புக்கும் இடமின்றி நிறைவேற்றி உள்ளது. இதை மணிஷ் திவாரியும் (காங்) குறிப்பிட்டுப் பேசியுள்ளார். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு இரங்கல் உரை எழுத வேண்டிய நிலையில் இருக்கிறோம் என சசி தரூர் (காங்) கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. உண்மையை பேசுபவர்களையும் கேள்வி கேட்பவர்களையும் சஸ்பெண்ட் செய்துள்ளதாக சுஷில் குமார் ரிங்கு (ஆம்ஆத்மி) கண்டித்துள்ளார். தன்னுடைய கூர்மையான கேள்விகளால் பாஜகவினரை துளைத்து வந்த,...

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

பெரியாரை மீண்டும் மீண்டும் வாசிப்போம் – ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ

(28.12.2023 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) ஒன்றிய அரசின் எந்தவொரு உயர் பொறுப்புகளிலும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின வகுப்புச் சார்ந்தவர்கள் கிடையாது என்று ஒன்றிய அரசே நாடாளுமன்றத்தில் கூறுகிறது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம், இராணுவம் என ஒன்றிய அரசின் அனைத்துத் துறைகளிலும் முற்பட்ட வகுப்பினர்தான் நிறைந்துள்ளனர். இந்த நாட்டின் அதிகாரம் முழுமைக்கும் இன்றைக்கு பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் சிக்கியுள்ளது. ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு செல்லும்போது பெரியார் ஏன் இது உண்மையான விடுதலை கிடையாது, அதிகாரம் கைமாறி இருக்கிறது என்று கூறினார்? ஆங்கிலேயரிடமாவது நம் உரிமைகளைப் போராடி பெற்றுவிடலாம் என்று பெரியார் கூறினார். சுதந்தர நாளை துக்கநாளாக அறிவித்தவர் பெரியார். விடுதலை அடைந்து 75 ஆண்டுகளாகிறது. ஆனால் இன்னும் கல்விக்காக, வேலைவாய்ப்புகளுக்காக முட்டிமோதிக்கொண்டுதானே இருக்கிறோம். பிற்படுத்தப்பட்டவராக இருக்கும் மோடி பிரதமராக இருக்கும்போது பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று வழக்காடி வென்றது திமுக, விசிக உள்ளிட்ட...

சந்தாக்களை விரைந்து வழங்குவீர்!

சந்தாக்களை விரைந்து வழங்குவீர்!

வருகிற ஜனவரி 15 முதல் 2024ம் ஆண்டுக்கான “பெரியார் முழக்கம்” சந்தா புதுப்பிக்கப்பட உள்ளதால், கழகத் தோழர்கள் மாவட்ட வாரியாக புதிய சந்தாக்களை விரைவாக 8973341377 என்ற எண்ணிற்கு அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம். விடுதலை இராசேந்திரன், ஆசிரியர், புரட்சிப் பெரியார் முழக்கம் பெரியார் முழக்கம் 11012024 இதழ்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

ஏற்காட்டில் கலந்துரையாடல் கூட்டம்

03.01.2024 புதன் அன்று காலை 11 மணியளவில் சேலம் கிழக்கு மாவட்ட அமைப்பாளர் ஏற்காடு பெருமாள் இல்லத்தில், ஏற்காடு ஒன்றியக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஏற்காடு தேவபிரகாஷ் தலைமை தாங்கினார், ஏற்காடு ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். புதிதாக பரப்புரை வாகனம் வாங்குவது, பயிற்சி வகுப்புகள் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. சுமார் 20 தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

வினா விடை

வினா விடை

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படும் நாளில் எல்லோரும் வீடுகளிலும் விளக்கேற்றுங்கள்- எல்.முருகன் பதில்: முன்பு கொரோனாவை விரட்ட விளக்கேற்றுங்கள் என்றார் மோடி, இப்போது ராமரை விரட்ட விளக்கேற்றச் சொல்கிறார்களோ! பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது கண்டிக்கத்தக்கது, அமித் ஷா-வுக்கு கடிதம் அனுப்புவோம்- அண்ணாமலை பதில்: கைது செய்த காவல்துறையினர் வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்ப வழி ஏதும் இருக்கிறதா என்று அமித் ஷாவிடம் கேட்டுப் பாருங்கள்! பாஜக அகில இந்தியத் தலைமையுடன் தொடர்பில் இருக்கிறேன்: ஓ.பன்னீர்செல்வம் பதில்: அந்தத் தொடர்பால்தான் உங்கள் அரசியல் வாழ்க்கை “ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார்” என்ற கதைபோல் ஆகிவிட்டது என்பதை மறந்துவிட வேண்டாம். என்னைப் பார்க்க வரும் தொண்டர்கள் பூங்கொத்து கொடுக்க வேண்டாம், புத்தகங்கள் கொடுங்கள்: எடப்பாடி பழனிசாமி பதில்: வரவேற்க வேண்டிய அறிவிப்புதான்… ஆனால் சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தை மட்டும் மீண்டும் படித்துவிட வேண்டாம். சென்னை புறநகர் பேருந்து நிலையத்தை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு மாற்றியது ஏன்?-...

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

தலையங்கம் – ராமர் மண்ணும் ராமசாமி மண்ணும்

மோடி ஆட்சியில் தொழில்துறை மிகப்பெரிய வளர்ச்சி கண்டிருப்பதாக, சென்னை உலக முதலீட்டாளர் மாநாட்டில் பேசிவிட்டுச்  சென்றிருக்கிறார் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல். ஆனால் மோடி ஆட்சியின் முக்கியத்துவம் எதற்கு என்பதை  “அயோத்தி” வெட்டவெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருக்கிறது. அயோத்தியில் ராமர் கோயிலை திறப்பதற்கு நாள் குறித்துவிட்டார்கள். ஜனவரி 22-ஆம் தேதி குடமுழுக்கு நடத்தப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி ராமர் சிலையை தொட்டு நிறுவப் போகிறார். அதைவைத்தே நாடாளுமன்றத் தேர்தலை வென்றுவிடலாம் எனக் கணக்குப் போட்டிருக்கிறது பாஜக. ஆனால் “சூத்திரர்கள் மசூதியை இடித்ததோடும், அந்த இடத்தில் இப்போது கோயிலைக் கட்ட கோடி கோடியாய் பணத்தையும் பொருளையும் கொட்டியதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுதான் சனாதன தர்மம். அதைவிடுத்து ராமர் சிலையை சூத்திரரான மோடி தொட்டு நிறுவ ஆசைப்படலாமா? சமூக ஒழுங்கு என்ன ஆவது?” என்ற தொனியில் குரல்கள் எழுந்திருக்கின்றன. “பிரதமர் மோடி ராமர் சிலையை தொட்டு, நிறுவும்போது சங்கராச்சாரியான நான் அங்கே நின்று கைதட்ட வேண்டுமா? ராமர்...

RSS-அய் அச்சுறுத்தும் 5M

RSS-அய் அச்சுறுத்தும் 5M

சங் பரிவார் கும்பல்கள் தங்களது கொள்கை எதிரிகளை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது இந்நூல். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் கருத்தரங்கு ஒன்றில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசிய உரையுடன், தகவல்கள் சேர்க்கப்பட்டு நூல் வடிவம் பெற்றுள்ளது. சென்னை புத்தகக் காட்சியில் கருஞ்சட்டை பதிப்பகம் அரங்கு எண் 332-இல் இந்நூல் கிடைக்கும். கழக வெளியீடுகள் கிடைக்குமிடம் சென்னை புத்தகக் காட்சியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெளியீடுகள் அனைத்தும் பெரியார் புக்ஸ்.காம் அரங்கு எண் 88-இல் கிடைக்கும். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

2014ஆம் ஆண்டில் “முழக்கம்” உமாபதி மூர்க்கத்தனமாக தாக்கப்பட்ட வழக்கு! குற்றமிழைத்த போலீசார் மீது சி.பி.சி.ஐ.டி. விசாரணை – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு பிராபகரன் அவர்களின் 60-வது பிறந்தநாளையொட்டி, 2014-ஆம் ஆண்டு நவம்பர் 26-ஆம் தேதி சென்னை மயிலாப்பூர் பகுதி கழகத் தோழர்களும், பொதுமக்களும் இணைந்து கொண்டாட்ட நிகழ்வுக்கு தயாராகினர்.  E-4 அபிராமபுர காவல் நிலைய அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், மயிலாப்பூர் பகுதி மக்கள் காவல்துறையை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட முற்பட்டனர். தகவல் அறிந்து செய்தி சேகரிக்க அங்கு சென்ற “பெரியார் முழக்கம்” நிருபர் உமாபதி. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்களிடம் போலீசார் அத்துமீறி நடந்துகொண்டதை தன்னுடைய கைபேசியில் படம் பிடித்துக்கொண்டிருந்தார். காவல் நிலைய அதிகாரிகள் இளையராஜா, வடிவேலு, கலைச்செல்வி ஆகியோர் கைபேசியை பிடுங்க முற்பட்டனர். பெண்களிடம் தவறான முறையில் நடந்து கொண்ட போலீசாரின் அராஜகப் போக்கை நிருபர் உமாபதி கேள்வி கேட்டார். அப்போது நிருபர் என்றும் பாராமல் முழக்கம் உமாபதியை போலீசார் லத்தியால் கடுமையாகத் தாக்கத் தொடங்கினர். ஆபாச வார்த்தைகளால் திட்டியபடி, காவல்நிலையத்திற்கு தூக்கிச்சென்று அடித்துத் துன்புறுத்தி...

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

இந்தியாவை இரண்டாகப் பிரித்தது பாஜகதான்

தென் மாநிலங்கள் பிரிவினையைப் பேசுகின்றன என்ற அபத்தமான வாதங்களை அமித் ஷா சமீபத்தில் வைத்திருந்தார். ஒன்றிய அரசே தனது பாரபட்சமான செயல்பாடுகளால் தென் மாநிலங்கள் வேறு, வடமாநிலங்கள் வேறு என்ற நிலையை ஏற்படுத்திவிட்டு,  பிரிவினைவாதம் பேசுகிறார்கள் என இப்போது வெற்றுக் கூச்சலிடலாமா என்று தென் மாநிலங்களில் இருந்து பதிலடிகள் கொடுக்கப்பட்டன. கேரளாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.-யும், அக்கட்சியின் செயற்குழு உறுப்பினருமான சசிதரூர் பார்ப்பனர்கள் மேடையிலேயே இந்த விவாதத்தை துணிச்சலோடு எழுப்பியிருக்கிறார். துக்ளக் இதழின் 54-வது ஆண்டு விழா சென்னையில் (15.01.2023) நடைபெற்றது. வழக்கமாக பாஜக, ஆர்.எஸ்.எஸ். போன்ற இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், அவர்களது ஆதரவாளர்களே சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள். ஆனால் இம்முறை  சசிதரூர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார். இவர் ஏன் துக்ளக் விழாவில் கலந்துகொள்கிறார் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் பார்ப்பனர்கள் குழுமியிருந்த அந்த அரங்கில் சசிதரூர் முன்வைத்த கருத்துக்கள் முக்கியமானவை. “தற்போது நிதிப் பகிர்வு கொள்கையால் தென்...

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

நாத்திகப் புரட்சியை நோக்கி சமூகத்தை நகர்த்துவோம் – எட்வின் பிரபாகரன்

“உலகம் முழுவதும் பல நாடுகளில் நாத்திகக் கொள்கைகள் நசுக்கப்படுவதும், நாத்திகர்கள் கடுமையான தண்டனைகளுக்கு ஆளாக்கப்படுவதும், முன்னொரு காலத்தில் வழமையாக இருந்து வந்த நிலையில், தற்போதும் சில நாடுகளில் அத்தகையதொரு நிலையே தொடர்வது வேதனைக்குரிய ஒன்றாகும். நாத்திகர்களுக்கு எதிரான எதிர்மறை எண்ணங்களும், அச்சுறுத்தல்களும், பாரபட்சங்களும், விரோதங்களும் சகிப்புத்தன்மையற்ற மனநிலையும் பல்வேறு வலதுசாரி நாடுகளில் இன்றளவும் பரவலாக இருக்கின்றன. நாத்திகர்கள் என்றாலே “ஒழுக்கம் இல்லாதவர்கள்” என்கிற அடிப்படை முகாந்திரமற்ற வெறுப்புப் பிரச்சாரமும் செய்யப்படுகின்றது. சொந்த குடும்பத்தால் புறக்கணிக்கப்பட்டு, உறவுகளால் கைவிடப்பட்டு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டு, அரசுகளால் தண்டிக்கப்பட்டு, ஒரு அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்படியான வாழ்க்கையை நாத்திகர்கள் மேற்கொள்ள வேண்டிய சூழல் நிலவுகிறது. இதெல்லாம் தாண்டி நாத்திகர்கள் தங்களை மனிதநேயர்களாக (humanist) அடையாளப்படுத்திக் கொண்டு, சர்வதேச அளவில் மனித உரிமைக்காகவும், சமத்துவத்துக்காகவும், சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்தும், புவி வெப்பமயமாதலை தடுக்கும் நோக்கோடும், பாலின உரிமைகளை பாதுகாக்கும் பொருட்டும், LGBTQ+ உரிமைகளை வென்றெடுக்கவும் தொடர்ச்சியாக...

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

தமிழ்க் குடிகளும் ஆரிய ஜாதிகளும் ஒன்றல்ல! – பேராசிரியர் ஜெயராமன்

(ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூரில் 24.12.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பெரியார் நினைவுநாள் பொதுக்கூட்டத்தில் தமிழ்மண் தன்னுரிமைக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் ஜெயராமன் பேசிய உரை) இந்த கூட்டத்தை சுற்றும் முற்றிலும் பாருங்கள்.. நாகரீகமான உடை உடுத்தியுள்ள இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள், அறிவார்ந்த பெருமக்கள், பெயருக்கு பின்னால் எம்.பி.பி.எஸ், எம்.காம், எம்.ஏ.பி.எல் போன்ற பட்டங்கள், பையில் பணம், ஒரு மகிழ்ச்சியான  உளநிலை….  நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து இந்த உரையை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.  மகிழ்ச்சியான ஒரு நல்ல சூழ்நிலை நிலவுவதாக நாம் கருதுகிறோம். ஆனால் இது ஒரு நூறாண்டுகளுக்குள் உருவானதுதான். நான் பேசுவதை உரையாக யாரும் கருத வேண்டாம், ஆனால் உருப்படியான தகவல்களாக கவனித்து சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறேன். இந்த உலகம் 100 ஆண்டுகளுக்கு முன்பு இப்படி கிடையாது. பல தெருக்களில் நம்மை போன்ற பெரும்பான்மையானோர் நடக்கவே உரிமை கிடையாது. சில ஜாதிகளுக்கு திருமணம் செய்துகொள்ள உரிமை கிடையாது. சொத்து வைத்துக்கொள்ள...

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.01.2024, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை அசோக் அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கோவை மாவட்டக் கழகத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது, ஆண்டிற்கு ஒருமுறை கோவை மாவட்டத் தோழர்கள் ஒன்றிணைந்து குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18012024  இதழ்

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

பார்ப்பனர்களுக்கு பதவிகளை வாரி இறைக்கும் பாஜக!

1980-களில் பாஜக தொடங்கப்பட்ட சமயத்தில் அது முழுக்க பார்ப்பன – பனியாக்கள் கூடராமாகத்தான் இருந்தது. இப்போதும் அதிகாரம் மிக்க உயர் பதவிகளில் அவர்கள்தான் இருக்கின்றனர் என்றாலும், ராமர் கோயில் இயக்கத்தில்தான் பிற்படுத்தப்பட்டவர்களை பொறுப்புகளில் அமர்த்தியது பாஜக. இப்போது கோயில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் மீண்டும் பார்ப்பனர்களுக்கே பதவி என்ற வழியில் வேகமாக பயணிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக. ஏற்கெனவே பார்ப்பனரான ஹிமந்த பிஸ்வா சர்மாவை அசாம் முதல்வராக நியமித்திருந்த பாஜக, சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்த ராஜஸ்தானிலும் பார்ப்பனரான பஜன் லால் சர்மாவை முதல்வராக்கியிருக்கிறது. 2023-ஆம் ஆண்டின் இறுதியில் மத்தியப் பிரதேச துணை முதல்வராக ராஜேந்திர சுக்லா என்ற பார்ப்பனரையும்,  சத்தீஸ்கர் துணை முதல்வராக விஜய் சர்மா என்ற பார்ப்பனரையும் நியமித்தது பாஜக. ஏற்கெனவே உத்தரப் பிரதேச துணை முதல்வராக பிரஜேஷ் பதக் என்ற பார்ப்பனரும், மகாராஷ்டிர துணை முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் என்ற பார்ப்பனரும் இருக்கிறார்கள். மக்கள் மிகச்சொற்பமாக இருக்கிற பார்ப்பனர்கள்...

“தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சமூக நீதிக் குரல்”

“தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சமூக நீதிக் குரல்”

அரசுப்பள்ளிகளில் வகுப்புகள் தொடங்கப்படுவதற்கு முன்பு மாணவர்கள் சமூகநீதி பாடல் பாட வேண்டுமென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஒரு ஆணையை பிறப்பித்திருக்கிறார். உண்மையிலேயே இது வரவேற்கத்தக்க ஒரு முடிவாகும். பாடத்திட்டத்தில் தமிழ்நாட்டின் வகுப்புரிமை போராட்ட வரலாறு, சுயமரியாதை இயக்க வரலாறு இவைகளையும் சேர்த்தால் இளம் தலைமுறைக்கு வரலாறுகளை எடுத்துச்சொல்ல ஒரு வாய்ப்பாக இருக்கும் என்பது நமது உறுதியான கருத்து. உத்தரப் பிரதேசத்தில் மாணவர் வருகைப் பதிவேட்டை ஆசிரியர் பதிவு செய்யும்போது, அங்குள்ள பல பள்ளிகளில் மாணவர்கள் ஜெய்ஸ்ரீராம் என்று கூறுவதாக சில படங்கள் முகநூலில் வந்துகொண்டிருக்கின்றன. இது உத்தரப் பிரதேசத்தின் நிலை. தமிழ்நாட்டில் கலைஞர் தமிழ்த்தாய் வாழ்த்து ஒன்றை அறிமுகப்படுத்தினார். நீராருங் கடலுடுத்த என்ற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்தான் இப்போது, அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் தொடக்கப் பாடலாகப் பாடப்பட்டு வருகிறது. அதற்குமுன்பு அவரவர் விரும்புகின்ற கடவுள்களின் பாடல்கள்தான் பல்வேறு நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு...

தலையங்கம் – இப்படியும் ஒரு இந்துயிசம்!

தலையங்கம் – இப்படியும் ஒரு இந்துயிசம்!

பண்பாடு, கலாசாரம் போன்றவை மாறாது, நிலையானது என்பது உலகம் முழுவதும் இருக்கிற பழமைவாதிகளின் கருத்து. ஆனால் அந்தந்த ஊர்களுக்கு ஏற்றவாறு அனைத்து மத கலாச்சாரங்களும் வளைந்து நெளிந்துதான் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் இந்து மதம் சிறு மாற்றங்களுக்குக் கூட இடம்தர முடியாது என இன்னமும் ஜாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தத் துடிக்கிறது. நமக்கு மிக அருகாமையில் இருக்கிற இந்தோனேசியாவில் கூட இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை, அடக்குமுறைகள் இல்லை என்ற செய்திகள் சமீபத்தில் ஆங்கில நாளேடு ஒன்றில் வெளிவந்திருக்கிறது. கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சமூகவியல் கொள்கைத் துறை பேராசிரியர் நீரஜ் கவுசால் சமீபத்தில் இந்தோனேசியாவுக்கு பயணம் செய்து, அங்கு இந்துயிசம் எப்படி இருக்கிறது என்ற ஆச்சரியம் தரக்கூடிய தகவல்களை கொடுத்திருக்கிறார். இந்தோனேசியா இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் நாடு. இந்துக்கள் குறைந்த எண்ணிக்கையில் அங்கு வாழ்கின்றனர். அவர்கள்  கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில் இந்தியாவில் இருந்து குடிபெயர்ந்த வணிகர்கள். இந்தியாவைப் போல அங்கும் இந்துக்களி்டம்...

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

அரசுப் பள்ளிகளில் AI பயிற்சி; பாராட்டத்தக்க முயற்சி

தமிழ்நாடு நவீனமடைவதற்கும் அறிவியல் மனப்பான்மையோடு வளருவதற்கும் மிக முக்கியக் காரணம் பெரியார். அறிவியலை உள்வாங்கிக் கொண்டு, நவீனங்களுக்கு ஏற்ப மாறிக்கொள்ள வேண்டுமென்ற சிந்தனை பெரியாரிடம் இருந்தது. திராவிட இயக்கம் ஆட்சியில் அமர்ந்தபோது அந்த சிந்தனைகளுக்கு செயல்வடிவம் கிடைத்தது. அதனால்தான் அறிவியலிலும் தொழில்நுட்பத்திலும் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் முன்னே நிற்கிறது தமிழ்நாடு. வடக்கே உள்ள கான்பூர் ஐஐடி-யிலும் தெற்கே இருக்கிற கிண்டி பொறியியல் கல்லூரியிலும்தான் இந்தியாவில் முதன்முதலாக கணினிப் பயன்பாடு தொடங்கியது. ஐபிஎம் 1620 வகை கணினி அது. 1965ஆம் ஆண்டில் கிண்டி பொறியியல் கல்லூரிக்குச் சென்ற பெரியாரிடம் இப்படியொரு கருவி வந்திருக்கிறது எனச் சொல்கிறார்கள். உடனே அதைப் பார்க்க வேண்டுமென்றார் பெரியார். வயதோ 86. படியேற முடியாமல் இருந்த நிலையில், நாற்காலியில் அமரவைத்து பெரியாரை மாடிக்கு தூக்கிச் சென்று கணினியைக் காட்டினர். அது எப்படிச் செயல்படுகிறது என ஒவ்வொன்றாக விளக்கம் கேட்டுக்கொண்டதுடன், அதன் செயல்பாடுகளை சோதித்தும் பார்த்து வியந்தார் பெரியார். கம்ப்யூட்டருக்கு...

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

சுங்கச் சாவடிகளை வைத்து பகல் கொள்ளை

“மராட்டிய மாநிலத்தில் மும்பையுடன் நவி மும்பையை இணைக்கும் அடல் சேது பாலத்தை இம்மாதத் தொடக்கத்தில் (ஜன.12) பிரதமர் மோடி திறந்துவைத்தார். 22 கிமீ நீளம் கொண்ட இப்பாலம் சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடல் மேல் அமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய தேதியில் இந்தியாவில் மிக நீண்ட கடல் பாலம் இதுதான்” என்றெல்லாம் செய்தி வெளியிட்ட ஊடகங்கள் இன்னொரு செய்தியைக் குறிப்பிட மறந்துவிட்டன. இந்த 22 கிமீ நீள பாதையில் பயணிக்க சுங்கக் கட்டணம் 250 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இனி நாடு முழுக்க எல்லா சுங்கச் சாவடிகளிலும் கட்டணம் இப்படித்தான் தாறு மாறாக இருக்கப் போகிறது என்பதுதான் கடந்த 9 ஆண்டுகால ஆட்சி உணர்த்துகிறது. 2014-15 நிதியாண்டில் மோடி ஆட்சிக்கு வந்தபோது இந்தியாவில் இருந்த சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை 145. ஆனால் அதை படிப்படியாக உயர்த்தி தற்போது 959-ஆக அதிகரித்திருக்கிறது ஒன்றிய அரசு. அதிலும் குறிப்பாக கொரோனா பேரிடருக்குப் பிறகு மட்டும் 650-க்கும் அதிகமான...

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

இராமனுக்கு கோயில் கட்டியது எதற்காக? (2) – பேராசிரியர் ஜெயராமன்

(18.01.2024 இதழில் வெளியான கட்டுரையின் தொடர்ச்சி) தென்னிந்தியாவில்  கிபி மூன்றாம் நூற்றாண்டு வரைக்கும் சங்ககாலம் என்று பெயர். அந்த காலத்தில் ஜாதி என்பதே அறவே கிடையாது. ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்து அவள் மீது ஆசை கொண்டால் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம். களவு வாழ்க்கை, கற்பு வாழ்க்கை போன்ற வாழ்க்கைமுறைகளில் இவர்கள் வாழ்ந்தார்கள். அந்த காலகட்டத்தில் பல்லவர்கள் வருகிறார்கள். பின்னர் தமிழ்நாட்டை கைப்பற்றுகிறார்கள். அவர்கள் பரத்வாஜ கோத்திரம் எனும் பார்ப்பன சமூகத்தை சேர்ந்தவர்கள். இது அவர்களுடைய கல்வெட்டு செப்பேடுகளில் உள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் நுழையும் போதே வர்ண தர்மத்தை கொண்டுவருகிறார்கள். பின்னர் சிறுகச்சிறுக பார்ப்பனர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழைந்தனர். இந்த பல்லவர்கள் காலத்தில் தான் குகை கோயிகள், கற்கோயில்கள் வடிவமைக்கப்பட்டன. பல்லவர் காலத்திற்கு பிறகு கிபி ஒன்பதாம் நூற்றாண்டில் இங்கு சோழர்கள் ஆட்சி தொடங்கியது. அப்பொழுது தான் இங்கு மிகப்பெரிய அளவில் கோயில்கள் கட்டப்பட்டன. வெறும் கற் கோயில்கள் உருவாக்கப்பட்ட போதே...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது. நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்.. Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர்,...

தலையங்கம் – ராமரை புறக்கணித்த தமிழ்நாடு!

தலையங்கம் – ராமரை புறக்கணித்த தமிழ்நாடு!

அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டதால் ராமராஜ்ஜியமே அமைத்துவிட்டதைப் போல சங்கிகள் மிதக்கிறார்கள். ராமர் கோயில் குடமுழுக்கு நடந்த நாளில் வீடுகளில் விளக்கேற்றுங்கள், வழிபடுங்கள் என்றெல்லாம் பாஜகவினர் நாடு முழுக்க மக்களிடையே பரப்புரை செய்தார்கள். நாடு முழுக்க ராமரை வைத்து அரங்கேறிய கூத்துக்கள் கொஞ்ச நஞ்சமல்ல. நாடு முழுக்க பல இடங்களில் அன்றைய தினம் கோயில்களுக்கு சென்ற பக்தர்களின் கைகளில் ராமர் படங்களையும், அயோத்தி பிரசாதம் என்ற பெயரில் ஒன்றையும் வலிந்து திணித்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தும் அரைநாள் விடுமுறை அளித்தனர். பாஜக ஆளும் மாநிலங்களில் அன்று அரசு விடுமுறை. உத்தரபிரதேசத்திலும் அதனைச் சுற்றியுள்ள அண்டை மாநிலங்களிலும் ஜனவரி 22 அன்று, இந்துக்கள் யாராவது இறந்தால் பிணங்களை எரிக்கக் கூடாதென தடை விதிக்கப்பட்டது. போர்க்காலங்களில் கூட உலகில் எங்கும் மருத்துவமனைகள் மூடப்படுவதில்லை. ஆனால் ராமர் கோயில் திறப்புக்காக, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் அரைநாள் விடுமுறை என அறிவித்து,...

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

“ஜல்லிக்கட்டின் காட்டுமிராண்டித்தனங்களும் மூடநம்பிக்கைகளும்” – ம.கி.எட்வின் பிரபாகரன்

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவதற்கு எத்தனையோ போலியான பண்பாட்டு பெருமிதக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் கூட, உண்மை வேறாக இருக்கின்றது. ஜல்லிக்கட்டினுடைய மூலாதாரமான நோக்கம் ஒரு வீரனின் ரத்தம் விவசாய நிலத்தில் சிந்தப்பட வேண்டும் என்பதுதான்.  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டிற்கு நீங்கள் சென்றால் தெரியும். முதல் காளையான ஊரின் கோவில் காளையை அவிழ்த்து விடுவதற்கு முன்பு, அந்த மக்கள் சாமியிடம் வேண்டிக் கொள்வதெல்லாம், “இந்த வருசம் அதிகமா குத்து விழணும் சாமி” என்பதுதான். நிறைய காளைகள் பிடிபட வேண்டும் என்று சாமி கும்பிட மாட்டார்கள். ஜல்லிக்கட்டின் பிரதான நோக்கம் காளையை அணைவதல்ல; வீரனை அடையாளப்படுத்துவதுதான். தனது நிலத்தில் வீரனின் ரத்தம் சிந்தப்படுவதன் மூலம் விவசாயம் செழிக்கும் என்ற விவசாய சமூகத்தின் ஆதி நம்பிக்கையே இதன் அடிப்படை. கோவில்களில் நடக்கும் வேள்வியின் எச்சங்களை கொண்டு வந்து நிலத்தில் தூவுவதோ அல்லது கோவில் தீர்த்தங்களை கொண்டு வந்து நிலத்தில் தெளிப்பதோதான் விவசாயம் செழிப்பதற்கான வழி என்ற வைதீக...

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

பிரதமர் ஆனவுடன் மோடி செய்த சதி அம்பலப்படுத்திய முன்னாள் அதிகாரி

குஜராத் மாநிலத்தின் முதல்வராக 3 முறை பதவி வகித்த பிரதமர் மோடி, அப்போதெல்லாம்     ஜி.எஸ்.டி கூடாது, அது மாநில உரிமையைப் பறிக்கும் செயல் என்றார். ஒன்றிய அரசு மாநிலங்களுக்கான உரிமைகளை நசுக்கக்கூடாது, மாநில அரசுகளுக்கு உரிய நிதியை கொடுக்க வேண்டும் என்றெல்லாம் பலமுறைப் பேசியிருக்கிறார். 2014 நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் கூட, ஆட்சிக்கு வந்தால் மாநிலங்களுக்கு அதிக உரிமை வழங்குவோம் என்று மேடைக்கு மேடை முழங்கினார். அப்பேர்ப்பட்ட மாநில உரிமைப் போராளியாக தன்னைக் காட்டிக்கொண்ட நரேந்திர மோடி, ஆட்சிக்கு வந்தவுடன் சத்தமில்லாமல், பின்வாசல் வழியாக செய்ய முயன்ற காரியங்கள் அம்பலமாகியிருக்கின்றன. மாநிலங்களுக்கு   நிதியை  பகிர்ந்தளிக்க   அரசியலமைப்புச் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு நிதிக்குழு. தன்னாட்சி அதிகாரம் கொண்ட இந்த அமைப்பை, ஒன்றிய அரசு கடந்த 9 ஆண்டுகளாக கையாளும் விதம் பலமுறை சர்ச்சைகளுக்கு உள்ளாகியிருக்கிறது. வளர்ந்த தென் மாநிலங்களுக்கான வருவாய் பங்கீட்டைக் குறைக்கும் விதமாக பரிந்துரைகளை நிதிக்குழு வழங்க, ஒன்றிய அரசின்...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

கொலைக் களத்துக்கு இந்துக்களை அனுப்பும் பாஜக அரசு

இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறது என்று சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அரசு தொடர்ந்த வழக்கில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்வது உண்மை தான் என்று கூறி சர்வதேச நீதிமன்றம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.  இந்த சூழ்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடக்கும் பாஜக ஆட்சி வேலைக்கான ஒரு பரிமாற்றத்திற்கு ஒரு ஒப்பந்தத்தை போட்டுள்ளது. அதனடிப்படையில் உத்தரபிரதேசத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருகிறார்கள். இஸ்ரேலில் நடந்த போரின் காரணமாக அங்கே பல நிறுவனங்களில் பணியாளர்களே இல்லாத சூழ்நிலையில் உத்தரபிரதேச அரசு இந்த ஒப்பந்ததை போட்டுக்கொண்டு உபியில் இருந்து இஸ்ரேலுக்கு ஆட்களை அனுப்பி வருகிறது. பலரும் இந்த ஆபத்தான சூழ்நிலையில் இனப்படுகொலை நடக்கிறது என்று குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நாட்டுக்கு உயிர் போனாலும் பரவாயில்லை, இங்கே வேலை கிடைக்காது, அதனால் அங்கே போகிறோம் என்று ஏராளமான இளைஞர்கள் இஸ்ரேலை நோக்கி சென்றுள்ளனர். இப்படி வேலைக்கு சென்றுள்ள இளைஞர்களை பேட்டி கண்டு இந்து ஆங்கில நாளேடு ஒரு முழுப்பக்க...