இந்தியாவில் ஆயுதப் போராட்டம் வழியாக ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கத் துடித்தவர் ஹெட்கேவர்
ஹெட்கேவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்று பா.ஜ.க.வினர் பேசுவது உண்மைகளைத் திரிப்பதாகும். ஹெட்கேவர் வாழ்க்கை வரலாற்று விவகாரங்களை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தால், அது ஆர்.எஸ்.எஸ். பண்பாட்டைப் பிரதி பலிக்கும் என்பதால், நாமும் அந்த ஆராய்ச்சியில் சற்று ஆழமாக நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம். மெட்ரிகுலேஷன் தேர்வை நாக்பூரில் முடித்து விட்டு மருத்துவப் படிப்பு படிக்க கல்கத்தா போகிறார்! இந்து வெறியரான மூஞ்சே என்ற பார்ப்பனர்தான் அவருக்கு உதவிபுரிகிறார். வன்முறை இயக்கங்களில் மிகவும் ஈர்க்கப்பட்ட ஹெட்கேவர், கல்கத்தாவில் போய் படித்தால், இத்தகைய அமைப்புகளோடு தொடர்பு கொள்ள முடியும் என்று விரும்பினார். ஞானத் தந்தைகளாக அவரால் ஏற்றுக் கொள்ளப்பட்டவர்கள் திலகரும், சிவாஜியும்தான். 1910ஆம் ஆண்டிலிருந்து 1915ஆம் ஆண்டுவரை கல்கத்தாவில் மருத்துவக்கல்வி பயின்ற இவர் தங்கிய விடுதி அப்போது மாணவர்களின் அரசியல் அரங்கங் களாக செயல்பட்டன. பல வன்முறை இயக்கங்கள், புரட்சி இயக்கங்களைச் சார்ந்தவர் களும் அங்கு வருவது உண்டு. இந்த கல்கத்தா வாழ்க்கைப்பற்றி, ஹெட்கேவரின் வாழ்க்கை...