கழகத் தலைவர் பங்கேற்ற எஸ்.டி.பி.அய். மாநாடு
திருச்சியில் 21.10.2018 ஞாயிறு அன்று நடைபெற்ற எஸ்.டி.பி.அய். அமைப்பின் ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாட் டின் காலை அமர்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘நெருக்க டிக்குள்ளாகும் மத சார்பின்மையும், அரசியல் எழுச்சிக்கான தேவை யும்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சிக்கு எஸ்.டி.பி.அய். கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ரத்தினம் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்கு. இராமகிருட்டிணன், இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், மக்கள் கண்காணிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம், தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், ஜமாத்தே இஸ்லாமிய ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜலாலுதீன், தமிழ்த் தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன், கிருஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிக்கோ இருதயராஜ், மே17 இயக்கத்தின் அருள் முருகன், பாப்புலர் ஃப்ரண்ட் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது, ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் மாநில...