Tagged: வெள்ள நிவாரணம்

நெகிழ வைத்த நிதி !

திராவிடர் விடுதலைக் கழகம் மேட்டூர் காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பின் போது 08.12.2015 அன்று செட்டியூரில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50-ஐ கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி யிடம் வழங்கியது, அனைவரையும் நெகிழ வைத்தது, அவர் அளித்த ரூ.50, விலை மதிப்பற்ற அவரது உணர்வின் வெளிப்பாடு. பெரியார் முழக்கம் 10122015 இதழ்

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015)

கடலூர் கிராம புறங்களில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள நிவாரணப்பணி 5 ம் நாள் (09.12.2015) நேற்று கழகத் தோழர்களோடு இணைந்து தமிழ்நாடு மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த.ஜெயராமன் அவர்கள் வெள்ள மீட்புப் பணியாற்றினார்.

திவிக கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி !

திராவிடர் விடுதலைக் கழகம் கொளத்தூர் சார்பில் கடலூர் கிராமங்களுக்கு வெள்ள நிவாரண உதவி ! சேலம் மாவட்டம் கொளத்தூர் பொது மக்களிடம் திரட்டப்பட்ட வெள்ள நிவாரண உணவு பொருட்கள் திராவிடர் விடுதலைக் கழக புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர் லோகு. அய்யப்பன் உதவியோடு கடலூர் ஆண்டித்தோப்பு, வழிசோதனை பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் அன்பழகன், ராமச்சந்திரன், தயலப்பன், சரவணன், கீர்த்தியரசு, எல்.ஐ.சி.வேலு, விஜயபூபதி, பால்.பாலு ஆகிய தோழர்கள் முன்னின்று செயல்பட்டனர்.

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி !

சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த 7 வது நாள் (08.12.2015) வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து அயராது பணி புரியும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் நேற்றும் உழைக்கும் சாதாரண ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் நிவாரண பணியாற்றினார்கள். நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : அடையாறு பாலம்,மலர் நகர், ஓட்டேரி சத்யா நகர், மயிலாப்பூர் ரூதூர் புரம்,நாடான் தோட்டம். மேலும் உணவு தயாரிப்பில் தோழர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

நான்காவது நாளாக 08122015 அன்று கடலூரில் நிவாரண உதவி

கடலூர் ஒட்டிய கிராம புறங்களுக்கு வெள்ள நிவாரண பொருளுதவி புரிய விரும்புவோர் கவனத்திற்க்கு ! கடலூர் ஒட்டிய கிராமப்புறங்களுக்கு இப்போது வரை நிவாரண பொருட்கள் சரியாக சென்றடையவில்லை. அக்கிராமங்கள் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்ப்ட்டுள்ளது. அளிக்கப்படும் நிவாரண பொருட்களும் பல்வேறு காரணங்களால் அங்கு சென்று சேர்வதில்லை.கடலூரிலேயே பொருட்களை கொடுத்து செல்வது,உள்கிராமங்களுக்கு செல்ல சாலை வசதி இல்லாத நிலை,மேலும் பொருட்களை கொண்டு செல்லும் வழியில் சிலரால் ஏற்படுத்தப்படும் இடையூறுகள் ஆகிவற்றால் மக்களுக்கு பொருட்கள் சரியாக கொண்டு சென்று வழங்கப்படாததல் இன்னும் அம்மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீள முடியாத நிலையில் உள்ளனர். திராவிடர் விடுதலைக் கழக தோழர்களும் பல்வேறு இடையூறுகளுக்கு இடையே வெள்ள நிவாரண பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள்.பொருட்களை சேகரித்து வைக்க இப்போது வடலூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர்,மூத்த பெரியார் தொண்டர் தோழர் கலிய மூர்த்தி அவர்களின் வடலூர்,ராதா திருமண மண்டபத்தில் நிவாரண பொருட்கள்...

வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பு !

திராவிடர் விடுதலைக் கழகம் (Mettur, kolathur) காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரித்து சென்னை அனுப்பட்டுவருகிறது. 08.12.2015 வெள்ள நிவாரண சேகரிப்பின் போது செட்டியூரில் மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50 ஐ தோழர் கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி அவர்களிடம் அளித்தார்.சேரிக்கப்பட்ட நிவாரண பொருட்களுடன் கழக தோழர்கள்.

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

சென்னை வெள்ள மீட்புப்பணி 6 வது நாள் (07.12.2015)

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் சென்னையில் வெள்ள மீட்ப்புப்பணியில் கழக தோழர்கள் தொடர்ந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள எளிய மக்களுக்கு பணிகளை செய்து வருகிறார்கள்.நேற்றும் கழக தோழர்கள் உணவு,உடை குடிநீர்,பிஸ்கட்டுகள்,மருந்து பொருட்களை மக்களுக்கு வழங்கினார்கள்.நேற்று 2000 பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் கழக தோழர்கள் மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இடங்கள் : அமிஞ்சிக்கரை,டி.பி.சத்திரம், துரைப்பாக்கம்,கண்ணகி நகர், மயிலாப்பூர்,கணேச புரம், மேற்கு சைதாப்பேட்டை மாந்தோப்பு வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் நேற்று சென்னை நிவாரண பணிக்கு அனுப்பிவைக்கப்பட்ட பொருட்கள் : சப்பாத்தி – 500, ஜாம் – 200 பாக்கெட், பிஸ்கட் 2 பாக்ஸ்,

கடலூர் கிராம பகுதிகளுக்கு பொருள் உதவி செய்ய விரும்பும் தோழர்களுக்கு !

வரலாறு காணாத மழை காரணமாக சென்னையைப்போலவே கடலூரும் மிகுந்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இங்குள்ள உழைக்கும் சாதாரண கிராம பகுதி மக்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.இந்த கிராமப்புற மக்களுக்கு நிவாரண பொருட்கள் சரிவர கிடைக்காத நிலை உள்ளது. கடலூர் ஒட்டிய உள் கிராமங்களில் பாதிப்புகளுக்கு உள்ளான மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் தங்கள் பணிகளை மிகுந்த சிரமங்களுக்கு இடையே செய்துவருகிறார்கள். தோழர்களின் இப்பணிக்கு பல்வேறு இடங்களில் இருந்தும் உதவிகள் கிடைத்து வருகின்றன. மேலும் இந்த கடலூர் கிராம பகுதிகளுக்கு பணி யாற்றும் கழக தோழர்களுக்கு பொருட்களாக உதவி செய்ய விரும்புபவர்கள், கீழ் காணும் பாதை வழியாக பொருட்களை கொண்டு சென்று கொடுக்குமாறு வேண்டி கேட்டுக் கொள்கிறோம்.கடலூர் பகுதிகளுக்கு நிவாரன பொருட்களை கொண்டு செல்வோர் கடலூரிலேயே நின்றுவிடுவதால் உள்கிராமங்களுக்கு பொருட்கள் சேருவதில் மிகவும் தாமதமும்,சரிவர கிடைக்காத நிலையும் உள்ளது. எனவே கடலூர் உள் கிராமப்பகுதிகளில் பணி செய்யும் கழக தோழர்களுக்கு நிவாரண பொருட்களை...

கடலூரில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வெள்ள மீட்புப்பணி !

கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கடலூர் பகுதி கிராமங்களுக்கு நிவாரண பொருட்கள் கோவையிலிருந்து கடலூருக்கு கொண்டு செல்லப்பட்டு கழக தோழர்கள் அதனை மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சாதாராண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வழங்கினார்கள். கடலூர் கிராம பகுதிகளில் தொடர்ந்து கழக தோழர்கள் வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுள்ளார்கள். கட்லூர் கொண்டு செல்லப்பட்ட நிவாரண பொருட்களுக்கு உதவி செய்தவர்கள், ஜி.ஆர்.டி..கல்லூரி – 15,000 மதிப்புள்ள பொருட்கள். கழக ஆதரவாளர் தோழர் முத்துரத்தினம் மற்றும் போர்டு நிறுவன ஊழியர்கள் – 10,000 மதிப்புள்ள பொருட்கள். கழகதோழர்கள் – 15,000 இணைந்த கரங்கள் அறக்கட்டலை கோவை,வடவெள்ளி மருதமலை சுப்ரமணிய சாமி திருக்கோயில் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர் அமைப்பு – 50,000 மதிப்புள்ள பொருட்கள். பொருட்கள் விவரம் : பேஸ்ட் 100, பிஸ்கட் 8 பெட்டி, நாப்கின் 2 பாக்ஸ், பால்பவுடர் 1 பாக்ஸ், அரிசி 150 கிலோ, பெட்சீட் 100,...

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் சென்னை திவிக

தொடர்ந்து வெள்ள மீட்புப் பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் ! சென்னையில் தொடர்ந்து வெள்ள மீட்புபணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கழக தோழர்கள் எளிய மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அம்மக்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். அந்தவகையில் 06.12.2015 அன்று கழக தோழர்கள் பணி செய்த இடங்கள், சூளைமேடு நமச்சிவாயபுரம், சேத்துப்பட்டு அப்பாராவ் தோட்டம், திருவல்லிக்கேணி செல்லம்மாள் தோட்டம், எம்.ஜி.ஆர்.நகர் ஏரிக்கரை,காமராஜர் சாலை, குறுக்குப்பேட்டை சத்தியமூர்த்தி வாணி நகர். நேற்று நன்கொடையாக பெறப்பட்டு வழங்கப்பட்ட பொருட்கள், தோழர் ராசய்யா தமிழன் அவர்களிடமிருந்து, தண்ணீர் பாட்டல் – 1000 பிஸ்கட் – 500 கட்டுகள், போர்வை – 100, மருந்துப்பொருட்கள் – 100. ஈரோடு மாவட்டம், எண்ணெய் – 60 லிட்டர்

தொடர்ந்து களத்தில் வெள்ள நிவாரணப்பணிகளில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் இடைவிடாது தொடர்ந்து தங்கள் பணிகளை செய்து வருகிறார்கள். 04.12.2015 கழக தோழர்களால் உணவு தயாரிக்கப்பட்டு 1000 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. 05.12.2015 1000 பேருக்கான உணவை தோழர்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது மேலும் பிஸ்கட்,பிரட்,குடிநீர்,உடைகள்,போர்வை,நேப்கின்கள்,மருந்துப்பொருட்கள் ஆகியவை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நன்கொடைகளாக பெறப்பட்டு தோழர்களால் விநியோகிக்கப்பட்டுள்ளது.மேலும் பாதிப்படைந்த மக்களுக்கு தொடர்ந்தும் விநியோகிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் நாட்டின் பல்வேறு பகுதி தோழர்களால் மழை நிவாரண பணிக்காக அனுப்பப்பட்ட பொருட்களின் விவரங்கள் : தஞ்சாவூர் மாவட்டம் : அரிசி மூட்டை – 35, மைதா – 1 மூட்டை, நேப்கின் – 1000, பிரிட்டானியா – 6 பெட்டி, சன் பிளவர் ஆயில் – 1 கேன், மளிகை சாமான் – 1 மூட்டை, கரூர் மாவட்டம் : தமிழர் முண்ணனி அமைப்பினர் அனுப்பிய பொருட்கள், நைட்டி,லுங்கி,போர்வைகள் அடங்கிய பண்டல்கள்...

வெள்ள மீட்பு பணியில் திராவிடர் விடுதலைக் கழகம்

சென்னையில் பெய்துள்ள வரலாறு காணாத பெருமழையின் காரணாமாக அனைத்து தரப்பு மக்களும் தாங்கொணா துயரத்திற்கு ஆளாகி உள்ளார்கள்.பல்வேறு அமைப்புகள், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற வெள்ள மீட்பு பணிகளை செய்து வருகிறார்கள்.இந்த மக்கள் பணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. சாதாரண உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தங்கள் பணிகளை செய்து வரும் கழக தோழர்கள் உணவு தயாரித்து வழங்குதல்,உடைகளை விநியோகித்தல், படகு மூலம் வீடுகளில் சிக்கிகொண்ட மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். கழகத்தின் இப்பணிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிதியாகவும், உடைகள்,உணவு பொருட்களாகவும் தோழர்கள் பலர் வழங்கிவருகிறார்கள். நிதியாக, கடலூர் பகுதிக்காக கத்தார் நாட்டைச் சேர்ந்த தோழர் காதர் மீரான் அவர்கள் வழியாக ரூ 1,10,000 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாய்) வழங்கியுள்ளார்கள். அத்தொகை கடலூர் ஆலப்பாக்கம் பகுதிக்காக செலவிடப்படுகிறது. சென்னை பகுதிக்காக குவைத்தில் உள்ள கழக...