Category: பெரியார் முழக்கம் 2023

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

இந்துவானால் என்ன? முஸ்லீமானால் என்ன?

தெலுங்கு மூலம்: ஸைக்அலிகோரிஸய்யத், தமிழில்: பா. ஆனந்தகுமார் நான் முஸ்லிமானால் என்ன? நீ இந்துவானால் என்ன? உன் கோவில் முன் அமர்ந்திருக்கும் பிச்சைக்காரர்கள் இந்துவாக இருந்தாலும் நீ மார்போடு தழுவப் போவதில்லை; பக்கிரிகள் முஸ்லிமானாலும் நான் கட்டியணைக்க                            போவதில்லை!   நீ எத்தனை விரதங்கள் இருந்தால் என்ன? நான் எத்தனை நோன்புகள் நோற்றாலென்ன ? நீ வரி கேட்பதற்கு எந்த பிரிவுகளைத் தேடுவாயோ நானும் அதே பிரிவுகளைப்பின்பற்றுகிறேன். உனது மந்திரங்கள் சமஸ்கிருதம் ஆனாலும் எனது ஸமூராக்கள் அராபியானாலும் நமது பிள்ளைகளின் ஆங்கில வழி படிப்பை நிறுத்தும் துணிவு உனக்குமில்லை எனக்குமில்லை!   உனது கோயிலுக்குப் போகும் பாதையில் எந்தக் குண்டும் குழியுமான சாலையில் முட்டி மோதி போவாயோ, நானும் அதே கருங்கல் மிதக்கும் மட்டமான சாலையில் மசூதிக்குப் போவேன்!   நீ பண்டிகைகளுக்கு எந்த சைவ சமையல் செய்தாலும், எனது பண்டிகைகளுக்கு எந்த அசைவ சமையல் சமைத்தாலும் மளிகைக் கடையில்...

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

தலையங்கம் அது என்ன “பாரதம்”?

ஆளுநர் ரவியின் உளறல் பேச்சுக்கு தமிழ்நாடு இப்போது கொந்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்ற பெயரை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று ஆளுநர் ரவி பேசியிருக்கிறார். சன்தொலைக்காட்சிநடத்திய விவாதம் ஒன்றில் பங்கேற்ற பேராசிரியர் வீ. அரசு தமிழகம் என்றாலே தமிழ்நாடு என்பதுதான் அதற்குப் பொருள் என்று சரியான விளக்கத்தைத் தந்திருக்கிறார். ஆளுநருக்கு சொல்லிக் கொடுத் தவர்கள் இதைக் கூட சொல்லிக் கொடுக்காமல் இருந்திருக்கிறார் களா? என்ற கேள்வியை அவர் எழுப்பி இருக்கிறார். சரி; தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும்,  தமிழ்நாடு என்று  அழைக்கக் கூடாது சொல் லுகிற ஆளுநராக இருந்தாலும் சரி, அவரது சங்பரிவார் கூட்டமாக இருந் தாலும் சரி இந்தியாவை இந்தியா என்று அழைக்காமல் பாரதம், பாரதீயம் என்று அழைப்பது ஏன்? அவர்கள் கட்சிகளுக்கும் துணை அமைப்புகளுக்கும் இந்தியா என்ற பெயரை முழுமையாக தவிர்ப்பது ஏன்?  இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும். பாரதம்,  பாரதம் என்றால் என்ன?...

சிறப்பு வினா விடை

சிறப்பு வினா விடை

தி.மு.க. பொதுக் கூட்ட மேடையில் பேசுவதை எல்லாம் ஆளுநர் பேச வேண்டும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? – அண்ணாமலை நியாயம் தான். ஆளுநர் அவர் பேசும் பொதுக் கூட்ட மேடையில் பேசுவதைத் தானே சட்டசபையில் பேச முடியும். அப்படித்தான் அவரே எழுதிக் கொண்ட அரசியல் சட்டத்தின் மீது உறுதி மொழி எடுத்திருக்கிறார் போல! ‘தேசிய கீதம்’ பாடலையும் புறக்கணித்து ஆளுநர் வெளியேறியது தேசத்துக்கு அவமதிப்பு. – அமைச்சர் தங்கம் தென்னரசு அதெல்லாம் இல்லை. ஆளுநர் ஏற்றுக்கொண்ட தேசிய கீதம் ‘வந்தே மாதரம்’. ‘ஜனகணமன’ அவருக்குப் பிடிக்காது. ஆளுநரை வைத்துக் கொண்டே முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தது தவறு. – அண்ணாமலை முதல்வரை வைத்துக் கொண்டே அரசு தயாரித்த உரையின் பகுதிகளை நீக்கி விட்டுப் பேசியது – ஆளுநரின் ‘பெருந்தன்மை’யோ? பெரியார், அண்ணா, காமராசர் பெயரை எல்லாம் நீக்கி விட்டு ஆளுநர் உரையை வாசித்தது எல்லாம் எங்களுக்கு எப்படி தெரியும். –...

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர், தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும்!

ஆளுநர் ரவிக்கு என்ன ஆயிற்று என்றே புரியவில்லை, பழமொழி ஒன்றை கிராமத்தில் கூறுவார்கள், ஆற்றின் மீது கோபித்துக் கொண்டு கால் கழுவாமல் போய் விட்டானாம் ஒருவன், அதைப்போல் தமிழ்நாடு சட்டமன்றத்தில் அவர் ஆற்ற வேண்டிய உரைக்கு ஜனவரி ஏழாம் தேதி ஒப்புதல் அளித்து விட்டு சபைக்கு உரையாற்ற வருகின்ற போது அதில் அவருக்கு கசக்கின்ற வார்த்தைகளை உச்சரிக்கவே மறுத்து விட்டார். ஆளுநரின் செயலை தமிழக சட்டமன்றம் ஏற்காத நிலையில் அவரே வெளி நடப்பு செய்து விட்டார். அதுவும் ‘தேசிய கீதத்தை’ப் புறக்கணித்து வெளி நடப்பு செய்துள்ளார். அவருக்கு ஒவ்வாமையாக அமைந்து போன, அவர் வெறுக்கின்ற வார்த்தைகள் என்ன தெரியுமா? திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, திராவிட மாடல் இத்தனைக்கும் மேலாக அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர், இவை அனைத்தும் உச்சரிப்பதற்கு அவர் வாய் மறுத்து விட்டது. உரையில் அடங்கியிருக்கிற இந்த சொற் றொடர்களை அவர்...

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழக வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா மறைவு

கழகத்தின் வழக்குகளுக்காக தொடர்ந்து வாதாடி வரும் வழக்கறிஞர் திருமூர்த்தி தந்தை இராமையா முடிவெய்தினார். சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், கழகத்தின் வழக்குகளுக்காகத் தொடர்ந்து வாதாடி வரும் திருமூர்த்தி அவர்களின் தந்தை கோ.இராமையா (77), 22.12.2022 அன்று கடலூர் மாவட்டம், சிறுபாக்கம் கிராமத்தில் முடிவுற்றார். இராமைய்யாவின் இறுதி ஊர்வலம் 23.12.2022 அன்று சிறுப்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில்  நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு ஆகியோர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். உடன், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர்கள் அய்யனார், காவை ஈஸ்வரன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் இளையரசன், கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்ட செயலாளர் சிவக்குமார் ஆகியோர் உட்பட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களுக்கு கழக சார்பில் ஆழ்ந்த இரங்கலைத்...

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கூட்டங்களின் எழுச்சி

மாவட்டக் கழகக் கலந்துரை யாடல்கள்: கடலூர் :  27.12.2022 அன்று சிதம்பரம் ஏபிஎன் மஹாலில்  திராவிடர் விடுதலைக் கழகத்தின் கடலூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு சி.சந்தோஷ் பெரியார் பாடல் பாட நிகழ்ச்சி தொடங்கியது. மா.து.தலைவர் செ.பிரகாஷ், வரவேற்பு கூறினார். தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் இயக்கத்தின் தேவை மற்றும் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினார். அதன்பின் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆ. சதிசு – மாவட்ட அமைப்பாளர்,  ர.சிவகுமார் – மாவட்ட செயலாளர்,  ப.அறிவழகன் – அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர், அ.மதன்குமார் – மாவட்டத் தலைவர் உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர். பெரியார் பார்வை ஆசிரியர் கவி பங்கேற்று தன்னுடைய கருத்துகளை பகிர்ந்து கொண்டார். இக்கூட்டத்தில்,  கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் இயக்கத்தின் நோக்கம் பற்றியும்...

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

தமிழரின் வைதீக நோய் தீர்க்கும் மாமருந்து சுயமரியாதை பேராசிரியர் க. அன்பழகன்

பேராசிரியர் க. அன்பழகன் நூற்றாண்டு நினைவாக அவர் ‘விடுதலை’ பெரியார் பிறந்த நாள் மலரில் எழுதிய கட்டுரையை (செப்.17, 1986) வெளியிடுகிறோம். (சென்ற இதழ்த் தொடர்ச்சி) பல்வேறுபட்ட குல (கூட்ட) மக்களாக வாழ்ந்த நிலையை ஏதுவாக்கி வருணாசிரமக் கொள்கையைப் புகுத்தி – தமிழர்களைச் சூத்திரர்களாகவும், பஞ்சமர் களாகவும் ஏற்றிடும் நிலையை பார்ப்பனர்கள் உருவாக்கினர். ஆரிய கலாச்சாரத்தினைப் பரப்பியவர் ‘எசமானர்’ நிலைப் பெற்றனர். வழிவழி வந்த உயர்ந்த பண்பாட்டில் நிலைப் பெற்றிருந்த தமிழர் – கற்பனையாக பிறவி இழி மக்கள் ஆக்கப்பட்டு மீளா அடிமைகளாயினர். அதனால் தான் பிறிதொரு இனத்துடன் வரலாற்றுத் தொடர்பு ஏற்படும் காலத்திலும் – அதைத் தொடர்ந்து வளர்ந்திருக்க வேண்டிய இன உணர்வும்-மொழிப் பற்றும்- மங்கி, மறைந்து தேய்ந்து போயிருப்பதைக் காண்கிறோம். “வைதீக மத வழிபற்று” ஆரியத்தைப் பிரித்துக் காணும் ஆற்றலை (சிந்தனையை) இழக்கச் செய்தது. வருணாசிரம – மனுதர்ம நெறி தமிழர் களை ஒன்று பட முடியாத அளவுக்கு...

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

“அறிவு கெட்ட மூடனே; பசு மாடே”

ஜாதி மனிதர்களை மட்டுமல்ல; பறவை விலங்குகளையும் விட்டு வைக்கவில்லை. கிளி உயர்ஜாதி, கழுகு கீழ் ஜாதி, ‘கோமாதா’ ‘பிராமணாள்’; கழுதை ‘சூத்திராள்’; கோமாதாவின் சிறுநீர், சாணம் எல்லாம் புனிதம். பசுவைக் கூட செத்தாலும் வெட்டக் கூடாது. அதற்காக சட்டங்களே பா.ஜ. க. ஆட்சிகளில் போடப்பட்டு வருகின்றன. பார்ப்பனர் வாசிக்கும் தாளக் கருவியான மிருதங்கம், இளம் பசு மாட்டுத் தோளில் தான் செய்யப்படுகிறது. ஆனால் அதைத் தயாரிக்கும் தொழிலில் ஈடுபடுவோர் கீழ்ஜாதியினர். பாலக்காடு பார்ப்பன மிருதங்க வித்வான் ஒருவர், காஞ்சி சீனியர் சங்கராச்சாரியிடமே நேரில் போய் பசு மாட்டுத் தோலில் உருவாகும் மிருதங்கத்தை நாம் வாசிப்பது பாவமில்லையா என்று கேட்டாராம். சங்கராச்சாரி, “எல்லாவற்றுக்குமே விதிவிலக்கு உண்டு; தோஷமில்லை” என்று பதில் கூறினாராம். பார்ப்பனர்களை எதிர்த்துப் பேசி வரும் டி.எம். கிருஷ்ணா (இவரும் பார்ப்பனர் தான்). தனது நூலில் இதை எழுதி வைத்துள்ளார். பசுவுக்கு புனிதம் பேசும் வேதியர் கூட்டம் அதே பசு செத்துப்...

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

காற்றில் பறக்கும் ஒற்றை இந்தியா

ஒன்றிய ஆட்சி ஒற்றை இந்தியாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் ஒரே மதம், ஒரே ரேசன் கார்டு, ஒரே மொழி அதிலும் புனித மானது சமஸ்கிருதம் என்றெல்லாம் ஒற்றை ஆட்சி பற்றிப் பேசி, நாட்டை சர்வாதிகாரப் பாதைக்கு இழுத்துச் சென்று இந்தியாவை இந்து இராஷ்டிரமாக மாற்றலாம் என்பது அவர்கள் போடுகிற தந்திரமான கணக்கு. சரி இருக்கட்டும்; ஒற்றை இந்தியாவை இவர்கள் உருவாக்குவதற்கு முன்பாக, இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிற மாநிலங் களில் தற்போது தலைதூக்கி ஆடிக் கொண்டிருக்கிற எல்லைப் பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்களே அதற்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள். 1956 ஆம் ஆண்டு மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது பெலகாவி மாவட்டத்தில், மராத்தி பேசும் மக்கள் வசிக்கும், 865 கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. அதே போன்று மகராஷ்டிராவில் ஜாட் தாலுகாவில் கன்னடம் பேசும் கிராமங்கள் கர்நாடக மாநிலத்துடன் இணைக்கப்பட்டன. இரு மாநிலங்களின் எல்லைகளிலும்...

வெட்கப்பட வேண்டும்

வெட்கப்பட வேண்டும்

தமிழ்நாட்டுக் கிராமங்களில் தீண்டாமை வெறி இன்னமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. இது மறுக்கப்பட முடியாத உண்மை. அரசியல் கட்சிகள் அனைத்தும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஓட்டு வங்கி அரசியலை முன் வைத்து தான் அவர்கள் பிரச்சனை களை பார்க்கிறார்களே தவிர, சமூக அவலங்கள் அவர்களின் கண்களுக்குத் தெரிவதே இல்லை. புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவிடியல் கிராமத்தில் இருந்து வெட்கக் கேடான, நாம் அனைவரும் தலைகுனிய வேண்டிய  செய்தி வந்திருக்கிறது. இந்தப் பகுதியில் வாழ்கின்ற தலித் மக்கள் பயன்படுத்துகின்ற குடிநீர் தொட்டியில், மனித மலத்தைக் கலந்து வைத்திருக்கிறது ஜாதி வெறி கும்பல் ஒன்று. அந்தப் பகுதி குழந்தைகள் நோய்வாய்ப்பட்டு பலரும் பாதிக்கப்பட்ட நிலையில், புகார் வரவே மாவட்டத் ஆட்சித் தலைவர் கவிதா ராமு, மாவட்ட காவல் துறை அதிகாரி வந்திதா பாண்டே ஆகியோர், வருவாய் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டபோது, தண்ணீர் தொட்டி யில் மலம் கலந்திருப்பது உண்மை என்று கண்டுபிடிக்கப்பட்டிரு க்கிறது. 5...

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்

2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...