Author: Manoj DVK

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

இலண்டனில் இறைச்சி சாப்பிட்ட வ.வே.சு. அய்யர் தான் சேரன்மாதேவி குருகுலத்தில் வர்ணத் தீண்டாமையை அமுல்படுத்தினார் ¨          செங்கல்பட்டு மாநாட்டுக்கு உலக பகுத்தறிவாளர்கள் அமைப்புகளை எடுத்துக்காட்டி மூடநம்பிக்கைகளை ஒழிக்க பெண்களுடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பெரியார். ¨          திருமணத்துக்கு தாலி என்ற திட்டத்துக்கு மாற்றாக கல்லூரி படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக் கோரிக்கையின் விரிவாக்கம் தான். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சுயமரியாதை இயக்கம் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தேறிய மாநாடு, முதல்நாள் மாநாடு என்பது பெரிய ஊர்வலம் வந்து சேர்வதற்கு நீண்ட நேரமானது. தலைமையுரை வரவேற்புரை யுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. அடுத்தநாள்...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

பெரியார் வெற்றி பெறுகிறார்!

பெரியார் வெற்றி பெறுகிறார்!

ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என்று மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன தலைவர்கள் அந்த தீர்மானத்தை தோற்கடித்ததன் காரணமாக பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டைகளை தூக்கி கொண்டு ஊர் ஊராக விற்பனை செய்தவர் தான், கள்ளுண்ணாமை என்ற கொள்கையை ஆதரித்து தன் தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தியவர் தான் பெரியார், கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஈரோட்டில் இந்தியாவே வியக்கும் அளவுக்கு நடத்தி முடித்தவர் தான் பெரியார், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்குப் பிறகு அதன் காந்தியக் கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்.  கதர்...

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில்  தந்த மரண அடி

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில் தந்த மரண அடி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற இந்து சனாதனவாதிகள் தங்களின் ஜாதியையும் உடன் சுமந்து போய் ஜாதியமைப்பே இல்லாத நாட்டில் ஜாதியத்தையும் அதன் பாகுபாடுகளையும் திணித்து விட்டார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாட்டுக் கலாச்சாரம் – நமது சனாதன கலாசாரத்தை சீரழித்து விட்டது என்கிறார். உண்மையில் சனாதன கலாச்சாரம் தான் மேலை நாடுகளின் சமத்துவப் பண்பாட்டை சீர்குலைத்து வருகிறது. அதன் எதிரொலிதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகராட்சி ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியதாகும். அமெரிக்காவுக்குக் குடியேறிய அந்நாட்டு குடிமக்களாகிய தெற்கு ஆசியர்களிடையே ‘இந்து சனாதனம்’ திணித்த ஜாதியப் பாகுபாடுகளால் பணியிடங்களிலும் குடியேறிய மக்களிடமும் பாகுபாடுகளைக் கொண்ட ‘மனுவாதம்’ தலைவிரித்தாடத் தொடங்கியது. நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்கா இயங்கும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இந்தப் பூங்காவில் மிகப் பெரிய தொழிலதிபராகக் கருதப்படும் சிஸ்கோ என்பவர், தொழிலாளர்கள்...

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக தொழில் முனைவரும் பெரியாரியலாளருமான கோவை அசோக்குமார், புதிய மடிகணினி (லேப் டாப்) கருவியை வழங்கி யுள்ளார். கழக சார்பில் தோழருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பெரியார் முழக்கம் 02032023 இதழ்

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் மாவட்டக் கழகப் பயன்பாட்டுக்கு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி (2009ஆம் ஆண்டு மாடல்) கழகத்துக்கு அளித்துள்ளனர். சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதியிடம் அவரது பிறந்த நாளான பிப். 17 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், உமாபதியிடம் வழங்கினார். கழகப் பணிகளுக்கு இந்த கார் பயன்படும். தனது பிறந்த நாளையொட்டி தோழர்கள் வழங்கிய ரூ.2500/- நன்கொடையை கழக ஏட்டுக்கு பொதுச் செயலாளரிடம் வழங்கினார் இரா. உமாபதி. பெரியார் முழக்கம் 02032023 இதழ்  

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்டக் கழக கலந்தாய்வுக் கூட்டம்

6.1.2023 மாலை 4 மணிக்கு சங்கராபுரம் வாசவி அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மாநில, மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார், மாவட்ட செயலாளர் க. இராமர்,  மாவட்ட அமைப்பாளர் கி. சாமிதுரை, சங்கை ஒன்றிய செயலாளர் அன்பு ரவி, ந. வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதனைத் தொடர்ந்து கழகத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள், கழகம் ஏற்படுத்திய நிகழ்வுகள் ஆகியவைகளைப் பற்றித் தோழர்கள் கருத்து பேசினார். தலைமை செயற்குழு உறுப்பினர் அய்யனார், க.ராமர் மு.நாகராஜ், கி.சாமிதுரை, மா.குமார், அன்பு ரவி, கார்மேகம், பெரியார் வெங்கட் ஆகியோர் உரையாற்றினர். தொடர்ந்து மாநிலப் பொறுப்பாளர்களான தலைமைச் செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு உதாரணங்களைக் கொண்டு அமைப்பின் செயல்பாடுகள் இப்போது...

தமிழ் ‘தேவபாஷை’ அல்ல; மக்கள் மொழி

தமிழ் ‘தேவபாஷை’ அல்ல; மக்கள் மொழி

. வெங்கடேசன் எம்.பி (ளுர ஏநமேயவநளயn ஆஞ) எடுத்த வைத்த விவாதம் நம்மை சிலிர்க்க வைக்கிறது. மக்களவையில் சமஸ்கிருதப் பல்கலைக்கழகங்களின் மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. சு.வெங்கடேசன், ஊஞஐ(ஆ) சமஸ்கிருதத்தை விட மூத்த மொழி தமிழ் என வாதிட்டார். இந்த மசோதாவை முன்மொழிகிற பொழுது அமைச்சர் இந்திய மொழிகளுக் கெல்லாம் தாய்மொழியாகவும், உலக அறிவினுடைய ஆதாரமாகவும் சமஸ்கிருதத்தை முன்வைத்தார். “இதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது?” என்ற கேள்வியை நான் இங்கே எழுப்ப விரும்புகிறேன். நாடாளுமன்றத்தில் அமைச்சர் அறிவியல் பூர்வமான ஆதாரங்களை முன்வைக்க வேண்டும் என்பதை மக்கள் விரும்புவார்கள். சமஸ்கிருதத்தினுடைய முதல் கல்வெட்டு ராஜஸ்தானத்தினுடைய அத்திப்பாரா விலும் குஜராத்தில் இருக்கிற ஜுனாகடிலும் கிடைத்துள்ளது.  அந்த கல்வெட்டின் காலம் கிபி 1-ம் நூற்றாண்டு. ஆனால்,  தமிழ் மொழியில் முதல் கல்வெட்டு மதுரையில் மாங்குளத்திலும் தேனியில் புலிமான்கோம்பையிலும் கிடைத்திருக்கிறது? இந்தக் கல்வெட்டின் காலம் கிமு 6-ம் நூற்றாண்டு. சமஸ்கிருத கல்வெட்டு கிடைத்ததற்கு 700 ஆண்டுகளுக்கு...

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை

வன்கொடுமை தடுப்புச் சட்டத்துக்கு ஆதரவான போராட்டம்: வழக்கு தொடரப்பட்ட கள்ளக்குறிச்சி தோழர்கள் விடுதலை

சமூக ஒடுக்குமுறைக்கு உள்ளாகிவரும் தாழ்த்தபட்ட பழங்குடியினருக்கு ஒரளவு பாதுகாப்பாக இருக்கும் வன்கொடுமை தடுப்புசட்டத்தை நீர்த்து போக செய்யும் வகையில் உச்சநீதிமன்றம் 2018ம் ஆண்டில் ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கியது. இத்தீர்ப்பை அவசர அவசரமாக அமுல்படுதில் ஒன்றிய அரசு முனைப்பு காட்டியது. இதனை எதிர்த்து இந்தியா முழுவதும் தொடர்சியான நீடித்த போராட்டங்கள் நடைபெற்றன. பலமாநிலங்களில் துப்பாக்கி சூடு நடைபெற்று உயிர்ப் பலி ஏற்பட்டது. இதன் பின்னரே இத்தீர்ப்பை உச்சநீதிமன்றமே வாபஸ்பெற்றது. தமிழகத்தில் இடதுசாரிகட்சிகளும், திராவிட இயக்கங்களும், தலித் அமைப்பு களும் ஒருங்கிணைந்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். கள்ளகுறிச்சி மாவட்டத்தில் 9.4.2018 மற்றும் 2.7.2018 ஆகிய தேதிகளில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது சேலம் இருப்புபாதை காவல்படை, ஆத்தூர் காவல்நிலையத்தில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்குகள் விழுப்புரம் நீதிதுறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. வழக்குகளை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு...

21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்; தமிழக முதல்வர் அறிவிப்பு

21 மொழிகளில் பெரியார் எழுத்து பேச்சுகள்; தமிழக முதல்வர் அறிவிப்பு

பன்னாட்டு புத்தகக் கண்காட்சி சென்னையில் மிகச் சிறப்பாக நடந்து முடிந்திருக்கிறது. நிறைவு விழாவில் 118 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. ஏராளமான நூல்கள், 365 நூல்கள் பிறமொழிகள் தமிழில் இருந்து மொழிபெயர்ப்பதற்கான ஒப்பந்தங்களாக அவை நடந்து முடிந்திருக்கின்றன. நிறைவு விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். பெரியாருடைய எழுத்து, பேச்சுகள், இந்திய மொழிகளை உள்ளடக்கி 21 உலக மொழிகளில் மொழிப்பெயர்த்து வெளியிட தமிழக அரசு ஏற்பாடுகளைத் தொடங்கி இருக்கிறது என்ற அறிவிப்பை அவர் வெளியிட்டு இருக்கிறார். அதே உரையில் அவர் மற்றொரு செய்தியையும் குறிப்பிட்டு இருக்கிறார். பதிப்புத் துறையில் பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும், ஏங்கல்ஸ், லெனின்  அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார். அந்த வகையில் முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிகளாக இந்த பன்னாட்டு புத்தகக் கண்காட்சி உள்ளது என்றும்...

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

‘அம்மா’ பெயரில் அரசியல் சரணாகதி

ஈரோடு இடைத் தேர்தல் வந்தாலும் வந்துச்சி; அக்கிரகார  (அல்லது மயிலாப்பூர் ஆடிட்டர்) தி.மு.க. எனும் அதிமுக முகத்திரை கிழிஞ்சு தொங்குது என்றார் ஒரு நண்பர். “நான் ஒப்புக் கொள்ள மாட்டேன்; முகத்திரை ஒன்றை மாட்டிக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அவர்களுக்கு அவ்வளவு வீரம். பல ஆண்டுகாலம் ஒன்றாகப் பயணித்த சொந்தக் கட்சிக்காரர்களிடம் முண்டாவைத் தூக்கி கட்டிப் புரண்டு திருப்பி திருப்பி அடிப்பார்கள். தூக்கிப் போட்டு மிதிப்பார்கள். ஆனால் பா.ஜ.க. என்று வந்து விட்டால் அவ்வளவு தான்! நீ யார்ரா, முதலில் போய் பா.ஜ.க.வைக் காலைப் பிடிப்பது? எனக்கில்லாத உரிமை உனக்கு வந்து விட்டதா? என்று மீண்டும் யுத்தக் களத்தில் வீரத்துடன் இறங்குவார்கள். ‘அமைதிப் படை’ படத்தில் சத்யராஜ் ஆடையைக் துவைப்பதில் தனது சீனியாரிட்டி உரிமையை விட்டுக் கொடுக்காமல் மணிவண்ணன் போராடும் வீரம்செறிந்த காட்சி நினைவுக்கு வந்தால் நாம் பொறுப்பு அல்ல. பா.ஜ.க.வின் ‘புனிதத்தலமான’ குஜராத்துக்கே யாத்திரை போயிருக்கிறாராம் ஓ பன்னீர்செல்வம். அழைக்கச்...

கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்

கருநாடகத்தில் ‘திராவிட சங்கம்’ உதயம்

ச. சிவலிங்கம் தலைவர், சுயமரியாதை தலித் சக்தி அரங்கின் மேடையில் நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தவர் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று  முழங்கினார்கள். அதேபோல மேடையில் இருந்தவர் ‘திராவிடம்’ ‘திராவிடம்’ என்று  முழக்கமிட அரங்கில் இருந்தவர்கள் ‘கன்னடம்’ ‘கன்னடம்’ என்று முழங்கினார்கள். அரங்கில் இருந்த எனக்கு “சென்னை கலைவாணர்’’ அரங்கில் இருக்கின்றோமா எனும் எண்ண ஓட்டங்கள். ஆனால் இந்த முழக்கங்களை வரலாற்றுப் பதிவாக மாற்றியது கொண்டஜ்ஜி பசப்பா அரங்கமாகும். பெங்களூரின் மையப்பகுதியில் இருந்தது அரங்கம்.  கருநாடகத்தின் சட்டமன்றமான ‘விதான சௌதாவிற்கு’ கூப்பிடும் தூரத்தில்தான் அந்த அரங்கம் இருந்தது. மேடையில் அமைக்கப்பட்டிருந்த திரையில் ஒளிவெள்ளத்தில் கருநாடகத்தின் நிலவியலைக் கண்முன் நிறுத்தும் வண்ணமயமான காட்சிகள்; பசுமையான காடுகள், மலைத் தொடர்கள், நீர் வீழ்ச்சிகள், தங்களின் அடையாளம் உயிர் பெற்றதைப் போல பாடிக்கொண்டிருந்தன. அந்த பாடல்களின் உட்பொருளாக – சுனுளு எனும் எழுத்துகள் மக்களுடன் உறவாட துடித்துக் கொண்டிருந்தன. ஆம்!...

கழக ஏட்டுக்கு சந்தாக்கள்

கழக ஏட்டுக்கு சந்தாக்கள்

சென்னையில் நடந்த தமிழர் திருநாள் விழாவில் கழக ஏட்டுக்கு சந்தாக்கள் வழங்கப்பட்டன. திருவல்லிக்கேணி பகுதி சார்பில் – 100 சந்தா – ரூ.30,000/- ம.கி. எட்வின் பிரபாகரன் – 40 சந்தா – ரூ.12,000/- மயிலைப் பகுதி கழக சார்பில் – 17 சந்தா – ரூ.5,100/- பெரியார் முழக்கம் 19/01/2023 இதழ்

நங்கவள்ளி – வனவாசியில் பெரியார் சுவரொட்டியைக் கிழித்த பா.ஜ.க.காரர் மன்னிப்புக் கேட்டார்

நங்கவள்ளி – வனவாசியில் பெரியார் சுவரொட்டியைக் கிழித்த பா.ஜ.க.காரர் மன்னிப்புக் கேட்டார்

சேலம் மேற்கு மாவட்ட நங்கவள்ளி ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பெரியார் 49 ஆவது நினைவு நாளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர் கிழிப்பு சம்பந்தமாக நங்கவள்ளி காவல் நிலையத்தில், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சி.அன்பு தலைமையில் தோழர்களின் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் விசாரணையில் தெரியவந்தது – வனவாசி பகுதியைச் சார்ந்த பா.ஜ.க. கட்சியின் நபர் நஞ்சப்பன் த/பெ.  மாரிச்செட்டி தேவாங்கர் தெரு  பேரூராட்சி பின்புறம் உள்ளவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. காவல்துறை விசாரித்ததில் நஞ்சப்பன் என்பவர் சொல்லியது , “நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். நான் நெசவுத் தொழில் செய்து வருகிறேன். பா.ஜ.க.வில் உறுப்பினராக உள்ளேன் . நான் தினந்தோறும் வனவாசி சந்தைப்பேட்டை அருகில் உள்ள டீக்கடையில் காலையில் 3 மணி அளவில் டீ குடிப்பது வழக்கம். 24/12/2022 தேதி வழக்கம்போல் விடியற்காலை டீ குடிக்க வழக்கம்போல் சென்றேன் . குளிர்காலம் என்பதால் சந்தைப்பேட்டை வணிக...

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் விடுதலை : வழக்கு நடத்திய திராவிடர் கழக வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியனுக்கு கழகம் நன்றி

2014ஆம் ஆண்டு அறிவுக்கு ஒவ்வாத ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை ஆபாசங்களை விளக்கி மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன், தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் துண்டறிக்கை வழங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தனர். இந்து முன்னணி கும்பல் சிலர் துண்டறிக்கை தரக்கூடாது என ஆபாசமாகப் பேசி ரகளையில் ஈடுபட்டு மோதலில் முடிந்த நிலையில் தோழர்கள் அன்னூர் முருகேசன், முடுக்கந்துறை இரவிச்சந்திரன் ஆகியோரை மேட்டுப்பாளையம் காவல்துறை கைது செய்தது. இந்து முன்னணியினர் சிலரையும் காவல்துறை கைது செய்தனர்.  கழகத் தோழர்கள் 15 நாள் சிறைக்கு பின் பிணையில் வெளிவந்தனர். இந்த வழக்கு 8 வருடமாக நடந்து வந்தது. திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்காக திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் திருப்பூர் பாண்டியன் வழக்கறிஞராக தொடர்ந்து வாதாடினார். இந்நிலையில்  11.1.2023 இன்று திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.  இந்த வழக்குக்காக தொகை ஏதும் பெறாமல்...

‘பஞ்ச பூதங்கள்’ தான் உயிரை இயக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரானது

‘பஞ்ச பூதங்கள்’ தான் உயிரை இயக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரானது

மனித உடல் – நெருப்பு, காற்று, நீர், பூமி, வானம் எனும் பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைப்பால் உருவானது என்றும் உயிர் பிரிந்து மரணம் நிகழும்போது இந்த அய்ந்தும் தனித்தனியே பிரிந்து விடுகிறது என்றும் ஒரு கூற்று நம்பப்படுகிறது. நீண்டகால இந்த நம்பிக்கை அறிவியலுக்கு உடன்பட்டதா? இல்லை. பிரான்ஸ் நாட்டின் இரசாயனத்துறை ஆராய்ச்சியாளர் அன்டோனி லெவோய்சியர் (யவேடிiநே டுயஎடிளைநைச) நிரூபித்த அறிவியல் ஆய்வின்படி நெருப்பு எரிதல் என்பது ஒரு இரசாயன நிகழ்வு. காற்று என்பது வாயுக்களின் (ழுயளநள) கலவை. நீர் என்பது, அய்ட்ரஜன் மற்றும் ஆக்சிஜனைக் கொண்டது. எனவே நெருப்பு, காற்று, நீர் தனி படிமங்கள் அல்ல. அதேபோல பூமியும், வானமும் தனியான படிமங்கள் (நடநஅநவேள) அல்ல. அறிவியல் கலைக் களஞ்சியம் ‘படிமம்’ என்றால் (நடநஅநவள) என்னவென்று விளக்குகிறது. ஒரே வகையான அளவைக் கொண்டதே படிமம். பிரபஞ்சத்தில் அடிப்படையே படிமங்கள் தான். அதை மேலும் எளிமையாகப் பிளக்க முடியாது. உலகில் 109 படிமங்கள்...

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரைக் கண்டித்து கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள்

ஆளுநரை கண்டித்து பல்வேறு இடங்களில் நடந்த கழகம் முன்னெடுத்த ஆர்ப்பாட்டங்கள். மேட்டூர் : ஆளுநரே வெளியேறு! ஒன்றிய அரசே, ஆணவம் பிடித்த ஆளுநரைத் திரும்பப் பெறு என்ற முழக்கத்தோடு மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்பு களுடன் 12.01.2023 வியாழன் மாலை 4.30 மணியளவில் மேட்டூர் சின்ன பார்க் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டம் மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா தலைமையில் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்தில் குமரப்பா, ஆளுநரைக் கண்டித்து கண்டன முழக்கமிட அனைவரும் முழக்கமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்ப் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் சி.சதீஷ், சிபிஐ (எம்) மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.இளங்கோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் சிவக்குமார், ளுனுஞஐ கட்சியின் மேட்டூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ஃபைரோஸ், திராவிடர் விடுதலைக்கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொளத்தூர் ஒன்றிய செயலாளர் சேட்டு...

‘சர்வம் நிரந்தரம்!’

‘சர்வம் நிரந்தரம்!’

2024 நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்காக ‘பாரத தேசத்து’ குடிமக்களான வாக்காளர்கள் யாரும் காத்திருக்க வேண்டாம் – அடுத்த பிரதமர் மோடி தானாம்; பா.ஜ.க. கட்சித் தலைவர் ஜெ.பி. நட்டா தானாம்; அமீத்ஷா ‘ஜீ’ அறிவித்து விட்டார். “தேர்தல் ஆணையமே; மூட்டைக் கட்டிக் கொண்டு ஓடு; வாக்கு எந்திரங்களை உடைத்து அதானி துறைமுகத்துக்கு பார்சலில் அனுப்பு” என்று அமீத்ஷா, விரைவில் அறிவிப்பார். எதற்கு பல்லாயிரம் கோடி ரூபாயை பாழடித்து, ஒரு ‘தேர்தல்’ திருவிழாவை நடத்த வேண்டும்?அந்தப் பணத்தை இராமன் கோயிலில் போட்டாலாவது மக்கள் ‘சுபிட்சம்’ பெறுவார்களே என்கிறார்கள் சங்கிகள். அப்படியானால், “ஒரே நாடு; ஒரே தேர்தல்” என்றெல்லாம் விவாதங்களை தேர்தல் ஆணையம் ஏன் நடத்துகிறது என்று கேள்வி கேட்கக் கூடாது. தேர்தல் ஆணையம் என்று ஒன்று ‘பரத கண்டத்தில்’ இராமன் காட்டிய வழியில் தேர்தலை எல்லாம் நடத்திக் கொண்டிருக்கிறது, என்று உலக நாடுகளுக்கு படம் காட்ட வேண்டுமல்லவா? அதற்குத் தான். மோடி, நட்டா...

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை

பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது : கழகத் தலைவர் அறிக்கை பெரியார் பல்கலைக்கழக முறைகேடுகள் மீதான விசாரணை வரவேற்கத்தக்கது என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை விடுத்துள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் கடந்த பல ஆண்டுகளாகவே பணி நியமனம் போன்றவற்றில் இட ஒதுக்கீட்டு விதிகளைப் பின்பற்றாமை, விதிகளை மீறி பாரபட்சமாய் நடந்து கொள்ளுதல்,உரிமை கேட்போரை இடைநீக்கம், பணி நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளையும் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் பல ஆர்ப்பாட்டங்களை பல்கலைக்கழகத்திற்கு முன் கடந்த காலங்களில் நடத்தி இருக்கிறது. மேலும்  பெரியார் பல்கலைக் கழகத்தில் நடக்கும் முறைகேடுகளை விளக்கி அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் பல்வேறு முறையீட்டு மனுக்களையும் அனுப்பி இருக்கிறது. 1)           அண்மையில் நடந்த உடற்கல்வி இயக்குனர், நூலகர் போன்ற பணி நியமனங்களில் சுழற்சி முறையைப் பின்பற்றாமல் நியமனம் செய்தது. 2)           போலியான கல்விச் சான்றிதழ்கள் என தெரிந்தும் போலி சான்றிதழ் அளித்தவர்...

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம்

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம்

தலையங்கம் ராகுல்காந்தி நடத்தும் கருத்தியல் போராட்டம் ஆர்.எஸ்.எஸ்.சின் பார்ப்பனிய சனாதனம் ஒரு அமைப்பு மட்டுமல்ல; அது ஒரு ஆபத்தான சமூகத்திற்கு எதிரான கொடூர கருத்தியல் வடிவம் என்ற தெளிவான புரிதலுக்கு ராகுல்காந்தி வந்துள்ளார். இந்திய அரசியலில் இப்படி ஒரு சித்தாந்தத்தை எதிர்த்து மக்களை அணி திரட்டும் இளம் தலைவர் ஒருவர் புறப்பட்டிருக்கிறார் என்பதே நம்மைப் பொறுத்த வரையில் ஒரு அபூர்வமான நிகழ்வு என்றே கருதுகிறோம். அவருடைய நடைப்பயணம் முழுவதிலும் அவர் கட்சி நலன், தேர்தல் வெற்றி களைக் கடந்து ஆர்.எஸ்.எஸ். கருத்தியல் ஆபத்துகளையே முன் வைத்து, மக்களை அணி திரட்டி வருகிறார். “ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு நான் ஒருபோதும் போக மாட்டேன். நீங்கள் என் கழுத்தை அறுத்தாலும் நான் அங்கு செல்லமாட்டேன். எனது குடும்பத்திற்கு என்று ஒரு கொள்கை உள்ளது. அது ஒரு சிந்தனை அமைப்பைக் கொண்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அமைப் பின் அழுத்தம் உள்ளது....

கழகத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள்

கழகத் தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பங்கேற்கும் கழகக் கலந்துரையாடல் கூட்டங்கள் கழகத் தலைவர் மற்றும் மாநிலப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள் (நான்காம் கட்ட பயணப் பட்டியல்) 26.01.2023 காலை 10.00 கோவைமாவட்டம் 26.01.2023 மாலை 5.00 மணி திருப்பூர் மாவட்டம் ( திருப்பூர் இரவு தங்கல்) 27.01.2023 காலை 10.00 மணி நாமக்கல் மாவட்டம் 27.01.2023 மாலை 05.00 மணி கரூர் மாவட்டம் மேற்கண்ட மாவட்டப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெறும் ஊர் மற்றும் இடத்தை முடிவு செய்து தலைமைக் கழகத்திற்கு  தகவல் தர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமை அலுவலகம்,  திராவிடர் விடுதலைக்கழகம் 18.01.2023     பெரியார் முழக்கம் 19012023 இதழ்

நான் கருஞ்சட்டைக்காரன்’

நான் கருஞ்சட்டைக்காரன்’

நான் கருஞ்சட்டைக்காரன்’ பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் 13.1.2013 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணித் தலைவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ நூலை வெளியிட்டார். அவர் நிகழ்த்திய உரை: “நான் இங்கு வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளேன். ஆனால், எனக்கு கருப்பு சட்டை அணிவது தான் மிகவும் பிடித்த ஒன்று. நான் நிறத்திற்காகக் கூறவில்லை; கருத்திற்காக கூறுகிறேன். அதை உணர்ந்து தான் அன்போடு என்னை உரிமையோடு இந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் அழைத்திருந் தார்கள். நானும் அதே எண்ணத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடு வதற்காக இங்கு வந்திருக்கிறேன்....

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

‘நான் கருஞ்சட்டைக்காரன்’

நான் கருஞ்சட்டைக்காரன்’ பொங்கல் விழாவில் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் 13.1.2013 அன்று சென்னை மாவட்டக் கழக சார்பில் நடந்த தமிழர் திருநாள் விழா கொண்டாட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. இளைஞரணித் தலைவர் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், விளையாட்டுப் போட்டியில் வெற்றியடைந்தவர்களுக்கு பரிசுகளை வழங்கியதோடு பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள்’ நூலை வெளியிட்டார். அவர் நிகழ்த்திய உரை: “நான் இங்கு வெள்ளை சட்டை அணிந்து வந்துள்ளேன். ஆனால், எனக்கு கருப்பு சட்டை அணிவது தான் மிகவும் பிடித்த ஒன்று. நான் நிறத்திற்காகக் கூறவில்லை; கருத்திற்காக கூறுகிறேன். அதை உணர்ந்து தான் அன்போடு என்னை உரிமையோடு இந்த தமிழர் திருநாள் நிகழ்ச்சிக்கு அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் அழைத்திருந் தார்கள். நானும் அதே எண்ணத்தோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களோடு இந்த பொங்கல் திருநாளை கொண்டாடு வதற்காக இங்கு வந்திருக்கிறேன்....