பெரியாரியல் பயிற்சி வகுப்பு – ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் 18112018

18-11-2018  ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகிலுள்ள இராமலிங்கசாமிகள் மடத்தின்  அரங்கில், ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல்வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் (பெண் மாணவர்கள் 30 பேர் உள்பட)  ஏறத்தாழ 80 பேர் கலந்துகொண்டனர்.

தோழர்.வீ.அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா.மதியழகன் நோக்க உரையாற்றினார். வகுப்பெடுக்க வந்திருந்த மூவருக்கும் திராவிட விழுதுகளின் அமைப்பாளர்கள் திரு.தி.மோகன், திரு.சு.கருப்புசாமி, புலவர் வீர கலாநிதி ஆகியோருக்கு நினைவுப் பரிசாக நூல்களை வழங்கினர்.

அறிமுகத்தைத் தொடர்ந்து, ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார்.

அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தார்.

அமைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்த நண்பகல் உணவுக்குப் பின்னர் 2-30 மணியளவில் பிற்பகல் அமர்வு தொடங்கியது.

திராவிட இயக்க ஆளுமைகள் என்ற தலைப்பில் பணி நிறைவுபெற்ற கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் பா.பாண்டியன் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் தொடக்கப் புள்ளியிலிருந்து தென்னிந்திய நல உரிமைச் சங்க உருவாக்கம், அரசமைத்தமை, நிகழ்த்திய சாதனைகள், அடித்தளமாய் நின்ற ஆளுமைகளின் சிறப்புகள் போன்றவற்றை விரிவாக விளக்கிப் பேசினார்.

வருகைதந்தோரும் கருத்துரைக்கவும், அய்யந் தெளியவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

நிகழ்வு ஒருங்கிணைப்பில் தோழர்கள் பெரியார் நம்பி, சண்முகவேல், வழக்குரைஞர் ஜெயராஜ் ஆகியோர் முன்னின்று பணியாற்றினர்.

பல்வேறு தரப்பினரையும் வருவித்து திராவிட இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், தேவைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் நடத்திய இவ்விரண்டாவது நிகழ்வும் பெரும்பயனை ஏற்படுத்தியது.

புகைப்படங்களுக்கு 

You may also like...