Category: ஜாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

காதலர் நாளில் கழகத் தோழர் குமரேசன்-தரணி ஜாதி மறுப்பு மணவிழா வரவேற்பு

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் குமரேசன்-தரணி, ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு நிகழ்வு காதலர் நாளான பிப்.14 அன்று மாலை 7 மணியளவில் இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தில் சிறப்புடன் நடைபெற்றது. கழகத் தோழர் குமரேசன், கழகத்தின் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறைக்குச் சென்றவர். கழக மாவட்ட செயலாளர் உமாபதி வரவேற்புரையாற்ற, தபசி. குமரன், வழக்கறிஞர்கள் துரை.அருண், திருமூர்த்தி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினார். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 03032016 இதழ்

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா!

பூரணாகரன் – ஆஷா ஜாதி மறுப்பு இணை ஏற்பு விழா! நெமிலியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் சு.பூரணாகரன்-தி.ஆஷா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணை ஏற்புவிழா, 19.2.2016 அன்று காலை 7 மணிக்கு வேணுகோபால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, அருள் மொழி (திராவிடர் கழகம்), அனந்தி சசிதரன் (இலங்கை வடமாகாண சபை உறுப்பினர்), திருமுருகன் காந்தி (மே 17 இயக்கம்), டேவிட் பெரியார், திரைப்பட இயக்குனர் ஹீரா, சென்னை மாவட்ட கழக செயலாளர் தோழர் இரா. உமாபதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

சுயமரியாதை திருமணம் சட்டமான நாளில் ஜாதி மறுப்பு மணவிழா

சுயமரியாதை திருமணம் சட்டமான நாளில் ஜாதி மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தோழர் ம.மனோகர்-வி.ஜெயமாலா ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 17.1.2016 அன்று மாலை 6 மணிக்கு சிசுவிஹார் சமூகநலக் கூட்டத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், வழக்கறிஞர் அஜிதா வாழ்த்துரை வழங்கினார். சுயமரியாதை திருமணம், சட்ட வடிவம் பெற்ற நாள் ஜன.17 என்பதால் அந்த நாளை தேர்வு செய்து, மண விழா நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. மயிலை கழக செயல் வீரர் மனோகர், கழகம் நடத்திய போராட் டங்களில் பங்கேற்றவர். ஈழத் தமிழர் உரிமைகளுக்காக இந்திய அரசைக் கண்டித்து அஞ்சலகம் முன் தாக்குதல் நடத்தியதாக தொடரப் பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 மாதம் சிறையில் இருந்தவர். காஷ்மீர் உரிமைக்கான போராட்டத்தில் பங் கேற்று கழகத் தலைவருடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பார்ப்பனர் பூணூல் அறுப்பு வழக்கில் காவல் துறை தொடர்ந்த...

”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!

‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் ! (சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்) ‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’ இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை. நேரம் : மாலை 6 மணி. தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

கோவையில் காதலர் திருவிழா கோவையில் பிப்.14 அன்று காதலர் திருவிழா, காலை தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.  காந்திபுரம் ‘பாத்திமா சர்ச்’ கலை அரங்கில் நடந்த இந்த கொண்டாட்ட விழாவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான ஜாதி மத எதிர்ப்பு காதல் மணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன், தமிழ்நாடு திரைக் கலைஞர் அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர் களும் தோழியர்களும் பெருமளவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்த பல இணையர்கள் விழாவில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பகல் 11.45 மணியளவில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்புடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. ‘சன்’ தொலைக்காட்சி வி.ஜெகன் குழுவினர் பல குரல் நிகழ்ச்சி, கோவை பிரியாவின் கரகாட்டம், நாட்டுப் புற கலைஞர் செந்தில் கிராமிய நிகழ்ச்சி, ரெஜிதாவின் பாடல் உள்ளிட்ட கலை...

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோட்டில் எழுச்சியுடன் தொடங்கியது: ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘ஜாதி மத மறுப்பு இணையர் பாதுகாப்பு இயக்கம் “ தொடக்க விழா ஈரோடு பேருந்து நிலையம் அருகிலுள்ள ரீஜென்சி ஹோட்டலில், 11.5.2014 காலை 11 மணிக்கு நடைபெற்றது ஜாதி, மத மறுப்பு இணையருக்கு சட்டரீதியானப் பாதுகாப்பு வழங்குவது ஜாதி, மத மறுப்புத் திருமண இணையரின் திருமணத்தைப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய் யும்போது, ஏற்படும் இடர்ப்பாடு களைக் களைய உதவுவது ஜாதி, மதமறுப்புத் திருமண இணையருக்கு வாழ்விடங்கள் மற்றும் வாழ்வாதாரத்திற்குத் தேவையான வழிகாட்டுவது ஜாதி, மத மறுப்பு இணையரின் வாரிசுகளுக்கு “ஜாதியற்றோர்” என்ற பிரிவில் தனி இடஒதுக்கீடு வழங்கக் கேட்டு அரசை வலியுறுத்துவது மத மறுப்புத் திருமணங்களைப் பதிவு செய்ய, விண்ணப்பித்த 30 நாட்கள் கழித்தே பதிவு செய்யப் படும் என்ற விதி இருப்பதால், பதிவுக்குள் இணையருக்கு உறவினர்களிடமிருந்து பாதிப்பு ஏற்படுவற்கு உள்ள வாய்ப்பைத் தடுக்க, மதத்துக்குள் நடக்கும் திருமணங்களைப் போல உடனே...

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு பாதுகாப்பு தர உச்சநீதிமன்றம் ஆணை

ஜாதி-மத மறுப்புத் திருமணங்களுக்கு ஆட்சி உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக 2006 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருந்தது. “ஜாதி மறுப்புத் திருமணங்கள் தேசத்தின் நலனைக் காப்பதாகும். காரணம், ஜாதி மறுப்புத் திருமணங்களே. ஜாதி அமைப்பை அழிக்கக் கூடியவை” என்று கூறிய உச்சநீதிமன்றம், உ.பி. மாநில ஆட்சிக்கு நிரந்தரமான ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது. வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் வெவ்வேறு ஜாதி மதங்களுக்குள் திருமணம் செய்து கொள்வார்களேயானால், அவர்களுக்கு உரிய பாதுகாப்புத் தருவதும், அச்சுறுத்தலிலிருந்து தடுப்பதும் ஆட்சியாளர்கள், காவல்துறையின் கடமை என்று உச்சநீதிமன்றம் அந்தத் தீர்ப்பில் கூறியிருந்தது. லதாசிங் என்ற பெண், உ.பி. அரசுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு இது. 8 ஆண்டுகளுக்குப் பிறகு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட ஒரு இணையர், மேற்குறிப்பிட்ட தீர்ப்பின் அடிப்படையில் தங்களுக்கு பாதுகாப்புக் கோரி உச்சநீதிமன்றத்தை நாடினர். கடந்த...

காரைக்குடியில் சு.ம. திருமணம்

காரைக்குடியில் சு.ம. திருமணம்

  பெண்கள்  நிலையம்  அவசியம் தோழர்களே! திருமணத்திற்கு பிறகு திருமணத்தை பாராட்டிப் பேசிய அநேகர் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அவற்றிலிருந்து பல புதிய விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இத் திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கு அநேக இடையூறுகளும் பல தொந்தரவுகளும் ஏற்பட்டிருப் பதாகத் தெரிகிறது. பெண் ஒரு மாத காலமாக தோழர் நீலாவதி அம்மாள் வீட்டில் இருந்திருக்கிறது என்பதும், பெண்ணைச் சேர்ந்தவர்கள் பெண்ணை திருப்பிக் கொண்டு போவதற்கு பலவிதமான தொந்தரவுகள் செய்து இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து பெண் வேறு இடத்திற்கு கொண்டு போகப்பட்டு ஒரு வாரம் வரையிலும் மறைத்து வைக்க வேண்டியிருந்தது என்பதும், தோழர் ராம சுப்பிரமணியம் பேசியதிலிருந்து தெரிய வந்தது. அதுபோலவே மணமகன் விஷயத்தில் மணமகனைச் சேர்ந்தவர்கள் திருமணம் நடக்கவொட்டாமல் செய்வதற்காக வேண்டிய முயற்சிகள் செய்யக் கருதி அதற்காக கோர்ட்டு நடவடிக்கைகள் நடத்தவும் தடையுத்தரவு வாங்கவும் முயற்சித்தார்கள் என்பதும் ஒன்றும் முடியாது போனதும், அதன் பிறகு மாப்பிள்ளையை சுமார்...

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா 0

காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும், மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து, மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 15012015 இதழ்

‘ஜாதி’  மறுப்பு மணம்: வழக்கறிஞர்களுக்கு பாராட்டு! 0

‘ஜாதி’ மறுப்பு மணம்: வழக்கறிஞர்களுக்கு பாராட்டு!

வழக்கறிஞர்கள், தங்கள் வழக்கறிஞர் அலுவலகங்களை திருமணம் செய்வதற்குப் பயன் படுத்தக் கூடாது என்றும், திருமணம் என்றாலே அது ‘கொண்டாட்ட மாக’ நடப்பதுதான் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எ;!.இராஜேசுவரன், பி.என். பிரகாஷ் அமர்வு 17.10.2014 அன்று தீர்ப்பு வழங்கியது. பெரியாரின் சுயமரியாதை திருமணம்கூட இரகசியமாக நடத்துவது அல்ல என்றும் ‘கொண்டாட்டமாக’ பலரையும் கூட்டி வைத்து நடத்துவதுதான் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தனர். எளிமை, சிக்கனத்தை வலியுறுத்தி பெரியார் அறிமுகப் படுத்திய சுயமரியாதைத் திருமணமுறைக்கும் நீதிமன்றம் தவறான விளக்கங்களை அளித்தது. உயர்நீதி மன்றத்தின் இந்தத் தீர்ப்பை மறுத்து 26.10.2014 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் விடுதலைக்கழக செயலவையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. “கொண்டாட்டமாகவும் விழாவாகவும் நடத்தப்படுவதுதான் திருமணம்” என்று உயர்நீதிமன்றம் வரையரைப்பது ஒரு பண்பாட்டுத் திணிப்பு என்று தீர்மானம் சுட்டிக் காட்டியது. அதிக எண்ணிக்கையில் திருமணங்களை நடத்தி வைத்து, குற்றவாளிகளைப் போல அதைப் பதிவு செய்த வழக்கறிஞர்களையும் நீதிமன்றத் தீர்ப்பு கடுமையாக குறை...

பொதுக் கூட்ட மேடையில் மாநாடுபோல் நடந்தது இந்துமதி-நிர்மல் குமார்  ஜாதி தாலி மறுப்பு மணவிழா 0

பொதுக் கூட்ட மேடையில் மாநாடுபோல் நடந்தது இந்துமதி-நிர்மல் குமார் ஜாதி தாலி மறுப்பு மணவிழா

கழகத் தோழர்கள் நிர்மல்குமார்-இந்துமதி ஆகியோரின் ஜாதி-சடங்கு மறுப்பு திருமண விழா தாலியின்றி, கிணத்துக்கடவுவில் மே 17 அன்று பொதுக்கூட்ட மேடையில் நடந்தது. இந்த புரட்சிகர மணவிழாவுக்கு கழகத் தோழர்கள் ஏராளமாக திரண்டிருந்தனர். பொதுக் கூட்ட மேடையில் திருமணம் நடத்துவதற்கு காவல் துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்று இந்தப் புரட்சிகர மணவிழா நடந்தது, இதன் மற்றொரு சிறப்பாகும். மணவிழா நிகழ்வு பற்றிய செய்தித் தொகுப்பு: தோழர்கள் இந்துமதி-நிர்மல் குமார் ஆகியோரின் ஜாதி-தாலி-சடங்கு மறுப்பு திருமண விழா, மடத்துக்குளம் வெ.ஜோதி, திராவிடர் வாழ்வியல் பண்பாட்டு உறுதி மொழியை வாசிக்க, தோழர்களோடு பொது மக்களும் இணைந்து உறுதியேற்றனர். விழாவிற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்றிட, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தோழர் ரஞ்சிதா வரவேற்புரையாற்றிட, பொள்ளாச்சி மாவட்ட கழகத் தலைவர் விஜயராகவன், சட்ட எரிப்புப் போராளி ஆனைமலை ஏ.கே. ஆறுமுகம் அவர்களை அறிமுகப்படுத்தினர். தொடர்ந்து காவல்துறை ஏற்படுத்திய தடைகள் குறித்தும்...

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம் 0

ஜாதி மறுப்பு காதலர்களை வரவேற்று வாழ்வளிக்கும் – ஒரு கிராமம்

ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதலர்களுக்கு புகலிடமும் பாதுகாப்பும் தரும் கிராமம் எஸ்.பட்டி. இளவரசனை ஜாதி வெறி பலி கொண்ட அதே தர்மபுரியில்தான் இந்த கிராமமும் இருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் எஸ்.பட்டிகள் உருவாக வேண்டும். தமிழ்நாட்டில் ஆச்சரியமான காதல் கிராமம் ஒன்று இருக்கிறது. 1500 குடும்பங்கள் வசிக்கும் அந்த கிராமத்தில் ஏராளமானவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். அதைவிட அதிசயம் என்னவென்றால், பல்வேறு பகுதிகளில் பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்ட 200 ஜோடிகளின் உண்மைக் காதலை உணர்ந்து, அந்த கிராமத்தில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். இந்த அதிசய காதல் கிராமத்தின் பெயர் எஸ்.பட்டி. தர்மபுரி மாவட்டம் அரூரில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காதல் திருமணங்களுக்கும், கலப்புத் திருமணங்களுக்கும் அடையாள சின்னமாக விளங்கி வரும் எஸ்.பட்டியில் இதுவரை நூற்றுக்கணக்கான காதல் திருமணங்கள் நடந்துள்ளன. அந்த காதல் தம்பதிகள் சமூக இடர்பாடுகளை...

ஜாதிமறுப்பு திருமணங்களும் எதிர்கொள்ளும் சவால்களும் கருத்தரங்கம் 2 மன்னார்குடி 27042013 0

ஜாதிமறுப்பு திருமணங்களும் எதிர்கொள்ளும் சவால்களும் கருத்தரங்கம் 2 மன்னார்குடி 27042013

<iframe width=”390″ height=”315″ src=”https://www.youtube.com/embed/Zubk7TebL2g” frameborder=”0″ allowfullscreen></iframe>