Author: admin

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் சென்னை 15072017

பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம். நாள் : 15.07.2017, சனிக்கிழமை நேரம் : மாலை 5.00 மணிக்கு இடம் : வி.எம் தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வரலாற்றை நினைவுகூர்ந்து சிறப்புரையாற்றுவோர் : தோழர்.கொளத்தூர்.தா.செ.மணி (பெரியாரும் காமராசரும்) தோழர்.பழ.கருப்பையா (காமராசரும் சமூக நீதியும்) தோழர்.விடுதலை க.இராசேந்திரன் (காமராசரின் இன்றைய தேவை) மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் தோழர்கள். விரட்டு கலைக்குழுவினரின் சமூக நீதி – ஜாதி எதிர்ப்பு கலை நிகழ்ச்சி நடைபெறும். “காமராசரின் பிறந்தநாளில் அந்த வரலாறுகளை நினைவு கூறுவதில் திராவிடர் விடுதலைக் கழகம் பெருமை அடைகிறது. இது காலத்தின் தேவையாகிறது”. வாருங்கள் தோழர்களே காமராசரின் பிறந்தநாளில் அவரின் வரலாற்றை நினைவு கூறுவோம்.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருப்பூர் 16072017

கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! திருப்பூர் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், கழகத் தலைவர் சிறப்புரையாற்றுகிறார். நாள் : 16.07.2016 ஞாயிறு நேரம் : மாலை 6 மணி. இடம் : இடுவம்பாளையம், திருப்பூர் சிறப்புரை: தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். பள்ளத்தூர் நாவலரசு குழுவினரின் பகுத்தறிவு இசை நிகழ்ச்சி நடைபெறும். மந்திரமல்ல தந்திரமே ! காவை. இளவரசன் அவர்களின் அறிவியல் விளக்க நிகழ்சியும் நடைபெறும்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு மதுரை 12072017

சேரி behavior என்றும் மீனவர்களை குடிகாரர்கள் என்றும் விஜய் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய நடிகை காயத்ரி ரகுராமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், அந்த பேச்சுக்களை வெளியிட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய கோரியும் மதுரையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காவல் துனை ஆணையாளர் மகேஷ் குமார் அவர்களிடம் மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுப்பதாக காவல் துறை ஆணையாளர் நம்மிடம் உறுதி அளித்துள்ளார். உடன் மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி, மாநகர தலைவர் தமிழ் பிரபாகரன், அழகர் பிரபாகரன் சத்திய மூர்த்தி உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்

தோழர் நீதி அரேசர் கைது குமரி 08072017

மக்களைச் சமதர்மம் அடையச் செய்யும் இடஒதுக்கீட்டு முறையை ஒழிக்கத்துடிக்கும் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பாகவத்தின் குமரி மாவட்ட வருகையைக்  கண்டித்து எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கறுப்புக்கொடி (08-07-2017.சனிக்கிழமை)காட்டச்சென்ற கழகத் தோழர் நீதி அரசர் அவர்களை காவல் துறை கைதுச்செய்து பிணை வழங்காமல் 15 நாள் காவலில் வைத்தது. தற்போது நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மக்களை மதத்தால் உசுப்பி சண்டைப் போடவைத்துவிட்டு அதில் குளிர் காயும் பார்ப்பன மத வெறியருக்கு பாதுகாப்பும்,மக்களுக்காக போராடும் போராளிகளுக்குச் சிறையும் வழங்கும் காவல் துறைக்கு குமரி மாவட்டத் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டனங்களைத் தெரிவிக்கிறோம். இடஒதுக்கீட்டு முறையால் பயன்பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரே இடஒதுக்கீடை ஒழிக்கும் பார்ப்பனனுக்கு ஆதரவாக செயல்படுவது வருந்தத்தக்கது.  

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: விடுதலை இராசேந்திரன்

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு: நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி,...

தமிழ்நாட்டிற்கு தனி அரசியல் சட்டம் – திவிக வலியுறுத்தல்

மாநிலங்களுக்கு தனி அரசியல் சட்டம் இந்திய அரசியலமைப்பு – இந்தியாவை ‘மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அறிவிக்கிறது. மாநிலங்கள் இல்லாமல் இந்தியா என்ற நாடு இல்லை; ஆனால் மாநிலங்களின் ‘இறையாண்மை’யை ஒடுக்கி, இந்தியாவை ஒற்றை தேசமாக்கி ஒற்றைப் பண்பாடு என்ற பெயரில் பார்ப்பனிய – வேத மதப் பண்பாட்டை – நடுவண் பா.ஜ.க. ஆட்சி கல்வி, மொழி, உணவு, பண்பாட்டுத் துறைகளில் திணித்து வருகிறது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மாநிலப் பட்டியலிலிருந்த கல்வி உரிமை பறிக்கப்பட்டு, ஆள் தூக்கி அடக்குமுறை சட்டங்களும் மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டன. இந்த நிலையில் இந்த உரிமை பறிப்புகளைத் தடுத்திடவும், தமிழ்நாட்டுக்கே உரிய சமூக நீதி – சுயமரியாதைப் பண்பாடுகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கவும் தமிழ்நாட்டுக்கு தனியான அரசியல் சட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் உரிமைப் போராட்டத்தை தொடங்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது. அண்டை நாடான மியான்மார் நாட்டில் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து ஜனநாயக ஆட்சி மலர்ந்துள்ள நிலையில் அந்நாட்டில்...

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாள் மதுரை 27062017

சித்திரவதையால் பாதிப்புற்றோருக்கான ஐ. நா. வின் அகில உலக ஆதரவு நாளினை முன்னிட்டு பொதுக்கூட்டம்  27.06.2017 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு   விக்டோரியா எட்வெர்ட் திறந்தவெளி அரங்கம் (ரயில் நிலையம் அருகில்) மதுரையில் நடைபெற உள்ளது இதற்கான அழைப்பை இத்துடன் இணைத்துள்ளோம் தங்கள் இதில் பங்கேற்று கருத்துரை வழங்க அன்புடன் அழைக்கிறோம் “சித்திரவதையற்ற உலகு அமைய அணியமாவோம்!” தொடர்புக்கு  99943-68502          9952315757

மாட்டிறைச்சி தடைக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் காஞ்சிபுரம் 21062017

மாட்டுக்கறியை தடைக்கு தடை விதிக்கும் மதவாத மோடி அரசைக் கண்டித்து…. பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவில் ஒன்றை பண்பாட்டை திணிக்க முயற்சிக்கும் மோடி அரசே.! மாட்டுக்கறி மீதான தடை நீக்கப்படவில்லை எனில் திராவிட நாடு மலர்ந்தே தீரும்.! என்ற கண்டன முழக்கத்தோடு காஞ்சி மக்கள் மன்றம் சார்பாக காஞ்சிபுரம், தாலுக்கா அலுவலகம் எதிரில்…திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்.இரா.உமாபதி (சென்னை மாவட்ட செயலாளர்) மற்றும் இயக்க தோழர்களும் இணைந்து இன்று (21.06.2017) காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு காஞ்சிபுரம் யாதவ சாஷில பரிபரன சபை மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கடவுள் தந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தவர் ஆத்திகரா? நாத்திகரா?

‘உணர்வு’ என்ற இஸ்லாமிய வார ஏடு தொடர்ந்து கடவுள் – மத எதிர்ப்பாளர்களுக்கு எதிராக கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது. இந்த வாரம் (ஜூன் 16-22) வெளி வந்துள்ள ஒரு கட்டுரை இப்படி கூறுகிறது: “வரலாறு தோன்றிய காலத்திலிருந்து மனித வாழ்க்கையின் முன்னேற்றத் திற்கும், அவர்களின் இன்னல்களைப் போக்குவதற்கும் அற்புதமான கண்டு பிடிப்புக்களை வழங்கிய சிந்தனையாளர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். சான்றாக எழுத்துக் கலைக்குக் காகிதத்தை உருவாக்கும் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்த ‘சாயிலூன்’, அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘குட்டன்பர்க்’, தையல் இயந்திரத்தைக் கண்டுபிடித்த ‘சிங்கர்’, எந்திரங்கள் பலவற்றிற்கும் அடிப்படை விதியாக இருக்கும் நெம்புகோல் தத்துவத்தைக் கண்டுபிடித்த ‘ஆர்க்கிமெடிஸ்’, டீசல் எந்திரத்தைக் கண்டுபிடித்த ‘டீசல்’, ரேடியோவைக் கண்டுபிடித்த ‘மார்க்கோனி’, தொலைபேசியைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் கிரகாம்பெல்’, இரத்தச் சுழற்சியை கண்டுபிடித்த ‘வில்லியம் ஹார்வி’, பென்சிலினைக் கண்டுபிடித்த ‘அலெக்சாண்டர் பிளமிங்’, இளம்பிள்ளைவாதம் அம்மை நோய்களுக்குத் தடுப்பூசியைக் கண்டுபிடித்த ‘ஆல்பிரட் சாபின்’ மற்றும் ‘எட்வார்டு ஜென்னர்’, காலரா மற்றும் மலேரியா...

ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது 10 நாட்கள் தொடர் தெருமுனைக் கூட்டங்கள்

திராவிடர் விடுதலைக் கழக ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாகிகளின் கலந்துரையாடல் கூட்டம் சூரம்பட்டி வலசு பெரியார் ஜெ.சி.பி.  பணிமனையில்  மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. 24.6.17 முதல் 3.7.17 முடிய பத்து நாட்கள் தொடர்ச்சியாக, தினமும் இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, ஜூன் 24 – லோகநாதபுரம்,மோளக்கவுண்டன் பாளையம், ஜூன் 25 – வைராபாளையம், லட்சுமி தியேட்டர், ஜூன் 26 – சாஸ்திரி நகர், வாய்க்கால் மேடு, ஜூன் 27 -சூரம்பட்டி வலசு, சூரம்பட்டி போலீஸ் ஸ்டேசன், ஜூன் 28   – மரப்பாலம், கோணவாய்க்கால், ஜூன் 29 – பச்சப்பாளி, கொல்லம்பாளையம், ஜூன் 30 – கிருஷ்ணம்பாளையம், கருங்கல்பாளையம், ஜூலை 1 – ஆர்.என் புதூர், சி.எம் நகர், ஜூலை 2 – சூளை, கனிராவுத்தர் குளம், ஜூலை 3 – வளையக்கார வீதி, சின்னமாரியம்மன் கோவில். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி...

கரூரில் மதவெறி அரசியல் கண்டன கருத்தரங்கம்

பா.ஜ.க. மதவெறி அரசியலை தோலுரிக்கும் கருத்தரங்கம் 7.6.2017 அன்று மாலை கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில் ‘கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு’ தலைவர் மா. இராமசாமி தலைமையில் நடந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். உரையாற்றிய தோழர்கள் விவரம்: ம. காமராசு (தமிழர் பண்பாட்டுப் பேரவை), இரா. முல்லையரசு (கரூர் மாவட்ட செயலாளர், ஆதி தமிழர் பேரவை), மலையூர் ஆறுமுகம் (கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு), பழனிச்சாமி (சமூக செயற்பாட்டாளர்) ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.  இரா. காமராஜ் (கரூர் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்) வரவேற்புரையாற்றினார். மற்றும் திருமதி கிறிஸ்டினா சாமி (தலைமைக் குழு உறுப்பினர், சுயராஜ் இந்தியா), முகிலன் (சுற்று சூழல் பாதுகாப்பு இயக்கம்), வழக்கறிஞர் பெ. ஜெயராமன் (மாவட்ட செயலாளர் விடுதலை சிறுத்தைகள் கட்சி), எம்.எம். ஷேக் அமானுல்லா (மாவட்ட தலைவர் மனிதநேய மக்கள் கட்சி), ஜாபர் (sdbi பள்ளபட்டி), வழக்கறிஞர் இராம. இராஜேந்திரன் (தலைவர், கரூர் தமிழ்ச் சங்கம்),...

தமிழர்கள் மதுவிற்கு அடிமையாவது ஏன்? அரு. கோபாலனின் ‘அரிய’ கண்டுபிடிப்பு

தமிழர்கள் மதுவிற்கு அடிமையாவது ஏன்? அரு. கோபாலனின் ‘அரிய’ கண்டுபிடிப்பு

தமிழர்கள் மதுப் பழக்கத்துக்கு ஆளாவதற்குக் காரணம், தமிழ்நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் ஆட்சி இல்லையே; அந்நியர் ஆட்சி நடக்கிறதே என்ற கவலைதான் என்ற “அரிய” கண்டுபிடிப்பை தனது ‘எழுகதிர்’ ஏட்டில் எழுதியிருக் கிறார், அரு. கோபாலன். “நம்மைப் பொறுத்தவரை உலகில் எந்த நாட்டுக்கு மதுவிலக்குத் தேவையோ இல்லையோ! தமிழ்நாட்டுக்குக் கட்டாய முழு மதுவிலக்கு தேவை, தேவை, தேவை. ஆம்; ஆயிரம் ஆண்டுக்கும் மேலாகச் சொந்த ஆட்சி இல்லாமல் எவரெவருக்கோ அடிமையாகவுள்ள தமிழன் அடிமனத்தில் ஒருவித ஏக்கம் படிந்து, அது அவனை அலைக்கழிக்கிறபோதெல்லாம் அவன் தன்னை மறந்து ஏதோ ஒரு மயக்கத்தில் இருக்கவே விரு(ம்புகிறான். அந்த விருப்பம் அவனை மதுவுக்கு அடிமையாக்குகிறது. அதனால்தான் இந்தியாவின் பிற மாநிலங்களில் எங்கும் தமிழைக் காண முடியாவிட்டாலும், மதுக்கடைகளில் மட்டும் தப்பும் தவறுமாகவாவது ‘சரயக்கட’, ‘மதுக்கிட’ என்பது போன்று தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள்.” ‘எழுகதிர்’ ஜூன் 2017, பக்.20 இப்படி ஒரு ஆராய்ச்சிக்காக ‘நோபல்’ பரிசே...

‘பசு’ச் சட்டத்தை எதிர்த்து திருச்செங்கோட்டில் கழகம் முற்றுகைப் போராட்டம்

‘பசு’ச் சட்டத்தை எதிர்த்து திருச்செங்கோட்டில் கழகம் முற்றுகைப் போராட்டம்

சந்தையில் இறைச்சிக்கான மாடு விற்கத் தடை என்ற மத்திய அரசின் ஆணையை நீக்க வலியுறுத்தி, கடந்த மே மாதம் 31 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட  திராவிடர் விடுதலைக் கழகத்தின்சார்பில் திருச்செங்கோடு  பாரத ஸ்டேட் வங்கி முன்  முற்றுகைப் போராட்டம் நடந்தது. நிகழ்வுக்கு மாவட்ட அமைப் பாளர் வைரவேல் தலைமையேற்றார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி மற்றும் திருச்செங்கோடு, பள்ளி பாளையம், மல்லை பகுதிகளைச் சேர்ந்த தோழர்கள் உட்பட 21பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு மாலை 6 மணிக்கு மேல் அனைவரும் விடுவிக்கப் பட்டனர். பெரியார் முழக்கம் 22062017 இதழ்

உடல் மருத்துவக் கல்லூரிக்கு கொடை: குமரி மாவட்ட எல்லைப் போர் வீரர் செல்லம் முடிவெய்தினார்

குமரி மாவட்ட விடுதலைக்காக மார்சல் நேசமணி தலைமையில்  போராடிய மொழிப்போர் போராளியும் தற்போதைய திராவிடர் விடுதலைக் கழக ஆதரவாளருமான தோழர் செல்லம் (அகவை 80), தொடுகுளம், காஞ்சிரகோடு, 16.06.2017 அன்று அதிகாலை மரணமடைந்தார். அவரின் வீரவணக்க நிகழ்வு கழகத் தோழர் அனீஸ் தலைமையில்  நடைப்பெற்றது. தோழர்கள் நீதி அரசர், தமிழ் மதி, மணிமேகலை, ‘மார்த்தாண்டம் மாலை’ பத்திரிகை ஆசிரியர் செபக்குமார், கிறித்துதாஸ் ஆகியோர் உடல் தானம் பற்றிய அறிவியல் செய்திகளை இரங்கல் செய்தியாக பேசினர். தோழர்கள் இளங்கோ, விஷ்ணு, சூசையப்பா, கருணாநிதி, ஜான் மதி, அருள் ராஜ், பிரேம லதா, இராசேந்திரன், கம்யூனிஸ்ட் ஜெயன் ஆகியோரின் வீரவணக்க முழக்கங்களுடன் அவரின் இறுதி விருப்பப்படி  ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் படிப்பிற்காக மருத்துவ உடற் கூறியியல் துறைக்கு உடல் வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 22062017 இதழ்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் : மாநாட்டு அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்தனர்

சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் : மாநாட்டு அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்தனர்

திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 15.6.2017 மாலை 7 மணியளவில் தலைமைக் கழகத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் கூடியது. ஜூன் 4ஆம் தேதி கழகத்தின் மாநாடு, ஜூன் 5ஆம் தேதி நடந்த இந்தி அழிப்புப் போராட்டம் குறித்தும் மாநாட்டில் நிறை குறைகளை தோழர்கள் விவாதித்தனர். குறிப்பாக மாநாட்டையொட்டி 15 நாட்கள் நகரின் பல்வேறு பகுதிகளில் மக்களிடம் துண்டறிக்கைகளை வழங்கி, ரூ.10, 20 என்று நன்கொடை திரட்டியபோது மக்களிடமிருந்து வந்த கேள்விகள், பாராட்டுகள், ஆதரவுகள் அதன் வழியாகப் பெற்ற அனுபவங்களைத் தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். மாநாட்டு வசூல் பணியில் பங்கேற்ற வடசென்னை பெண் தோழர் ராஜீ மற்றும் விவேக், மாணவர் கழகப் பொறுப்பாளர் ஜெயப் பிரகாசு, பிரபாகரன், யுவராஜ், இராவணன், அய்யனார், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை அருண் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, மாநாட்டு வரவு...

பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்

பெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்

மார்க்சிய சிந்தனையாளரும் இந்திய தத்துவ மரபுகள் குறித்து ஆய்வு நூல்களை எழுதியவருமான பேராசிரியர் ந.முத்து மோகன், ‘உங்கள் நூலகம்’ மாத இதழுக்கு (ஏப். 2017) அளித்துள்ள பேட்டி இது. (கடந்த இதழ்களின் தொடர்ச்சி) தேசியம் எதிர் காலனியம் – ஏகாதிபத்தியம் என்ற முரண்நிலை சட்டகங்களுக்குள், பெரியார், அம்பேத்கர் போன்ற சாதி எதிர்ப்புத் தலைவர்கள் காலனியத்திற்கு ஆதரவாளர் என்றும் விமர்சனம் செய்துவருகின்றோம். இந்த முரண்நிலை சட்டகம் இன்னும் நம்மிடையே வலுவாக இருக்கின்றது. இந்த விமர்சனத்தை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இந்தியாவில் காலனியம் குறித்த விவாதங்கள் இன்னும் முழுமை அடையவில்லை. இன்னும் இந்த விவாதங்களில் குறைபாடுகள், இடைவெளிகள் இருக்கின்றன. வரலாற்றுரீதியாக அதிகமாக இந்தியச் சமூகம் தேங்கி நின்றதைக் காலனியம் உடைத்து, முன்னுக்குத் தள்ளியது என்பார் மார்க்ஸ். கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்ஸ் ஒன்றரை பக்கத்திற்கு முதலாளி யத்தின் புரட்சிகரமான பணிகள் என்று சில விசயங் களைக் குறிப்பிடுவார். நிலவுடைமைமுறை உறவுகளை உடைத்தெறிந்து, இதுவரை கல் போல உறைந்து...

பவானியில் கழகக் கூட்டம்

பவானியில் கழகக் கூட்டம்

19.05.2017 வெள்ளி மாலை 6.00 மணிக்கு ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் “மத்திய அரசும் தமிழக மக்களின் உரிமை களும்” என்ற தலைப்பில் கொடியேற்ற நிகழ்வுட னும் டி.கே.ஆர். பகுத்தறிவு இசை நிகழ்ச்சியுடன் துவங்கியது. நிகழ்வுக்கு முன்னதாக பவானி பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட் டிருந்த கொடி கம்பத்தி லும், அந்தியூர் பிரிவில் உள்ள கொடிக்கம்பத்தி லும் கழகத் தலைவர்  கொளத்தூர் மணி கொடி ஏற்றினார். தொடக்கத்தில் பகுத்தறிவு பறை இசை, பாடல்கள் மேடையில் இசைக்கப்பட்டன. வேல்முருகன் வரவேற்புரையாற்ற, மாவட்ட செயாலாளர் வேணுகோபால் கூட்டத்துக்குத் தலைமையேற்றார். மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி, தலைமை கழக பேச்சாளர் வேலுச்சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றம் சுந்தரம், மாநில அமைப்புச் செயாலாளர்  இரத்தினசாமி, மாநில வெளியீட்டுச் செயாலாளர் இராம. இளங்கோவன் ஆகியோரை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன், ‘இன்றைய கால கட்டத்தில் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க...

காந்தியை ஜாதி கூறி விமர்சித்த அமீத் ஷா

பா.ஜ.க. தலைவர் அமீத் ஷா, காந்தியை அவரது ஜாதிப் பெயரைக் கூறி விமர்சித்திருக்கிறார். “அவர் ஒரு சாதுர்யமான பனியா. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரிந்தவர். அதனால் காங்கிரசை கலைக்கச் சொன்னார்” என்று பேசி இருக்கிறார். அமெரிக்காவில் வாழும் காந்தியின் பேரன் ராஜ்மோகன் காந்தியும், மற்றொரு பேரனும், மேற்கு வங்க ஆளுநராக இருந்தவருமான கோபால கிருஷ்ண காந்தியும் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரபல வரலாற்று ஆய்வாளர் இராமச்சந்திரா குகாவும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமீத்ஷா கூறிய ‘சாதுர்ய பனியா’ என்ற காந்தி மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து பனியா, பார்ப்பனர் உள்ளிட்ட பல்வேறு ஜாதிக் குழுக்கள் பற்றி ஆங்கில ஏடுகள் கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றன. ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 17, 2017) வெளியிட்ட ஒரு கட்டுரையில் வர்ணாஸ்ரம சமூக அமைப்பில் பார்ப்பனர், சத்திரியருக்குக் கீழே பனியாக்கள் வைக்கப்பட்டிருப்பதை பனியாக்கள் விரும்பவில்லை என்று எழுதியிருக்கிறது. குஜராத் சமூகத்தில் ஜாதியின்...

பார்ப்பன பண்ணயம் கேட்பாரில்லை பிரணாப் முகர்ஜி ஜெயேந்திரனிடம் ஆசி பெறலாமா?

வங்காளிப் பார்ப்பனர் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிக்காலம் ஜூலை 24இல் முடிவடைகிறது. ‘பார்ப்பன தர்மத்தோடு’ வாழ்ந்தவர். பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே அவசர அவசரமாக காஞ்சிபுரம் வந்து, சங்கராச்சாரியிடம் ஆசீர்வாதம் பெற்றிருக்கிறார். ஜெயேந்திர சரசுவதி, சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதல் குற்றவாளி. புதுவை நீதிமன்றம் அவரை வழக்கிலிருந்து விடுதலை செய்தது. அரசு தரப்பு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாக மாற்றப்பட்டனர். புதுவை நீதிபதியிடம் தனக்கு சாதகமாக தீர்ப்பு வழங்க தொலைபேசியில் பேரம் பேசியவர் ஜெயேந்திரர். இது ஆதாரத்துடன் அம்பலமாகி, உயர்நீதிமன்றத்திலும் வழக்காக பதிவாகியுள்ளது. இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், புதுவை நீதிமன்றம் ஜெயேந்திரரை விடுதலை செய்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் ஏன் மேல் முறையீடு செய்யவில்லை என்றும்  கேட்டு, அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம், ஜெயேந்திரனைக் காப்பாற்ற முயன்ற சக்திகளின் தலையில் குட்டு வைத்திருக்கிறது. இதையெல்லாம் ஒதுக்கிவிட்டுத் தான் குடியரசுத் தலைவர் ஜெயேந்திரனிடம் ஆசி பெற வந்திருக்கின்றார். ஜெயேந்திரனிடம்...

சமூக செயல்பாட்டாளர்கள் மீது குண்டர் சட்டங்களை ஏவாதே! முதல்வர் வீடு முற்றுகை: 2000 பேர் கைது

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பா.ஜ.க.வின் பினாமியான முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17.6.2017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப் பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர் களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாது காப்பு சட்டம், UAPA என அடக்கு முறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி யும் தோழர்கள்...

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

ஆரியப் பார்ப்பனர் மேலானவர் என்ற பொய்மையை தகர்த்தெறிந்த மரபணு ஆய்வு

பிரம்மாவின் முகத்தில் பிறந்தவர்கள் ‘பிராமணர்கள்’; தோளில் பிறந்தவர்கள் ‘சத்திரியர்’; தொடையில் பிறந்தவர்கள் ‘வைசியர்’; காலில் பிறந்தவர்கள் ‘சூத்திரர்’ இவர்கள் அடிமையான வர்கள் என்று சமூகத்தை பிறப்பின் அடிப்படையில் கூறு போட்டு வருகிறது பார்ப்பனியம். “சூரிய சந்திரன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்து வருவது ஆரிய இனம்; இதற்கு தோற்றமே இல்லை. நாம் எல்லோரிலும் உயர்ந் தவர்கள்” என்று கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு தத்துவத்தை உருவாக்கிய கோல்வாக்கர். ஆரியர்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். அவர்களின்  வேத கலாச்சாரமே ‘பாரத’த்தின் கலாச் சாரம். ‘அவாளி’ன் சமஸ்கிருதப் பண்பாடே புனித மானது” என்று இப்போதும் பார்ப்பனியம் வரலாற்றைக் கட்டமைக்கிறது. அனைத்து வாதங்களையும் தவிடுபொடியாக்கும் ஆய்வு சர்வதேச விஞ்ஞானிகளால் இப்போது கண்டறியப்பட் டுள்ளது. பிரிட்டன் ஹர்ட்டர்ஸ் ஃபீல்டு பல்கலைக் கழக விஞ்ஞானி பேராசிரியர் மார்ட்டின் பி. ரிச்சர்ட்ஸ் தலைமையில் 16 விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு 3 மாதங்களுக்கு முன்பு விஞ்ஞான ஆய்வு இதழில் (bmc Evolutionary biology) வெளியிடப்பட்டு உலகம்...

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்!  வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று  பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

ஜாதிவேறுபாடுகளை ஒழிக்க முன்வாருங்கள்! வேளாளர் – சத்திரியன் – வைசியர் என்று பட்டம் சூட்டிக்கொள்ள துடிப்பது பெருமைக்குரியது அல்ல!

உரிமைக்காக ஜாதி மாநாடுகள் கூட்டுவதை ஆதரித்த பெரியார், ஜாதி பெருமைக்காகக் கூட்டப்படுவதை அழுத்தமாகக் கண்டித்திருக்கிறார். “இந்த நாடு பல சாதி, பல வகுப்பார் அடங்கியதாக இருக்கிறது. எப்போது நமது நாட்டில் சாதி வகுப்பு ஏற்பட்டு அதனுள் உயர்வு தாழ்வு அமைக்கப்பட்டுப் போய்விட்டதோ அன்று முதலே தனிச்சாதி மாநாடு கூட வேண்டியது அவசியமேற்பட்டுவிட்டது. ஒவ்வொரு சாதியாரும் தனித்தனியாக மாநாடுகள் நடத்திக் கொண்டிருந்தால் எப்போதுதான் ஒன்று சேருவது என்று பலபேர் குற்றஞ் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். சிலர் இத்தகைய மாநாடுகளை வகுப்பு மாநாடுகள் என்று சொல்லி மாநாட்டிற்கு வரமுடியாதென்று மறுக்கவும் பார்த்திருக்கிறேன். இத்தகைய காரணங்களைக் கொண்டு வகுப்பு மாநாடு கூட்டுவோரைக் குறை கூற முடியாது.  இத்தகைய மாநாடுகள் கூட்ட வேண்டியது மிகவும் அவசியமாகவே இருக்கிறது. ஒருவகுப்பார் தாங்கள் தாழ்ந்த நிலைக்குள்ளாக்கப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு வருவதை உணராதிருக்கும் வகையில் ஒருவித ஏற்பாடும் செய்யாமல் தான் இருப்பார்கள். அவர்களுக்குத் தாங்களும் மனிதர்கள், தாங்களும் மற்றோருக்குச் சமமானவர்களே, தங்களைத் தாழ்ந்தவர்களெனக் கூறுவது...

தமிழ் திரைப்பட வரலாற்றில் ஜாதிய கலாச்சாரம் முனைவர் எம்.எஸ்.எஸ். பாண்டியன்

(தமிழ்த் திரைப்பட வரலாற்றில் பார்ப்பனியம் கட்டமைத்த ‘கீழ்மை- மேன்மை’ ஜாதி கலாச்சாரம் குறித்த விரிவான அலசல்) 1930களில் தமிழில் பேசும்படம் வந்த தருணம், தமிழ் அடிவர்க்க/கீழ்சாதி திரைப் பட பார்வையாளர்களுக்கு மாபெரும் உற் சாகத்தை எற்படுத்திய தருணமாகும். இந்தப் புதிய பொழுதுபோக்கு பற்றி அடித்தள மக்கள் உற்சாகமடைந்த அதே வேளையில் உயர்வர்க்க / மேல்சாதி மேட்டுக்குடியினர் பெரும் கவலைக் குள்ளானார்கள்.தொடக்கத்தில்இந்தகவலைக்கு அடித்தள மக்களின் ரசனைக் குறைவைக் காரணமாக்கி,உயர்கலாச்சாரம்,கீழ்கலாச்சாரம் என்ற போர்வையில் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ள மேட்டுக்குடியினர் முற்பட்டபோது, புதிய சிக்கல்கள் தோன்றின. உயர் கலாச்சாரம், கீழ்கலாச்சாரம் எனும் பிரிவைப் பாதுகாக்கும் கலாச்சார வரம்புகளையெல்லாம் ஆட்டி அசைத்து, மாற்றியமைக்கும் வலிமை திரைப் பட சாதனத்தில் இருப்பதை அவர்கள் உணர்ந்தனர். ஏற்கெனவே நிலவிய கலாச்சார வரம்புகளை தகர்க்கவும், தனிமைப்படுத்தப் பட்டுக் காப்பாற்றப் பட்ட மேட்டுக்குடி சாமானிய கலாச்சார வழக்கங்களை மாற்றியமைக்கவும் சினிமாவுக்கு இருந்த ஆற்றலுக்குக் காரணம் அது இதுவரை அறிந்திராத, எதிர்பார்க்காத, விதங்களில் மேட்டுக்குடியையும்...

மனிதம் ஒன்றே எம்மொழி!

மனிதம் ஒன்றே எம்மொழி!

ஆதியில் ஒலி இருந்தது எனவும் ஓங்காரமே முதல் ஒலி என்கிற புனைவே.. மனிதம் அந்தமிக்க எறியப்பட்ட முதல் ஆயுதம்!   கதை மாந்தர்கள் கடவுளர்களாய் நடவு செய்யப்படுவது மண் மேலல்ல. மனித உயிர்கள் மேல்.!   வழிபாடென்னும் மரணவாய், அருவமாகவும்.. உருவமாகவும் வெறிகொண்டு திரிகிறது புவியெங்கும்.மனித ரத்தம் பூசிய முடை வாடையோடு!   புனிதங்களும், மோட்சங்களும் ரட்சிப்பும், வரங்களும் பிணக்குவியல் மேல் முளைத்த நச்சுச் செடி!       இன்று வேர்பரவி.. கிளை பரப்பி முகடு துளைக்க நிற்கிறது. கொலையுண்ட மனிதனின், வெறித்த விழிகளை .. இலைகளாய் கொண்டு.!     உயிர்ப்பலி கேட்டு நெறிபடும் மதங்களின் பற்களில்.. “ஜெய் காளீ” என்ற அலறல் கேட்கிறது. சில சமயம் “அல்லாகூ அக்பர்” என்றும்.. “அல்லேலூயா”எனவும், வெறிமிகுக் கூச்சல் வெளியேறுகிறது.!   அருளுகிற.. ஆசிர்வதிக்கிற கரங்களுக்குள்ளே, கூர்வாள் உள்ளது காணாது..     மதத்தை தலையேந்தி மடிந்து சவமாகிறது மனித இனம்.!...

தமிழர்களின் கடவுள் மறுப்பு மரபு சங்க இலக்கியத்திலிருந்து சுயமரியாதை இயக்கம் வரை முனைவர் க.நெடுஞ்செழியன்

நாத்திகம் என்பது வடசொல், இச்சொல்லிற்கு மறுப்பது என்பது பொருள். ஒருவர் கொள்கையை மற்றவர் ஏற்காத போது அல்லது அதனை மறுக்கின்ற போது அப்படி மறுக்கின்றவர் அக் கொள்கையைப் பொருத்த மட்டில் நாத்திகராவார். மாணிக்கவாசகர். ஆத்திகர் மானார் அயலவர் கூடி நாத்திகம் பேசி நாத்தழும் பேறினர் எனக் குறிப்பதில், நாத்திகம் எனும் சொல், சிவனை முழுமுதற் கடவுளாக ஏற்காத தன்மையைச் சுட்டக் காணலாம். ஆயினும் நாத்திகர் எனும் சொல் கடவுள் கோட்பாட்டை – வைதிகப்பண்பாட்டைமறுத்தவர்களைகுறித்தே வழங்கப்பட்டுள்ளது. வடமொழி அறநூல்களில் நாத்திகர்களாகக் குறிக்கப் பெறுபவர்கள் பேச்சுக் கலையிலும் தருக்கவியலிலும் வல்லவர்களாகத் திகழ்ந்துள்ளனர். இதனை, உலகத்துப் பொருள்களின் தோற்றக் கோடுகள், இயற்கையாக நிகழ்வனவெனவும், அவற்றிற்கு ஒரு கருத்தா வேண்டாமையின் கடவுள் இல்லை எனவும் அக்கடவுள் முதலிய பொருள்களைப் பற்றிக் கூறும் வேதனங்கள் (வேதங்கள்) பிரமாணமாகாவெனவும் துணிந்து, யுக்தி வன்மையைக் கடைப்பிடித்து நிகழ்வது நாத்திகமாகும். என சுக்கிர நீதி குறிக்கும். இந் நூற்பாவிற்கு விளக்கம் அளிக்கும் தேவிபிரசாத்...

ஹோமக் குண்ட புகை உடலுக்கு நல்லதா? நக்கீரன்

ஓர் ஆங்கில நாளிதழின் நிருபர் ஒருவர் தான் அழைத்திருந்தார். அவர் எடுத்த எடுப்பிலேயே, “ஹோமக் குண்டத்தில் வரும் புகை நல்லதா, கெட்டதா?” என்று கேட்டார்.  புகையில் ஏது நல்ல புகை, கெட்ட புகை? இக்கேள்விக்குப் பின்னால் ஒரு நிகழ்வு இருந்தது. அந்நிருபர் புகையின் தீமைகளைப் பற்றி எழுதி ஒரு கட்டுரையை அளித்திருக்கிறார். அக்கட்டுரையில் ஹோமத்தில் எழும் புகையும் தீமை தருவதுதான் என்று எழுதியிருக்கிறார். அவருடைய உயர் அதிகாரி அழைத்து அவ்வரியை நீக்க சொல்லியிருக்கிறார். காரணம் கேட்டபோது ஹோமத்தில் வரும் புகை புனிதமானது. ஒருவேளை அதில் தீமைகள் இருந்தாலும் மந்திரங்கள் உச்சரிக்கப்படும்போது அத்தீமைகள் விலகி அது புனிதமடைகிறது என ஒரு புதிய அறிவியல் விளக்கத்தை அவர் அளித்திருக்கிறார். புகை என்றுமே நுரையீரலுக்குப் பகை தான். அது சாம்பிராணி புகையாக இருந்தாலும் சரி, சல்பர் டை ஆக்சைடு கலந்த புகையாக இருந்தாலும் சரி. இதனால்தான் ஆலைகள் வெளியிடும் புகை, குப்பைகள் எரிக்கும் புகை உள்ளிட்ட...

இந்தியாவில் சுயநிர்ணய உரிமை கோருவது சட்டப்படி குற்றமா?

உலக அளவில் சுய நிர்ணய உரிமை என்பது பல காலக் கட்டங்களில் பலவித வரலாற்று சிறப்பு மிக்க விளக்கங்களை உள்வாங்கி, இன்று செறிவுமிக்க ஒன்றாக பரிணமித்திருக்கிறது . ஆனால் வரலாற்று நெடுகிலும் அது மிகவும் விவாதிக்கப்பட்ட, கேள்விக்குள்ளாக்கப்பட்ட ஒன்றாகவே இருந்துள்ளது. ஒரு குறிப்பிட்ட சூழலில் அதன் பொருத்தப்பாடு என்பது அரசியல் நடைமுறைகளின் ஊடாகவே சாத்தியப்பட்டுள்ளது. எனவே அது சட்டப் பூர்வமாக கோரத்தக்க உரிமைதான். எனினும் அதன்நடைமுறை,பயன்பாடு என்பதுஅரசியல் செயல்பாடுகள் சார்ந்ததாகவே உள்ளது. சுய நிர்ணய உரிமை என்ற கோட்பாட்டின் தோற்றம் என்பது, குறிப்பாக அய்ரோப்பிய சூழலில், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் விளைவாகவே இருந்தது. அண்மையில் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் சிலர் தேசத் துரோகக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டது இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவிலும் பேசப்படும் பொருளாகமாறியது. இந்தமாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஒரு பண்பாட்டு நிகழ்வில் எழுப் பப்பட்ட முழக்கங்கள் இந்தியாவில்...

அம்பேத்கர் தந்த எச்சரிக்கை தென்னாட்டவரை இந்திபேசும் மாநிலங்கள் அடக்கி ஆளும் ஆபத்து!

வட மாநிலங்கள் தென் மாநிலங்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் ஆபத்துகள் இந்தியாவில் உருவாகிவிடும் என்பதை முன்கூட்டியே எச்சரித்திருக்கிறார் டாக்டர் அம்பேத்கர் மொழிவழிமாநிலங்கள் குறித்த சிந்தனை என்ற நூலில் அவர் எழுதியிருப்பதாவது : மாநிலங்களின் பிரிவினைக்கான ஆணையம் மாநிலங்களுக்கிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கியிருப்பது மட்டுமல்ல, தென்னாடு வடநாடு மோதல்களுக்கும் வழி வகுத்திருக்கிறது. உ.பி, பீகார் என்ற இரண்டு பெரிய மாநிலங்களையும் அப்படியே நீடிக்க அனுமதித்துவிட்டார்கள். இந்த வடமாநிலங்களுக்கு வலிமை சேர்ப்பது போல், மற்றொரு பெரிய மாநிலமாக மத்திய பிரதேசமும், ராஜஸ்தானும் உருவாக்கப்பட்டிருக்கிறது. இது வடக்கு தெற்கு மோதலை உருவாக்கியிருக்கிறது. வடக்கு இந்தி பேசும் மாநிலங்கள், தெற்கு இந்தி பேசாத மாநிலங்கள், இந்தி பேசும் மாநிலங்களில் மக்கள் பெரும் எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அவர்களின் எண்ணிக்கை அளவே பெரும்பான்மை மக்களுக்கு தெரியாது. இந்தியாவின் மொத்த மக்கள்தொகையில் இந்தி பேசுவோர் எண்ணிக்கை 48 சதவீதம். இந்த உண்மையை உற்று கவனித்து ஆராளிணிந்தால் ஒரு உண்மை நிச்சயமாக புரியும். இந்தி...

ராமானுஜர் ஆயிரம் ஆண்டுவிழா

ராமானுஜர் ஆயிரம் ஆண்டுவிழா

இராமானுஜரின் ஜாதி எதிர்ப்பு சில கேள்விகள்! பிறப்பால் பார்ப்பனரான வைணவ மதப் பிரிவைச் சார்ந்த இராமானுஜரின் ஆயிரமாவது ஆண்டு விழா இப்போது கொண்டாடப்பட்டு வருகிறது. ஆர்.எஸ். எஸ். -சங் பரிவாரங்கள் -வைணவப் பார்ப்பனர்கள் -இராமானுஜருக்கு விழா எடுக்கிறார்கள். ஆனால் இராமானுஜர் முன் வைத்த கருத்து களை இவர்கள் பின்பற்று கிறார்களா? இராமானுஜர், பாரதியைப் போல் ஒடுக்கப்பட்ட ஜாதியினரும் ‘பூணூல்’ அணிந்து, ‘பிரம்மத்தை’ அடையலாம்; ‘பிராமணர் என்பது பிறப்பால் வருவது அல்ல’ என்று கூறிய ஒரு சீர்திருத்தவாதி. 3 சதவீத பார்ப்பனர்கள், தங்கள் பிறவி மேலாண்மையின் அடையாளமாக அணியும் பூணூலை மற்றவர்களுக்கு அணியச் சொல்வதைவிட பிறவி அகங்காரத்தை வெளிப்படுத்தும் பூணூலை பார்ப்பனர்களே ஏன் கழற்றி வீசக் கூடாது என்பதுதான் பெரியார் இயக்கம் முன் வைத்த கேள்வி. அரிசியில் கல் கலந்துவிட்ட நிலையில் கல்லைப் பொறுக்கி, அரிசியைத் தூய்மைப்படுத்த வேண்டுமே தவிர, அதைச் செய்யாது, அரிசிகளை பொறுக்கிக் கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா என்று பெரியார் கேட்டார்....

வரலாறு ஒரே ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சி மொழியானது இந்தி

  மத்திய பா.ஜ.க ஆட்சி இந்தித் திணிப்பை தீவிரமாக்கி வரும் நிலையில் இந்த வரலாற்றுப் பின்னணியை அரசியல் நிர்ணயசபையில் நடந்த விவாதங்களை விளக்குகிறது. இந்தக் கட்டுரை; கட்டுரையை படிப்பதற்கு முன் சில விளக்கங்கள் தேவைப்படுகிறது. இந்தியா “சுதந்திரம்“ பெறும் 1947 ஆகஸ்ட் 15க்கு முன்பே 1946ம் ஆண்டிலேயே அரசியல் நிர்ணயசபை அமைக்கப்பட்டுவிட்டது. இந்த அரசியல் நிர்ணயசபையில் உறுப்பினர்களாக இருந்தவர்கள் யார்? 1935ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சி, இந்தியர்களுக்காக ஒரு அரசியல் கூட்டத்தை தயாரித்து அதனடிப்படையில் தேர்தல்களை நடத்தியது. அந்தத் தேர்தலில் அனைத்து குடிமக்களுக்கும் வாக்குரிமை கிடையாது சொத்து-கல்வி அடிப்படையில் நூற்றுக்கு 14 சதவீதம் பேர் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுத்து நாடாளுமன்றம் அப்படியே அரசியல் நிர்ணயசபையாக மாற்றப்பட்டது. இதில் பெரும்பான்மை எண்ணிக்கையில் இடம் பெற்றிருந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினர்; 1946ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணயசபை அரசியல்சட்டத்தைதயாரித்து -1949ம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள் அரசியல் நிர்ணயசபையின் ஒப்புதலைப் பெற்றது. அரசியல் நிர்ணயசபையின் தலைவர்...

பசுப் பாதுகாவலர்களே, பதில் சொல்லுங்கள்!

மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி -உலகம் முழுவதும் மக்களின் உணவுப் பழக்கமாகியிருக்கிறது; இஸ்லாமிய மதம் -பன்றி இறைச்சியை மறுக்கிறது; ஆனாலும் – துபாய், அபுதாபி உள்ளிட்ட இஸ்லாமிய மன்னர்கள் ஆட்சி நடக்கும் அமீரகத்தில் அதன் விற்பனைக்கு தடையில்லை; பாஜக அதிகாரத்துக்கு வந்த மாநிலங்களிலோ, மாட்டிறைச்சி உண்பதற்கு தடைச்சட்டம் கொண்டு வந்து, கண்காணிப்பு குழுக்களையும் உருவாக்கியிருக்கிறார்கள்; மாட்டை வளர்த்தவரே கொலை செய்யப்படுகிறார்; பசுப் பாதுகாப்புப் படை சட்டத்தை தனது கரங்களில் எடுத்துக் கொள்ள ஆட்சியாளர்கள் அனுமதிக்கிறார்கள் புரதச் சத்துள்ள மாட்டிறைச்சி குறைந்த செலவில் உழைக்கும் மக்களுக்கான உணவாக இருக்கிறது. அண்டை மாநிலமான கேரளாவிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் மாட்டுக்கறி மக்களின் உணவுக் கலாச்சாரமாகும் இந்து மதம் ஒரு மதம் அல்ல என்றும் அது ஓர் வாழ்க்கை நெறி என்றும் பாஜகவினரும் ஆர்எஸ்எஸ்காரர்களும் பேசிவருகிறார்கள் -அந்த வாழ்க்கை நெறி உழைக்கும் மக்களுக்கானதா ? அல்லது வேத பார்பனர்களின் வாழ்க்கை நெறியா என்பதே இப்போது கேள்வி. உழைக்கும் மக்கள்...

புத்தர் அறிவு ஆராய்ச்சிக்கு குரு

தினம் ஜாதியை ஒழிக்கப் பாடுபட்ட புத்தர்தான் கடவுள் இல்லை என்று தைரியமாக சொன்னார். அவர் அப்படிச் சொன்னாரா இல்லையா என்று சிலர் வாதம் பேசுவதானாலும் அதை உறுதிப்படுத்தும் தன்மையில் அவர் எதற்கும் அஞ்சாமல் அடுத்த படியாக -“ஆத்மா என்பதாக ஒன்று கிடையவே கிடையாது, ஆத்மா ஒன்றுஇல்லவேஇல்லை”என்றுகூறிஇருக்கிறார். அதனால்அவருக்கு ‘அனாத்மன்’ என்றும் பெயர். ஆத்மா இல்லை என்பதை இலகுவில் யாரும் ஆதரிப்பவர்கள் இருக்க முடியாது. ஒரு கால் திராவிடர் கழகம், கம்யூனிஸ்ட் கட்சியும் வேண்டுமானால் ஆதரிப்பதாய் இருந்தாலுங்கூட மற்றவர்கள் ஆதரிக்க மாட்டார்கள். விடுதலை : 21 – 02 -1952 புத்தர் பிரான், வருணாசிரம தர்மத்தையோ, இந்த வருணாசிரம தேவர்களையோ ஏற்றுக் கொண்டவர் அல்லர், அவற்றை ஒழிப்பதே புத்தர் மதத்தின் உட்கருத்து, முதல் கருத்து! விடுதலை : 7 – 5 – 1953 சரித்திர சம்பந்தமாக எவராவது மனிதனில் கீழ்ஜாதி, மேல்ஜாதி ஏன் என்பது பற்றி கேட்டாரா என்றால், புத்தர் ஒருவர்தான்...

வாசகர்களிடமிருந்து மார்ச் மாத இதழ் கடிதங்கள்

வாசகர்களிடமிருந்து மார்ச் மாத இதழ் கடிதங்கள்

 ‘அடக்குமுறைகளையும் கொள்கைக்கு பயன்படுத்தும் தலைவர்’ நிமிர்வோம் மார்ச் இதழில் ஈஷா மய்யம் மோசடி குறித்த தகவல்கள் பல உண்மைகளை அம்பலப்படுத்தின. “ஜக்கி அவர்களே பதில் சொல்லுங்கள்” என்ற தலைப்பில் ஜக்கியிடம் எழுப்பப்பட்ட கேள்விகள் அனைத்தும் அர்த்தமுடையவை. -த.முகுலன், ஆக்கூர்   1932ல் குடிஅரசு ஏட்டில் இந்த ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும் என்ற கட்டுரைக்காக பெரியார் கைது செய்யப்பட்டவரலாற்றுப் பின்னணியையும் -அது குறித்த பெரியார் உரையையும் படித்தபோது மெய்சிலிர்த்துப் போனேன். பெரியார் தன் மீதும் தனது இயக்கத்தின் மீதும் அடக்குமுறைகள் வரும் போது அடக்குமுறைகளுக்கு கண்டனம் தெரிவிப்பதைத் தவிர்த்து விட்டு, அவற்றை மேலும் தனது லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான வாய்ப்புகளாக மாற்றியிருக்கிறார்.இதுபெரியாருக்கே உள்ள தனித்தன்மை. வரலாறு நெடுக அவரிடம் இதைப் பார்க்க முடிகிறது. அடக்குமுறை சட்டம் பாய்ந்தது குறித்து பெரியார் எழுதும் போது “இதுபற்றி தான் வருத்தப்படவுமில்லை. அரசை கோபிக்கவும் இல்லை. இதுவரை இப்படி கைது செய்யாமல் இருந்தார்களே என்பதற்காக...

மதங்கள் தேவையில்லை கவிஞர் இன்குலாப்

உலகின் அழகை உணரவும் நுகரவும் மனந்தான் வேண்டும் மதம் ஏன் வேண்டும்?   மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க மதங்கள் தேவையில்லை வானில் சுடரும் மீனை அளக்க மதங்கள் தேவையில்லை   விடுதலை வானில் விரியும் சிறகில்… மதங்களின் குறிகளில்லை வீசும் காற்று மதங்கள் பார்த்து நம்மைத் தொடுவதில்லை   கரைகளில் நின்று அலைகளை நோக்கவும் கவிதை வரியில் கடல்களைத் தேக்கவும் தரையில் புல்லின் பசுமையை அணைக்கவும் தூரிகை முனையில் திரும்ப நினைக்கவும்   மனந்தான் வேண்டும் மதம் ஏன் வேண்டும்? காலைக் கழுவிக்குடிக்கச் சொல்லும்     மதங்களின் ஆசாரம் கங்கையைக் கழிவுக் கூவமாய் மாற்றும் மதங்களின் ஆசாரம் ஆயுதங்களுக்குப் பூசை நடத்தும் மதங்களின் ஆசாரம் ஆனால் மனிதனைச் சாதியால் மிதிக்கும் மதங்களின் ஆசாரம்!   நரகல் கண்டால் மிதியாமல் நடக்க மதங்கள் தேவையில்லை நாறும் சகதியில் குளியாதிருக்க மதங்கள் தேவையில்லை…   மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க மதங்கள்...

பசுவதைத் தடையின் அரசியல் ஓர் வரலாற்றுப் பார்வை

உ.பி.யில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தப் பிறகு, பசுவதைத் தடைச் சட்டத்தை பா.ஜ.க. ஆட்சி செய்யும் மாநிலங்கள் கடுமையாக்கி, உண்ணும் உரிமைகளைப் பறித்து வருகின்றன. பசுவதை தடைச் சட்டத்துக்கு நீண்ட வரலாறு உண்டு. அதன் பின்னணியை விளக்குகிறது, இக்கட்டுரை. பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ஆக. 21,2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதாஅறிமுகம்செய்யமுயன்றார்.கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. 1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே...

சீரடி சாய்பாபா! பின்னணி என்ன? உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்திஉயிருடன்வாழ்ந்தகாலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்பு கிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போதுசிலமனிதர்களைப்பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பல மான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக்...

துருக்கியில் கெமால் செய்த புரட்சி – மே.கா.கிட்டு

[துருக்கியில் கெமால்பாட்சா இஸ்லாமியராக இருந்தும் மதம் விதித்த பல கட்டுப்பாடுகளை தகர்த்து பெண்களை மதப்பிடியிலிருந்து விடுவித்தார் அரபு மொழியில் இருந்த இஸ்லாமிய நூல்களை சொந்த நாட்டு மொழியான துருக்கியில் மாற்றினார். துருக்கியின் முதல் குடியரசுத்தலைவராக 1923 முதல் 1938 வரை இருந்தவர் இஸ்லாமியராக பிறந்தாலும் ‘இறைமறுப்பே’ தனது மதம் என்று அறிவித்தவர் இராணுவ படைத்தளபதியாக இருந்தவர். பெரியார் கெமால் பாட்சா சீர்திருந்ங்களை வரவேற்று ‘குடிஅரசு’ இதழில் எழுதினார் கெமால் பாட்சா செய்த நன்மைகள் என்ற தலைப்பில் 30.11.1938 இல் சென்னை கடற்கரையில் பேசியதும் துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் என்ற தலைப்பில் தலையங்கமும் முறையே 30.11.1938, 11.12.1938 குடிஅரசு இதழ்களில் வெளிவந்தது] இசுலாமிய மதத்தில் பற்றில்லாத கெமால் உலக இசுலாமியக் கூட்டமைப்புக் கொள்கையை முற்றிலும் வெறுத்தார். மதம் விளைவிக்கும் கொடுமைகளுக்கே அவர் முற்றுப் புள்ளி வைக்க விரும்பினார். துருக்கி மக்களை மத மயக்கத் திலிருந்து நீக்கி மெய்யான தேசியப்பற்றை அவர்களிடம் உருவாக்குவதில் நாட்டம்...

புத்த தம்மம் X வர்ண தர்மம்

புத்த தம்மம் X வர்ண தர்மம்

‘‘இந்துக்களுடைய வாழ்வியலை ராமன் பிறந்த நாள், கிருஷ்ணன் பிறந்த நாள் மற்றும் காந்தி பிறந்த நாளைக்கொண்டாடுவதன்மூலம்தூய்மைப்படுத்திவிட முடியாது. ராமன், கிருஷ்ணன், காந்தி ஆகிய மூவருமே பார்ப்பனியத்தை வழிபடுபவர்களே. ஜனநாயகத்தை நிலைநிறுத்த அவர்கள் ஒருபோதும் பயன்பட மாட்டார்கள். ஜனநாயகத்தை நிர்மாணிக்க புத்தர் மட்டுமே பயன்படுவார். எனவே, புத்தரை நினைவு கூர்வது மிகவும் முக்கியமானது. அவரது மாமருந்தே இந்துக்களின் அரசியல், சமூக நீரோட்டத்தில் கலந்துள்ள மாசுபாடுகளைத் தூய்மையாக்கும்.’’ இந்திய மக்கள் திருவிழாக்களை விரும் புகிறார்கள் என்பதைச் சொல்லத் தேவை யில்லை. அவர்கள் ஆண்டின் பாதி நாட்களை திருவிழா கொண்டாட்டங்களுக்கும் மதச் சடங்குகளுக்குமே செலவிடுகின்றனர். மாமனிதர் களின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் நிகழ்வுகளுக்கும் அவர்கள் அதிகளவு முக்கியத் துவம் கொடுக்கிறார்கள். கிருஷ்ண ஜென் மாஷ்டமி, ராமநவமி மற்றும் அனுமான் ஜெயந்தி ஆகிய கொண்டாட்டங்கள் இந்துக்களின் மனநிலைக்குச் சான்றாக விளங்குகின்றன. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும் புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே...

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலையை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களை, பாராளுமன்றம் மூலம் 2016 – ஜூலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துவிட்டார். எனவே, வரும் 07.05.2017ஆம் தேதி நீட் தீர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்காக விண்ணப் பித்துள்ளனர். நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் மூலம் மட்டுமே, மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள். அகில இந்திய தொகுப்பு இடங்கள் (All India Quota) . ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்கள். வெளிநாடு...

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் நிலை இதுதான்!

6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. தமிழ்நாட்டில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடந்த ஆறு ஆண்டுகளில் (2011-2016) பதிவுசெய்யப்பட்ட வழக்குகளில் 94 சதவீதம் வழக்குகள் குற்றம் சாட்டப்பட்டவர்களின் விடுதலையிலேயே முடிந்திருக்கின்றன. ஜே.பி. அஜீஅரவிந்த் என்ற சமூக செயல்பாட்டாளர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், காவல் துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவுக்கு (சமூகநீதி மற்றும் மனித உரிமைக்கான காவல்துறை இயக்குனரகம்) எழுதிக் கேட்டு இத்தகவல்களைப் பெற்றுள்ளார். 6 ஆண்டுகளில் இந்த சட்டத்தின் கீழ் 1,934 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தண்டிக்கப்பட்ட வழக்குகள் 108 மட்டுமே. காவல்துறை இந்த வழக்குகளை நடத்துவதில் ஆர்வம் காட்டாததும், காவல்துறையில் நிலவும் தலித் மக்களுக்கு எதிரான ஜாதிய மனப்பான்மையும் இதற்கு முக்கிய காரணம் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். இந்த வழக்குகளை புலனாய்வு செய்யும் அதிகாரி ‘தலித்’ சமூகத்தைச்சார்ந்தவராகஇருத்தல் வேண்டும் என்றுசட்டம் கூறினாலும் சட்டம்...

இஸ்லாம் குறித்து பெரியார் பார்வை

[இஸ்லாம் குறித்து பெரியார் நபிகள் விழாவிலே பேசிய கருத் துகளின் தொகுப்பு; இஸ்லாமிய மதத்தின் மீதான தனது விமர் சனங்களை இஸ்லாமியர்களிடையே பெரியார் பேசியதை இத் தொகுப்பிலிருந்து அறியலாம்] மதம் வாழ்க்கைக்கு தேவையா? மக்கள் காட்டுமிராண்டிகளாய் இருந்த காலத்தில்-கல்வி அறிவு உலக அனுபவம் ஞானம் இல்லாதிருந்த காலத்தில்மக்களை நல்வழிப்படுத்து வதற்கு என்று ஒரு சமயம் மதம் என்பதாக கற்பனை செய்து மக்களுக்கு ஒரு பயத்தை உண்டாக்கி அவர்களது ஞானமற்ற சுதந்திரத்தை அடக்க ஏற்பாடு செய்ததாக இருக்கலாம். ஆனாலும் இன்று உலகம் பொருள் தத்துவ ஞானமும் விஞ்ஞான ஞானமும் ஏற்பட வசதி ஏற்பட்டு பெருகிவரும் நாளில் காட்டு மிராண்டித்தன காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மதமும், மத உணர்ச்சியும் எதற்கு என்றுதான் கேட்கின்றோம். இந்தப்படி நாம் சொல்லும் போது இதற்கு வேறுவழியில் சமாதானம் சொல்லமுடியாத மக்கள் சிலரால் இரண்டு விதமான கேள்விகள் கேட்கப்படுகின்றன. அவையாவன, ஒன்று “மதத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகின்ற நீங்கள், அந்த இடத்தில்...

பெரியாரிஸ்ட் ஃபாரூக் படுகொலை

கோவை திராவிடர் விடுதலைக் கழக தோழர் ஃபாரூக் கடவுள் மதமறுப்பாளராக செயல்பட்டார் என்பதற்காகவே இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் கொலை செய்யப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் அதிர்ச்சியையும் சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களையும் உருவாக்கிஇருக்கிறது; பெரியார் இயக்கத்துக்கும் -இஸ்லாமிய சமூகத்துக்கும் வரலாற்று ரீதியான உறவு தொடர்ந்து வருகிறது ; கடவுள் – மதமறுப்பாளர்களான பெரியார் இயக்க மேடைகளில்பேச அழைக்கப்படும் இஸ்லாமியர்கள்“ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் ” கடவுள் மறுப்பாளர்களுக்கும் சேர்த்து வணங்கித்தான் பேச்சைத் தொடங்கு வார்கள்; கருத்துச் சுதந்திரத்தை பெரியார் மேடைகள் அங்கீகரிக்கவே செய்கின்றன. பார்ப்பனிய வர்ணாஸ்ரமக் கட்டமைப்புக்குள் இயங்கும் வேதமதமான இந்து மதம் -ஜாதி, தீண்டாமை அடையாளங்களை பிரிக்கமுடியாமல் -சதையும் நகமுமாக தன்னிடம் இணைத்துக் கொண்டிருக்கும், நிலையில் தீண்டாமையை மறுக்கும் மதமாக இஸ்லாம் மட்டுமே இருந்தது ; எனவேதான்பெரியார்ஒடுக்கப்பட்டசமூகத்தை தீண்டாமைக் கொடுமையிலிருந்து உடனடியாக விடுவித்துக் கொள்ளும் வழிமுறைகளில் ஒன்றாக இஸ்லாமை பரிந்துரைத்தார் ; தீண்டாமை ஒழிப்பு என்ற ஒரு காரணத்தைத் தவிர , இஸ்லாம்...

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்!

‘திராவிட’ எதிர்ப்பாளர்களுக்கு சில கேள்விகள்!

‘திராவிட இயக்கம்’ என்ற பொது அடையாளத்தின் கீழ் பல்வேறு அரசியல் கட்சிகளையும் கொண்டு வந்து, ‘திராவிட’ என்ற சொல் ஆராய்ச்சியில் இறங்கி இது ‘தேவையற்ற பெயர்’, ‘காலாவதியான தத்துவம்’ என்ற வாதங்களை முன் வைப்பது வழக்கமாகிவிட்டது. 1944இல் திராவிடர் கழகத்தை பெரியார் உருவாக்கினார். இது ஓர் இயக்கம். 1949இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். அது இயக்கமல்ல; அரசியல் கட்சி; 1972இல் எம்.ஜி.ஆர்., அண்ணா தி.மு.க.வை உருவாக்கினார். 1994இல் தி.மு.க.விலிருந்து -வைகோ, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். இவை எல்லாமுமே அரசியல் கட்சிகள். அரசியல் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தை நோக்கி செயல்படுகின்றன. பெரியார் இயக்கங்கள் ஜாதி ஒழிப்பு, சமூக நீதி, பெண்ணுரிமை இதற்கு தடையாக நிற்கும் பார்ப்பனியம், வேத மதத்தை ‘இந்து’ என்ற பெயரில் வெகு மக்கள் மீது திணிக்கும். கோட்பாடுகளை எதிர்த்து மக்கள் மன்றத்தில் போராடி வருகின்றன. பெரியார் பார்ப்பனரல்லாதார் என்ற அடையாளத்துக்காகவும், பார்ப்பனியத்தால் உரிமை மறுக்கப்பட்டவர்களான...

மனிதன் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவையா?

மனிதன் ஒழுக்கத்துடன் வாழ கடவுள் தேவையா?

ஒரு மனிதன் அறிவுடையவனாகி, உண்மையுடையவனாகி, மக்களிடம் அன்பு காட்டி, மனம், வாக்கு, காயங்களால் தொண்டு செய்து அவைகளின்படி நடப்பானேயானால், அவன் கடவுள் துரோகியாகக் கருதப்படுவானா? அன்பு, அறிவு, உண்மை, இவை தவிர வேறு கடவுள் ஒன்று இருந்தாலுங்கூட, அக்கடவுள் – தன்னை இல்லை என்று சொன்னதற்கும் தன்னை விழுந்து கும்பிடாததற்கும் அப்படிப்பட்டவனைத் தண்டிப்பாரா? உண்மையில் யாரும் அறியமுடியாத ஒரு கடவுள் இருந்தால் – அவரை அறிந்து அவருக்கே பக்தி செய்து வணங்கி வந்தவனைவிட, கடவுளைப்பற்றிக் கவலைப்படாமல், கடவுளுக்கு பக்தி செய்யாமல் அன்பு, அறிவு, உண்மை ஆகியவைகளுடன் நடந்து வந்தவனுக்கேதான் கருணை காட்டுவார். இந்த உணர்ச்சியினாலேயேதான் நான் கடவுளைப் பற்றிய விவாதத்தில் இறங்கிக் காலங் கழிக்காமல், நான் மனித சமுதாயத்திற்கு என்னாலான தொண்டை அறிவு, உண்மை, அன்பு ஆகியவைகளைக் கொண்டு செய்துவருகிறேன். நான் கூறின மேற்கண்ட தத்துவங்கள் – மதத் தலைவர்கள், அதிலே நிபுணர்கள் வாய்ந்தவர்கள் ஆகியவர்கள் வாக்கு ஆகும். மற்றும் சித்தர்களும்...

சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று! – நடைபயணம் விழுப்புரம் 15062017

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர், அவ்வமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சாமுவேல்ராஜ் தலைமையில், ”சாதி ஆணவப் படுகொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டத்தை நிறைவேற்று!” என்ற கோரிக்கையை முன்வைத்து 25 தோழர்களுடன் நடைபயணத்தை 9-6-2017 அன்று சேலத்தில் தொடங்கினர்.. பயணக்குழு வழியில் உள்ள கிராமங்களில் உரை, பாடல்கள், நாடகங்கள் வழியாக கோரிக்கையை விளக்கியவாறு 15 நாட்கள் பயணித்து சென்னையை அடைகின்றனர்.. 15-6-2017 அன்று மாலை விழுப்புரத்துக்கு அருகில் உள்ள அரசூரில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்டக் கழகத் தலைவர் மதியழகன், கழகத் தோழர் மகாலிங்கம், கண்ணன் ஆகியோரோடு பயணக் குழுவினரை வரவேற்று அவர்களுடன் விழுப்புரம் வரை நடந்துசென்றனர். விழுப்புரத்தில் நடந்த பயணக் குழு வரவேற்புப் பொதுக் கூட்டத்தில், மாநில ஜனநாயக மாதர் சங்கத் தலைவர் தோழர் வாலண்டினா, பயணக்குழுத் தலைவர் தோழர் சாமுவேல்ராஜ், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் பயண நோக்கங்களை விளக்கி சிறப்புரையாற்றினர்.

சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் திருச்செங்கோடு 14062017

14-6-2017 அன்று மாலை 6-00 மணியளவில், இராசிபுரம் புதிய பேருந்து நிலையத் திடலில், இராசிபுரம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்  “சே குவாராவின் 90ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நகரக் கழகத் தலைவர் பிடல் சே குவேரா தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் தொடக்கத்தில் மேட்டூர் டி.கே.ஆர் பகுத்தறிவு இசைக்குழுவினரின் பகுத்தறிவு, ஜாதியொழிப்புப் பாடல்கள் பாடப்பட்டன. பொதுக்கூட்டத்தில் இர. சுமதி வரவேற்புரயாற்றினார். தொடர்ந்து இராசிபுரம் கழகத் தோழர் மலர், பள்ளிபாளையம் முத்துபாண்டி, கழக அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, ஆகியோரைத் தொடர்ந்து கழகப் பரப்புரைச் செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் சிறப்புரையாற்றினார். இறுதியாக உரையாற்றிய கழகத் தலைவர், அர்ஜெண்டினாவில் பிறந்து, கியூப நாட்டு விடுதலைக்குப் போராடி, அந்நாடு விடுதலை அடைந்த பின்னர், அந்நாட்டுக் குடியுரிமை வழங்கப் பட்டு தலைமை அமைச்சராய், திட்ட அமைச்சராய், தேசிய ரிசர்வ் வங்கியின் கவர்னராய் நியமிக்கப்பட்ட பின்னரும், அண்டை நாடான பொலிவியாவில் நடைபெற்ற விடுதலைப் போரில் கலந்துகொள்ளச் சென்று அங்கு...

மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம் கரூர் 07062017

07062017 புதன்கிழமையன்று மாலை 5-00 மணியளவில் கரூர் திருநீலகண்டர் திருமண மண்டபத்தில், கரூர் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக ‘ மய்ய பா.ஜ.க. அரசின் மதவெறி அரசியல் எதிர்ப்புக் கருத்தரங்கம், ஆசிரியர் மா.இராமசாமி அவ்ர்களின் தலைமையில் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் காமராஜ் வரவேற்புரையாற்றினார். த.பெ.தி.க. மாவட்டத் தலைவர் தனபால், கரூர் வழக்குரைஞர் தமிழ் இராசேந்திரன், காவேரி உரிமைப் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் விசுவநாதன் போன்றோரின் உரைகளைத் தொடர்ந்து சுற்றுச் சூழல் போராளி முகிலன், தோழர் கிறிஸ்டினா , கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.