Tagged: வாழ்க்கை இணையேற்பு விழா

உடுமலை திருமூர்த்தி படகுத் துறையில் கருத்துச் செறிவுடன் நடந்தது இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி

திருப்பூர், கோவை மாவட்டங்களைச் சார்ந்த இளைஞர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு ஜூன் 11, 12-2017இல் உடுமலை திருமூர்த்தி மலை படகுத் துறை கிருஷ்ணா விடுதியில் சிறப்புடனும் கருத்துச் செறிவுடனும் கட்டுப்பாடு நேரம் தவறாமையுடன் நடந்தது. பயிற்சியில் 20 பெண்கள் உள்பட 75 இளைஞர்கள் பங்கேற்றனர். நபர் ஒருவருக்கு ரூ.200/- கட்டணம், முன்பதிவு, இரு நாள் பயிற்சிகளிலும் முழுமையாகப் பங்கேற்றல் என்ற ஒழுங்கு முறை விதிகளுடன் நடந்த இந்த பயிலரங்கில் பங்கேற்ற அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் பயிற்சியாளர்களின் கருத்துகளைக் கேட்டு குறிப்புகளை பதிவு செய்து கேள்விகளையும் எழுப்பினர். பயிற்சி பெறும் தோழர்கள், முதல் நாள் இரவே பயிற்சி அரங்குக்கு வந்து சேர்ந்தனர். இதனால் முதல் நாள் பயிற்சி திட்டமிட்டபடி காலை 9 மணியளவில் தொடங்கிவிட்டது. தோழர்கள் அறிமுகத்தைத் தொடர்ந்து முதல் வகுப்பாக பேராசிரியர் சுந்தரவள்ளி, “மதவாத அரசியல்” குறித்து வகுப்பு எடுத்தார். தொடர்ந்து வழக்கறிஞர்...

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

தாலி, மெட்டியை அகற்றிய மணமக்கள் !

கழகத் தலைவர் தலைமையில் நடைபெற்ற விழாவில் பெண்ணடிமைச் சின்னங்களை அகற்றிய ஜாதி மறுப்பு வாழ்விணையர்கள் கல்கி – தேஜஸ்ஸ்ரீ இருவரும் பி.டெ.க். பட்டதாரிகள். படிக்கும் போது இருவருக்கும் காதல் ஏற்பட திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். தேஜஸ்ஸ்ரீ ஆந்திராவைச் சார்ந்தவர். அவர் தந்தை தெலுங்கு ஆசிரியராக தமிழ் நாட்டில் பணி செய்கிறார். அவர் இவர்களின் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். தந்தையின் எதிர்ப்பு காரணமாக வேறு வழியின்றி வீட்டை விட்டு வெளியேறி தேஜஸ்ஸ்ரீ – கல்கி இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கல்கியின் பெற்றோர் வினோத்- ஸ்டெல்லா ஆகியோர் இந்த திருமணத்திற்கு ஆதரவளித்தனர். வினோத் – ஸ்டெல்லா இணையர் பகுத்தறிவாளர்களாக பெரியாரியலை ஏற்றுக் கொண்டு வாழ்ந்துவரும் தோழர்கள் ஆவர். இந்நிலையில் கடந்த 20.04.2016 அன்று கொளத்தூரில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தோழர்கள் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர். இவர்களின் திருமணம் குறித்து தேஜஸ்ஸ்ரீயின் பெற்றோருக்கு முறைப்படி தகவல்...

வெங்கட்-இராஜலட்சுமி ஜாதி மறுப்புத் திருமணம்

4.12.2016 ஞாயிறு அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செ.வெங்கட் (எ) வெங்கடேசனுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இராஜலட்சுமிக்கும் எமகண்ட நேரத்தில் ஜாதி மறுத்து தாலிமறுத்து சுயமரியாதை திருமணமாக கோவையில் நடைபெற்றது. தோழர் சூலூர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திக, தபெதிக,திவிக தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இணையர்கள் இணையேற்பின் நினைவாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் கழக கட்டமைப்பு நிதியாக 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாயை சூலூர் பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15122016 இதழ்

வீரமணி-மேரி ஜாதி மத மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழகத் தின் செயலாற்றல் மிக்க தோழர் சூலூர் பன்னீர் செல்வம்-தமிழ்ச் செல்வி ஆகியோரின் மகன் வீரமணி, பெங்களூர் கழகத் தோழர் ஜார்ஜ்-தாமரை பரணி ஆகியோரின் மகள் மேரி ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாழ்க்கை இணை ஏற்பு நிகழ்வு பெங்களூரில் 5.11.2016 அன்று கேப்டன் ஓட்டலில் சிறப்புடன் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். டாக்டர் எம். வெங்கடசாமி, முனியன் சின்னப்பா, ‘தலித் சமரசேனா’ அமைப்பைச் சார்ந்த கணேஷ் கோலகிரி, கண் மருத்துவர் சுரேந்தர், பெங்களூர் பல்கலைப் பேராசிரியர் முனைவர் சமந்தா தேஷ்மானே, மகாதேவ பிரசாத்,  வழக்கறிஞர் துரை அருண், கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் துரைசாமி, அறிவியல் மன்ற பொறுப்பாளர் ஆசிரியர் சிவகாமி, கருநாடக தமிழ் மக்கள் இயக்கத் தலைவர் இராஜன், கழக அமைப்பாளர் இல. பழனி, பெங்களூர் கழகத் தோழர்கள் சித்தார்த்தன், இராவணன், தயாளன், குமார், வேலு, இராமநாதன், ‘பூவுலகின்...

இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர். தோழர் இரமேசு பெரியார் மக்கள்...

நுகும்பல் தோழர்கள் ஜானகி – இளையராஜா இணை ஏற்பு விழா காஞ்சி – 04092016

தமிழ்நாடு மாணவர் இயக்கத் ( CP ML மக்கள் விடுதலை மாணவர்  அமைப்பு ) தலைவர் தோழர் இளையராஜா திருமணம். விழுப்புரம் மாவட்டம், நுகும்பல், போரூரில் 4-9-2016 அன்று மாலை 7-00 மணியளவில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று நடத்திவைத்தார். தோழர்கள் மீ.தா.பாண்டியன், சி பி எம் எல் மக்கள் விடுதலைப்  பொதுச்செயலாளர் பாலன், திருநங்கை பானு, மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எழுத்தாளர் பிரேமா ரேவதி, தமிழ்த்தேச குடியசு கட்சிப் பொதுச் செயலாளர் தமிழ்நேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்

சடங்குகளை மறுத்து பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் ஆணுக்கும் தாலி அணிவித்து சீர்திருத்த திருமணம்.. தோழர் நிரஞ்சன்குமார்

5-9-2016 அன்று காலை, சென்னை, பழையவண்ணாரப்பேட்டை, ஏழாயிரம் பண்ணை நாடார்கள் திருமண மண்டபத்தில் ஈழத்தின் புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனரும், பெரியாரியல் சிந்தனையாளரும் மக்கள் மன்றத்  தோழர் நிரஞ்சன் -தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினித்துறைப் பொறியாளர்  இராசலட்சுமி ஆகியோரின் ஜாதிமறுப்பு, தாலிமறுப்பு வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா இயக்குனர் களஞ்சியம் தலைமையில் சென்னையில் நடந்தேறியது. மணமக்கள் இருவரும் உறுதி மொழிக் கூறியும், இருவரும் ஒருவருக்கு மற்றவர் தங்க  சங்கிலியையும்,மாலையையும் அணிவித்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர். விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாக் கட்சித் தலைவர், மக்கள் மன்றம் மகேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் மன்றத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். புகைப்படங்கள் ணை

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

அன்புக்கரசி-திலிப்குமார் ஜாதி-மத மறுப்பு மணவிழா

மேட்டூர் கழகத் தோழர் செ.மார்ட்டின் -பொ. விஜயலட்சுமி ஆகியோரின் மகள் வி.மா. அன்புக்கரசி, பி.ஈ., டி.அய்.வி., கொளத்தூர் கு.மணி-மணிமேகலை ஆகியோரின் மகன் ம.திலீப்குமார் ஆகியோரின் ஜாதி-மத மறுப்பு வாய்க்கை இணை ஏற்பு விழா 21.8.2016 அன்று பகல் 11 மணியளவில் கொளத்தூர் எம்.எஸ். திருமண மண்டபத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் ப. இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன், டைகர் பாலன் வாய்த்துரை வழங்கினர். இசைமதி, ‘பெண்ணுரிமை’ குறித்தப் பாடல் பாடினார். கணவரை இழந்த மணமகள்மணமகன் பாட்டிமார்கள் வெள்ளை உடையுடன் மேடையில் மணமக்களுக்கு மாலை, தங்க சங்கிலிகளை மண மக்களிடம் எடுத்துத் தந்தபோது மண்டபமே கரவொலியால் அதிர்ந்தது. தமிழகம் முழுதுமிருந்தும் கழகத் தோழர்கள் மணவிழாவுக்கு திரண்டு வந்திருந்தனர். கழக மாநாடு போலவே மணவிழா காட்சி அளித்தது. பெரியார் முழக்கம் 01092016 இதழ்

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

அஸ்வினி-மதிவதணன் வாழ்க்கை ஒப்பந்த விழா

26-6-2016 ஞாயிறு அன்று பகல் 11-00 மணிக்கு புதுச்சேரி, முத்தியாலுபேட்டை அம்பாள் திருமண மண்டபத்தில், விரட்டு வீதி நாடகக் குழு கலைஞர்களும், கல்லூரிகளில் துணைப் பேராசிரியர்களாகப் பணியாற்றுவோருமான, தோழர்கள் சி.அ.அஸ்வினி – மதிவதணன் ஆகியோரின் வாழ்க்கைத் துணைநல ஏற்புவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மருத்துவர் எழிலன், தலித் சுப்பையா, யாழன் ஆதி, சேலம் வி.சி.க.தலைவர் நாவரசன், கோகுல் காந்திநாத் ஆகியோரின் விழா விளக்கவுரைகளைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒப்பந்த உறுதிமொழிகளை கூறச் செய்து வாழ்க்கைத் துணை நல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். தாலி தவிர்க்கப்பட்ட இவ்விழாவில் மணமக்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தங்க சங்கிலிகளை அணிவித்தனர். வாழ்க்கை ஒப்பந்த விழாவுக்கு முன்னதாக பறையிசை, கரகாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், கிராமப்புற பாடல்கள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நிகழ்ந்தது. மணமக்கள் இருவரும் பறைமுழக்கத்தில் பங்கேற்று பறை அடித்தது குறிப்பிடத்தக்கது. விழாவை விரட்டு வீதி நாடகக் குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் மிக சிறப்பாக ஒழுங்கமைத்தார். விழாவில் புதுவை மாநில கழக அமைப்பாளர் தந்தை பிரியன், வழக்கறிஞர்...

சுப்ரமணியம்-நந்தினி மணவிழா

சுப்ரமணியம்-நந்தினி மணவிழா

9.6.2016 வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், முருகன்குடி, மூப்பனார் திருமண மண்டபத்தில் தெனாம் துரை, பிள்ளையார் கோவிலைச் சேர்ந்த அம்சவள்ளிராஜேந்திரன் புதல்வன் இரா.சுப்பிரமணியன், கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம் பரூர் மதுராப்பட்டி கிராமம் தங்கமணி-பொன் மணியன் புதல்வி சு. நந்தினிக்கும் வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. முருகன்குடி ஆசிரியர் சி.பழனிவேல் முன்னிலை வகித்தார். மேலும் மா.லெ.கட்சி, மக்கள் விடுதலை மாவட்ட செயலாளர் ராமர், பெண்ணாடம் மனித நேய பேரவை அமைப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மணமகனின் சகோதரர் இரா. பழனிவேல் அனைவரையும் வரவேற்றார். மணமக்கள் நன்றி கூறினர். மணவிழா மகிழ்வாக கழகத்துக்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 14072016 இதழ்

”ஜாதி மறுப்பு” வாழ்க்கை துணையேற்பு விழா!

‘ஜனவரி 17’ – சுயமரியாதைச் திருமணச் சட்டம் நிறைவேற்றப்பட்ட நாளில் ! (சட்டம் குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற்ற நாள்) ‘வீ.விஜயமாலா – ம.மனோகர்’ இடம் : சிசுவிஹார் சமூக நலக்கூடம், ,நாகேஸ்வரா பூங்கா பின்புறம், மயிலாப்பூர்,சென்னை. நேரம் : மாலை 6 மணி. தலைமை : தோழர் கொளத்தூர் மணி,தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். முன்னிலை : தோழர் விடுதலை ராஜேந்திரன், பொதுச் செயலாலாளர்,திராவிடர் விடுதலைக் கழகம். வாழ்த்துரை : தோழர் அஜிதா,வழக்கறிஞர்.