2011 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொள்ளாச்சியில் கழகம் முன்னெடுத்த தொடர் களப்பணிகள்
செப்.17 – பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு பகுதிகளில் பெரியார் படத் திறப்பு, கொடியேற்று விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அன்று மதியம் காகபுதூர் கிராமத்தில் சாதிமத வெறியர்களுக்கு சாவல் விடும் மாட்டுக்கறி விருந்து சிறப்பாக நடத்தப்பட்டது. அக்டோபர் – உள்ளாட்சித் தேர்தலின்போது, கழகத்தின் செயல்பாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும் பொள்ளாச்சி ஆனைமலை பகுதிகளைச் சேர்ந்த ம.தி.மு.க., அ.தி.மு.க. தோழர்கள் போட்டியிட்ட நகரமன்ற பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் கழகத்தின் ஆதரவை அவர்கள் பெரிதும் எதிர்பார்த்து வேண்டிக் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தோழர்கள் வெள்ளிங்கிரி, காசு. நாகராசன் ஆகியோர் பரப்புரை நடத்தினர். தமிழீழ விடுதலைப் போராட்டம், மூன்று தமிழர் உயிர்காப்பு, தமிழக மீனவர் பிரச்சினை, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, சாதிமத எதிர்ப்புக் கருத்துகளை முன் வைத்து தோழர்கள் நிகழ்த்திய பரப்புரை மக்களிடையே பெரும் வரவேற்பை கொடுத்தது. அக்டோபர் 22 – கிணத்து:க கடவு ஒன்றிய செயலாளர் நிர்மல் குமார் மீது சாதி வெறியர்கள் நடத்திய...