காயத்ரி-ராஜேஷ் ஜாதி மறுப்பு மணவிழா

காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் தினேஷ்குமார் சகோதரரும்,
மு. ரமணி -கு.குருசாமி மகனுமான மு.இராஜேஷ், மறைமலை நகர் கே.நாகலட்சுமி-சு.கேசவன் ஆகியோரின் மகள் கே. காயத்ரி ஆகியோரின் ஜாதி மறுப்பு வாழ்க்கை ஒப்பந்த விழா 4.1.2015 ஞாயிறு மாலை 5 மணியளவில் கூடுவாஞ்சேரி சாரதாம்பாள் திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி, வே. மதிமாறன், வ. வேம்பையன், மு.பிச்சைமுத்து,
மா. சமத்துமணி, சு. செங்குட்டுவன் (மாவட்ட தலைவர்) வாழ்த்துரை வழங்கினர். பெண் வீட்டார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள். தி.வி.க. – தி.க. தோழர்கள் ஏராளமாக வந்திருந்தனர். கழக ஏட்டுக்கு ரூ.2000 நன்கொடை வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 15012015 இதழ்

You may also like...

Leave a Reply