Author: admin

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர் – பெரியார் குறித்த சர்ச்சைகள் தொடர வேண்டாம்!

அம்பேத்கர்-பெரியாரிடையே மோதலை உருவாக்கும் சதித் திட்டத்தை சங் பரிவாரங்கள் அரங்கேற்றி வருகின்றன. அந்த வலையில் உண்மையான கொள்கை உணர்வு கொண்ட பெரியார்-அம்பேத்கர் இயக்கங்கள் விழுந்துவிடக் கூடாது. திரைப்பட இயக்குனர் ரஞ்சித் அளித்த ஒரு பேட்டியில், ‘பெரியார் பெயரை உச்சரிக்கவில்லை’ என்று முகநூலில் ‘விவாதப்போர்’ நடந்து வருகிறது. தலைவர்களின் பெயரை உச்சரிப்பது என்பதைவிட அந்தத் தலைவர்கள் இலட்சியங்களைப் பேசுகிறார்களா? என்பதுதான் முக்கியம். ஜாதி ஒழிப்புக் கருத்துகளைப் பேசும் ஒவ்வொருவரும் அம்பேத்கரிஸ்ட்டுதான்; பெரியாரிஸ்டுதான். அம்பேத்கரைப் பேசும்போது பெரியார் பெயரை ஏன் குறிப்பிடவில்லை என்று பெரியாரிஸ்டுகள் எழுப்பும் கேள்விகள் தேவையற்றவை என்பதே நமது கருத்து. தலித் அல்லாதவர்களைவிட ‘தலித்’ மக்கள் ஜாதி ஒடுக்குமுறைக்குள்ளாகி வருகிறார்கள் என்பதே உண்மை. ஜாதிய ஒடுக்குமுறைக்குள்ளாகிறவர்களின் கூடுதலான உணர்வுகளையும் நியாயங்களையும் சரியாகப் புரிந்து கொள்ளும் பக்குவம் பெற்றவர்களே பெரியாரிஸ்டுகளாகவும் இருக்க முடியும். சொல்லப் போனால் அம்பேத்கர், பெரியாரைப் பற்றி அதிகம் பேசாத நிலையில் பெரியார் தான் அம்பேத்கரைப் பற்றி பேசினார். அம்பேத்கரை...

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள்ப் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: (4.1.2018 இதழ் தொடர்ச்சி) “கரூர் மாவட்டம் வாங்கலில் 14.12.2016 அன்று மாலை ‘புதிய மணல்குவாரி அமைக்கக் கூடாது, ஏன்?’ என்ற ஆலோசனைக் கூட்டம் முடிந்து,...

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

‘சூடிக் கொடுத்த சுடர்க்கொடி’ என்றால் அர்த்தம் என்னவோ?

கவிஞர் வைரமுத்துவுக்கு எதிரான எச் ராஜாவின் கொலைவெறிப் பேச்சை கேட்டேன். அவர் ஒரு ஆர்.எஸ்.எஸ். பயங்கரவாதி என்பது மேலும் நிச்சயமாகிறது. “ஆண்டாள் ஒரு தேவதாசி” என்று ஓர் ஆய்வாளர் கூறியதை கவிஞர் மேற்கோள் காட்டியதற்குத்தான் “அவரது தலை உருள வேண்டும்” என்று தன் சகாக்களை தூண்டிவிடும் வகையில் பேசியுள்ளார். இது ஆய்வுரிமை மீது, கருத்துரிமை மீது தொடுக்கப்பட்டுள்ள தாக்குதல். ஆண்டாளைப் பற்றிய செய்திகளுக்கு ஆதாரம் அவரின் பாடல்கள் மற்றும் அவரைப் பற்றிய வைணவ நூல்களின் கூற்றுக்கள். அவற்றைப் படிக்கிற எவருக்கும் ஆண்டாள் ஒரு தேவதாசியாக இருக்கலாம் எனும் சந்தேகம் வராமல் போகாது. எச் ராஜாவே “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி” என்று பெருமையோடு பேசியிருக்கிறார். அதன் அர்த்தம் என்னவோ? தான் சூடிய மாலையை விஷ்ணுவிற்கு அனுப்பினால் அதன் பொருள் அந்தக் கடவுளை மணந்தார் என்பது. பொட்டுக்கட்டும் சடங்கில்தான் ஒரு கடவுளை மணப்பது வரும். அப்புறம், தனது பாடல்களில் விஷ்ணு தன்னை உறவுகொள்ள வரவேண்டும்...

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…? என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க,...

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்…. ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா….. நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு…. இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை சிறப்புரை : தோழர் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர்.,திவிக பேராசிரியர்.சரசுவதி எழுத்தாளர்.மதிமாறன் கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்…. ஆணவக் கொலைகள் சாகட்டும்…. ஜாதி மறுப்பு திருமணங்கள் வாழட்டும் ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவுக்கு… தொடர்புக்கு : 7299230363/8056460580

ஸ்ரீ மத் சடகோப இராமானுஜ ஜீயரின் அருள்வாக்கு – கருத்தரங்கம்

ஓர் வேண்டுகோள் ! அனைவருக்கும் வணக்கம். இது ஒரு நீண்ட வேண்டுகோள், சற்று பொறுமையுடன் முழுமையாக படியுங்கள் ! எதிர்வரும் 03.02.2018, சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு சேலம் மாவட்டம், கொளத்தூர் பெரியார் படிப்பகம் அல்லது லட்சுமி திருமண மண்டபத்தில் ‘ஆண்டாள் ஆய்வுக்குரியவளே’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்த திட்டமிட்டிருந்த கருத்தரங்கை நடத்தினால் மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படலாம் என்று கற்பனைத் திறன் மிகுந்த கொளத்தூர் ஆய்வாளர் முடிவுக்கு வந்துள்ளார். எனவே நாம் அனுமதிக்கு விண்ணப்பிக்காத அந்த நிகழ்வை நமக்கு சொந்தமான பெரியார் படிப்பகத்துக்குள் கலந்து உரையாடுவதையே, நுழைவுக் கட்டணம் செலுத்தியவர்கள் மட்டும் உள்ளே வந்து நிகழ்வைக் கேட்கலாம் என்று அறிவித்து நடக்கும் உள்ளரங்கு கூட்டத்தையே நடத்த அனுமதி மறுத்துள்ளார். மறுப்பு அறிவிப்பினை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் சேலம் மாவட்ட அமைப்பளர் நங்கவள்ளி கிருஷ்ணன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் வீட்டு கதவுகளில் வருவாய்த்துறை...

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் மேட்டூர் 26012018

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு அவமதிப்பு செய்த காஞ்சி சங்கரமட இளைய மடாதிபதி விஜயேந்திரன் திமிர் போக்கை கண்டித்து திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம். நாள்: 26-01-2018 மாலை 4.00 மணி இடம்: மேட்டூர் பேருந்து நிலையம்      எதிரில், தலைமை: தோழர் கு.சூரியகுமார், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் தி.வி.க. முன்னிலை: தோழர் செ.மார்ட்டின், மேட்டூர் நகர தலைவர் தோழர் காவை ஈசுவரன், கொளத்தூர் ஒன்றிய செயலாளர் கண்டன உரை: தோழர் அ.சக்திவேல், செயற்குழு உறுப்பினர் தி.வி.க. தோழர் டைகர் பாலன், மாவட்ட அமைப்பாளர் தி.வி.க. ஏற்பாடு: திராவிடர் விடுதலைக் கழகம், சேலம் மேற்கு மாவட்டம்.

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்து முற்றுகை போராட்டம் சேலம் 25012018

சேலம் மாவட்ட தி.வி.க. சார்பில் இன்று மாலை 4.30 மணியளவில் சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் தமிழ் தாய் வாழ்த்து பாடலை அவமரியாதை செய்த காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரனின் ஆணவத்தை கண்டித்தும், திருவள்ளுவர் சிலை முன் மன்னிப்பு கேட்கக்கோரியும்   சேலம் சங்கர மடம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விஜயேந்திரன் செயலுக்கு எதிரான முழங்கங்கள் எழுப்பப்பட்டது. தோழர்கள் சக்திவேல், டேவிட், சூரியகுமார், ஏற்காடு பெருமாள், மேட்டூர் தேன்மொழி, இளம்பிள்ளை வசந்தி உட்பட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது. கொளத்தூர், காவலாண்டியூர்,  மேட்டூர், நங்கவள்ளி, இளம்பிள்ளை, ஏற்காடு ஆகிய பகுதியை சேர்ந்த தோழர்கள் கலந்துகொண்டனர்.

தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு திருச்சி 25012018

இன்று (25.01.2018) பிற்பகல் 3 மணிக்கு திருச்சியில். ‘தமிழ்த்தேசிய சுயநிர்ணய உரிமை மாநாடு !’ ஜனவரி 25 மொழிப்போர் ஈகியர் நாளில்… கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். நாள் : 25.01.2018 வியாழக்கிழமை. நேரம் : பிற்பகல் 3 மணி இடம் : டி.எம்.எஸ்.எஸ். அரங்கம்,ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி அருகில்,தொடர்வண்டி சந்திப்பு,திருச்சி. தோழமை அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகிறார்கள் ! நிகழ்ச்சி ஏற்பாடு : சி.பி.எம்.எல்.(மக்கள் விடுதலை).

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

விஜயேந்திரர் உருவ பொம்மை எரிப்பு பள்ளிபாளையம் 25012018

திவிக சார்பில் நாளை உருவ பொம்மை எரிப்பு… தமிழ்த்தாய் வாழ்த்துக்கு மரியாதை செலுத்தாத, தமிழை நீசபாஷை என்கிற பார்ப்பன கும்பலின் குட்டித்தலைவன் விஜயேந்திரன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது…! நேரம்:மாலை-4.00 மணி, இடம்:பள்ளிபாளையம். நாமக்கல் மாவட்டம்.   செய்தி – வைரவேல்

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!

800 ஆண்டுகள் ஆண்ட இஸ்லாமிய பேரரசை எதிர்க்காத பார்ப்பனர்கள்..!!!! ஏன் 200 ஆண்டுகள் மட்டுமே ஆட்சி புரிந்த கிருத்தவ பிரிட்டிஸாரை எதிர்த்தார்கள்..???? 800 ஆண்டுகள் ஆண்ட முகலாய பேரரசுகள், பெரும்பான்மை மக்களை அடிமைபடுத்திய இந்து மனு தர்ம கோட்பாட்டினை எதிர்க்கவே இல்லை. ஆனால், இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷார்கள் இந்து மனு தர்ம்ம சட்டத்தை படிப்படியாக ஒழித்து கட்டினார்கள்….??? அவை நாம் என்னவென்று பார்ப்போம்… பார்ப்பான் மட்டுமே கல்வி கற்க உரிமை உண்டு எனவும், சத்திரியன் மட்டுமே நிலம் மற்றும் அரசராக இருக்க முடியும் எனவும், வைசியன் வியாபார செய்ய உரிமை உண்டு எனவும், சூத்திரன் இவர்களுக்கு அடிமையாக இருந்து வேலை செய்ய வேண்டும் எனவும் இருந்த இந்து மனு தர்ம்ம சட்டத்தை பிரிடிஷ்சார்கள் ஏற்றுக்கொள்ளாமல், சட்டம் என்றால் அனைவரும் சமமாக இருக்க வேண்டும் என்ற அடிபடையில் 1773 ஆம் ஆண்டு பிரிடிஷ் அரசு சட்டத்தை எழு✍த தொடங்கியது. சத்திரியர்கள் மட்டுமே சொத்து...

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்..

தமிழ் ஒரு நீசபாஷை; தமிழில் பேசியபின் ஸ்நானம் செய்க! — காஞ்சி சங்கர மடத்தின் தமிழின் மீதான துவேஷம்.. அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச் சாரியார் எழுதிய “இந்து மதம் எங்கே போகிறது?’’ என்ற நூலிலிருந்து… காஞ்சி சங்கராச்சாரியார் மறைந்த சந்திரசேகரேந்திர சரஸ்வதியும் அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரும் திருவிடை மருதூர் சத்திரத்தில் உரையாடிக் கொண்டு இருக்கிறார்கள். நாங்கள் பேசிக் கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது. “ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?’’ என்று மகா பெரியவர் நகர்ந்தபிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன். “உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்து கொள்..’ என்றேன். சங்கராச்சாரியார் தமிழைப் பேசினால். அவர் தீட்டுப்பட்டு விடுவார்; காரணம் தமிழ் நீஷப்பாஷை. தமிழை நீஷப்பாஷையான பிராமணோத்தமர் பேசினால்., அவர்...

காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் !

          காஞ்சி சங்கர மடம் முற்றுகைப் போராட்டம் ! நாளை (25.01.2018) திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் காஞ்சி மக்கள் மன்றம் ஒருங்கிணைந்து…. #காஞ்சி_சங்கர_மடம்_முற்றுகைப்_போராட்டம்… நாளை (25.01.2018) காலை 10 மணிக்கு… இடம்: பெரியார் சிலை எதிரில், சங்கர மடம், காஞ்சிபுரம். தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்காமல் பார்ப்பனியத் திமிரோடு தமிழ்த் தாய் வாழ்த்தை இழிவுபடுத்திய விஜயேந்திர சரஸ்வதியை கண்டித்து.. தமிழையும், தமிழர்களையும் அவமதித்தற்காக விஜயேந்திர சரஸ்வதி மற்றும் எச்.ராஜா ஆகிய இருவரும் திருவள்ளுவர் சிலை முன்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற முழக்கத்தோடு… #முற்றுகைப்_போராட்டம்… பார்ப்பனீய கொட்டத்தை அடக்க தோழர்களே அணிதிரள்வீர்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு

காஞ்சி சங்கராச்சாரி விஜயேந்திரன்,எச்.ராஜா ஆகியோர் தமிழை அவமதித்ததற்காக திருவள்ளுவர் சிலை முன்பு நின்று மன்னிப்பு கேட்க வேண்டும் ! – கொளத்தூர் மணி அறிவிப்பு. இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை ! தமிழை அவமதித்த காஞ்சி விஜயேந்திரனுக்கு கடும் கண்டனம் ! சென்னையில் எச்.ராஜாவின் தந்தை ஹரிஹர சர்மா என்பவர் எழுதிய தமிழ்- சமஸ்கிருதம் அகராதி நூல் வெளியீட்டு விழாவை எச்.ராஜா நடத்தினார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூலை வெளியிட்டார். விழாவின் போது தொடக்கத்தில் தமிழ்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. அப்போது ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். ஆனால் விழாவில் பங்கேற்ற காஞ்சி இளைய மடாதிபதி விஜயேந்திரர் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது பார்பனத் திமிருடன் எழுந்து நிற்காமல் அமர்ந்தபடியே இருந்தார்.இதனை எச்.ராஜாவும் கண்டும் காணாமல் இருந்து தமிழர்களை அவமதித்துள்ளார். அது போலவே நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்கள் அமர்ந்திருந்த மேடையிலேயே காஞ்சி விஜயேந்திரனுக்கு மட்டும்...

பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! சேலம் 28012018

‘பொய் வழக்கும்,போராட்டமும்’ – நூல் அறிமுகவிழா ! நாள் : 28.01.2018.ஞாயிற்றுக்கிழமை. நேரம் : மாலை 05.30 மணி. இடம் : ஹோட்டல் வசந்தம்,புதிய பேருந்து நிலையம் எதிரில்,சேலம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு நூல் திறனாய்வுச் சிறப்புரையாற்றுகிறார்கள்.

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

பேருந்து கட்டண உயர்வு – கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை 24012018

மக்களை திரட்டுவோம் மக்கள் விரோதிகளை விரட்டுவோம் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 24.1.18 காலை 11 மணி புதூர் பேருந்து நிலையம் திராவிடர் விடுதலைக் கழகம் மதுரை

ஆண்டாள் ஆய்வுக்குரியவளே – கருத்தரங்கம் 03022018

திராவிடர்_விடுதலைக்_கழகம் நடத்தும் “ஆண்டாள் ஆய்வுக்குறியவளே” கருத்தரங்கம். இடம் : பெரியார் படிப்பகம் ( செக்போஸ்ட், கொளத்தூர்) நாள்: 03022018 மாலை 6 மணி ஆண்டாள் பாடியது பக்தி இலக்கியமா ? காமக் காவியமா ? கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய ஒரு கட்டுரை ‘தினமனியில்’ (08.01.2018) அன்று வெளிவந்தது. யார் -அவர் எத்தகையவர் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் கொடுத்து எழுதியிருந்தார். ” Andal was herself a devadasi who lived and died in srirangam temple” ஆண்டாள் என்பவர் ஒரு தேவதாசியா ஸ்ரீரங்கம் கோவிலில் வாழ்ந்து மரணமடைந்தாள் என்பது இதன் பொருள் . இதனைச் சொல்பவர் வைரமுத்துவல்ல அமெரிக்காவின் இண்டியான பல்கலைக் கழகத்தைச் சார்ந்த சுபாஸ் சந்திர மாலிக் என்பவர் எழுதி வெளியிட்ட “Indian movement some aspects of dissent protest and reform” என்ற நூலில் இது காணப்படிகிறது என வைரமுத்து ஆதாரப்பூர்வமாக எடுத்துக்காட்டிய பிறகு அவர் மீது...

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

மாணவர் சரத்பிரபு படுகொலைக்கு நீதி கேட்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தடை திருச்செங்கோடு

டெல்லியில் மத்திய அரசின் மருத்துவ கல்வி நிறவனத்தின் சாதிய வன்மத்தால் படுகொலை செய்யப்பட்ட…. திருப்பூர் சரத் பிரபுவுக்கு நீதிகேட்டு திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் வருகிற புதன்கிழமை (24-01-2018) ஆர்ப்பாட்டம் நடைபெற அனுமதி கேட்டதற்கு காவல் துறை மறுப்பு. நிகழ்வின் சிறப்பு யாதெனில், சரத் பிரபு கொங்கு வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்… அவருக்கு நீதிகேட்க போகிறவர்கள் திராவிடர் விடுதலைக் கழகம். ஆதித்தமிழர் பேரவை. விடுதலைச் சிறுத்தைகள். மா.வைரவேல் மாவட்ட அமைப்பாளர். திவிக. விரைவில் நீதிமன்ற அனுமதியோடு ஆர்ப்பாட்டம் நடைபெறும்

மதவெறியை தூண்டும் எச் ராஜாவை கைது செய்யக்கோரி புகார் மனு பள்ளிபாளையம் 19012018

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக சாதி, மத ,கலவரங்களை தூண்டும் விதமாகவும் கவிஞர் வைரமுத்தை தரகுரைவாகபேசிய எச்.ராஜாவை கைது செய்ய கோரி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பள்ளிபாளையம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் 19-01-2018

புகார் மனு, உருவ பொம்மை எரிப்பு – மதுரை திவிக

ஒடுக்கப்பட்ட மக்களை இழிவாக “சேரி பிஹேவியர்” என்றும் திமுக நாடாளு மன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களை தரம் தாழ்ந்தும் விமர்சித்த நித்யானந்த பீட பெண்களையும் அவர்களை தூண்டிவிடுகிற நித்யானந்தாவையும்  வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் தொடர்ச்சியாக மத கலவரங்களை தூண்டும் விதமாக பேசிய எச்.ராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய கோரியும் திராவிடர் விடுதலைக் கழம் ஒருங்கிணைப்பில் மதுரை காவல் ஆணையாளரிடம் 19012018 புகார் அளிக்கப்பட்டது விடுதலை சிறுத்தைகள் தமிழ்புலிகள் குறிஞ்சியர் விடுதலை பேரவை தபெதிக DYfi உள்ளிட்ட இயக்கங்கள் பங்கு பெற்றன இன்று 20012018  காலை 11 மணி அளவில் 200 க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் நித்யானந்தா, எச்.ராஜா ,நயினார் நாகேந்திரன் உருவ பொம்மை எரிப்பு . தலித் மக்களை இழிவு படுத்தியும் கலைஞர் ,திருமாவளவன் ,சீமான், கனிமொழி, ஆசிரியர் வீரமணி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களை தரம் தாழ்ந்து விமர்சிக்கிற நித்யானந்தா...

உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை

தமிழக மாணவர்களே! தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது. இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்...

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! 21012018

தமிழக ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு டெல்லியில் படுகொலையை (மர்ம மரணம்) கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் நடைபெறுகிறது. நாள் : 21.01.2018 (ஞாயிற்றுக்கிழமை)  நேரம் : மாலை 3 மணி இடம் : மத்திய கைலாஸ், சென்னை. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் மர்ம மரணம் தொடர்கதையாகிவிட்டது. சென்ற ஆண்டு டெல்லி எய்ம்ஸ் கல்லூரியில் படித்த திருப்பூரை சேர்ந்த மருத்துவர் சரவணன், சேலம் முத்துகிருஷ்ணன் ஆகியோர் இந்த ஆண்டு மருத்துவர் சரத் பிரபு. வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தியும், தொடரும் படுகொலைக்கு சிபிஐ விசாரணை வேண்டியும் தமிழர்களை வஞ்சிக்கும் மத்திய அரசை கண்டித்து #தமிழ்நாடு_மாணவர்_கழகம்நடத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம். வாய்ப்புள்ள தோழர்கள் கலந்து கொள்ளவும்.!! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363/9688310621

தோழர் சுகாதேவி – கணேசமூர்த்தி வாழ்க்கை இணையேற்பு விழா ! விருதுநகர் 21012018

தோழர் சுகாதேவி – கணேசமூர்த்தி வாழ்க்கை இணையேற்பு விழா ! கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் நடத்தி வைக்கிறார் ! நாள் : 21.01.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 10 மணி. இடம் : அய்யனார் வதனா திருமண மண்டபம், பாண்டியன் நகர் விருதுநகர். வாழ்த்துரை : தோழர் சிவகாமி, தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள். —————————————————————– வரவேற்பு விழா ! நாள் : 23.01.2018 செவ்வாய்க்கிழமை, நேரம் : காலை 11 மணி. இடம் : பொனமலை அம்பேத்கர் இரயில்வே மண்டபம்,திருச்சி. வாழ்த்துரை : தோழர் உமாபதி,தோழர் அய்யனார் (கழக தலைமைக்குழு உறுப்பினர்கள்) மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள்.

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் 22012018

தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! காஞ்சிபுரம் ரயில் நிலையத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் படம் அகற்றப்பட்டத்தை கண்டித்து போராடிய மக்கள் மன்றம், விடுதலை சிறுத்தைகள்,பகுஜன் சமாஜ் கட்சி,தமுமுக தோழர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் ! நாள் : 22.01.2018 திங்கட்கிழமை நேரம் : காலை 10.00 மணி. இடம் : பெரியார் தூண் காஞ்சிபுரம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்கள்.

மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு – புத்தக வெளியீடு சென்னை 17012018

திவிக பொதுச்செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் வெளியிட தோழர் திருமுருகன் காந்தி பெற்றுக்கொள்ள இயக்கத்தோழர்கள் ஆதரவுடன் எளிமையான நூல் வெளியீடு விழா 17012018 அன்று ,”மத்திய அரசுப் பணிகளில் தமிழர் உரிமை பறிப்பு” சென்னை புத்தகக் காட்சியில் வெளியிடப்பட்டது எழுத்தாளர் – தோழர் அன்பு தனசேகர் மொத்த பக்கங்கள் – 40 நன்கொடை – 25

தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய சங் பரிவாரின் சதி வரலாறு – கன்னட மொழியில் வெளியீடு

கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் எழுதிய “சங் பரிவாரின் சதி வரலாறு” என்ற தமிழ் புத்தகம் கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, “சன்சுகாரா சங்க பரிவாரா” என்ற பெயரில் வருகிற 20.1.2018 அன்று சனிக்கிழமை பெங்களுரில் உள்ள கன்னட பவனில் இருக்கும் நயன சபாங்கணத்தில் : புத்தக வெளியிடு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் வெளியிடுபவர் : திரு B K ஹரிபிரசாத் , மக்களவை உறுப்பினர், புது தில்லி தலைமை: பேராசிரியர் DR. K மருளு சித்தப்பா, தலைவர், குவெம்பு பாக்ஷாபாரதி, கரு நாடக அரசு சிறப்பு விருந்தினர் : தோழர் விடுதலை இராஜேந்திரன் . மூல நூல்ஆசிரியர் புத்தகத்தை குறித்து பேசுபவர் : திரு அக்னி சிரிதர், பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் முன்னிலை : திரு கலைச்செல்வி, திரு அகஸ்தியன் மற்றும் திரு இரவீந்திரனாத் சிரிவர, சிரிவர வெளியீடு. தோழர் கவுரி லங்கேஷ் அவர்களுக்கு இந்த புத்தகம் சமர்ப்பணம்...

திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் ! 17012018

டெல்லியில் மருத்துவ மாணவர் சரத் பிரபு மர்ம மரணத்தை கண்டித்து தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். நாள் : 17.01.2018 புதன்கிழமை நேரம் : மாலை 4 மணி இடம்: மாநகராட்சி அருகில்,திருப்பூர் டெல்லி UCMS மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு பயின்று வந்த திருப்பூரைச் சேர்ந்த மாணவர் சரத் பிரபு இன்று காலை சந்தேகத்திற்கிடமான வகையில் மரணமடைந்ததை கண்டித்தும், தொடர்ந்து தென் மாநில மாணவர்கள் டெல்லியில் கொல்லப்படுவதை கண்டித்தும், மாணவர் சரத் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வலியுருத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.  

தோழர் இரஞ்சித்

தோழர் இரஞ்சித்

“இயக்குனர் தோழர் ரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை கூறாதது தவறா ?” – விடுதலை ராஜேந்திரன் இயக்குனர் இரஞ்சித் ஒரு பேட்டியில் பெரியார் பெயரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் மூகநூலில் பதிவிடப்படுகின்றன. இது தேவையற்ற வேலை என்பது தான் எனது கருத்து. “அம்பேத்கர் பெரியார் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள். இருவரும் ஜாதி ஒழிப்புக்காக போராடிய தலைவர்கள்”. அம்பேத்கர் பெயரை சொல்லக் கூடாது, பெரியார் பெயரை சொல்லக் கூடாது அல்லது அம்பேத்கர் பெயரை சொல்ல வேண்டும் பெரியார் பெயரை சொல்ல வேண்டும் என்று பெயருக்குள் புகுந்து கொண்டு தத்துவங்களை பின்னுக்கு தள்ளுவது என்பது அம்பேத்கரிய கொள்கைக்கோ பெரியாரிய கொள்கைக்கோ உடன்பாடன ஒன்றல்ல. இரஞ்சித் அவர்கள் பெரியாரை குறிப்பிடவில்லை என்பதற்காக அவரை பெரியாருக்கு எதிராளராக சித்தரிப்பது என்பது ஒரு மிக பெரிய தவறு. ” பெரியார் பேசிய ஜாதி ஒழிப்புக்கு தான் இரஞ்சித் குரல் கொடுக்கிறார். இன்னும்...

தமிழர் திருநாள் – தந்தை பெரியார்

திராவிடத்தின் மக்களான தமிழர்களுக்கு தமிழர்களுக்குரிய பண்டிகை என்பதாக ஒன்றைக் காண்பது மிக அரிதாக உள்ளது. இதன் காரணம் என்னவென்றால், கலாச்சாரத்துறையில் தமிழனை ஆதிக்கம் கொண்டவர்கள் தங்களது கலாச்சாரங்களைத் தமிழனிடம் புகுத்துகிற வகையில் முதல் பணியாக _ தமிழ்நாட்டின், தமிழனின் கலாச்சாரங்களை, பழக்க வழக்கங்களை அடியோடு அழித்து மறைத்துவிட்டார்கள். இதனால் தமிழனுக்குரிய கலாச்சாரம் எது என்று அறிவதுகூட மிகமிகக் கடினமான காரியமாக ஆகிவிட்டது. தமிழனின் கலாச்சாரப் பண்புகள் அழித்து ஒழித்து மறைக்கப்பட்டுவிட்டன என்பது மாத்திரமல்லாமல், தமிழனுக்கு வரலாறு, சரித்திரம் என்பதுகூட இல்லாமல் அழிக்கப்பட்டுவிட்டது. எனவே, இன்று தமிழன் கலாச்சாரம், பண்பு, வரலாறு அற்ற ஒரு அடிமை ஜீவனாக விளங்குகின்றான். இப்படி விளங்குவது மாத்திரமல்லாமல் இன்று தமிழன் கொண்டாடும் _ நடத்தும் கலாச்சாரப் பண்பு, வரலாறு என்பவை எல்லாம் தமிழனுக்கு இழிவும் அடிமைத் தன்மையும் தந்து அவற்றை நிலைநிறுத்துபவைகளாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்குள்ள கலைகள் என்பன-வெல்லாம் தமிழனை அடிமையாக்குவன-வாகவே இருந்து வருகின்றன. தமிழனுக்கு அடியோடு...

‘குடிஅரசு’ வழக்கு :‘விடுதலை’க்கு ஒரு விளக்கம் !

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கச் செயலாளர் கி.வீரமணி அவர்கள். ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை அறிவித்த பிறகும் இழப்பீடு கேட்கும் பிரதான வழக்கை அவர்கள் கைவிடத்தயாராக இல்லை. 2010க்குப் பிறகு மீண்டும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறார்கள் என்பதையே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. “மீண்டும் நாங்கள் புதிய வழக்கைப் போடவில்லை; ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ தவறான செய்தியை வெளியிடுகிறது” என‘விடுதலை’ ஏடு மறுத்துள்ளது. ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்புகள் வந்த பிறகும் வழக்கை அத்துடன் முடித்துக் கொள்ளாமல், பழைய வழக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்துத்...

சேலம் மேற்கு மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மேட்டூர் 07012018

07.01.18 அன்று காலை 11.00 மணிக்கு மேட்டூர் தாய் தமிழ் தொடக்கப் பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் சேலம் மேற்கு மாவட்ட கழகத் தலைவர் கு.சூரிய குமார் செயலாளர் சி.கோவிந்தரா சு ஆகியோர் முன்னிலையில் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அரசு வேலை வாய்ப்பு தேர்வுகளில் தமிழகத்திற்கு இழைத்து வரும் துரோகம், தமிழக நீதிமன்ற தீர்ப்புகளின் அவல நிலை, இன்றைய சமூக அவலங்களில் நமது கடமைகள் நாம் ஆற்றவேண்டிய பங்களிப்புகள் குறித்து கழகத் தலைவர் பேசினார். மாவட்டக் கழக பொறுப்பாளர்கள், கிளைக் கழக பொறுப்பாளர்கள் கழக வளர்ச்சி செயல் திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை முன்வைத்தார்கள். பள்ளிக் கல்லூரி மாணவர்களிடம் பறிபோகும் வேலைவாய்ப்புகள், மீட்கப்பட வேண்டிய நமது உரிமை கள் குறித்து துண்டறிக்கைகள் விநியோகம் செய்து பிரச்சாரம் செய்ய முடிவெடுக்ககப்பட்டது. கழகத் தலைவரிடம் பெரியார் முழக்கம் ஆன்டு சந்தா 500 சந்தாவும், அய்ந்தாண்டு சந்தா ஒன்றும்,...

வருணமும் சாதியும் ஹேமமாலினி

வருணமும் சாதியும் ஹேமமாலினி

வருணமும் சாதியும் பல நூற்றாண்டு களுக்கு மேலாக பல்வேறு சமூகங்களில் காலூன்றிய ஒரு அமைப்பாக உள்ளது. இவ்விரண்டும் மக்களிடையே ஏற்றத் தாழ்வையும், தீண்டாமையையும் ஏற்படுத்தி மக்களை பல்வேறு சமூகப் படிநிலைகளாக வகைப்படுத்தியுள்ளது. குறிப்பாக சிலர் வருணத்திற்கும், சாதிக்கும் பெரிதும் வேறுபாடுகள் இல்லை என்றே நினைக் கின்றனர். ஆனால், இவை இரண்டிற்கும் அடிப்படையே வேறு வேறு. பண்டையத் தமிழ்ச் சமூகம் வருணமும் சாதியும் இல்லாத ஒரு குடி சமூக அமைப்பாக இருந்துள்ளது. கால ஓட்டத்தால் அந்நியர்களின் படையெடுப் பாலும், ஆட்சியாலும் வட இந்தியாவில் இருந்த வருண அமைப்புமுறை தொடர்ந்து தென்னிந்தி யாவில் பரவத் தொடங்கியது. இவ்வாறு தொடர்ந்த வருண அமைப்பானது பல்வேறு காலகட்டங்களில் பல சாதிகளாகவும், உட்சாதிகளாகவும் பிளவுற்று இன்று பல்வேறு சாதியச் சமூகமாகவும் விரிந்து கிடப்பதையும் காணமுடிகிறது. வருணமும், சாதியும் பற்றி விளக்கம் காண்பதற்கு முன்பு வருணத்திற்கு அடிப்படையாக விளங்கும் மனுவின் தோற்றம் பற்றிய சில குறிப்புகளை காண்போம். மனுதர்மத்தின் பெரும்...

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

ஒரு சதவீதம்கூட வங்கிகளில் பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் இல்லை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உயர் அதிகாரிகளாக ஒரு சதவீதம்கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை. 1.10.2015ஆம் ஆண்டு நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளில் பொது மேலாளர் துணை பொது மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை: அலகாபாத் வங்கி: மொத்த பொது மேலாளர் பதவி 19. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. துணை மேலாளர் பதவி 63; பிற்படுத்தப் பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. ஆந்திரா வங்கி: மொத்த மேலாளர் பதவி 16இல், பி.சி. ஒருவர்கூட இல்லை. 48 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூடஇல்லை. பேங்க் ஆப் பரோடா : 44 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் மட்டுமே. 122 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட் டோர் ஒருவர். பேங்க் ஆப் இந்தியா : 37 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 126 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே. பேங்க் ஆப்...

‘பத்மாவதி’ வரலாறு அல்ல; கற்பனை

‘பத்மாவதி’ வரலாறு அல்ல; கற்பனை

‘பத்மாவதி’ என்ற திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே இந்துத்துவவாதிகள், படத் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகைகளுக்கு கொலை மிரட்டலையும் தலைக்கு விலை வைக்கும் ‘மனுதர்ம’ப் பண்பாட்டையும் கைகளில் எடுத்து விட்டனர். பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநில முதல்வர்களும், படத்தைத் திரையிட முடியாது என்றுஅறிவித்துள்ளனர். ‘இராஜபுத்திர’ பெண்களின் பெருமைக்குரிய அடையாளமாக பேசப்படும் ‘பத்மாவதி’ என்பவர் உண்மையில் ஒரு கற்பனை. வரலாற்றுப் பதிவுகள் இல்லாத கற்பிதம்; கவிஞர்களின் கற்பனையில் இராமாயணம் போல் பல்வேறு ‘பதமாவதி’கள் படைக்கப்பட்டிருக்கிறார்கள். பத்மாவதி இந்தி திரைப்படத்துக்கு எதிரான போராட்டம் வலுத்துக்கொண்டே வருகிறது. எல்லா ராஜபுத்திரர்களின் சார்பிலும் பேசுவதாகக் கூறிக்கொள்ளும் அரசியல் தலைவர்கள் இரண்டு காரணங்களுக்காக அத்திரைப்படத்தை எதிர்க்கிறார்கள். முதலாவதாக, அது வரலாற்றைச் சிதைக்கிறது என்கிறார்கள். இரண்டாவதாக, ராஜபுத்திர ராணி பத்மினியை (சில நூல்களில் அவரே பத்மாவதி என்று அழைக்கப்படுகிறார்) அவமதிப்பதாகக் குற்றஞ்சாட்டுகிறார்கள். ‘பத்மாவத்’ தொடர்பாக தாமஸ் டி பிரியுன், சாந்தனு புகான் – குறிப்பாக ரம்யா சீனிவாசன் ஆகியோரின் ஆழ்ந்த ஆராய்ச்சியால் கிடைத்துள்ள...

பெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்

பெரியார் எதிர்த்த ‘ஆண்மை’யும் ‘கேட்டர் பில்லர்’ நாயகியும்

“உலகத்தில் ‘ஆண்மை’ நிற்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ‘ஆண்மை’ என்ற தத்துவம் அழிக்கப்பட்டாலல்லாது பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.” – பெரியார் கேட்டர் பில்லர் ’ என்னும் ஜப்பானியத் திரைப்படம் பார்த்தேன். கோஜி வாகாமத்ஸு இயக்கி 2010-ல் வெளியான படம் அது. சீன-ஜப்பான் போரில் பங்கேற்ற ஜப்பானிய ராணுவ வீரன் ‘குரோகாவா’வை மையமாகக் கொண்டு படம் சுழல்கிறது. முதல் காட்சியில் சீனக் கிராமத்துக்குள் புகுந்த ஜப்பானிய ராணுவம் அந்தக் கிராமத்தை அழித்துத் துவம்சம் செய்கிறது. தப்பியோடும் சீன மக்களைக் கடமை உணர்வுடன் குரோகாவா சுட்டுக் கொல்கிறான். அலறித் துடிக்கத் துடிக்கச் சீனப் பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்கிறான். சொத்துக்களைச் சூறையாடுகிறான். அடுத்த காட்சியில் போர் முடிந்து, குரோகாவா ‘பேராண்மை மிக்க போர் நாயகன்’ என்னும் தேசிய விருதைப் பெறுகிறான். மூன்று தேசிய மெடல்கள் நெஞ்சில் அசைந்தாடச் சொந்த கிராமத்துக்குத் திரும்புகிறான். ஆனால், போரில் இரு கால்கள்,...

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதியின் மர்ம மரணம்

2005 ஆம் ஆண்டு சொராபுதின் சேக் போலி எண்கவுண்டர் மூலமாக கொலை செய்யப்பட்ட வழக்கில் பாஜக தலைவர் அமித்ஷா-வை ஜூலை 2010 அன்று சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். குஜராத் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி செப்டம்பர் 2012 அன்று மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் டிசம்பர் 2014 அமித்ஷாவை இந்த வழக்கில் இருந்து விடுவித்து மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து. இதற்கிடையில் பாஜக தலைவர் அமித் ஷா முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சொராபுதின் போலி என்கவுண்டர் வழக்கை விசாரித்து வந்த மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிர்ஜிகோபால் ஹர்கிஷன் லோயா , 2014 நவம்பர் 30 இரவு டிசம்பர் 1 இடையிலான நேரத்தில் நாக்பூருக்கு பயணம் செய்து கொண்டிருந்த போது உயிரிழந்தார். அந்த சமயம் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது குறித்து டிசம்பர் 2016 – டிசம்பர் 2017...

கற்பிதங்களை கட்டுடைத்த ‘அவ்வை’  மயிலை பாலு

கற்பிதங்களை கட்டுடைத்த ‘அவ்வை’ மயிலை பாலு

டிசம்பர் இரண்டாம் தேதி சென்னை பெசன்ட் நகரின் கடற்கரைச் சாலையில் உள்ள ஸ்பேசஸ் அரங்க வளாகம் நிரம்பி வழிந்தது. எப்பொழுது நாடகம் தொடங்கும் என்ற ஆர்வம் மேலிட நின்றவர்களுக்கு வழி திறக்கப் பட்டாலும் உட்கார இடமில்லை. கவிஞர் இன்குலாப் மீதான பிணைப் போடும் அவரது படைப்பின் மீதுள்ள ஈர்ப்பாலும் தான் இந்தப் பெருந்திரள் கூட்டம். இன்குலாபின் எண்ணத்திலும் எழுத்திலும் வடிவம் பெற்ற ‘அவ்வை’ நாடகம் அன்று மீண்டும் அரங்கேற்றப்பட்டது. ‘உடலால் வாழ்ந்த இவ்வாழ்க்கை இறப்போடு முடிகிறது’ என்று தமது மரணம் குறித்த கடிதத்தில் மக்கள் கவிஞர் இன்குலாப் எழுதியிருக்கிறார். இறப்போடு உடலியக்கத்தின் வாழ்க்கை முடிந்து போகலாம். ஆனால் மக்களுக்காக வாழ்ந்தவர்கள், மக்களின் மனஎழுச்சிக்குத் தூண்டுகோலாய் இருந்தவர்கள், அழுகிப் போய் அழிக்கப்பட வேண்டிய முதலாளித்துவ சமுதாயத்திற்கான மாற்றினை அடையாளம் காட்டியவர்களின் வாழ்க்கையும் படைப்புகளும் சாவதில்லை. மீண்டும் மீண்டும் உயிர் பெற்று வாழ்ந்து கொண்டேதான் இருக்கும். அந்த உண்மையை மெய்யாக்குவதாகத்தான் தோழர் இன்குலாபின் முதலாம்...

ஆன்மிகவாதி பார்வையில் ‘வாஸ்து’

ஆன்மிகவாதி பார்வையில் ‘வாஸ்து’

கட்டுரையாளர் பொறியாளர் பி. மாணிக்கம், ஆன்மிக நம்பிக்கையாளர். அவரது பார்வையில் ‘வாஸ்து’ குறித்து விளக்குகிறார். ஜோதிடமா? ஆன்மிகமா? பொறியியல் துறையைச் சார்ந்ததா? வாஸ்து ஒரு குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டும் உரியதா? முகமதியரானாலும் கிறித்தவரானாலும் வாஸ்து பார்க்க வேண்டியதில்லையா? இதுபோன்ற பல கேள்விகள் வாஸ்து என்ற கூற்றைக் கேட்டவுடன் எழக்கூடிய சாதாரண அய்யங்கள். “வாஸ்து பகவான் நெற்றியில் திரு நீரோடும் பூணுலோடும் மல்லாந்து படுத்திருக் கிறார்; ஆண்டுக்கு எட்டு முறை மட்டுமே விழித்திருக்கிறார். மற்ற நேரத்திலெல்லாம் தூங்கிக் கொண்டேயிருக்கிறார். அவர் விழித்தெழுந்து காலைக் கடன் முடித்து குளித்து, பூஜை செய்து போஜனம் அருந்தி தாம்பூலம் தரிக்கிறார். அந்த நேரத்தில் வாஸ்து பூஜை செய்து வீடு, பூமி பூஜை, கிரகப்பிரவேசம் ஆகியவை செய்ய வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் வாஸ்து பகவான் வீட்டில் வசிப்போரைத் துன்பத்திற்குள்ளாக்குவார்” என்றெல்லாம் கூறப்படுகிறது. வருடத்தில் 1ஙூ மணி நேரம் மட்டுமே விழித்திருக்கும் வாஸ்து பகவான் மற்ற நேரத்தில் தூங்கிக் கொண்டே...

மோடியின் ‘சுதந்திர’ கனவில் மறந்து போன பக்கங்கள் பேராசிரியர் சிவலிங்கம்

மோடியின் ‘சுதந்திர’ கனவில் மறந்து போன பக்கங்கள் பேராசிரியர் சிவலிங்கம்

சாதிய சர்வாதி கார சமூக அமைப்பி லிருந்து விடுதலை வேண்டும் என்று முழங்கும் தலித் மக்களின் முழக்கங்கள் பொதுவான தேசிய முழக்கங்களின் மூலம் மறைக்கப்படுகின்றன. இத்தகைய போக்கு தலித் விடுதலைக்கு மட்டுமல்ல நாட்டின் உண்மையான விடுதலைக்கு எதிரான சதியேயாகும். 120 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டின் பிரதமராக இருப்பவர் நரேந்திர மோடி. பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆரம்பித்த நாள் முதல் இன்று வரையிலும் இந்தியாவின் ஊடகங்கள் நரேந்திர மோடியின் ஒவ்வொரு உச்சரிப்பிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றன. இப்படிப்பட்ட ஒரு சமூகச் சூழலை உருவாக்கிட சுமார் 70 ஆண்டுகள் இந்துத்துவ சக்திகள் உழைத்திருப் பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். நரேந்திர மோடி அவர்கள் இந்தியாவின் பிரதமரே தவிர இந்துத்துவத்திற்கான பிரதமர் அல்ல. இந்திய அரசியல் சட்டத்தை மதிக்கும் எவரும் இப்படித்தான் நம்புவார்கள். பிரதமர் நரேந்திரமோடி ஒரிசாவின் தலைநகர் புவனேஸ்வரத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். “துரதிருஷ்டவசமாக இந்தியாவின் சுதந்திரப் போராட்டம் சில குடும்பங்கள், சில வருடங்கள்,...

‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’ மனம் திறக்கிறார்  மூத்த பத்திரிகையாளர் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

‘திராவிட இயக்கம் அரசியலுக்குப் போயிருக்கக் கூடாது’ மனம் திறக்கிறார் மூத்த பத்திரிகையாளர் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்

91ஆம் அகவையை எட்டியுள்ள கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன், இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் திராவிட இயக்க பத்திரிகையாளர்களிலேயே மிகவும் மூத்தவர். மாணவர் பருவத்திலேயே திராவிட இயக்கக் கொள்கையில் ஈர்க்கப்பட்டு பத்திரிகையாளராக திராவிடர் கழக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரபூர்வ ஏடுகளிலே பணியாற்றியவர். தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர். நாளேடுகள், வார இதழ்கள், இலக்கிய இதழ்கள், எளிய பொதுக் கூட்ட மேடைகள், குடியிருப்புப் பகுதிகளிலேயே உருவாக்கிய படிப்பகங்கள், நாடகம், கலை நிகழ்ச்சிகள், முடிதிருத்தகங்கள், சைக்கிள் கடைகள், தேனீர்க் கடைகள் வழியாக எளிய மக்களிடம் கருத்துகளைப் பரப்பிய பெருமை திராவிடர் இயக்கத்தினருக்கு உண்டு. பிறகு திரைத் துறையிலும் கால் பதித்தது. திராவிட இயக்க இதழ்களை நடத்தியவர்கள் செல்வந்தர்கள் அல்ல; அவர்களின் மூலதனம் கொள்கை வலிமையும் மக்களை கிளர்ந்தெழச் செய்யும் எழுத்துக்களும் தான். கடும் பொருளாதார நெருக்கடிகளோடு மூச்சுத் திணறிக் கொண்டு வந்தன அந்த ஏடுகள். அவை அன்று தமிழினத்தின் சுவாசக் காற்றுகள் என்றே கூறலாம். இந்த ஏடுகளில்...

முதலாம் ஆண்டில்…

முதலாம் ஆண்டில்…

நிமிர்வோம், தனது ஓராண்டு பயணத்தை கடந்து வந்திருக்கிறது. 2016 டிசம்பர் 24இல் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய வேத மரபு எதிர்ப்பு மாநாட்டில் முதல் இதழ் வெளி வந்தது. (இடையில் ஓர் இதழ் மட்டும் வெளி வரவில்லை) இது ஓர் இயக்கத்தின் இதழ்தான். ஆனாலும் இதன் உள்ளடக்கத்தை இயக்கத்தோடு குறுக்கி விடாது, பெரியாரின் கருத்தாயுதமாக விரிந்த தளத்தில் வளத்தெடுக்கவே விரும்புகிறோம். சமூக மாற்றத்துக்கான சிந்தனையாளர்கள், எழுத்தாளர்களுக்கு ‘நிமிர்வோம்’ தனது பக்கங்களை எப்போதும் திறந்தே வைத்திருக்கும். குறிப்பாக பெரியாரிய – அம்பேத்கரிய – மார்க்சிய சிந்தனைகளின் ‘உருத்திரட்சி’யான இளம் படைப்பாளிகளின் ‘அறிவுசார்’ அணியை வளர்த்தெடுக்க வேண்டும் என்பதே நமது விருப்பம். இது காலத்தின் தேவை என்பதை கவலையோடு உணர்ந்திருக்கிறோம். ‘உலக மயமாக்கல்’ வந்த பிறகு சமூகத்தில் நிகழ்ந்து வரும் அரசியல், பொருளியல், பண்பாட்டு சிதைவுகளுக்கிடையே சமூக மாற்றத்துக்கான பயணம், கடும் நெருக்கடிக்குள்ளாகி நிற்கிறது. இதைக் கடந்து செல்வதற்கான திட்டங்கள் செயல் உத்திகளோடு...

18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு, பொங்கல் விழா சென்னை 12012018

நித்திரையில் இருக்கும் தமிழா… சித்திரையல்ல உன் புத்தாண்டு… தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு… திருவல்லிக்கேணியில் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு…பொங்கல் விழா… வரும் 12.01.2018 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு…. வி.எம்.தெரு, இராயப்பேட்டையில்…. பரிசளிப்பு வாழ்த்துரை…. தோழர்.கோபி நயினார், ‘அறம்’ திரைப்பட இயக்குனர் திருநங்கை.தாரிகா பானு, சித்த மருத்துவ மாணவர் மு.குணசேகரன், முதன்மை செய்தி ஆசிரியர்…நீயூஸ் 18 விடுதலை.இராசேந்திரன், பொதுச் செயலாளர், திவிக மருத்துவர்.சரவணன், மாநிலத் துணைத் தலைவர், மருத்துவர் அணி, திமுக ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், திருவல்லிக்கேணி பகுதி செயலாளர், திமுக ஆர்.என்.துரை, தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர், திமுக எஸ்.எஸ்.பிரபு, ஒ.செ.மா.அ.செயலாளர், புரட்சி பாரதம் வாருங்கள் தோழர்களே இது நம்ம விழா… பொங்கல் விழாக் குழு திருவல்லிக்கேணி பகுதி தொடர்புக்கு : 7299230363

காதலர் தின விழா 14022018 சென்னை

ஜாதி மதம் ஒழிக்க! சமத்துவம் படைக்க!! காதல் செய்வீர்!!! ஜாதி எனும் பாறையை பிளக்க!! காதல் எனும் வெடியை தவிர வேறேதுமில்லை!!! ஆதலால் காதல் செய்வீர் !!!…. ஜாதி மறுப்பு இணையர்களே அணி திரள்வோம் #புரட்சியாளர்_அம்பேத்கர்_மணிமண்டபம் நோக்கி …. ஒரு உயிர் தனது உணர்வையும் அன்பையும் யாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவும் செய்யும் உரிமை எவருக்கும் கிடையாது …. தனது இணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அவரவர் உடையதே அன்றி … ஜாதிக்கோ மதத்திற்கோ இங்கு வேலை இல்லை ….. அவ்வாறு தடையாய் அமையும்பட்சத்தில் #ஜாதியின்_வேர்கள்_காதல்_எனும்_கேடயத்தால்_அழிக்கப்படும் …. நிகழ்வுகள் : பறையிசை மற்றும் கலைநிகழ்ச்சி பட்டிமன்றம் இணையர்களுக்கான போட்டிகள் நடைபெறும் …. முன்பதிவிற்கு : 8056460580 , 7299230363 திராவிடர் விடுதலை கழகம்

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

‘திராவிடத்தால் எழுந்தோம்’ குமரியில் விளக்கக்கூட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 09-12-2017, சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு குலசேகரம் அரச மூடு சந்திப்பில் நடைப் பெற்ற “திராவிடத்தால் எழுந்தோம்” விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் வே.சதா, குமரி மாவட்ட பெரியார் தொழிலாளர் கழகத் தலைவர் நீதி அரசர் ஆகியோர் தலைமை தாங்கினர். கழகத் தோழர்கள் தமிழ் அரசன், தமிழ் மதி, மஞ்சு குமார், ஜான் மதி, சூசையப்பா, இரமேஷ் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். விஸ்ணு வரவேற் புரையாற்றினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப்பாளர்கள்: கேரளாபுரம் முருகன், மேசியா, சத்திய தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார், ‘மந்திரமல்ல! தந்திரமே!’ எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் உரையைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். 1913-ல்,கோயிலுக்கு நன்கொடையாக ரூ 10,000 கொடுக்குமளவிற்கு பணக்காரரா யிருந்தாலும் சர். பிட்டி. தியாகராயர் அவமானப்படுத்தப்பட்டதும், எவ்வளவுப்...

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்டம் – பள்ளியாடி – தமிழ் மதி இல்லவிழா

குமரி மாவட்ட கழகச் செயலாளர் தமிழ் மதி-பிரேம லதா இணையர் மகன் தமிழ் நவிலன் முதல் பிறந்த நாள் விழா 10.12.2017, ஞாயிற்றுக் கிழமை மதியம் 12.00 மணிக்கு பள்ளியாடி இருதய அரங்கில் கொண் டாடப்பட்டது. விழாவில் தமிழ் மதியின் உறவினர்கள், கழகத் தோழர்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள், சமூக ஆர்வலர்கள் பெருவாரியாகக் கலந்துக் கொண்டனர்.  தமிழ் மதி பிறந்த நாள் ஏன் கொண்டாடுகிறோம் என்றும், தமிழ்ப் பெயர் ஏன் சூட்டினோம் என்றும் கூறி வரவேற்புரையாற்றினார். அறிவுக்களஞ்சியம் நிறுவனர் பேபி செபக்குமார் மந்திரமல்ல!தந்திரமே! எனும் அறிவியல் நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். பின்பு கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் நவிலன் பிறந்த நாளில் பெற்றோருக்கு அறிவுரையாக சோதிடம், நல்ல நேரம், கெட்ட நேரம் மூடநம்பிக்கைகள் குறித்தும், பிள்ளைகளை சமூகத்துடன் இணைந்து வாழக் கற்றுக் கொடுக்க வேண்டுமென்றும் கூறி தமிழ் நவிலன் சமூகச் சிந்தனையுடன் வாழ, வளர, வெல்ல வேண்டுமென வாழ்த்துரையாற்றினார்....

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

அறமற்ற பா.ச.க. பேசுவது ஆன்மீகமா?

கோவிலுக்குள் தமிழ் ஒலிக்க முயற்சி எடுக்காத பாரதிய சனதா கட்சி, ஆழ்வார்களையும், நாயன்மார்களையும் பற்றி பேசுவது அபத்தம். 28.12.2017 அன்று புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த கே.டி.ராகவன் “தமிழகம் பெரியார் மண் அல்ல; ஆழ்வார்களாலும், நாயன்மார்களாலும் நிறைந்த மண்” என்றார். வேதங்களையும், மநு நீதியையும் ஏற்றுக்கொண்டு மதவாத ஆட்சி புரியும் பாரதிய சனதா கட்சியைச் சேர்ந்த ராகவன், தமிழர்களிடம் ஓட்டுவாங்குவதற்காக ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுத்துப்போட்டுக் கொள்வது வேடிக்கையாக உள்ளது. சிதம்பரம் நடராசர் கோவிலில் ஐயா ஆறுமுகசாமி திருவாசகம் ஓதுவதற்கு அங்குள்ள பார்ப்பனர்கள் எதிர்த்தபோது அதை எதிர்க்க முடியாத பா.ச.க. இப்போது ஆழ்வார் களையும், நாயன்மார்களையும் இழுப்பது ஏன் என்று தெரியாதவர்களா தமிழர்கள்? உங்களின் ஓட்டரசியலுக்கு நாயன்மார்கள் தேவைப்படுகிறார்கள், ஆலயங்களுக்குள் திருவாசகம் தேவையில்லை என்றால் உங்களின் எண்ணத்தை தமிழக மக்கள் நன்றாக புரிந்து கொள்வார்கள். தமிழகம் என்றுமே “பெரியார் மண்தான்”. கடவுள் நம்பிக்கை கொணட...