முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் மன்னார்குடி 19052016
முள்ளி வாய்க்கால் பேரழிவு 7ம் ஆண்டு நினைவேந்தல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார் குடியில் நடைபெற்றது.
மன்னார்குடி மே.19 இலங்கையில் கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி அன்று அப்பாவி தமிழர்கள் மீது தடை செய்யப்பட்ட ரசாயன ஆயுதங்கள் கொத்து குண்டுகளை வீசி ஒரே நாளில் ஒன்றை லட்சம் தமிழ் மக்களை சிங்கள அரசு முள்ளி வாய்கால் பகுதியில் கொன்று குவித்தது,
அப்போரில் இறந்த அப்பாவி பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் முள்ளி வாய்க்கால் 7ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மன்னார்குடியில் பேருந்து நிலையம் அருகில் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமையில் நடைபெற்றது. திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க துணைத்தலைவர் சேரன்குளம் செந்தில் குமார், மதிமுக நகர செயலாளர் சன் சரவணன், நாம் தமிழர் கட்சி மன்னார்குடி சட்ட மன்ற தொகுதி வேட்பாளர் வேதா பாலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு கூறுகையில், ஐ.நா.சபையால் தடை செய்யப்பட்ட ரசாயண ஆயுதங்கள் மற்றும் கொத்து குண்டுகள் மூலம் இலங்கை ராணுவம் ஒரே நாளில் ஒன்றரை லட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்களை இனபடுகொலை செய்தது, சர்வதேச சமூகம் இந்த இனப்படுகொலை குறித்து இன்றுவரை மவுனம் காக்கிறது.
ஈழ தமிழர்களுக்கு உதவி செய்யவேண்டிய இந்திய அரசு மாறாக இனப்படுகொலை போரை முன்னிற்று நடத்தியது. சுதந்திர தமிழ் ஈழம் அமைவதற்கு பொது வாக்கெடுப்பை ஐ.நா. மன்றம் முன்னின்று நடத்த வேண்டும். இனபடுகொலை செய்த இலங்கை அரசை அதற்கு துணை போனவர்களையும் சர்வதேச நீதிமன்றம் முன் நிறுத்தி உரிய தண்டனையை பெற்றுக் கொடுக்கவேண்டும் என கூறினார்.
நிகழ்ச்சியில் திராவிடர் விடுதலைக் கழக ஒன்றிய செயலாளர்கள் சேரன் ரமேஷ், நல்லிக்கோட்டை முருகன், செந்தமிழன், தென்பரை பன்னீர்செல்வம், ஒடுக்குமுறைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்மணி செல்வராசு, மதிமுக மாவட்ட பிரதிநிதி மீனாட்சி சுந்தரம் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று மெழுகுவர்த்தி தீபங்கள் ஏந்தி, மலர்கள் தூவி போரில் இறந்த தமிழ மக்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.