வீட்டுப் பாடக் குறிப்பேடுகளில் (டைரி) ஜாதி கேட்கும் பள்ளிகளைக் கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம்
கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளிகள் மாணவர்களின் சாதி, மதங்களை அடையாளப்படுத்தும் விதமாக மாணவர்கள் பயன்படுத்தும் தினசரி வீட்டுப்பாட டைரியில் “ஐடென்டி சர்டிபிகேட்” என்ற பெயரில் சாதி, மதம் ஆகியவற்றை விவரக்குறிப்பேட்டில் பதிவிட ஒரு பகுதியை உருவாக்கி கட்டாயமாக பதிவிட வலியுறுத்தி வருகிறது. அதேபோல பெரும்பாலான பள்ளிகளில் சாதி பெயர்களைப் பதிவிடுவதுடன் எஸ்சி, எஸ்டி, எம்பிசி, ஓசி (ளுஊ, ளுகூ, ஆக்ஷஏ, டீஊ) என பிரித்து பதிவிட வலியுறுத்துகிறது. இந்நிலையில் இந்த சம்பவங்கள் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் சாதி, மத உணர்வைத் தூண்டுவதாக உள்ளது என திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இத்தகைய தனியார் பள்ளிகளின் செயல்பாடுகளைக் கண்டித்தும், மாணவர்களின் அடையாள குறிப்புகளில் சாதி, மதம் அடை யாளம் கேட்பதைத் தடை செய்ய வலியுறுத்தியும், 2021 ஆகஸ்ட் 12 ஆம் தேதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநகரத் தலைவர் நேருதாஸ் கோவை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்....
