Tagged: மாட்டிறைச்சி

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

அரசுகள் ஆதரவுடன் பசுப் பாதுகாப்புப் படை நடத்தும் கொலை வெறித் தாக்குதல்கள்

பசு பாதுகாப்புக் குழு என்ற பெயரில் சமூக விரோதிகள் அப்பாவி மக்கள் மீது நடத்திய வன்முறைகளின் தொகுப்பு. கடந்த 2015-ஆம் ஆண்டு செப்டம்பரில், உத்தர பிரதேச மாநிலம் தாத்ரி என்ற ஊரில், வீட்டிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் பசு மாமிசம் வைத்திருந்தார் என்று கூறி முகமது அக்லக் என்பவரை வீட்டிலிருந்து இழுத்து வந்து தெருவில் அடித்தே கொன்றது இந்து மதவெறி குண்டர் படை. பின்னர் நடந்த விசாரணையில் அக்லக் வீட்டிலிருந்தது மாட்டுக் கறி அல்ல என்பது நிரூபிக்கப்பட்டது. 2015 அக்டோபர் 9-ஆம் தேதி காஷ்மீர் மாநிலம், உதம்பூரில் செத்த மாடுகளை எடுத்துச் சென்ற லாரிகளை வழிமறித்த இந்துமத வெறிக் கூட்டம் ஒன்று, லாரி ஓட்டுநர் ஜாகித் அகமது மற்றும் அவருடன் வந்த இன்னொரு இஸ்லாமிய இளைஞரையும் கொடூரமாக தாக்கியது. இதில் ஜாகித் அகமது பத்து நாட்களுக்குப் பின்னர் இறந்து போனார். இத்தாக்குதல் சம்பவம் ஜம்மு-காஷ்மீர் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி, போராட்டங்கள் வெடித்தன....

பசுவதைத் தடையின் அரசியல் ஓர் வரலாற்றுப் பார்வை

உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தப் பிறகு, பசுவதைத் தடைச் சட்டத்தை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடுமையாக்கி, உண்ணும் உரிமைகளைப் பறித்து வருகின்றன. பசுவதை தடைச் சட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் பின்னணியை விளக்குகிறது, இக்கட்டுரை. பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ஆக. 21,2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதாஅறிமுகம்செய்யமுயன்றார்.கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. 1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே...

அய்.அய்.டி மாணவர் சூரஜ் சந்தித்து கழகத் தலைவர், பொதுச்செயலாளர் ஆறுதல் சென்னை 03062017

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, துணைப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் மதிமாறன், கழக வழக்குறைஞர் அருண், சென்னை வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஐஐடி மாணவர் சூரஜ்யை 03062017 அன்று இரவு 8.30 மணியளவில் பார்த்துவிட்டு தலைமை அலுவலகம் திரும்பினார்கள். அவரின் உறவினர்கள் ராஜகோபால், வாசுதேவன் தலைவரிடமும் பொதுச் செயலாளரிடமும் ஆர்வமாக தமிழகத்தின் ஆதரவை மற்றும் கேரள முதலமைச்சர், திமுக செயல் தலைவர், தமிழக காங்கிரஸ் தலைவர், மதிமுக பொதுச் செயலாளர் மற்றும் மாணவர்கள் எப்படி இதை பார்க்கிறார்கள் என்பதை விளக்கினர். செய்தி குகன்

மாட்டுக்கறிக்கு எதிரான முற்றுகைப் போர் நாமக்கல் 31052017

மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதித்த பாஜக அரசைக் கண்டித்து, மாவட்ட அமைப்பாளர் வைரவேல் தலைமையில் திராவிடர் விடுதலைக் கழகத்தினர் சார்பில் திருச்செங்கோடு ஸ்டேட் பாங்க்கை முற்றுகையிட்டு போராட்டம். 21 பேர் கைது.

மத்திய அரசின் மாட்டிறைச்சிக்கான தடையை எதிர்த்து முற்றுகைப் போராட்டம் திருச்செங்கோடு 31052017

.. தடையைத் தகர்க்க ஒன்று கூடுவோம்.. நாள்: 31.05.2017 இடம்: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா முன்பு, திருச்செங்கோடு. திராவிடர் விடுதலைக் கழகம்

மாட்டிறைச்சிக்கு ஆதரவாக மதுரையில் கழக சுவரொட்டிகள்

மதுரையில் மாட்டிறைச்சிக்கு எதிராக இந்துத்வா கும்பலால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளுக்கு அருகிலேயே மாட்டிறைச்சியை ஆதரித்து  திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள் செய்தி மணி அமுதன்

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிராவின் மாட்டிறைச்சி அரசியல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி பதவிக்கு வந்தவுடன் மாட்டிறைச்சிக்கு முழுமையான தடை விதித்தது. மாட்டிறைச்சியை சாப்பிட்டதாக ஒரு புகார் வந்தால் அதற்காக அவரை கைது செய்து சிறையில் தள்ள முடியும் என்ற அளவுக்கு உணவு உரிமைக்கே சவால் விட்டது அந்த சட்டம். மாடுகளை வெட்டக் கூடாது; வீட்டில் மாட்டிறைச் சியையும் வைத்திருக்கக் கூடாது என்று சட்டம் கூறியது. ஏதோ, இஸ்லாமியர்களுக்கு எதிரான நடவடிக்கையாக பா.ஜ.க. கருதியது. உண்மை என்னவென்றால் தலித் மக்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் உணவு மாட்டிறைச்சி. மிகக் குறைந்த செலவில் கிடைக்கக்கூடிய புரதச் சத்துணவு. சட்டமன்றத் தேர்தல்களில் தலித் மக்களின் ஓட்டுகளை தங்கள் பக்கம் இழுக்க அம்பேத்கருக்கு உரிமை கொண்டாடும் பா.ஜ.க., தலித் மக்களின் உணவு உரிமைக்கு தடை போட்டு பார்ப்பனிய உணவு கலாச்சாரத்தை ஒடுக்கப்பட்ட மக்கள் மீது திணிக்கிறது. பார்ப்பனர்களே மாட்டுக்கறியை சாப்பிட்டவர்கள்தான். புத்தர் இயக்கத்தின் வெற்றிக்குப் பிறகுதான் பார்ப்பனர்களே மாட்டிறைச்சி...

மாட்டிறைச்சி – எனது உரிமை; எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

மதுரையில் தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பில் “மாட்டிறைச்சி – எனது உரிமை – எனது உரிமை “ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. முதலில் நிகழ்ச்சி நடத்த திட்டமிருந்த பள்ளி மைதானத்துக்குக் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப் பட்டதால், மக்கள் கண்காணிப்பகம் அலுவலகத்தில் அந்நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவன், தீண்டாமை ஒழிப்பு முன்னணித் தலைவ்ர் சாமுவேல்ராஜ், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஷேக் மொய்தீன் மற்றும் தமிழ்ப்புலிகள் அமைப்பின் பொறுப்பாளர்கள் உரையாற்றினர்.

மாட்டிறைச்சி எனது உணவு, எனது உரிமை – கருத்தரங்கம் மதுரை 25092016

தமிழ்புலிகள் கட்சி நடத்தும் கருத்தரங்கம் பகல் 1.30 மணிக்கு தோழர் கொளத்தூர் மணி அவர்களின் பார்ப்பனீயத்தின் உணவு கோட்பாடு – தலைப்பில் கருத்துரை

19122015 சேலம் – மக்களைப் பிளவுப்படுத்தும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு – தீர்மானங்கள்

தீர்மானம் : 1 உரிய பயிற்சி பெற்ற எந்த சமூகப் பிரிவைச் சேர்ந்தவரையும் அறநிலையத் துறையின் ஆளுகைக்குள் உள்ள கோவில்களில் அர்ச்சகர் ஆகலாம் என 2006 –ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை, அதைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்துக்கு எதிராக பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கில் அண்மையில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சட்டத்தின் நோக்கத்தையே குழி தோண்டி புதைத்து விட்டது. தீண்டாமையையும், பார்ப்பன மேலாண்மையையும் நிலைநிறுத்தும் – ஆகம சாஸ்திரங்களைப் பின்பற்றுவது “தீண்டாமை” தடுப்பு சட்டத்துக்கோ – சமத்துவத்தை வலியுறுத்தும் அரசியல் சட்டப் பிரிவுகளுக்கோ எதிரானது அல்ல என்றும் தீர்ப்பில் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகம விதிகள் படி பார்ப்பனர்கள் மட்டுமே அர்ச்சகர் ஆகும் உரிமைக்குரிய கோயில்களில், அதற்கு மாறாக  வேறு எந்தப் பிரிவினரும் அர்ச்சகர் ஆக முடியாது என்ற இந்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு – இந்து மதம் பார்ப்பன மதமே என்பதை உறுதியாக்கியிருக்கிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து – தமிழக அரசு...

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் தடை விதிக்கப் படாத மாநிலங்களின் விவரம் வருமாறு: பஞ்சாப் மற்றும் அரியானா: இரு அண்டை மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதித் துள்ளது. எனினும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போருக்கான தண்டனை நடைமுறைகள் எதுவும் இல்லை. ராஜஸ்தான்: எத்தகைய கால்நடை வதையும் தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம். இமாச்சல பிரதேசம்: பசுக்கள் மட்டு மின்றி காளைகள், எருமைகள், கன்றுகள் போன்ற விலங்குகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 1 ஆண்டு சிறை. குஜராத்: பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சிகளை விற்பது, வாங்குவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் அனைத்துக்கும் தடை. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. உத்தரபிரதேசம்: பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. எனினும் டப்பாக்களில்...

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மாட்டிறைச்சிக்கு தடை: மத்திய அமைச்சர் எதிர்ப்பு

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜி ஜீ மாட்டிறைச்சிக்கு தடை போடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். “நான் மாட்டிறைச்சி சாப்பிடுகிறேன்; ஆனால், புத்த மார்க்கத்தைத் தழுவியவன்” என்று. டெல்லியில் ஒரு ஆங்கிலப் பத்திரிகை ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் பேசுகையில் குறிப்பிட் டார். “குளிர் பிரதேசத்தில் வாழும் மக்கள் குளிரை சமாளிக்க புரதச் சத்துள்ள மாட்டிறைச்சியைத் தான் சாப்பிட முடியும். இதனால்தான் இந்தப் பகுதிகளில் இராணுவ வீரர்களுக்கு கண்டிப்பாக மாட்டிறைச்சி வழங்கப் படுகிறது. அதுவும் மாட்டிறைச்சி வேண்டாம் என்று சொல்லும் பா.ஜ.க.வின் ஆட்சியிலேயே வழங்கப்படுகிறது. எனது மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் பெரும்பாலான மக்களின் உணவு மாட்டிறைச்சிதான். எனவே மாட்டிறைச்சிக்கு தடைபோட முடியாது” என்று கூறியுள்ளார். பெரியார் முழக்கம் 12112015 இதழ்

இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்

மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...

ஜாதி ஆணவ படுகொலை, மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் – வேலூர் 06112015

வேலூரில் ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 06.11.2015 வெள்ளிகிழமை காலை வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த கோரியும்,மாட்டிறைச்சிக்கு எதிரான இந்துத்துவ மதவாத சக்திகளை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராசேந்திரன்,கழக பரப்புரை செயலாளர் தோழர் தூத்துக்குடி பால்.பிரபாகரன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.  மாவட்ட அமைப்பாளர் ப.திலீபன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் சிவா,கெளதமன், மன்னார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் விழுப்புரம் அய்யனார், விடுதலைசிறுத்தைகள் மாநகர் மாவட்ட செயலாளர் தோழர் சந்திரகுமார், SDPI மாவட்ட தலைவர் தோழர் முகமது ஆசாத், ஆதித் தமிழர்பேரவை மாவட்ட செயலாளர் தோழர் செந்தில், தமிழ்நாடு அம்பேத்கர் மன்றம் தோழர் மேயர் சுந்தர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சிங்கராயர்,...

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

கழகத்தின் சார்பில் வேலூரில் ஆர்ப்பாட்டம் : உயர்நீதிமன்றம் அனுமதி

6.11.2015 அன்று வேலூர் தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உத்திரபிரதேசத்தில் கொல்லப்பட்ட அக்லக் படுகொலையை கண்டித்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அமலில் உள்ள மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கக் கோரியும், தொடரும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்தக் கோரியும், 30.10.2015 அன்று வேலூரில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி கழகத்தின் சார்பில் வேலூர் சத்துவாச்சேரி காவல்நிலையத்தில் 21.10.2015 அன்று மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த அன்றைய நாளே வேலூர் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வேலூர் மாவட்டத்தில் காவல்துறை சட்டம் அமுலில் இருப்பதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளித்தால் பதட்டமான சூழல் உருவாகும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து கழகத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு 29.10.2015 அன்று விசாரணைக்கு வந்தது. 30.10.2015 அன்று அரசு தரப்பின் விளக்கங்களைக் கேட்ட நீதிமன்றம் கழகத்தின் சார்பில் வைக்கப்பட்ட...

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

இராமாயணம்-மகாபாரதத்தில் சான்றுகள் உண்டு பார்ப்பனர்கள் மாட்டிறைச்சி ரசிகர்கள்

பார்ப்பனர்கள் மாட்டிறைச்சியை விரும்பி உண்டவர்கள் என்பதற்கு இராமாயணம், மகாபாரதத்திலேயே ஆதாரங்கள் உண்டு. மௌரியர் காலத்துக்குப் பின்பும், குப்தர் காலத்திலும் இலக்கிய வடிவம் தரப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்ட மகாபாரதம், இராமா யணம் ஆகியவை மாட்டிறைச்சி உண்ணும் பழக்கத்துக்குத் தெளிவான ஆதாரங்களைத் தந்துள்ளன. (தொடக்கக்கால °மிருதிகளும், புராணங்களும் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவைதாம்). பொழுதுபோக்குக்கு என்பதை விட உணவுக்காக சத்திரியர்கள் அடிக்கடி வேட்டையாடி வந்திருக்கிறார்கள் என்பதற்கு மகாபாரதம் – குறிப்பாக அதிலுள்ள வனபர்வம் – ஆதாரமாக இருக்கிறது. உணவுக்காக வளர்ப்பு விலங்குகள் கொல்லப்பட்டு வந்ததற்கும் இது ஆதாரத்தைத் தருகிறது. ஹிம்சையை பார்த்து மனம் வருந்திய தர்மர்கூட தன் தம்பிகளுக்கும், திரௌபதிக்கும், காட்டில் வாழ்ந்து வந்த பார்ப்பனர்களுக்கும் உணவு தர தினந் தோறும் ரூரூ மான்களையும், கிருஷ்ண மிருகத்தையும் வேட்டையாடியதாக இதில் விவரிக்கப்பட் டுள்ளது. பார்ப்பனர்களின் உணவில் இறைச்சி சாதாரணமாக இடம் பெற்று வந்தது என்ற தகவலை ஆதிபர்வத்தில் இடம் பெற்றுள்ள கல்மாசபாதம் என்ற கதை கூறுகிறது. ஜெயத்ரதனுக்கும்...