ஈரோடு முனிசிபாலிட்டியும்
மின்சார விளக்கும் ஈரோடு முனிசிபாலிட்டியானது எவ்வளவோ மோசமான நிலைமையில் இருந்து, அதாவது எல்லாவிதமான அக்கிரமங்களுக்கும், அயோக்கியத் தனங்களுக்கும், திருட்டு புரட்டு போர்ஜரி முதலிய கிரிமினல் காரியங்களுக்கு தாயகமாய் இருந்து, பொது ஜனங்களும் கவுன்சிலர்களும் எவ்வளவோ கூப்பாடு போட்டும் அரசாங்கத்தில் சரியான கேள்வி கேப்பாடு இல்லாமல் இருந்து கடைசியாக மெஜார்ட்டி கவுன்சிலர்கள் 13 பேர்கள் ராஜினாமா கொடுத்தும் அரசாங்கத்தார் லக்ஷியம் பண்ணாமல் இருந்து, முனிசிபல் பணங்களுக்கும் மற்றும் கல்வி இலாக்காப் பணம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரையிலும் வேறு ஏதேதோ காரியங்களுக்கு என்று கொள்ளை போயும், சுமார் வருஷம் 3 லக்ஷ ரூபாய் வரும்படியுள்ள முனிசிபாலிட்டியானது ஆபீசு சம்பளத்துக்குகூட பணம் இல்லாமல் பாப்பராகியும் கடைசியாக தோழர் கான்சாயபு, ÷க்ஷக்தாவுத் சாயபு முதலிய சிலரது பெரு முயற்சியால் மறுபடியும் கொஞ்சம் கொஞ்சமாய் தலையெடுத்து சிறிது சிறிதாக யோக்கியமான நிலைமைக்கு வந்து, இப்போது பொது ஜனங்களுடையவும், அரசாங்கத்தாருடையவும் பாராட்டுதலுக்கு பாத்தியமானதாக ஆகி இருக்கிறது ...
