ஈரோடு வடக்கு மாவட்டக் கழகம் நடத்திய தமிழர் கல்வி உரிமை மீட்பு பரப்புரைப் பயணம் 30.09.2017

பெரியார்  140 ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு  ஈரோடு வடக்கு மாவட்ட கோபி ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடி யேற்றம் மற்றும் தமிழர் கல்வி உரிமை பரப்புரை பயணம் ஆகியன 30.09.2018 ஞாயிறு அன்று சிறுவலூரில் நடைபெற்றது.

சிறுவலூர் பகுதியில் அமைந்துள்ள கழகத்தின் கொடிக்கம்பத்தில் கழக வழக்குரைஞர் தோழர் செகதீசன் கழகக் கொடி யினை ஏற்றி வைத்து பரப்புரை பயணத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து  தலைமை கழகப் பேச்சாளர் வேலுச்சாமி, மாநில வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார்கள். அப்பகுதியில் நம் தோழர்களுக்கு கோபி ஒன்றியத்தின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள் தேனீர் வழங்கி நம் பயணம் தொடர வாழ்த்துகள் தெரிவித்தனர். தொடர்ந்து எலந்தக்காடு பகுதியில் தோழர் சுந்தரம், மூப்பன் சாலையில் நதியா, கிழக்கு தோட்டம் பிரிவில் கிருட்டிணசாமி, மரியன்னை மேல்நிலைப்பள்ளி அருகில் பெரியார் பிஞ்சு அகிலன், கொளப்பலூர் பேருந்து நிலையம் பகுதியில் பெரியார் பிஞ்சு இலக்கியாஆகிய பகுதியில் அமைக்கப்பட்டு இருந்த கழகக் கொடிக் கம்பத்தில் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். கொளப்பலூர் பேருந்து நிறுத்தத்தில் நடைபெற்ற பிரச்சார பயணத்தில் தோழர்கள் இரமேசு, இராம இளங்கோவன் ஆகியோர் பயணத்தின் நோக்கத்தை விளக்கி சிறப்புரை ஆற்றினார்கள். தொடர்ந்து பயணக்குழு கோபிப் பகுதிக்கு சென்றது. பயணக்குழு செல்லும் வழியில் அமைக்கப்பட்டு இருந்த கழகக் கொடிக் கம்பத்தில்  தோழர்கள் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். அருவங்கொரையில் பெரியார் பிஞ்சு அறிவுச்சுடர், நம்பியூர் பிரிவில் பெரியார் பிஞ்சு அறிவுக்கனல், அம்மன் கோவில்பதியில் பிரவீன், கும்மிக்கருக்கு கலையரசி, வேட்டைகாரன் கோவிலில் அறிவரசன், மொடச்சூரில் யாழினி, பச்சை மலை அடிவாரத்தில்  தமிழரசன், நாயக்காடு பகுதியில் தேவராசு, கரட்டூர் பகுதியில் கார்த்தி, கடைவீதியில்  அழகிரி, மூன்று முக்கு பகுதியில் சின்னதம்பி, அய்ந்து முக்கு பகுதியில் செல்வக்குமார், ல.கள்ளிப்பட்டிப் பிரிவு பகுதியில் இரமேசு, ல.கள்ளிப்பட்டி கருப்பண்ணன், கரட்டடிபாளையத்தில் அறிவுமதி ஆகியோர் கழகக் கொடியினை ஏற்றி வைத்தனர். கோபி பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற பரப்புரைப் பயணத்தில் தமிழ்நாடு அறிவியல் மன்றம் வீராகார்த்திக் சிறப்புரை ஆற்றினார்.  தோழர்களுக்கு ஆன மதிய உணவை  கொளப்பலூர் சுப்பிரமணியம் ஏற்பாடு செய்து இருந்தார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை கோபி ஒன்றியத்தின் தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர்.

பெரியார் முழக்கம் 01112018 இதழ்

You may also like...