சுயமரியாதை திருமணம் சட்டமான நாளில் ஜாதி மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தோழர் ம.மனோகர்-வி.ஜெயமாலா ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கைத் துணை ஏற்பு விழா, 17.1.2016 அன்று மாலை 6 மணிக்கு சிசுவிஹார் சமூகநலக் கூட்டத்தில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்க, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில், வழக்கறிஞர் அஜிதா வாழ்த்துரை வழங்கினார்.
சுயமரியாதை திருமணம், சட்ட வடிவம் பெற்ற நாள் ஜன.17 என்பதால் அந்த நாளை தேர்வு செய்து, மண விழா நடத்தப்பட்டது குறிப்பிடத் தக்கது. மயிலை கழக செயல் வீரர் மனோகர், கழகம் நடத்திய போராட் டங்களில் பங்கேற்றவர். ஈழத் தமிழர் உரிமைகளுக்காக இந்திய அரசைக் கண்டித்து அஞ்சலகம் முன் தாக்குதல் நடத்தியதாக தொடரப் பட்ட வழக்கில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் 7 மாதம் சிறையில் இருந்தவர். காஷ்மீர் உரிமைக்கான போராட்டத்தில் பங் கேற்று கழகத் தலைவருடன் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பார்ப்பனர் பூணூல் அறுப்பு வழக்கில் காவல் துறை தொடர்ந்த பொய் வழக்கை எதிர்கொண்டவர். மணவிழா வில் உரையாற்றிய கழகத் தலைவர், பொதுச் செயலாளர், மாவட்ட செயலாளர் உமாபதி அனைவரும் தோழர் மனோ கரனின் உறுதியான கொள்ளைப் பற்றைப் பாராட்டிப் பேசினார். வாழ்க்கையிலும் ஜாதி மறுப்பையே தனது மணவிழா வழியாக செயல்படுத்தினார் மனோகர். மனோகர்-வி.ஜெயமாலா இணையரை கழகம் வாழ்த்துகிறது.‘

பெரியார் முழக்கம் 18022016 இதழ்

You may also like...