தோழர் கா.சு.நாகராசு தந்தையார் நினைவேந்தல்

24-12-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்குபொள்ளாச்சி, கா.க.புதூர் தோழர் நாகராசு அவர்களின் தந்தையார் சுப்பிரமணியன் அவர்களின் நினைவேந்தல், அவரது பூஞ்சோலைஇல்லத்தில் ந்அடைபெற்றது.
நிகழ்வுக்கு பொள்ளாச்சி வெள்ளீயங்கிரி தலைமை தாங்கினார்.
அனைவரையும் வரவேற்று கா.சு.நாகராசன் உரையாற்றினார். தனது உரையில் ஐம்பது வயதுவரை கடவுள் நம்பீகையாளராக இருந்த தனது தந்தை நாட்டிகரானதையும், அறுபது வயதில் சாதிப்பற்றினை விட்டொஇத்ததையும், தானும் தன் சகோதரர் குடும்பத்தார் அனைவரும் இயக்கப் பணியாற்றுவதற்கு அவரளித்த சுதந்திரத்தையும், ஒத்துழைப்பையும் நினைவுகூர்ந்தார்.அதுபோலவே அவரது உடலை மருத்துவமனைக்கு அளிப்பதற்கு தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்து அனுமதி கொடுத்த பாங்கினை விளக்கினார்.
தொடர்ந்து தோழர்கள் மடத்துக்குளம் மோகன் (தி.வி.க), பொள்ளாச்சி விசயராகவன் (காட்டாறு), பொறியாளர் பரமசிவம் (தி.க), ஆறுச்சாமி (தி,மு.க), தோழர் அறக்கட்டளை சாந்தகுமார் ஆகியோரின் நினைவேந்தல் உரைகளைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி நினைவேந்தல் உரையாற்றினார்.தனது உரையில் ஆத்மா தத்துவத்தின் பொய்மைகளையும், பார்ப்பனர்களைக் கொண்டு நடத்தப்படும்  இறுதிச் சடங்கில் கூறப்படும் மந்திரத்தின் இழிவு போன்ற பல செய்திகளை விளக்கிப் பேசினார், இறுதியில் வழ்க்குரைஞர் பிரபாகரன் வந்திருந்தோருக்குக் குடும்பத்தாரின் நம்றிகளைத் தெரிவித்தார்.
நினைவேந்தல் நிகழ்வின் இறுதியில் வந்திருந்த அனைவருக்கும் பகலுணவு வழங்கப்பட்டது.
த.பெ.தி.க. பொதுச்செயலளர் கோவை இராமகிருட்டிணன் வந்திருந்து தனது இரங்கல்களைக் குடும்பத்தாருக்குத் தெரிவித்துக்கொண்டார்.
IMG_0464 IMG_0467 IMG_0468 IMG_0469 IMG_0471 IMG_0473 IMG_0474 IMG_0477 IMG_0478 IMG_0481 IMG_0484 IMG_0487 IMG_0488 IMG_0491

You may also like...