Tagged: நினைவேந்தல்

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு சென்னை 17092017

மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட #எழுத்தாளர் கவுரி லங்கேஷ் நினைவேந்தல் படத்திறப்பு நாள் : 17.09.2017, ஞாயிற்றுக்கிழமை, மாலை 6 மணிக்கு. இடம் : திராவிடர் விடுதலைக் கழகம், தலைமை அலுவலகம், மயிலாப்பூர், சென்னை – 04 கண்டன உரை : #தோழர் விடுதலை க இராசேந்திரன் பொதுச் செயலாளர், திவிக தோழர் செந்தில் இளந்தமிழகம் தோழர் பிரவீன் மே 17 இயக்கம் தோழர் செல்வி மனிதி கோழையே உன்னிடம் தோட்டாக்கள்… என்னிடம் அழியா வார்த்தைகள்… எதற்கும் அஞ்ச மாட்டேன்…நான் #கவுரி_லங்கேஷ் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

ஃபாரூக் நினைவேந்தல்: குடும்ப நிதி வழங்கல்

நாள்    :              16.4.2017 ஞாயிறு மாலை 4 மணி இடம்                 :               கோவை அண்ணாமலை அரங்கு (தொடர் வண்டி நிலையம் எதிரில்) உரை :               கொளத்தூர் மணி, விடுதலை இராசேந்திரன், கோவை இராமகிருஷ்ணன், இரா. அதியமான், வழக்கறிஞர் ப.பா. மோகன், கேரளயுக்திவாதி (பகுத்தறிவாளர்கள்) தோழர்களும், பல்வேறு இயக்கங்களின் பொறுப்பாளர்களும் பங்கேற்கிறார்கள். ஏற்பாடு           :               கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்.                 அனைவரும் வருக! பெரியார் முழக்கம் 13042017 இதழ்

தோழர் செங்கொடி 5 ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம்

மன்னார்குடி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 28.08.2016 மாலை 6 மணிக்கு பெரியார் சிலை அருகில் தோழர் செங்கொடியின் 5ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெறும் தலைமை  இரா.காளிதாசு, மாவட்டச்செயலாளர் சிறப்புரை சேரன்குளம் செந்தில்குமார் செயலாளர் அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டம் நிகழ்ச்சி ஏற்பாடு திராவிடர் விடுதலைக் கழகம் திருவாரூர் மாவட்டம்

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார்குடி 19052016

முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார் குடியில் நடைபெற்றது. மன்னார்குடி மே.19 இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று அப்பாவி தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கொத்து குண்டுகளை வீசி ஒரே நாளில் ஒன்றை லட்சம் தமிழ் மக்களை சிங்கள அரசு முள்ளி வாய்கால் பகுதியில் கொன்று குவித்தது, அப்போரில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளி வாய்க்கால் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சேரன்குளம் செந்தில் குமார், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், நாம் தமிழர் கட்சி மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதா பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்....

முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்

ஆந்திராவில் அப்பாவி தமிழக கூலித் தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட ”முதலாம் ஆண்டு நினைவு மற்றும் தோழமை உறுதி ஏற்பு தினம்.” கடந்த ஆண்டு இதே ஏப்ரல் 7ந்தேதி ஆந்திர செம்மரக் கடத்தல் தடுப்பு சிறப்பு அதிரடிப் படையால் அநியாயமாய் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழக கூலித் தொழிலாளர்களின் முதலாமாண்டு நினைவும், அவர்கள் குடும்பங்களுக்கான ஆதரவு மற்றும் பாதுகாப்பிற்கான தோழமை உறுதி ஏற்பு நாளும், 7-4-2016 வியாழன் அன்று, திருவண்ணாமலை சாரண சாரணியர் பயிற்சிக் கூடத்தில், மக்கள் கண்காணிப்பகம், மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடந்தது. நினைவேந்தலைத் தொடர்ந்து நடந்த தோழமை உறுதியேற்பு நிகழ்வு மக்கள் கண்காணிப்பின் இயக்குநர் ஹென்றி திபேன் தலைமையில் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் கல்விமணி உள்ளிட்டோர் உரையாற்றினர். உரைகளில் இது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், இனி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கப்பட்டன.  

மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு

01042016 வெள்ளிக்கிழமை மாலை 5-00 மணியளவில் சேலம் மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம் செட்டியூரில் மறைந்த ‘மா.வரதராசன் நினைவேந்தல் நிகழ்வு’ நடைபெற்றது. காவலாண்டியூர் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்விற்கு ஒன்றிய செயலாளர் க.ஈசுவரன் தலைமை ஏற்றார். காவலாண்டியூர் சித்துசாமி, கொளத்தூர் ஒன்றிய குழு துணைத்தலைவர் சி.சுந்தரராசன் (அ.தி.மு.க), அஞ்சல் துறை சிக்கப்பசெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள், மா.வரதராசன் படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரை ஆற்றினார். மேலும் கண்ணாமூச்சி ஊராட்சி மன்ற தலைவர் கே.கே.பழனிசாமி, எல்.ஐ.சி. முகவர் ரகுபதி, தி.முக. விவசாய அணி ஒன்றிய செயலாளர் தேவராசன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன், ஈரோடு மாவட்ட தலைவர் நாத்திகஜோதி, கழக செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோரும் நினைவேந்தல் உரை ஆற்றினார்கள். இறுதியாக மறைந்த ‘மா.வரதராசன் அவர்களின் தகப்பனாரும், கழகத் தோழருமான மாரி (எ) மாரியப்பன்...

தோழர் கா.சு.நாகராசு தந்தையார் நினைவேந்தல்

24-12-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்குபொள்ளாச்சி, கா.க.புதூர் தோழர் நாகராசு அவர்களின் தந்தையார் சுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல், அவரது பூஞ்சோலைஇல்லத்தில் ந்அடைபெற்றது. நிகழ்வுக்கு பொள்ளாச்சி வெள்ளீயங்கிரி தலைமை தாங்கினார். அனைவரையும் வரவேற்று கா.சு.நாகராசன் உரையாற்றினார். தனது உரையில் ஐம்பது வயதுவரை கடவுள் நம்பீகையாளராக இருந்த தனது தந்தை நாட்டிகரானதையும், அறுபது வயதில் சாதிப்பற்றினை விட்டொஇத்ததையும், தானும் தன் சகோதரர் குடும்பத்தார் அனைவரும் இயக்கப் பணியாற்றுவதற்கு அவரளித்த சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்தார்.அதுபோலவே அவரது உடலை மருத்துவமனைக்கு அளிப்பதற்கு தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அனுமதி கொடுத்த பாங்கினை விளக்கினார். தொடர்ந்து தோழர்கள் மடத்துக்குளம் மோகன் (தி.வி.க), பொள்ளாச்சி விசயராகவன் (காட்டாறு), பொறியாளர் பரமசிவம் (தி.க), ஆறுச்சாமி (தி,மு.க), தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் ஆகியோரின் நினைவேந்தல் உரைகளைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவேந்தல் உரையாற்றினார்.தனது உரையில் ஆத்மா தத்துவத்தின் பொய்மைகளையும், பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப்படும்  இறுதிச் சடங்கில் கூறப்படும் மந்திரத்தின்...

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடியில் நாத்திகம் பி.இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல்: சாதி எதிர்ப்புப் பரப்புரை

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் ‘நாத்திகம்’ இதழ் நிறுவனர் மறைந்த நாத்திகம் பி. இராமசாமி 6ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம், ‘எங்கள் தலைமுறைக்கு சாதி வேண்டாம்; எங்கள் இளைய சந்ததிக்கு வேலை வேண்டும்’ என்ற கொள்கை விளக்கப் பொதுக் கூட்டமாக 24.9.2015 அன்று ஆழ்வை சீரணி அரங்கில் ஆழ்வை ஒன்றிய கழகம் சார்பில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு ஆழ்வை ஒன்றிய கழகத் தலைவர் நாத்திகம் பா.முருகேசன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்டக் கழகத் துணைச் செயலாளர் ச.கா. பாலசுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர் வே.பால்ராசு, செ. செல்லத்துரை, கோ.அ. குமார், மாவட்டத் தலைவர் பொறிஞர் சி.அம்புரோசு மற்றும் ஆதித் தமிழர் பேரவை மாநில இளைஞரணி செயலாளர் அருந்ததி அரசு ஆகியோர் உரைக்குப் பின், கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் சிறப்புரை யாற்றினார். அவர் தமது உரையில் நாத்திகம் பி.இராமசாமியின் பணிகளை நினைவு கூர்ந்ததோடு, நாட்டில் நிலவும் கனிமவளக் கொள்ளை, சாதி ஆணவக்...