Category: தலைமை கழகம்

0

விநாயகனை’ அரசியலாக்காதே! பெரியார் கைத்தடியுடன் திரண்டனர் கழகத் தோழர்கள்

விநாயகனை மதவெறி அரசியலுக்குப் பயன்படுத்துவதைக் கண்டித்து, சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் கைத்தடி ஊர்வலம் எழுச்சியுடன் நடைபெற்றது. செப்டம்பர் 20ஆம் தேதி நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்களில் பிள்ளையார் சிலைகளை ஏற்றி கடலில் கரைக்க காவல்துறை அனுமதித்த அதே நாளில் கழகம் பெரியார் கைத்தடி ஊர்வலத்தை நடத்தியது. பிற்பகல் 3 மணியளவில் கழகத் தோழர்கள் கழகக் கொடிகள் – பெரியார் கைத்தடி – விநாயகனை அரசியலாக்கும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடன் ஏராளமாகக் கூடினர். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமையில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் முன்னிலையில் நடந்த இந்த கண்டன ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். “மதத்தின் பெயரால் அரசியல் நடத்தாதே; வீட்டில் வணங்கும் பிள்ளையாரை ‘ரோட்டுக்கு’ இழுத்து வந்து அரசியலாக்காதே; இரசாயனக் கலவையை கடலில் கரைத்து மாசு படுத்தாதே; மதவெறியைத்...

0

மதக் கலவரத்தைத் தூண்டும் விநாயகன் அரசியல் ஊர்வலத்துக்கு எதிராக பெரியார் கைத்தடி ஊர்வலம்

செப்டம்பர் 20ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை மாலை 3.00 மணியளவில் சென்னை அய்ஸ் அவுஸ் காவல் நிலையம் அருகிலிருந்து பெரியார் கைத்தடிகளுடன் ஊர்வலம் புறப்படும். தலைமை : ஈரோடு இரத்தினசாமி (கழகப் பொருளாளர்) முன்னிலை: தபசி குமரன் (தலைமை நிலைய செயலாளர்)   ‘விநாயகன்’ ஊர்வலத்தை ஏன் எதிர்க்கிறோம்? ஒவ்வொரு மதத்தினரும் அவரவர் மதத்தைப் பின்பற்ற வழிபாடு செய்ய சட்டம் உரிமை வழங்கியிருக்கிறது. மதம் சார்ந்த நம்பிக்கைகளை அரசிய லாக்குவதற்கு அதை இஸ்லாமியர் எதிர்ப்புக்குப் பயன்படுத்துவதற்கும் சட்டம் அனுமதிக்கிறதா? விநாயகன் ஊர்வலத்தை முன்னின்று நடத்தும் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு குழுக்கள் – மத அமைப்புகள் இல்லை. மதத்தை வைத்து அரசியல் நடத்துபவை. இவர்கள் நடத்தும் ஊர்வலம் – மதத்தின் ஊர்வலமாக தமிழக ஆட்சியும், காவல் துறையும் அங்கீகரித்து அனுமதியும் வழங்குவது மதவெறி அரசியலை ஊக்கப்படுத்தும் செயல்பாடு அல்லவா? ‘இரசாயனம்’ கலந்த விதவிதமான ‘விநாயகன்’களை கடலில் கரைப்ப...

0

சென்னையில் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா

சென்னையில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தந்தைபெரியாரின் 137 வது பிறந்தநாள் விழா,கொடியேற்றுதல் நிகழ்சிகள். கழக தோழர்களுடன் இராயப்பேட்டை பத்ரி படிப்பகத்தில் சிலைக்கு மாலை அணிவித்து பிறகு ஊர்வலமாக அண்ணா சாலை, தியாகராய நகர், ஜப்ரகான் பேட்டை, ஆலந்தூர், பெசண்ட் நகர் வண்ணாந்துறை ஆகிய இடங்களில்..

பெரியார் 137 பிறந்தநாள் விழா செப்டம்பர் 17

  சங்குகள் நிறமும் மாறி சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி தெங்குநீர் குளிரும் மாறி திங்கள்தன் நிலையும் மாறி தெவிட்டமுது இனிப்பும் மாறி சங்கமும் மாறினாலும் தந்தைசொல் வாழும் நாளும். – பாவலர் பாலசுந்தரம்

0

பகுத்தறிவாளர் கல்புர்கிக்கு வீர வணக்கம். கோழைகளின் வெறிச் செயலுக்கு கண்டனம்.

சீரிய பகுத்தறிவாளரும், முற்போக்கு எழுத்தாளர், மத மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து செயலாற்றி வந்த பேராசிரியர், எழுத்தாளர் முன்னாள் துணை வேந்தருமான கல்புர்கி, பார்ப்பன பாசிச இந்து மதவெறி கும்பல்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டிருப்பதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. கல்புர்கி 30.08.2015 ஞாயிறு காலை தன் வீட்டில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். அவர் மூடநம்பிக்கைக்கு எதிராக தொடர்ந்து பேசியும், எழுதியும் வந்தார். மூட நம்பிக்கைக்கு எதிராக கர்நாடக அரசு சட்டம் இயற்ற வேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தான் அடையாளப்படுத்தப்பட்ட லிங்காயத்து சமூகத்தின் பிற்போக்கு சிந்தனைகளை அவர் எதிர்த்தார். 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு லிங்காயத்துத் தலை வருக்கு ‘தெய்வீக அருள்’ இருப்பதாக கூறப் பட்டதை இலக்கிய-அறிவியல் சான்று களுடன் மறுத்தார். ‘விநாயகன்’ ஊர்வலத்தின் மத அரசியல் அம்பலப் படுத்தினார். மூடநம்பிக்கைக்கு எதிராக இவர் தொடர்ந்து பரப்புரை செய்ததால் மூட நம்பிக்கையை...

0

”சர்வதேச காணாமல் போனோர் தினம்” ஆர்ப்பாட்டம்

2015 ஆக.30ஆம் தேதி ‘காணாமல் போனோர் நாள்’ என்று அய்.நா. கடைபிடித்து வருகிறது. இதையொட்டி, ஈழத்தில் காணாமல் போன தமிழர்களின் கதி என்ன? இலங்கை அரசு இது குறித்து ஏன் மவுனம் சாதிக்கிறது என்ற கேள்வியை எழுப்பி, தமிழர் வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், காஞ்சி மக்கள் மன்றம் உள்ளிட்ட அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தின. அய்.நா. நிறுவனங்களில் ஒன்றான ‘யுனிசெப்’ அமைந்துள்ள அடையாறு காந்தி நகரில் 31ஆம் தேதி காலை நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வாழ்வுரிமை கட்சி நிறுவனர் வேல் முருகன், தியாகு (தமிழ் தேசவிடுதலை இயக்கம்), ஆனந்தி சசிதரன் (இலங்கை வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்), பேராசிரியர் சரசுவதி (நாடு கடந்த தமிழீழ அரசு, தமிழக பொறுப்பாளர்), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), லோகு ஐயப்பன் (புதுவை திராவிடர் விடுதலைக் கழகம்), கழகத் தோழர் தபசி. குமரன், இரா. உமாபதி (மாவட்ட செயலாளர்) மற்றும்...

0

காஞ்சி மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவு நாள் 28-8-2015

காஞ்சி மக்கள் மன்றத்தில் 28-8-2015 அன்று மூவர் உயிர் காக்க தன்னை அழித்துக் கொண்ட தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. காலை 8-00 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடியேற்றினார். அடுத்து செங்கொடியின் நினைவிடத்தில் முத ல் மலர்வளையத்தை திருநங்கையர் சார்பாக அவ்வமைப்பின் மூத்த உறுப்பினர் வைத்தார். பல்வேறு அமைப்பினர் தங்கள் அமைப்புகளின் சார்பாக வீரவணக்கம் செய்தனர். மாலை 4-00 மணியளவில் மக்கள் மன்றத் தோழர்களின் பறையிசையோடு வீரவணக்க நிகழ்வு தொடங்கியது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்,திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உட்பட பல்வேறு அமைப்புகளின் முன்னணித் தோழர்களும் வீரவணக்கவுரை யாற்றினர்.  

0

தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு கருத்தரங்கம் ஈரோடு 25-8-2015

25-8-2015 அன்று மாலை ஈரோடு பெரியார் மன்றத்தில், ’இனப்படுகொலைக்கு ஈழம் ஒன்றே தீர்வு’ என்ற தலைப்பில் ’ தமிழீழ விடுதலைக்கான மாணவர் இளைஞர் கூட்டமைப்பு ’ சார்பில் கருத்தரங்கம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் மூர்த்தி வரவேற்புரையாற்ற கழகத் தோழர் வெங்கிட்டு தலைமையில் நடைபெற்றது. கருத்தரங்கில் முன்னாள் நாடுளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மூத்த வழக்கறிஞர் ப.பா.மோகன், கண.குறிஞ்சி, மாணவர் இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோர் உரையாற்றினர்  

0

செங்கொடி நினைவு நாள் 27-8-2015 பாலவாக்கம்

27-8-2015 அன்று சென்னை, பாலவாக்கத்தில் ‘மூன்று தமிழர் உயிர் காக்க’ தன்னையே எரித்துக் கொண்ட  தோழர் செங்கொடியின் நான்காம் ஆண்டு நினைவு நாள், 27-8-2015 அன்று, சென்னை, பாலவாக்கத்தில், மரண தண்டனைக்கெதிரான மக்கள் இயக்கத்தின் சார்பாக கே.ஆர்.இரவீந்திரன் தலைமையில்  நடைபெற்றது. நிகழ்வில், நடிகர் சத்தியராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, அற்புதம் அம்மாள் ஆகியோர் சிறப்புரையாற்றினர் தொடக்கத்திலும் , இடையிடையேயும் காஞ்சி மக்கள் மன்றத் தோழர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது! 0

மேலும் பார்ப்பனர்களை திணிக்காதே! உயர்நீதிமன்றம் முற்றுகை: 700 தோழர்கள் கைது!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள 18 நீதிபதிகளுக்கான நியமனங்களில் இதுவரை வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு நீதி வழங்கக் கோரி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிடும் போராட் டம் எழுச்சியுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் முயற்சித்து பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து சமூக நீதிக்கான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர் களுடன் தொடர்பு கொண்டு பேசி ஒருங்கிணைத்தார். வேல் முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி), திருமாவளவன் (வி.சி.), பாக்கர் (இந்திய தவ்ஹித் ஜமாத்), அப்துல் சமது (தமிழக மு°லிம் முன்னேற்றக் கழகம்), வீரலட்சுமி (தமிழர் முன்னேற்றப் படை), மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகேசு (காஞ்சி மக்கள் மன்றம்), செந்தில் (இளந்தமிழகம் இயக்கம்) ஆகிய அமைப்பு களைச் சார்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்றனர். தந்தை பெரியார் திராவிடர் கழகம், மீனவ மக்கள் முன்னணி, ஆதித் தமிழர் பேரவை, அகில இந்திய கிறி°தவ மக்கள் கழகம்,...

0

சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும் – கருத்தரங்கம்

23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்

0

மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.

0

தமிழக காவிரி விவசாயிகள் சங்க கொடியை கழக தலைவர் அறிமுகம் செய்தார்

தஞ்சையில் 11.08.2015 திகதி நடைபெற்ற விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர், தோழர் கொளத்தூர் மணி,தி.மு.கவின் செய்தி தொடர்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.கேஎ.எஸ். இலங்கோவன், காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.திநாவுகரசர்,தமிழ் மாநில காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர். ரெங்கராஜன், தே.மு.தி.கவின் மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் பால அருட்செல்வன் ஆகியோரும், பல்வேறு விவசாய சங்கங்களின் தலைவர்களும் உரையாற்றினர். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்களை ஆதரித்தும், விளக்கியும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  சிறப்புரையாற்றியதைத் தொடர்ந்து, அந்த மாநாட்டின் நெறியாளரும், அந்த இயக்கத்தின் தலைவருமான தோழர் பி.ஆர்.பாண்டியன், அந்த இயக்கத்தின் கொடியினை அறிமுகப்படுத்துகின்ற பொறுப்பினை தலைவர் கொளத்தூர் மணி அவர்களிடம் வழங்கினார். அப்போது தோழர் பி.ஆர்.பாண்டியன் , ” விவசாயிகள் வாழ்வுரிமை மாநாட்டிற்கு எல்லா கட்சிகளுடைய தலைவர்களையும் அழைத்திருந்தேன். அவர்களில் பெரும்பாலோர் வந்திருந்தனர். வர இயலாதவர்கள் தங்களின் பிரதிநிதிகளை அனுப்பி பங்கேற்றனர். அவர்களை எல்லாம் விட்டுவிட்டு...

0

தொடரும் இனப்படுகொலைக்கு… தமிழீழம் ஒன்றே தீர்வு – இன எழுச்சிக் கருத்தரங்கம்

9-8-2015 ஞாயிறு, மாலை 5-30 மணிக்கு, தமிழீழ விடுதலைக்கான மாணவர்-இளைஞர் கூட்டியக்கத்தின் சார்பாக ” தொடரும் இனப்படுகொலைக்கு …… தமிழீழம் ஒன்றே தீர்வு” எனும் முழக்கத்தை முன்வைத்து, இன எழுச்சிக் கருத்தரங்கம்,சேலம் விஜயராகவாச்சாரி நினைவு அரங்கில் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் இளைஞர் இயக்கத்தின் தலைவர் ஜெகதீஷ் தலைமை ஏற்றார். தமிழ் இளைஞர் மற்றும் மாணவர் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீர.பிரபாகரன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் பல்வேறு மாணவர் இயக்கங்களின் பிரதிநிதிகள் உரையாற்றினர். சேலம் வழக்கறிஞர் சந்தியூர் பார்த்திபன், கோவை வழக்கறிஞர் ப.சு. சிவசாமித் தமிழன், நோர்வே முனைவர் விஜய் அசோகன், தந்தை பெரியார் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கோவை. கு. இராமகிருட்டிணன், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கருத்தரங்கில் ஏராளமான மாணவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

0

நீடாமங்கலம் சுப்பிரமனியம் சந்திப்பு

திராவிடர் கழகத்தின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான நீடாமங்கலம் சுப்பிரமணியம் அவர்கள் மருத்துவ சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள செய்தியறிந்து 26-7-2015 அன்று காலை அவர்து இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். அவருடன் திருவாரூர் மாவட்டக் கழக செயலாளர் இரா. காளிதாஸ், கோவில்வெண்ணி தோழர் செந்தமிழன் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.

0

மன்னார்குடி காவேரிப் பாதுகாப்பு கருத்தரங்கம்

25-7-2015 சனிக்கிழமை அன்று மாலை மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பின் சார்பாக மன்னார்குடி சிட்டி ஹாலைல் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் ஜெயராமனின் தலைமையில் காவேரிப் படுகை பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாரன், தமிழர் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசன், பூவுலகின் நண்பர்கள் பொறியாளர். சுந்தரராசன், கூடங்குளம் அணுவுலைப் போராட்டக் குழு முகிலன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

0

முனைவர் பொன்னியின் செல்வம் சந்திப்பு.

26-7-2015 அன்று காலை 11 மணியளவில், பெரியாரியல் சிந்தனையாளரும், அழுத்தமான திராவிட இயக்கப் பற்றாளரும், ஏரளமான விருதுகள், பரிசுகள் பெற்ற சிறந்த பாவலருமான முனைவர் பொன்னியின் செல்வன் அவர்களை தஞ்சாவூர், அம்மன்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சந்தித்தார். குடிஅரசு இதழின் உள்ளடக்க தொகுப்பு பற்றியும், அவரது இலக்கியப் பணிகள் பற்றியும் நீண்ட நேரம் உரையாடினர். அவருடன் பெரியாரியல் சிந்தனையாளர்கள் தஞ்சை பசு.கவுதமன், குப்பு.வீரமணி ஆகியோர் உடன் இருந்தனர். முனைவர் பொன்னியின் செல்வன் அவர்கள் பெரியாரின் ‘குடிஅரசு’ இதழின் 2-5-1925 இதழில் இருந்து இறுதி இதழான 5-11-1949 வரையிலான அனைத்து இதழ்களிலும் வெளிவந்துள்ள கட்டுரைகள், அதன் ஆசிரியர், வந்துள்ள பக்கம், என்ன செய்தி குறித்து என்ற விவரங்களை நான்காண்டு காலம் கடுமையாக உழைத்து தொகுத்த பெரும்பணியைச் செய்த மாண்பாளர் ஆவார்.

0

கையெழுத்து இயக்கம் தீவிரமாகட்டும்!

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு இழைத்த இனப்படுகொலைகளுக்கு சர்வதேச விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் உள்ளிட்டு உலகம் முழுதும் வாழும் தமிழர்களால், மனித உரிமை அமைப்புகளால் வலியுறுத் தப்படுகிறது. எதிர்வரும் செப்டம்பர் மாதம், அய்.நா. மனித உரிமை அவையில் இது குறித்த விவாதம் வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அண்மையில் நீண்ட நெடுங்காலமாக போர்க்குற்றத்துக்கு உள்ளாகி வரம் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரும் அய்.நா. தீர்மானத்தின்போது இந்தியா வாக் கெடுப்பைப் புறக்கணித்து, பாலஸ்தீனர் களுக்கு துரோகம் செய்துள்ளது. அதே துரோகத்தை ஈழத் தமிழர் பிரச்சினையில் மேற்கொள்ளக் கூடாது என்று இந்திய அரசை வற்புறுத்துகிறோம். அய்.நா. சர்வதேச விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழகத்தில் நடக்கும் கையெழுத்து இயக்கங்களை கழகத் தோழர்கள் தீவிரப்படுத்திட இந்த செயற்குழு வலியுறுத்துகிறது.

0

20 தமிழர் படுகொலை வழக்கு: தமிழக அரசுக்கு கோரிக்கை!

செம்மரக் கடத்தல் தொடர்பாக – ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து சுட்டுக் கொன்ற வழக்கை, மத்திய புலனாய்வு நிறுவனம் (சி.பி.அய்.) விசாரிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் செய்த பரிந்துரைக்கு ஆந்திர காவல்துறை அம்மாநில உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கி விட்டது. வழக்கு விசாரணை முடங்கிப் போய் நிற்கும் நிலையில், தடையை நீக்குவதற்கும், படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 2000 அப்பாவித் தமிழர்களுக்கும் நீதி கிடைப்பதற்கும் தமிழக அரசு, அலட்சியம் ம்காட்டாமல், இந்த வழக்கில், தன்னையும் ஒரு தரப்பினராக இணைத்துக் கொண்டு கடமையாற்ற வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

0

சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக!

மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது.

0

எழுச்சியுடன் நடந்த தர்மபுரி கழக செயலவை

திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் 19.7.2015 காலை 11 மணியளவில் தர்மபுரி பெரியார் மன்றத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்தது.கழகத் தோழர் கிணத்துக்கடவு நிர்மல் குமார்,கடவுள்,ஆன்மா மறுப்பு கூற, மாவட்டக் கழக சார்பில் நிகழ்ச்சிக்கு பொறுப்பேற்று ஏற்பாடுகளை செய்த பரமசிவம் வரவேற்புரையாற்றினார். சென்னை மாவட்டக் கழகத் தோழர் சரவணன்,நெல்லை மாவட்டத் தலைவர் குறும்பலபேரிசு. வடிவேலு (3.11.2014), தூத்துக்குடி மாவட்டச்செயலாளர் க.மதன் (16.4.2015), மதுரை கைவண்டி கருப்பு, கழக ஓவியர் மேட்டூர் சாதகப் பறவை சேகர், கரூர் இராஜா ஆகியோர் மறைவுக்கு ஒரு நிமிடம் மவுனம் காத்து இரங்கல் தெரிவிக்கப்பட்டது. பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், செயலவை முன் விவாதிக்க வேண்டிய பிரச்சினைகள், கழக செயல் பாடுகளை விளக்கி தொடக்க உரையாற்றினார்.பின்னர், மாவட்ட வாரியாக தோழர்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். ஈரோடு வடக்கு – நாத்திக ஜோதி, ஈரோடு தெற்கு – சண்முகபிரியன், சேலம்...

0

திராவிடர் விடுதலைக் கழக செயலவை தீர்மானங்கள் !

19.07.2015 அன்று தர்மபுரியில் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையில் கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : தீர்மானம் எண் 1 : சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடுக! மக்களின் சமூக பொருளாதார கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டுள்ள நடுவண் அரசு ஜாதிவாரிக்கணக்கெடுப்பு விவரங்களை மட்டும் வெளியிடாமல் தவிர்ப்பது கண்டனத்துக்குரியது. இந்த உண்மைகள் வெளியே வந்தால் பார்ப்பன உயர்ஜாதி – ஆதிக்கம் அனைத்துத் துறைகளிலும் மேலோங்கி நிற்கும் உண்மை அம்பலமாகிவிடுமோ என்று அஞ்சுகிறதோ என்ற நியாயமான சந்தேகம் எழுகிறது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உண்மையான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார நிலைகள் வெளிவரும் போதுதான் அவர்களுக்கு சமூக நீதிக்கான இடஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத் திட்டங்களை நிறைவேற்றிட முடியும் என்பதால், ஜாதிவாரி கணக்கீட்டு விவரங்களை வெளியிட வேண்டும் என்று இந்த செயற்குழு வற்புறுத்துகிறது. தீர்மானம் எண் 2 : காவல்துறைக்கு சவால் விடும் ஜாதிவெறியர்கள்! தமிழ்நாட்டில் ஜாதி ஆணவக் கொலைகள்...

0

மாநில கழகப் பொறுப்பாளர்கள்

திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு கீழ்க்கண்ட மாநிலப் பொறுப்பாளர்களை தர்மபுரியில் நடந்த செயலவைக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தோழர்களின் பலத்த கரவொலிகளுக்கிடையே அறிவித்தார். ஈரோடு இரத்தினசாமி – அமைப்புச் செயலாளர் திருப்பூர் துரைசாமி – பொருளாளர் பால். பிரபாகரன் – பரப்புரை செயலாளர் கோபி. இராம.இளங்கோவன் – வெளியீட்டுச் செயலாளர் தபசி. குமரன் – தலைமைக் கழகச் செயலாளர்

0

திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம்

”திராவிடர் விடுதலைக் கழக தோழர்களுக்கு கழக தலைமையின் அறிவிப்பு” அன்பு தோழர்களுக்கு, வணக்கம், எதிர்வரும் 19.07.2015 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு தருமபுரி,பெரியார் மன்றத்தில் (பெரியார் சிலை அருகில்) திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவவைக் கூட்டம் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமையிலும்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. அதில் கழகத்தின் எதிர்காலத் திட்டங்கள்.பயிற்சி வகுப்புகள்,செயல்திட்டங்கள்,கழக அமைப்பு முறைகள் ஆகியவை குறித்து விரிவாக விவாதிக்க குறித்த நேரத்தில் தவறாது வருமாறு தோழமையுடன் அழைக்கிறோம். மேலும் அச்செயலவையில் தனியார் துறை இடஒதுக்கீடு,எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம் பயண நோக்கங்களை ஒருங்கிணைத்த பரப்புரை பயணத்தை மேற்கொள்ள – தங்கள் மாவட்டத்தின் பகுதி /ஒன்றிய,கிளைக்கழகங்களுடன் விவாதித்து எந்தெந்த பாதை வழியாக பயணம் மேற்கொள்வது,எங்கெங்கு தெருமுனைக்கூட்டங்கள் நடத்துவது என்கிற முன்மொழிவுகளுடன் வருமாறும் வேண்டுகிறோம். – கையொப்பம்- கொளத்தூர் மணி, (தலைவர்) விடுதலை ராசேந்திரன்,(பொதுச்செயலாளர்)