Author: admin

பொன்மொழிகள் – அனுபவ ஞானம் 0

பொன்மொழிகள் – அனுபவ ஞானம்

எந்த விஷயத்துக்கும் கொள்கைகளுடன் அனுபவ ஞானமும் இருந்தால் தான் அதை மனிதத் தன்மை என்று சொல்லலாமே ஒழிய, மற்றபடி அனுபவ சாத்தியத்துக்கு இணங்காத கொள்கைகள் எதுவானாலும் அதை புத்தகப் பூச்சி என்றுதான் சொல்ல வேண்டும் அல்லது வெறும் அபிப்பிராயத்துக்கு மாத்திரம் பொருமானவர்களே ஒழிய காரியத்துக்கு பொருமானவர்கள் அல்ல என்று சொல்ல வேண்டும் – பெரியார் – குடியரசு

பொன் மொழிகள் – அறிவு வளர்ச்சி 0

பொன் மொழிகள் – அறிவு வளர்ச்சி

நான் சொல்லும் சில கருத்துக்கள் இன்று தலைகீழ் புரட்சியாக சிலருக்குத் தோன்றுகிறது. அடுத்த இருபது ஆண்டுகளில் என்னையே மகா பிற்போக்குவாதி என்று உலகம் கூறும். அறிவின் வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாகிறது – தந்தை பெரியார்

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்! 0

கழகத் தலைவரை மனந்திறந்து பாராட்டினார் – காவிரி விவசாய சங்கத் தலைவர்!

கடந்த 11 ஆம் தேதி தஞ்சையில் நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற கழகத் தலைவர் கொளத்தூர் மணி, செய்தி தொடர்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர், தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.ரெங்கராஜன், தே.மு.தி.க.வின் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் பால. அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பி.ஆர். பாண்டியன், “விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு எங்கள் கொடியினை தலைவர் அண்ணன் கொளத்தூர்...

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர் 0

ஆர்.பி.எஸ். ஸ்டாலினை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் சந்தித்தனர்

13.8.2015 அன்று 2 மணிக்கு, மூத்த பெரியாரியலாளரும், கீழ்வெண்மணி கோபால கிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடி தாங்கி நிகழ்வில், (தலித் சடலம், ஆதிக்க ஜாதி வீதி வழியாகச் செல்லத் தடை போட்ட ஊர் – குடிதாங்கி. அதை மீறி சடலம் எடுத்துச் செல்லப்பட்டது) மையப் புள்ளியாய் நின்று இயங்கியவருமான ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், உடல் நலிவுற்றிருக்கிற செய்தியறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும், எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதன் ஆகியோர் கும்பகோணத்தில் அவரது இல்லமான அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில் சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றிலுள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர். பெரியார் முழக்கம் 20082015 இதழ்

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு 0

“காவல்துறை அதிகாரிகளின் சட்டையை கழற்ற வைப்பேன்” யுவராஜின் மற்றொரு வெறிப் பேச்சு

கவுண்டர் ஜாதிப் பெண்ணோடு பழகினார் என்பதற்காக கோகுல் ராஜ் என்ற தலித் பொறியியல் பட்டதாரியை கடத்திச் சென்று கொலை செய்த குற்றத்தில் தேடப்படும் குற்றவாளியாக உள்ள யுவராஜ் என்பவர், ‘வாட்ஸ் அப்’ வழியாக மீண்டும் ஒரு வெறிப் பேச்சை பேசியிருக்கிறார். ஏற்கெனவே ஒரு முறை இதேபோல் பேசியிருக்கிறார். ஆகஸ்டு 15ஆம் தேதி அன்று அவர் பேசிய இரண்டாவது பேச்சு, 37 நிமிடம் நீடிக்கிறது. கவுண்டர் ஜாதியைச் சார்ந்த இளைஞர்கள், அரசியல் கட்சிகளைக் கடந்து, ஒரே அணியாகத் திரள வேண்டும் என்றும், அதற்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தொடங்குமாறும் அவர் கூறியுள்ளதோடு காவல்துறை அதிகாரி களையும் கடுமையாக எச்சரிக்கை செய்கிறார். ‘நான் வெளியே வந்து உங்கள் சட்டையை கழற்றாமல் விடமாட்டேன்’ என்றும் சவால் விட்டுள்ளார். “நமது பெண்டு பிள்ளைகள் கவுரவத்தையும், நமது ஜாதிக்கான பழம் பெருமையையும் காப்பாற்ற வேண்டும்; நமது சமூகத்தின் ஒற்றுமையை அரசியல் கட்சிகள் திட்டமிட்டு சீர்குலைக்க முயற்சிக்கின்றன; நாம் சட்டமன்ற உறுப்பினராகி...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

? இந்தியாவில் ஜாதியம், வகுப்புவாதத்துக்கு இடமில்லை. – மோடி ‘சுதந்திர’ நாள் பேச்சு !அப்போ, ஜாதியை ஆதரிக்கும் அமித்ஷாவையும் குருமூர்த்தியையும் நாடு கடத்தப் போறீங்களா? ? ‘எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்; இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்றார் பாரதியார். – ஜெயலலிதா பேச்சு !மேடம், இது பாரதியார் பாட்டு அல்ல; ‘கருப்புப் பணம்’ சினிமாவுல கண்ணதாசன் எழுதி நடிச்ச பாட்டு! ? மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அம்மனை ஊஞ்சலில் ஆட்டி, அர்ச்சகர் தாலாட்டு பாடினார். – ‘தினமணி’ செய்தி !அம்மனுக்கு காது கேட்காதுங்குற துணிச்சல்… தாலாட்டுப் பாட அர்ச்சகர்கள் எல்லாம் கிளம்பீட்டீங்க. ?தில்லை நடராஜன் கோபுரத்தில் தீட்சதர்கள் தேசியக் கொடி ஏற்றினர். – செய்தி !பரவாயில்லையே! ‘சிவபெருமானால்’ நேரடியாக பூமியில் குதிச்சதா, உச்சநீதிமன்றத்துல மனு போட்டவங்க, இப்ப இந்தியாவின் ‘குடிமகனாக’ மாறிட்டீங்களா? ? வெளியுறவுத் துறையில் சமஸ்கிருதத்துக்கு தனி அதிகாரி. – செய்தி !அப்பாடா! இனிமே ‘லலித்மோடி’ பிரச்சினைகள்...

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது! 0

சங்கராபுரத்தில் பறை முழக்கத்துடன் வரவேற்பு ஜாதி எதிர்ப்புக் களம் நோக்கி கழகம் தயாராகிறது!

திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களின் 3ஆம் கட்டப் பயணம், ஆகஸ்ட் 12ஆம் தேதி தொடங்கியது. இந்தப்பயணத்தில் கழகப் பொறுப்பாளர்களுடன் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரனும் பங்கேற்றார். தஞ்சை தஞ்சை மாவட்டக் கழகத்தின் கலந்துரையாடல், ஆக.12ஆம் தேதி பகல் 11 மணியளவில் பட்டுக்கோட்டை ‘அரசு பிளாசா’ அரங்கில் தொடங்கியது. அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கடவுள், ஆத்மா மறுப்புகளைக் கூறி, தொடக்க உரை நிகழ்த்தினார். தோழர்கள் கு.பாரி, சி.த. திருவேங்கடம், அ.கோவிந்தன், மூத்த பெரியார் தொண்டர் ப.வைத்தியலிங்கம், ப.ஜெயச்சந்திரன், வடசேரி சிவசுப்ரமணியன், கார்த்திகேயன், பள்ளத்தூர் நாவலரசன், கரிகாலன், பசு. கவுதமன், பொருளாளர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோரைத் தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றி, பொறுப்பாளர்களை அறிவித்தார். “எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்; இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும்” – என்ற முழக்கத்தை முன் வைத்து கழகம் திட்டமிட்டுள்ள பரப்புரை இயக்கத்தை மாவட்டத்தில் நான்கு நாட்கள்...

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன? 0

சேஷ சமுத்திரத்தில் ஜாதி வெறிக் கலவரம்: நடந்தது என்ன?

விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டத்துக்கு உட்பட்டது சேஷ சமுத்திர கிராமம். இந்த கிராமத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் அப்பகுதியைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அம்மன் தேர் ஊர்வலம், பேருந்து போகும் ஊர் பொதுச் சாலையில் தாழ்த்தப்பட்ட மக்கள் தேர் இழுக்க முயன்றனர். இதைப் பொருத்துக் கொள்ள முடியாத ஜாதி வெறியர்கள் தேர் ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தி, அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பு ஊர் விழாக்களையும் நடத்த தடை உத்தரவு போட்டனர். ஆதலால் கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கிராமத்தில் எந்த விழாவும் நடைபெறவில்லை. இருப்பினும் இரு தரப்பினர்களுக்கிடையே இதுவரை பத்து முறை சமாதானக் கூட்டம் நடைபெற்றது. கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமாதானக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் திருவிழாவிற்குப் பிறகு பிற்படுத்தப்பட்ட மக்கள் நடத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யப்பட்ட நிலையில், 16.8.2015 அன்று காலையில் தேர் இழுப்பதென்று...

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் 0

மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்த மாவட்டப் பொறுப்பாளர்கள். நாகை நாகை மாவட்டப் பொறுப்பாளர்கள் : ம. மகாலிங்கம்-தலைவர்; தெ.மகேசு-செயலாளர்; தெ. ரமேசு-துணைச் செயலாளர்; மு. அன்பு-அமைப்பாளர்; ந.விஜயராகவன்- பொருளாளர். மயிலாடுதுறை நகரப் பொறுப்பாளர்கள் : நாஞ்சில் சங்கர்-தலைவர்; நி. நடராஜ் –துணைத் தலைவர்; ப. தமிழ்வேலன்-செயலாளர்; ரா. ராஜராஜசோழன்-இணைச் செயலாளர்; ஜி.ஆர். செந்தில்குமார்-அமைப்பாளர். ஒன்றிய அமைப்பாளர்கள்: யுவராஜ்- மயிலாடுதுறை ஒன்றிய அமைப்பாளர்; ஜெ. இயற்கை-குத்தாலம் ஒன்றிய அமைப்பாளர்; பூம்புகார் முருகன் – செம்பனார்கோயில் ஒன்றிய அமைப்பாளர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் – தெ. சுரேஷ் அறிவியல் மன்ற உறுப்பினர்கள் : ம. ஜீவன் ராஜ், சரவணகுமாரி, இளவரசி, நவநீதம். கடலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்: நட. பாரதி தாசன்-செயலாளர்; ப. பாலமுருகன்-அமைப்பாளர்; செந்தில்நாதன்-பொருளாளர். விருத்தாசலம் நகரப் பொறுப்பாளர்கள் : சங்கர்-செயலாளர்; சரவணகுமார்-ஒன்றிய செயலாளர்; ஐய்யப்பன்-துணைச் செயலாளர்; அலெக்ஸ்சாண்டர்-ஒன்றிய அமைப்பாளர்; விஜயகுமார்-துணை அமைப்பாளர். சிதம்பரம் நகரச் செயலாளர்...

தமிழக அரசு திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவித்து அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் 0

தமிழக அரசு திருமண விவகார தலையீட்டு தடுப்புச்சட்டத்தில் தனது கருத்தை தெரிவித்து அச்சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்

தமிழ்நாட்டில் அண்மைகாலங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல் அதுவும் ஆணவ கொலைகள் என்கிற பெயராலே ஏராளமான ஜாதிய ஆணவக்கொலைகள் நடைபெற்று வருவதை திராவிட விடுதலைக்கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம். அதேபோல் பொறியாளர் கோகுல்ராஜ் கொலைவழக்கில் முக்கிய குற்றவாளியான யுவராஜ் இதுவரையிலும் கைது செய்யப்படாமல் இருக்கிறார். குற்றவியல் நடைமுறை சட்டத்தில் 82-வது பிரிவின் கீழ் அவரை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கவேண்டும். 83-வது பிரிவின் படி அவரின் சொத்துக்களை முடக்கி அவரை உடனடியாக சரணடைய செய்யவேண்டுமென்று திராவிட விடுதலைக் கழகத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்துகிறோம். இதுவரை காவல்துறை அவ்வாறு செய்யவில்லை உடனடியாக மேற்கூறிய நடவடிக்கைகளை காவல்துறை எடுக்கவேண்டும். அதே போல் இந்தியாவின் சட்ட ஆணையம் இப்படிப்பட்ட கவுரவ கொலைகளுக்கு, திருமண விவகாரங்களில் தலையிடுவதற்கு எதிராக ஒரு சட்டத்தை வடிவமைத்து கடந்த 2012ல் கொடுத்திருக்கிறது. அந்த சட்ட வரைவு குறித்து மற்ற மாநிலங்களில் கருத்து கேட்டப்பொழுது தென்னிந்தியாவில் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களும் தங்களின் கருத்துக்களை...

0

யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள் 0

தலையங்கம் – தீண்டாமையைத் திணிக்கும் ‘திருவிழா’ கலவரங்கள்

  தலித் மக்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஜாதிவெறித் தாக்குதல் அதிகரித்து வருவது தமிழ்நாட்டுக்கே அவமானம்! ஆடி மாதம் வந்துவிட்டால் போதும்; கிராமத் திருவிழாக்களில் ஜாதி வெறியாட்டம் போடத் தொடங்கிவிடுகிறது. சங்கராபுரம் வட்டத்தில் சேஷ சமுத்திரம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் நடத்தும் அம்மன் தேர் ஊர்வலம், ஊர் பொதுச் சாலையில் வரக்கூடாது என்று ஜாதிவெறியோடு தேர் மீது பெட்ரோல் குண்டுகளை வீசி, தலித் மக்கள் குடியிருப்புகளையும் எரித்ததோடு, பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினரையும் தாக்கியுள்ளனர். இந்தியாவின் ‘சுதந்திர’ நாளை தேசியக்கொடி ஏற்றிக் கொண்டாடிக் கொண்டிருக்கிற நேரத்தில் சமூகத்தின் ஒரு பிரிவு மக்களை நாட்டின் ‘குடிமக்களாகவே’ ஏற்க முடியாது என்று ஜாதி வெறியர்கள் ஆணவத்தோடு கொக்கலிக்கிறார்கள். இதில் மிகப் பெரிய கொடுமை, பா.ம.க. நிறுவனர், மருத்துவர் இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கைதான். தாழ்த்தப்பட்ட மக்களின் அம்மன்  தேர், பொது வீதியில் வரக் கூடாது என்று தடுக்கும் ‘தீண்டாமை-ஜாதி’ வெறியையோ, தேர் மீது பெட்ரோல் குண்டு வீசி எரித்ததையோ,...

பொன்மொழிகள் – நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் 0

பொன்மொழிகள் – நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்

நான் யார்? நான் எனக்குத் தோன்றிய, எனக்குச் சரியென்றுபடுகிற கருத்துகளை மறைக்காமல் அப்படியே சொல்லுகின்றேன். இது சிலருக்கு சங்கடமாகக்கூட இருக்கலாம். சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம். சிலருக்குக் கோபத்தையும் உண்டாக்கலாம். என்றாலும் நான் சொல்லுவது அத்தனையும் ஆதாரத்தோடு கூடிய உண்மைக் கருத்துக்களே தவிர பொய்யல்ல. (வி.15.7.68.3:1)

பெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன? 0

பெரியார் கன்னடராகவே இருந்தால்தான் என்ன?

பெரியார் கன்னடர் (தமிழர் அல்லாதவர்) என்றும், அதனால் அவரை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் பல ஆண்டு காலமாக தொடர்ந்து ஒரு பிரிவினரால் கூறப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சில கருத்துக்கள். பெரியார் தனது 95 வயது வரையிலும் சமூக சமத்துவத்திற்காகவே தமிழகமெங்கும் சுற்றிச் சுழன்று பேசினார்; போராடினார். சமூகத்தில் நிலவும் அனைத்து ஏற்றத் தாழ்வுகளையும் அதற்கான அடிப்படைக் காரணங்களையும் நேரடியாக எவ்வித ஒளிவு மறைவுமின்றி சாடினார் பெரியார். பெரியாரின் 60 ஆண்டுகால சமூகப் பணியின் முக்கிய கூறுகளாக பெண் விடுதலை, சாதி ஒழிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு ஆகியவற்றை வரையறுக்கலாம். அவர் ஓர் ஆணாக இருந்தபோதும், அக்காலத்தில் எந்த ஒரு பெண்ணும் சிந்திக்காத, பேசாத அளவிற்கு அதிகமாகவும் முற்போக்காகவும் பெண் விடுதலை சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். அவரது ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் இன்றளவிலும் பெண்ணிய சிந்தனைகளுக்கு ஓர் அடிப்படை ஆவணமாக திகழ்கிறது. அக்காலத்தில் பொது சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்ட பெண்களான கணவனை...

0

ஜாதி வெறியன் யுவராஜை உடனே கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 17082015

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...