ஃபாரூக் நினைவு நாளில் கொளத்தூர் மணி பேச்சு – ‘சொர்க்கம்’ போவதற்கு அல்ல; தீண்டாமை ஒழிப்புக்கே மதம் மாறச் சொன்னார் பெரியார்
ஃபாரூக் அய்ந்தாம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியின் தலைமை உரை. இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இங்கே வந்திருந்தால் கேள்விகளைக் கேளுங்கள்; நாங்கள் பதிலளிக்கத் தயார். எங்களைப் போன்ற சுயமரியாதைக்காரர்களுக்கு மத நம்பிக்கை இல்லை என்றும் தீண்டாமை ஒழிவதற்கு மட்டும் இஸ்லாமில் சேரலாம் என்பதே நான் கூறும் கருத்து என்றும் கூறினார் பெரியார். பொது மேடைகளில் பேசும் இஸ்லாமியர்கள்கூட மத மறுப்பாளர்களான எங்களுக்கும்இறைவனின் ஆசி கிடைக்கும் என்று பேசும்போதுகூட நாங்கள் அனுமதித்தே வந்திருக்கிறோம். தோழர் ஃபாரூக், கோவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயல்பாட்டாளர். அவர் கொடூரமாக மத அடிப்படைவாதிகளால் மார்ச் 16, 2017இல் கொலை செய்யப்பட்டு 5 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பிப்.19 அன்று சென்னை தலைமைக் கழக அலுவலகத்தில் 5ஆம் ஆண்டு நினைவு நாள் சிந்தனை அரங்கில் நடைபெற்றது. ஃபாரூக் கடவுள், மத, இறை மறுப்பாளர்; இஸ்லாத்தின் இறையியல் கொள்கையை உறுதியாக மறுத்தவர். ‘வாட்ஸ்...