Tagged: அறிவியல் பரப்புரை பயணம்

எழுச்சியுடன் நடைபெறும் பரப்புரை பயணம் ஆத்தூரில் சுவரெழுத்து

நம்புங்கள் அறிவியலை நம்பாதிங்க சாமியார்களை என்ற முழக்கக்தோடு திவிக முன்னெடுக்கும் நான்கு திசைகளிலிருந்தும் அறிவியல் பரப்புரை பயணத்தின் நோக்கத்தை வலியுறுத்தி 12082016 அன்று நடைபெற உள்ள நிறைவுரை பொதுக்கூட்டத்தின் சுவரெழுத்து  இராணிப்பேட்டை ஆத்தூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களின் சிறப்புரையோடு.    

பல்லடத்தில் பரப்புரை பயணக்குழு !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வரும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணத்தில் நேற்று பல்லடத்தில் பரப்புரை நடைபெற்றது. பல்லடம் பரப்புரை பயணம் மதியம் 11.30 க்கு துவங்கியது. பல்லடம் நகர தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.மாநில பெருளாளர் திருப்பூர் துரை சாமி, ஆனைமலை மணிமொழி, திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில் ராசு,ஒன்றியச் செயலாளர் சண்முகம், பயண ஒருங்கிணைப்பாளர் சூலூர் பன்னிர் செல்வம், மந்திரமா தந்திரமா காவை இளவரசன் தி.வி க நன்றியுரை சங்கீதா அவர்கள். ,

மயிலாடுதுறை பரப்புரை வாகனம் !

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” எனும் தலைப்பில் ”அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை” பயணம் தமிழகத்தின் நான்கு முனைகளில் ஆரம்பித்து கிராமங்கள்,ஊர்கள், நகரங்கள் வழியாக பயணித்து மக்களை சந்தித்து விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது

சென்னை அணி காஞ்சிபுரத்தில் பரப்புரை

காஞ்சியில் சங்கரமடம் எதிரில் கழகம் தன் முழுவீச்சில் அறிவியல் பரப்புரையை தோழர்கள் வீதி நாடகம் பகுத்தறிவு பாடல்கள் மூலம் ‘ மதம் மனிதனை மிருகமாக்கும்’ ஜாதி மனிதனை சாக்கடையாக்கும்’ என்றும் அச்சம் போக்கி நம்பாதீர்கள் போலி சாமியார்களை அம்பலப்படுத்தி மாலை பரப்புரை அதிக கூட்டத்தின் இடையே படுத்திய நேரம் ஒரு இஸ்லாமிய சவ ஊர்வலத்திற்கு மதிப்பளித்து பரப்புரையை நிறுத்தி மீண்டும் கழகப் பொதுச் செயலாளர் உரையை தொடர்ந்து மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தினார். காஞ்சி மக்கள் மன்ற தோழர்கள் திரளாக வந்து ஆதரவு தெரிவித்தனர். செய்தி குகநந்தன்

திருப்பூரில் அறிவியல் பரப்புரை பயண சுவர் விளம்பரங்கள்

திருப்பூரில் சுவர் விளம்பரங்கள் ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஆகஸ்ட் 7 முதல் 12 வரை நடைபெறும் ”நம்புங்க அறிவியலை …நம்பாதீங்க சாமியார்கள …” அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை “பயணத்திற்கு திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியில் செய்யப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள். ஓவியர் தோழர் பழனி பத்மநாபன் அவர்கள்.

பரப்புரைப் பயணம்:  சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

பரப்புரைப் பயணம்: சித்தோட்டில் மாவட்ட கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம் 26.6.16, ஞாயிறு மாலை 4 மணிக்கு, சித்தோடு தட்டாங்குட்டையில் கமலக் கண்ணன் இல்லத்தில் நடைபெற்றது. எழிலன் தலைமை வகித்தார். கழகப் பொருப்பாளர்கள் இரத்தினசாமி, சண்முகப்பிரியன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 89 வயதான மூத்த பெரியார் தொண்டர் இனியன் பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். சித்தோடு பிரபாகரனின் கடவுள் மறுப்பு மற்றும் ஆத்மா மறுப்புடன் கலந்தாய்வு தொடங்கியது. கழகப்பரப்புரைப் பயணத்தை நடத்துவது குறித்தும் கழக ஏட்டுக்கு சந்தா சேர்ப்பு குறித்தும் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. தோழர்களுக்கு கமலக்கண்ணன் சிற்றுண்டிவழங்கினார். பெரியார் முழக்கம் 22072016 இதழ்

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம் ஈரோடு 24072016

அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம். நாள் : 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை. இடம் : பெரியார் JCP சர்வீஸ் சென்டர், சூரம்பட்டி வலசு,ஈரோடு. தலைமை : தோழர் பால்.பிரபாகரன்,பரப்புரை செயலாளர். முன்னிலை : தோழர் ரத்தினசாமி,அமைப்புச் செயலாளர். தோழர் திருப்பூர் துரைசாமி,பொருளாளர். பொருள் : 1) பரப்புரை பயணத்தில் பேசுவதற்கான செய்திகளை திட்டமிடல். 2) மந்திரமா?தந்திரமா? செயல் விளக்கம் குறித்து அறிதல். 3) பயணத்திட்டங்களை வகுத்தல். பரப்புரை பயண திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கழக தோழர்கள் அவசியம் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : பரப்புரை பயணத்தில் பேசுபவர்கள் தாங்கள் பேசவிருக்கும் செய்திகளை தயார் செய்து கொண்டு வரவும். தொடர்புக்கு : 98650113393 – 9842712444

அறிவியல் பரப்புரை பயண விபரம் நாள்வாரியாக

7.8.2016 சத்திய மங்கலம் அணி மாலை 6 மணி- சத்திய மங்கலம் – பயணத் துவக்கம், பொதுக் கூட்டம். சென்னை அணி காலை 9 மணி – இராயப்பேட்டை – துவக்கம்; காலை 10 மணி – போரூர்; காலை 11 மணி – பூவிருந்தவல்லி; மாலை 4 மணி – திருப்பெரும்புதூர்; மாலை 5.30 மணி – காஞ்சிபுரம் – இரவு தங்கல். மயிலாடுதுறை அணி மாலை 6 மணி – மயிலாடுதுறை – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம். திருப்பூர் அணி இரவு 7 மணி – திருப்பூர் – பயணத் துவக்கம் – பொதுக் கூட்டம்     8.8.2016 சத்திய மங்கலம் அணி காலை 10 மணி – தூக்க நாயக்கன் பாளையம்; மாலை 4 மணி – அந்தியூர் – மதிய உணவு; இரவு 7 மணி – குருவரெட்டியூர் – பொதுக்...