Category: ஊடகங்களில் திவிக

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வருக்கு பாராட்டு

காவிரி மேலாண்மை வாரியம்: தமிழக உரிமையை வலியுறுத்திய முதல்வரை பாராட்டுகிறோம் பிரதமர் மோடியை சந்தித்து இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்றும், அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் கோரிய தமிழக முதல்வரை பாராட்டுவதாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். கடலூர் மாவட்டம் விருத்தாசலத்துக்கு திருமணம் ஒன்றில் கலந்து கொள்ள வந்த அவர், செய்தியாளர் களிடம் கூறியது: சிதம்பரம் அடுத்த வடக்குமாங்குடி கிராமத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர் களுக்கு 92 ஆவது அரசாணையின்படி பள்ளி, கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்க சட்ட வரையறை உள்ளது. ஆனால், இவற்றை கல்வி நிர்வாகங்கள் பின்பற்றுவதில்லை. மேலும் ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இவற்றை உரிய திருத்தங்களோடு செயல்படுத்த வேண்டும். பிரதமர் மோடியை அண்மையில் சந்தித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா, காவிரி மேலாண்மை...

”எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” – அசத்தும் வீதி நாடகம் – நக்கீரன் இதழ்.

திராவிடர் விடுதலைக் கழகம் தற்போது நடத்திக்கொண்டிருக்கும் பிரச்சார பயணம் குறித்து நக்கீரன் 07102015 இதழில். கழக பொதுச்செயலாளர்,சென்னை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி,திராவிடர் கலைக்குழுவின் தோழர் ஜோதிபிரபு ஆகியோர் பேட்டியுடன்

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி 22122012 – கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேர்காணல் 0

புதிய தலைமுறை அக்னிப் பரீட்சை நிகழ்ச்சி 22122012 – கழகத் தலைவர் கொளத்தூர் மணி நேர்காணல்

“புதிய தலைமுறை” தொலைக்காட்சியில் டிசம்பர் 22 அன்று ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில்பேட்டியாளர் ஜென். ராம் எழுப்பிய பல்வேறு வினாக்களுக்கு விடையளித்து கழகத் தலைவர்கொளத்தூர் மணி வழங்கிய பேட்டியின் முழு வடிவம். ஜென்ராம் – திராவிடர் கழகம், பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம் என்றபெயர்களில் இருந்தாலும் – கொள்கை ஒன்றுதான். ஆனால், மூன்று அமைப்புகளில் நீங்கசெயல்பட வேண்டிய நிலை வந்திருக்கிறது. என்ன காரணம்? கொளத்துர் மணி – மூன்று அமைப்புகளுக்கும் கொள்கை ஒன்றுதான். ஆனால்அணுகுமுறைகளிலும், எதற்கு முன்னுரிமைக் கொடுப்பது என்பதிலும் எங்களுக்குள் எழுந்தகருத்து வேறுபாடுகள்தான் புதிய புதிய அமைப்புகளை காண்பதற்கும் தோன்றுவதற்கும்காரணமாக இருக்கிறது. ஜென்ராம் – அணுகுமுறைதான் என்று நீங்க ஒரே சொல்லில் சொல்லி முடிச்சுடறீங்க. ஆனால்அதற்கு பின்னால் தலைமைகள் குறித்து நீங்க வைத்திருக்கக் கூடிய விமர்சனம், கடுமையாகஇருக்கு. கொள்கைகளை விட இயக்கமும் கட்டுப்பாடும் முக்கியம் என்ற நிலை தோழர் வீரமணிகாலத்தில் உருவானது என்று நீங்க அங்கிருந்து வெளியே வரும்போது...

0

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி

‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சியில் 28-09-2014 அன்று ஒளிபரப்பான ‘அக்னிப் பரீட்சை’ நிகழ்ச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  பதில்கள். பேட்டி கண்டவர் தலைமை செய்தியாளர் மு. குணசேகரன். கேள்வி :  செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் என்ற ஒரு விண்கலத்தை அனுப்பியிருக்கிறார்கள்; மங்கள்யான் செவ்வாய் கிரகத்திற்கு செல்வது என்பது, விஞ்ஞான வளர்ச்சியில் மேலை நாடுகளோடு போட்டிப் போட்டு கொண்டு இந்தியா வளர்கிறது என்று விஞ்ஞானிகளைப் பாராட்டி பேசி வருகிறார்கள்; செவ்வாய் தோஷம் என்பதை நம்புபவர்களும் இந்தியாவில் தான் அதிகம் பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன்; விஞ்ஞான வளர்ச்சி ஏற்பட்டிருக்கிற அளவிற்கு, விஞ்ஞான பூர்வமாக சிந்திக்கும் தன்மை மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? பதில் : இல்லை என்பதைத்தான் இவைகளெல்லாம் வெளிப்படுத்துகின்றன; எடுத்துக்காட்டாக, நம் நாட்டில் அறிவியல் அறிவுக்கு ஒன்றும் குறை வில்லை. ஆனால் அறிவியல் மனப்பான்மை இல்லை என்பது தான் நமக்குள்ள குறை. அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடாமல், சோதிடம் என்ற...

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி 0

திராவிடர் இயக்க இலட்சியங்கள் இளைஞர்களிடையே பரவ வேண்டும் ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு கொளத்தூர் மணி பேட்டி

“தனித் தமிழ்நாடு, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை ஆகிய திராவிட இயக்க இலட்சியங்களை பாடங்களில் பதிவு செய்வதில்லை; ஊடகங்களும் இருட்டடிக் கின்றன; அதுவே இளைஞர்களிடையே கொள்கைகள் முழுமையாக சென்றடைய வில்லை” என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி குறிப்பிட்டார். பிப். 7 அன்று, ‘இமயம்’ தொலைக்காட்சிக்கு ஊடகவியலாளர் ஜீவ சகாப்தனுக்கு அளித்த நேர்முகம்: ஊடகவியலாளர்: இன்றைய நேர்முகம் நிகழ்ச்சியில் உங்களுடைய இயக்க செயல்பாடுகள், அரசின் செயல்பாடுகளை நீங்கள் பார்க்கும் விதம், தமிழகத்தில் – தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு இருக்கும் நிர்பந்தங்கள் போன்ற பரவலான தளத்தில்தான் இன்றைய விவாதம் செல்லவிருக் கிறது. முதல் கேள்வியாக… ஈழம், தமிழ்த் தேசியம், ஜாதி ஒழிப்பு போன்ற தளங்களில் நீங்கள் இயங்கி வருகிறீர்கள்; சமீபத்தில் இலங்கை அதிபர் மாற்றம் குறித்து, அது ஒரு மாற்றமே இல்லை என்று சிலர் சொல்கிறார்கள்; அதை ஒரு நிகழ்வாகவே பார்க்கவில்லை என்று சிலர் சொல்கிறார்கள்; இராஜபக்சே என்கிற ஆளுமை மாறியதே...