சடங்குகளை மறுத்து பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் ஆணுக்கும் தாலி அணிவித்து சீர்திருத்த திருமணம்.. தோழர் நிரஞ்சன்குமார்

5-9-2016 அன்று காலை, சென்னை, பழையவண்ணாரப்பேட்டை, ஏழாயிரம் பண்ணை நாடார்கள் திருமண மண்டபத்தில் ஈழத்தின் புகைப்படக் கலைஞரும், ஆவணப்பட இயக்குனரும், பெரியாரியல் சிந்தனையாளரும் மக்கள் மன்றத்  தோழர் நிரஞ்சன் -தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினித்துறைப் பொறியாளர்  இராசலட்சுமி ஆகியோரின் ஜாதிமறுப்பு, தாலிமறுப்பு வாழ்க்கைத்துணைநல ஒப்பந்தவிழா இயக்குனர் களஞ்சியம் தலைமையில் சென்னையில் நடந்தேறியது.
மணமக்கள் இருவரும் உறுதி மொழிக் கூறியும், இருவரும் ஒருவருக்கு மற்றவர் தங்க  சங்கிலியையும்,மாலையையும் அணிவித்தும் ஒப்பந்தத்தை நிறைவேற்றிக் கொண்டனர்.
விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி. வேல்முருகன், ராஷ்ட்ரீய ஜனதாக் கட்சித் தலைவர், மக்கள் மன்றம் மகேஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மக்கள் மன்றத் தோழர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

புகைப்படங்கள்

IMG_7727 IMG_7730 IMG_7731 IMG_7732 IMG_7745 IMG_7747 IMG_7754 IMG_7759 IMG_7762 IMG_7763 IMG_7769 IMG_7776 IMG_7777ணை

You may also like...