Tagged: பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்

திராவிட மொழியையும்…

திராவிட மொழியையும்…

“திராவிட மக்களைப் பிரித்துப் பாழ்படுத்தியது போலவே திராவிட மொழியையும் பலவாறாகப் பிரித்துப் பாழ்படுததி அதற்கு எழுத்து எல்லாம் ஆரியமயமாக்கி திராவிட மக்களுக்கு நாட்டுப் பற்றும், மொழிப் பற்றும் இல்லாமல் போகும்படி ஆரியர்கள் செய்து விட்டதோடு, திராவிட நூல்களையும், கலாச்சாரங்களையும் பாழ்படுத்தி ஆரிய நூல்களும் ஆரிய கலாச்சாரங்களுமே திராவிடர்களிடையே தலைசிறந்து விளங்கும்படி திராவிடம் அடிமைப்படுத்தப்பட்டாகிவிட்டது.” – பெரியார் ‘விடுதலை’ 27.11.48 பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

பனகல் அரசர் தந்த பதிலடி

பனகல் அரசர் தந்த பதிலடி

மருத்துக் கல்லூரியில் பார்ப்பனர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்பதற்காக பார்ப்பனர்கள் ஒரு சூழ்ச்சிகரமான திட்டத்தை பிரிட்டிஷ் ஆட்சியில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி அமுல்படுத்தி வந்தார்கள். ‘மருத்துவம் படிக்க ஒரு மாணவர் விண்ணப்பித்திருந்தால் அவருக்கு கட்டாயம் ‘சமஸ்கிருதம்’ தெரிந்திருக்க வேண்டும்’ என்று விதி உருவாக்கினார்கள். இந்த சூழ்ச்சியை முறியடித்தவர், சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியில் முதல்வராக இருந்த பனகல் அரசர் இராமராயர். மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை நீக்கி உத்தரவிட்டார். 1923 முதல் 1926 வரை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தார். கோயில்களை பார்ப்பனர் பிடியிலிருந்து மீட்க அற நிலையப் பாதுகாப்பு சட்டம் கொண்டு  வந்தது உள்ளிட்ட பல சீர்திருத்த சட்டங்களைக் கொண்டு வந்ததால் பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்புக்குள்ளானார். ஒரு கல்லூரி வரவேற்பில் அவரை அவமதிக்கும் நோக்கத்தோடு பார்ப்பனர்கள் ‘சமஸ்கிருத’த்திலே வரவேற்பு பத்திரம் வாசித்தனர். பனகல் அரசருக்கு சமஸ்கிருதம் தெரியாது என்ற மமதையிலும் மருத்துவக் கல்லூரி...

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

மின்சார கம்பிக்குள் பாய்ந்த ‘தீட்டு’!

‘சமஸ்கிருதம்’ ஒரு மொழி என்ற எல்லையை யும் தாண்டி, பார்ப்பனிய ‘நால் வர்ண’ ஏற்றத் தாழ்வுகளையும் தன்னுடன் பிரிக்க முடியா மல் இணைத்துக் கொண் டிருக்கிறது. ‘பிராமணன்-சூத்திரன்’ என்ற பிறவி ஏற்றத் தாழ்வு கொடுமை களை சமூகத்தின் விதி களாக்கும் ‘மனு சாஸ் திரம்’ – சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்’ என்று கிருஷ்ணன் கூறும் பகவத் கீதையும் சமஸ்கிருதத்தில் தான் இருக்கிறது. ‘பிரம்மம்’, ‘பிராமனம்’ இவற்றுக்குள்தான் உலகமே அடக்கம் என்று கூறும் ஆரிய – பார்ப்பன ஆதிக்கத்தை  வலியுறுத் தும் சமஸ்கிருத கருத்து கள் காலாவதியாகி விட்டன. இனி நாகரிக சமூகத்துக்கு அவை தேவை இல்லை என்று சமஸ்கிருத பெருமை பேசும் பா.ஜ.க. ஆட்சியோ, ‘சங் பரிவார்’ அமைப்புகளோ அறிவிப் பார்களா? சவால் விட்டுக் கேட்கிறோம். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒருவர், சமஸ்கிருத்தைப் படித்தாலும் அவர் ‘வேத சமஸ்கிருதம்’ படித்த பார்ப்பனர்களோடு சமமாக மதிக்கப்படுகிறார்களா? இல்லை....

பொருள் தெரியாத உளறல்!

பொருள் தெரியாத உளறல்!

மறைந்த கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாத்  அர்த்தம் புரியாமல் வேதம் படித்த தனது அனுபவத்தை இவ்வாறு கூறுகிறார்: ஒன்பதாவது வயது முதல் ஆறாண்டு காலம் ரிக் வேதம் முழுவதையும் மனப் பாடமாகப் பயிலுவதற்காக நான் செல வழித்தேன். குடும்பப் பாரம்பரியத்தோடு ஒட்டிய ஒரு ஏற்பாடு இது. அறுபது ஆண்டு களுக்கு முன்னால் அது நடை பெற்றது. நம்பூதிரிகள் ரிக்வேதிகள், யஜுர் வேதிகள், சாமவேதிகள் என்று பிரிக்கப்பட் டுள்ளனர். அந்தந்தப் பிரிவைச் சேர்ந்த ஆண் பிள்ளைகள் இளமையில் ஒரு முறையாவது அவர்களுக்குரிய வேதங்களை குருவிடமிருந்து நேரடியாகக் கேட்பதும் சுயமாகப் பாராயணம் செய்வதும் கட்டாய மாகும். அவர்களில் ஒரு பிரிவினராவது அவரவர் வேதங்கள் முழுவதையும் பாகம் பாகமாக திரும்பத் திரும்ப பாராயணம் செய்து மனப்பாடம் செய்து கொண்டனர். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் மனப்பாடமாகப் பயிலுவதைத் தவிர நாங்கள் உச்சரிப்பதன் பொருள் என்ன என்று இந்தச் சிறுவர்களோ அவர்களின் குருமார்களோ அறிந்திருக்க...

பரம்பரை இழிவுக்கு நிரந்தர ஆதரவு!

பரம்பரை இழிவுக்கு நிரந்தர ஆதரவு!

“தமிழ்நாட்டில் பல காலமாக சமஸ்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை ஆரியர் இந்நாட்டில் புகுத்தி அதற்குத் ‘தேவ பாஷை’ எனப் பெயரிட்டுத் தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும். பயன்படும் என்று காட்டி நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள். சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும்; சுரண்ட முடியும்; நம்மை கீழ்சாதி மக்களாக ஆக்க முடியும். அவன் ‘பிராமணனாக’ இருக்க முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்று உணர்ந்து ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதை யோடும் விழிப்போடும் காரியம் செய்து வருகிறார்கள்.”                – பெரியார் ‘விடுதலை’ (15.2.60) பெரியார் முழக்கம் 07072016 இதழ் (பார்ப்பனிய சமஸ்கிருத எதிர்ப்பு சிறப்பிதழ்)

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

பார்ப்பனர் பிழைப்புக்கு வந்த ‘காசி யாத்திரை’

தமிழர்கள் வாழ்க்கையில் பார்ப் பனர்கள் சமஸ்கிருத சடங்குகளைப் புகுத்துவதற்கு மேற்கொண்ட சூழ்ச்சிகளை ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் அம்பலப்படுத்து கிறார். அவரது நூலிலிருந்து: ஒரு நானூறு ஆண்டுகளுக்கு முன் விசயநகர மன்னர், தமிழ்நாட்டில் புகுந்து ஆளத் தொடங்கினர். அவர் களுக்கு வடமொழியிற் பற்று மிகுந் திருந்ததால் தமிழ் நாட்டவர் சடங்குகள் அனைத்தையும் அம்மொழியிலேயே நிகழ்த்தினால் நல்லது என்று நம்பினர். அதனால், ஆயிரக்கணக்கான ‘புரோகி தர்’களை ஆந்திர நாட்டிலிருந்து இறக்குமதி செய்து தமிழ் நாடெங்கணும் ஊருக்கு ஒருவராய்க் குடியேறவிட்டனர். அவர் களுக்கு வேண்டிய வீட்டு வசதி, வாழ்க்கை வசதி களையெல்லாம் செய்துதந்து, ஒவ்வொருவருக்கும் சடங்கு செய்து வைக்கக்கூடிய எல்லைகளையும் வகுத்துத் தந்தனர்; குறிப்பிட்ட எல்லைக்குள் நிகழும் சடங்குகள் அவ்வளவையும் ஒரு புரோகிதரே நடத்தி வைக்கும் தனி உரிமையையும் வழங்கினர். இப் புரோகிதர் குடியேறிய பிறகே, தமிழர் வீட்டுச் சடங்குகள் அனைத்தும் இப் புரோகிதர்களால் வடமொழியில் நடத்தி வைக்கப் பெறலாயின. சிலப்பதிகாரத்தில் காணப்படும்...

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! சமஸ்கிருதத்தில் அறிவியலா?

சமஸ்கிருதத்தில் பல அறிவியல் கருத்துகள் இருக்கின்றன என்கிறார்கள். கண்டம் விட்டு கண்டம் பாயும் – விமானங்கள் குறித்து சமஸ்கிருதத்திலேயே நமது முன்னோர்கள் எழுதி வைத்துள்ளனர் என்று பேசினார் பிரதமர் மோடி! மனிதன் கற்பனையில் கண்ட கனவுகளும், அதில் உருவான எழுத்துகளுமே அறிவியலுக்கான ஆதாரங்கள் ஆகிட முடியாது. கோட்பாடு (தியரி), சோதனை (எக்ஸ்பெரிமென்ட்), கண்டறிதல் -இம் மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடுதான் அறிவியல்! கண்டம் விட்டு கண்டம் பாயும் விமானங்கள் வேத காலத்தில் பறந்திருக்க முடியுமா? எரிபொருள் இல்லாமல் விமானம் பறக்க முடியாது. இரப்பர், அலுமினியம்  போன்ற பொருள்கள் இல்லாமல் விமானத்தையே வடிவமைத்திருக்கவும் முடியாது. எல்லாவற்றுக்கும் மேலாக ‘பெர்னூலி’ கொள்கை, நியூட்டனின் விதிகள் தெரியாமல் பறப்பது பற்றிய ஒரு அடிப்படைப் புரிதலே வந்திருக்க முடியாது. “எல்லாம் நம்மிடத்திலே ஒரு காலத்தில் இருந்ததுதான். ஆனால் தொலைந்து போய்விட்டன” என்று பதில் கூறலாம். அது அறிவியலுக்கு எதிரானது. தொலைந்து போவது அவ்வளவு எளிது அல்ல. மனிதன் தனக்குப் பயன்படக்கூடிய...

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

மெக்காலே மீட்டுத் தந்த கல்வி உரிமை!

பிரிட்டிஷ் ஆட்சியில் வைதீக வெறி பிடித்த பார்ப்பனர்கள், பார்ப்பனர்களுக்கு மட்டும் சமஸ்கிருத கல்லூரியை ஏற்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த அழுத்தத்தினால் பிரிட்டிஷ் ஆட்சி காசியில் ஒரு சமஸ்கிருத பள்ளியைத் தொடங்கி, அடுத்து கல்கத்தாவிலும் ஒரு சமஸ்கிருத பள்ளியை தொடங்கும் முயற்சிகளில் இறங்கியது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்து மத சீர்திருத்தவாதியும் பார்ப்பனருமான இராஜாராம்  மோகன் ராய், “சமஸ்கிருதக் கல்வியானது இந்தியாவை என்றென்றும் இருளில் ஆழ்த்திவிடும். இந்திய குடிமக்களின் முன்னேற்றத்தில் பிரிட்டிஷ் ஆட்சிக்கு அக்கறை இருக்குமானால் கணிதம் இயற்கை தத்துவம், வேதியல் உடற்கூறு இயல் ஆகிய பயனுள்ள அறிவியலைக் கற்றுக் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்” என்று கவர்னர்  ஜெனரலுக்கு கடிதம் எழுதினார். இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் வந்தன. பல ஆண்டுகாலம் கருத்து வேறுபாடுகள் நீடித்த பிறகு, பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தை கைவிட்டது. இந்த துணிச்சலான முடிவை எடுத்தவர் கவர்னர் ஜெனரல். அமைச்சரவை...

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

சமஸ்கிருதத்தில் வரவேற்பு: எதிர்த்தார் காந்தி

20.9.1927 அன்று திருச்சியில் பார்ப்பனக் கல்வி நிறுவனமான தேசியக் கல்லூரியில் காந்தியார் பேச வந்தார். பார்ப்பனர்கள் அவருக்கு சமஸ்கிருதத்தில் எழுதி வரவேற்பு பத்திரம் வாசித்தார்கள். காந்தியார் பேச எழுந்தார். பேச்சைத் தொடங்குவதற்கு முன்பு, ‘இந்தக் கூட்டத்தில் சமஸ்கிருதம் தெரிந்தவர்கள் இருந்தால் கையை உயர்த்துங்கள்’ என்று கேட்டார். வெகுசிலரே கையை உயர்த்தினார்கள். “மிகப் பெரும்பாலாருக்கு சமஸ்கிருதம் தெரியாதபோது, அந்த மொழியில் ஏன் வரவேற்பு பத்திரத்தை தயாரிக்க வேண்டும்?” என்று  கேட்டார். பார்ப்பனர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. ‘வரவேற்புரையை தமிழில் எழுதியிருக்கலாம். வேண்டுமானாhல் அதன் மய்யக் கருத்தை இந்தியிலோ சமஸ்கிருதத்திலோ கூறியிருக்கலாம்’ என்றார். கூட்டம் முடிந்து திரும்பும்போது உடன் வந்த காகா கலேல்கர்  (இவர்தான் முதன்முதலாக அமைக்கப்பட்ட பிற்படுத்தப்பட்டோர்  ஆணையத்தின் தலைவராக இருந்தவர் – மராட்டிய பார்ப்பனர்),  காந்தியிடம் இது குறித்து கேட்டார். -“உங்களுக்குத்தான்  சமஸ்கிருதம் பிடிக்குமே; அப்படி இருந்தும் ஏன் எதிர்த்தீர்கள்?”  அதற்கு காந்தியார் சொன்ன பதில் இது: “எல்லாப் பிரிவுகளையும் சேர்ந்த மாணவர்களின்...

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

சங்கராச்சாரியுடன் வாதிட்ட வள்ளலார்

இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரிக்கும் வள்ளலாருக்கும் ‘சமஸ்கிருதம்’ தொடர்பாக நேரடி மோதல் நடந்த வரலாறும் உண்டு. ஒரு முறை வள்ளலார், காஞ்சி சங்கராச்சாரியை சந்திக்கச் சென்றபோது ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்’ என்று சங்கராச்சாரி ஓங்கி அடித்துப் பேசியிருக்கிறார். அங்கேயே இதை ஏராளமான ஆதாரங்களைக் கொண்டு வள்ளலார் அவரிடம் மறுத்து வாதாடியிருக்கிறார். வள்ளலார் வரலாற்றை எழுதியுள்ள ‘சன்மார்க்க தேசிகன் என்ற ஊரன் அடிகள்’ நூலில் இந்த நிகழ்வை பதிவு செய்திருக்கிறார். ‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய்மொழி என்று நீங்கள் கூறினால் தந்தை மொழி தமிழ் தான் என்று நான் கூறுவேன். தமிழ் இல்லாவிட்டால் பிறமொழிகள் வந்திருக்காது’ என்று பதிலடி தந்திருக்கிறார் வள்ளலார்.  ஊரன் அடிகள் அந்த சம்பவத்தை இவ்வாறு எழுதுகிறார். “ஆரிய அரசன் பிரகத்தனுக்கு – தமிழ் அறிவுறுத்துவான் வேண்டிக், கபிலன் குறிஞ்சிப் பாட்டினைப் பாடியதைப் போல் ஆரியமொழி மட்டுமே நன்கு உணர்ந்த சங்கராச்சாரிக்கு தென்மொழி, வட மொழி என்ற...

‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி

‘சமபந்தி’க்கு தடை போட்ட திருவையாறு சமஸ்கிருத கல்லூரி

1940ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் ஒரு சம்பவம் நிகழ்ந்தது, அன்றைய தஞ்சை மாவட்டம் திருவை யாற்றில் ஒரு சமஸ்கிருத கல்லூரி இருந்தது. அப்போது மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு மாவட்ட வாரியம் (District Board) என்ற அமைப்பின் நிர்வாகத்தில் மாவட்டங்கள் இயங்கின. இந்த சமஸ்கிருத கல்லூரி, ‘மாவட்ட வாரிய’ நிர்வாகத்தின் கீழ் இயங்கிய ஒரு அரசு நிறுவனம். இதில் சமஸ்கிருத மொழி மட்டுமே கற்பிக்கப்பட்டது. எனவே, படித்தவர் களும் பார்ப்பனர்கள் மட்டுமே! அப்போது மாவட்ட வாரியத் தலைவராக இருந்தவர் சர். ஏ.டி. பன்னீர் செல்வம். பெரியாரின் சுயமரியாதை கருத்துகளை தீவிரமாக ஆதரித்தவர். சமஸ்கிருத கல்லூரியில் தமிழும் கற்றுத் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். பார்ப்பனர்களோ சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் நுழைந்தால் புனிதம் கெட்டுவிடும் என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். மிரட்டலுக்கு பன்னீர்செல்வம் பணியவில்லை. சமஸ்கிருத கல்லூரியில் தமிழ் படிக்க பார்ப்பனரல்லாத மாணவர்கள் சேர்ந்தனர். இதனால் மாணவர் விடுதியில் பிரச்சினை உருவாக்கப்பட்டது. பார்ப்பன...

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

ஹரித்துவாரில் கங்கை கரையில் சிலை திறப்பை பார்ப்பனர்கள் தடுத்து நிறுத்தினர் திருவள்ளுவர் தீண்டப்படாதவராம்!

திருவள்ளுவர் தீண்டப்படாத சாதிக்காரர். எனவே அவர் சிலையை ஹரித்துவார் கங்கை நதிக் கரையில் நிறுவ அனுமதிக்க முடியாது என்று பார்ப்பன சாமியார்கள், பார்ப்பன அர்ச்சகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுவர் சிலை திறப்பையும் நிறுத்தி விட்டனர். தருண் விஜய் என்ற பா.ஜ.க. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அண்மைக்காலமாக திருக்குறள் மீது தனக்கு மிகவும் ஈடுபாடு இருப்பதாகக் கூறி வருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் கங்கை நதிக் கரையில் திருவள்ளுவர் சிலையை நிறுவப் போவதாக கன்யாகுமரியிலிருந்து திருவள்ளுவர் சிலையை பல ஊர்கள் வழியாக ‘யாத்திரை’யாகக் கொண்டு சென்றார். கடந்த ஜூன் 29ஆம் தேதி கங்கை நதிக்கரையில் ‘ஹர்கி பவுரி’ என்ற இடத்தில் சிலை நிறுவ ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், ஜன. 28ஆம் தேதியே பார்ப்பன புரோகிதர்களும் பார்ப்பன சாமியார்களும் சிலை நிறுவுவதை எதிர்த்து போராடத் தொடங்கிவிட்டனர். அதற்கு அவர்கள் கூறிய காரணம், “திருவள்ளுவர் தீண்டப்படாத சமுதாயத்தில் பிறந்த ஒரு தலித். அவரது சிலையை...

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

சமஸ்கிருதத்தைத் திணிக்காதே! ‘தினமணி’யின் திரிப்பு வேலை!

தமிழ்நாட்டில் பா.ஜ.க. வின் ஊதுகுழலாக வெளி வரும் ‘தினமணி’ நாளேட்டின் ஆசிரியர் கி. வைத்தியநாதன் எனும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர், ஹரித்துவாரில் திட்டமிடப் பட்டிருந்த திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்வுக்கு சென்றார்.  ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் உ.பி. மாநில ஆளுநர் ராம்நாயக் சிலையை திறந்து வைத்தார் என்று படங்களுடன் ‘தினமணி’ நாளேட்டில் ஒரு முழுப் பக்கத்துக்கு செய்தியை வெளியிட்டார். இந்த நிகழ்வில் தமிழ் நாட்டைச் சார்ந்த இப்போது மேகலயா ஆளுநராக இருக்கும் சண்முகநாதன், மத்திய அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், காங் கிரஸ் மாநிலங்களவை உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் போன்ற ஒரு சில தமிழர்கள் மட்டுமே பங்கேற்றனர். கங்கை நதிக்கரைப் பகுதி யிலுள்ள வளாகத்தில் சிலை திறக்கப்பட்டதாக பொய்யான செய்தி வெளியிட்ட ‘தினமணி’ நாளிதழ், கடைசி வரியில் தப்பித்துக் கொள்வதற் காக எதிர்ப்புக் காரண மாக பொதுப் பணித்துறை விருந்தினர் வளாகத்தில் நிகழ்ச்சி நடைபெற்றதாக அடிக் குறிப்பு போட்டிருக்...