மருத்துவக் கல்வியில் சமூக அநீதிகள் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத்,

நாடு முழுவதும் உள்ள மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு மூலம் தான் மாணவர் சேர்க்கையை நடத்திட வேண்டும் என்ற நிலையை, மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இதற்காக இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவக் கவுன்சில் சட்டங்களில் திருத்தங்களை, பாராளுமன்றம் மூலம் 2016 – ஜூலையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலும் அளித்துவிட்டார்.

எனவே, வரும் 07.05.2017ஆம் தேதி நீட் தீர்வு இந்தியா முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்விற்காக விண்ணப் பித்துள்ளனர்.

நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் மூலம் மட்டுமே,

மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்.

தனியார் மருத்துவப் பல்கலைக் கழகங்களில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் இடங்கள்.

அகில இந்திய தொகுப்பு இடங்கள் (All India Quota) .

ராணுவ மருத்துவக் கல்லூரி இடங்கள்.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மருத்துவ இடங்கள்.

ஆகியவற்றில் சேரமுடியும்

அதாவது, நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறாமல் மேற்கண்ட கல்வி நிறுவனங்களில் மருத்துவப் படிப்பில் யாரும் சேரமுடியாது.

முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கும் நீட் பொருந்தும். முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக, கடந்த 2016 டிசம்பர் 5 முதல் 15 வரை நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் அதற்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது.

இளநிலை, முது நிலை மருத்துவப் படிப்பு களுக்கு மட்டுமின்றி, MD,MS போன்ற முதுநிலை மருத்துவக் கல்வியை பயின்ற பிறகு படிக்கக் கூடிய, DM, MCh போன்ற உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கும், நீட் நுழைவுத் தேர்வு இவ்வாண்டு முதல் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த நுழைவுத்தேர்வு 10.06.2017 அன்று நடைறெ உள்ளது.

ஆனால், இந்த நீட் நுழைவுத் தேர்விலிருந்து மத்திய அரசின் ‘எய்ம்ஸ்’ ‘ஜிப்மர்’ போன்ற மத்தியஅரசின்கல்விநிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள,

தமிழகஅரசின்மருத்துவக்கல்லூரிகளில் உள்ள 85 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும்…

தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழக அரசின் ஒதுக்கீட்டிற்கு வழங்கக்கூடிய 65 விழுக்காடு இளநிலை மருத்துவ இடங்களுக்கும்

சிறுபான்மை மருத்துவ கல்லூரிகள் வழங்கக்கூடிய 50 விழுக்காடு இடங் களுக்கும்…..

தமிழகஅரசின்மருத்துவக்கல்லூரிகளில் உள்ள, தமிழக அரசுக்கு சொந்தமான 50 விழுக்காடு முதுநிலை மருத்துவ இடங்களுக்கும் ‘நீட்’ நுழைவுத்தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்திட முடியும்.

இது தமிழகத்தின் உரிமைக்கும்,கூட்டாட்சி கோட்பாட்டுக்கும் எதிரானது.

நீட்ஏராளமான நுழைவுத் தேர்வுகளிலிருந்து, மாணவர்களை விடுவிக்கும் என மத்திய அரசு கூறுகிறது. இது உண்மையும் கூட.இதன் மூலம் மாணவர்கள் ஏராளமான நுழைவுத் தேர்வுகளை எழுதும் நிலையில் இருந்து விடுவிக்கப் பட்டுள்ளனர். ஆனால், அதே சமயத்தில், தனது கல்வி நிறுவனங்களான எய்ம்ஸ் – ஜிப்மர் போன்றவற்றிற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து மத்திய அரசு விலக்கு வழங்கி விட்டு, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட்டை திணித்து இருப்பது பாரபட்சமான நடவடிக்கையாகும்.

நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவ மாணவர்சேர்க்கையில்தரத்தையும்,தகுதியையும் உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு நீட் தேர்வு அவசியம் என மத்திய அரசு கூறுகிறது. அவ்வாறாயின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்கள் எனக் கூறப்படும் ‘எய்ம்ஸ்’ ‘ஜிப்மர்’ மற்றும்‘ஜிப்மர்’மருத்துவமாணவர்சேர்க்கையை நீட் தேர்வின் அடிப்படையில் நடத்தாதது ஏன்?அதற்கு மட்டும் விலக்கு வழங்கியது ஏன்?

தரம், தகுதி பற்றி பேசும் மத்திய அரசே, மருத்துவக் கல்வியின் தரத்தை பாதிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. குறிப்பாக இந்திய மருத்துவக் கவுன்சிலால், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லை எனக் கூறி அனுமதி ரத்து செய்யப்பட்ட86மருத்துவக்கல்லூரிகளில் 26 க்கும் மேற்பட்ட கல்லூரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கியுள்ளது.

நீட்போன்ற,போட்டித்தேர்வுகளைநடத்தும், புரோமெட்ரிக் என்ற அமெரிக்காவைச் சேர்ந்த பன்னாட்டுநிறுவனத்தின்லாபத்தைஅதிகரிக்கவே மத்தியஅரசு புதுப்புது தேர்வுகளை புகுத்துகிறது. மருத்துவர்களின் தரத்தை உயர்த்தவே நீட் தேர்வை கொண்டு வருகிறோம் என்பது மிகப் பெரிய நாடகமாகும்.

மருத்துவர்களின் தரத்தை உயர்த்த வேண்டும் என்பது, மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்துவதற்காகத்தான். ஆனால், மருத்துவச் சேவையின் தரத்தை உயர்த்திட, மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அக்கறைக்காட்டாதது ஏன்? மருத்துவமனைகளின்தரத்தை மேம்படுத்தாமல், அரசு எவ்வாறு மருத்துவ சேவையின் தரத்தை உயர்த்த முடியும்? உலகில் தலைசிறந்த 100 மருத்துவமனைகளில் பட்டியலில் இந்தியாவின் ஒரு மருத்துவமனை கூட இடம்பெறவில்லை. அரசு மருத்துவனைகளின் அவலத்தைப் பற்றி சொல்லவும் தேவையில்லை. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள நோயாளிகளுக்கு 1 நோயாளிக்கு3செவிலியர்தேவை.ஆனால்,அந்த எண்ணிக்கையில் செவிலியர்கள் எந்த அரசு மருத்துவமனைகளிலும் இல்லை.இதர மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறையும் மிகக் கடுமையாக உள்ளது. இந்நிலைகளை சரி செய்யாமல் எப்படி தரமான சிகிச்சையை வழங்கமுடியும்?

எனவே, தரம், தகுதி எனப் பேசுவது வெறும் வாய்சவடால். சமூக நீதியை ஒழித்துக் கட்டு வதற்கான சூழ்ச்சி.

ஒரு நுழைவுத்தேர்வின் மூலம் மட்டுமே, ஒரு மருத்துவரை தரம் வாய்ந்தவராக, திறமை யானவராக உருவாக்கிவிட முடியும் என்பது கடைந்தெடுத்த முட்டாள்தனமாகும். நுழைவுத் தேர்வு என்பது, ஒரு கல்லூரியில் இடம் பெறுவதற்கான போட்டித்தேர்வு (Competitive Examination) மட்டுமே. அது ஒருவர் மருத்துவராக தேர்ச்சி பெற்று விட்டாரா என்பதை அறிவதற் கான தகுதித்தேர்வு (Qualifying Examination) அல்ல.

மேலும்,ஒருமாணவர்மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த பிறகு மருத்துவப் பாடங்ளை படித்து, மருத்துவராவதற்கான பயிற்சிகளையும் முறையாக பெற்று, பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற பிறகுதான் அவர் மருத்துவராகிறார். அதுமட்டுமின்றி ஓராண்டு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்த பிறகுதான் அவர் மருத்துவக் கழகத்தில் பதிவு பெற்று, மருத்துவராக சேவை செய்ய முடியும்.வெறும் நீட் தேர்வில் வெற்றி பெற்ற உடனேயே ஒருவர் மருத்துவர் ஆகிவிட முடியாது. இந்த அடிச்சுவடி கூட தெரியாமல் பலர், தகுதி, தரம், திறமை பற்றி உள்நோக்கோடு முழங்கித் திரிகின்றனர்.

இந்நிலையில்தான், தனது கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு போராடி வருகிறது. இளநிலைமருத்துவக்கல்விமாணவர்சேர்க்கைக்கு ஒரு மசோதாவும், முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கைக்கு ஒரு மசோதாவும் தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படுள்ளன. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்க வேண்டும். ஆனால், இதுவரை கிடைக்கவில்லை.

குடியரசுத்தலைவர்ஒப்புதல்வழங்கிவிட்டால், இச்சட்டங்கள்மூலம், மருத்துவக் கல்விமாணவர் சேர்க்கையில் தமிழக அரசின் உரிமைகள் காக்கப் படும். எனினும், குடியரசுத்தலைவரின்ஒப்புதல் இது வரை கிடைக்க வில்லை. எனவே, இந்த ஆண்டு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா?அல்லது நீட் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுமா? என்ற குழப்பம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நீடிக்கிறது.

இந்த சட்டங்களுக்கு குடியரசுத்தலைவர் உடனடியாக ஒப்புதல் வழங்கவேண்டும். அதற்கு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும்.

மற்றுமொரு முக்கிய விடயம், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டிம் (DM), எம்.சி.எச் (MCh) போன்ற உயர்சிறப்பு மருத்துவ இடங் களுக்கும், மத்திய அரசின் நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு பெற தமிழக அரசு சட்டம் கொண்டுவரவில்லை. அதற்கும் தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்.

தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில், தமிழக மாணவர்கள் படிக்கும் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாக வீழ்ச்சி அடைந்து வருகிறது:

இளநிலை மருத்துவ இடங்களில் 15 விழுக் காட்டையும், முதுநிலை மருத்துவ இடங்களில் 50 விழுக்காட்டையும், நாம் அகில இந்திய தொகுப்புக்கு (All India Quota) வழங்கி வருகிறாம். ஆனால், நாம் வழங்கும் இடங்களின் அளவிற்கு, அகில இந்திய தொகுப்பில் இடங்களைப் பெறுவதில்லை. அவ்வாறு பெற்றாலும், நமது மாணவர்கள் வெளி மாநிலங்களுக்குச் சென்று படிப்பதில் பாதுகாப்பின்மைஉள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் உள்ளன. இது மருத்துவக் கல்வியில் தமிழகத்திற்கு இழப்பை உருவாக்குகிறது.

நமது உயர் சிறப்பு மருத்துவ இடங்கள்( DM, MCh) அனைத்திலும் தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் மட்டுமே இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை சேர்ந்துவந்தனர். இந்நிலையில், நமது ஞிவி, விசிலீ இடங்களை, அகில இந்திய அளவில் பகிரங்கப்போட்டிக்கு, ஏனைய மாநிலங்களைப் போல் விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனால் தமிழகம் பாதித்துள்ளது.பத்து மாநிலங்களில் DM, MCh படிப்புகளுக்கான இடங்கள் ஒன்று கூட இல்லை.மேலும் பத்து மாநிலங்களில் ஒற்றைப் படையில் மட்டும் தான் இடங்கள் உள்ளன. ஆனால், தமிழகத்தில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் 192 இடங்கள் உள்ளன.இந்த இடங்கள் அனைத்தையும் கடந்த ஆண்டு முதல் பகிரங்கப்போட்டிக்கு, அகில இந்திய அளவில் விட்டதால் தமிழகம் பல இடங்களை வேறு மாநிலத்தவர்க்கு தாரை வார்க்கும் அவலம் ஏற்பட்டுவிட்டது. உதாரணத்திற்கு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள பச்சிளங் குழந்தைகளுக்கான உயர் சிறப்புப் படிப்பான DM – Neonatology யில் இடங்களில் 6 இடங்களை வேறு மாநிலத்தவர் எடுத்துவிட்டனர்.தமிழகக்தில் கல்லீரல் மருத்துவ (Hepatology) இடங்கள் 2 உள்ளன.

இந்த 2 இடங்களையும் வேறு மாநிலத்துவர் எடுத்துவிட்டனர். மூட்டுவாத சிகிச்சை (Rheumatology) இடங்கள் 4 உள்ளன. இதில் 2 இடங்களை வேறு மாநிலத்தவர் எடுத்துவிட்டனர். இரைப்பை குடல் நோய் மருத்துவ (Medical Gastro Enterology) 14 இடங்கள் உள்ளன. இதில் 12 இடங்களை வேறுமாநிலத்தவருக்குபறிகொடுத்துவிட்டோம். இது போன்று ஏராளமான இடங்களை இழந்துள்ளோம்.

எனவே, தமிழக அரசின் மருத்துவக் கல்லூரி களில் உள்ள, இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்கள் அனைத்தும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே கிடைத்திடும் வகையில், ஆந்திராவைப் போல் தமிழக அரசும் சட்டம் கொண்டுவர வேண்டும்.அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற மத்திய அரசு உதவிட வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழகங்கள், மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை,உயர்சிறப்பு மருத்துவ இடங்களுக்கு, மாநில அரசுகளே ஒற்றைச் சாளரமுறையில் (Single

Window) மாணவர் சேர்க்கையைநடத்திடவும், கட்டணத்தை நிர்ணயம் செய்யவும், இந்திய மருத்துவக் கழகச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.

ஆண்டு வருமானம் 12 லட்சத்திற்கும் குறைவாக உள்ள குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தை, தொடர்புடைய அரசுகளே ஏற்க வேண்டும்.

‘நெக்ஸ்ட்’ தேர்வு வேண்டாம்.

மருத்துவ மாணவர்கள் இறுதி ஆண்டு மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்று, உள்ளுறை மருத்துவர்களாக பயிற்சியை முடித்த பிறகு, தேசிய அளவிலான தகுதித்தேர்வு (Exit -தேர்வு) எழுதவேண்டும்.

இந்தத் தேர்வில் வெற்றி பெற்றால்தான் மருத்துவராக பதிவு செய்து கொண்டு மருத்துவச் சேவைசெய்யமுடியும்.அத்தேர்வையே,முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும், மத்திய அரசின் மருத்துவப் பணி இடங்களில் மருத்துவராக பணியில் சேர்வதற்கான தேர்வாகவும் மாற்றப்படும் என மத்தியஅரசு அறிவித்துள்ளது. அத்தேர்வுக்கு ‘NEXT (நெக்ஸ்ட்)’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த ‘நெக்ஸ்ட்’ தேர்வை மருத்துவ மாணவர்கள் மீது திணிப்பதற்காக இந்திய மருத்துவக் கழகத்தின் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முயல்கிறது. இத்தேர்வை கைவிட வேண்டும். ஏனெனில், இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகளில் தான் மாணவர்கள் படிக்கிறார்கள். மத்திய மாநில அரசுகளின் அல்லது அவற்றால் அங்கீகரிக்கப்பட்டபல்கலைக்கழகங்கள்நடத்தும் தேர்வுகளை எழுதி வெற்றி பெறுகிறார்கள். அதன் பிறகு ஓராண்டு காலம் பயிற்சி மருத்துவர்களாக பயிற்சி பெறுகிறார்கள். அதன் பிறகும் ஒரு தகுதித் தேர்வு அவசியமற்றது. மேலும், ஒரு தேர்வால் மட்டுமே டாக்டர் களின் தரத்தை தீர்மானித்து விட முடியாது. பல சமயங்களில் இதுபோன்ற தேர்வுகளிலேயே முறை கேடுகள் நடக்கின்றன. இந்த ஆண்டு முதுநிலை மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட நீட் நுழைவுத் தேர்விலும் ஆள்மாறாட்டம் செய்து முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. அதுமட்டுமன்றி, தேர்வுகளை நடத்தும் ‘புரோ மெட்ரிக்’ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின்

லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத் திற்காகவே இதுபோன்ற புதுப்பது தேர்வுகள் திணிக்கப்படுகின்றன. எனவே, NEXT தேர்வை புகுத்தக் கூடாது.

2016-17 ஆம் ஆண்டிற்கான நீட் நுழைவுத் தேர்வில் மிகப்பெரிய மோசடி நடந்துள்ள தாகக் கூறப்படுகிறது. இது குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விரைவாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும். முறை கேட்டில் ஈடுபட்டோர் மருத்துப் படிப்பில் சேர அனு மதிக்கக் கூடாது. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், நமது தமிழக அரசு போட்டித் தேர்விகளுக்கு மாணவர்களை பயிற்றுவிக்க வேண்டியது அவசியம். ஏனெனில், நீட் நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு பெறும் தமிழக அரசின் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தால், நமது தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஏறத்தாழ 3500 இடங்களுக்கு மட்டுமே பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த முடியும்.

ஆனால், நமது மாணவர்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீடு இடங்கள், நிகர் நிலை மருத்துவப் பல்கலைக் கழக இடங்கள், அகில இந்திய தொகுப்பு இடங்கள், இராணுவ மருத்துவக் கல்லூரி இடங்களில் சேர வேண்டுமெனில் நீட் தேர்வு மூலம்தான் சேரமுடியும் என்ற நிலை இருக்கிறது.

நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றால் நமது மாணவர்கள் 18,000 க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்களில் இந்தியா முழுவதும் சேரமுடியும். ஆயிரக்கணக்கான பல்மருத்துவ இடங்களிலும் சேர முடியும். எனவே நுழைவுத்தேர்வுக்கான பயிற்சியும் அவசியமாகிறது என்ற கருத்தையும் சுட்டிக் காட்டவேண்டும்.

நுழைவுத் தேர்வுக்கு நன்றாக பயிற்சி வழங்கப் பட்டால், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 672 இடங்களிலும், ஜிப்மரில் உள்ள 200 இடங்களிலும் சேர முடியும். மேலும், மருத்துவப் படிப்புகள் தவிர மத்திய அரசின் மிமிஜி,மிமிவி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் உள்ள 2 லட்சம் இடங்களில் சேரமுடியும்.தற்பொழுது இந்த இடங்களில் தமிழக மாணவர்கள் 1 விழுக்காட்டிற்கும் குறைவாகவே சேர்கின்றனர். கடந்த 1995 முதல் 2012 வரை தமிழக மாணவர்கள் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் 6 இடங்களில் மட்டுமே சேர்ந்துள்ளனர்.

எனவே,

நமது மாணவர்களுக்கு அரசுப் பள்ளி களிலேயே நுழைவுத்தேர்வுக்கான தரமான பயிற்சி இலவசமாக வழங்கிட வேண்டும்.

தேர்வுகளையும், பயிற்சியையும் போட்டித் தேர்வுக்கு ஏற்ப ஆறாம் வகுப்பு முதலே செய்திடவேண்டும்.

நமது பாடத்திட்டத்தையும், கல்வித் தரத்தையும் மேம்படுத்திட வேண்டும்.

அரசுப் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்திட வேண்டும்.

ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங் களை நிரப்புவதோடு, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங் களை உருவாக்கிட வேண்டும்.

 

இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கைகளே நமது மாணவர்களின் உயர் கல்வி வாய்ப்பை அதிகரிக்கும். சமூக நீதியை நிலைநாட்டும்.

(கட்டுரையாளர் -சமூகசமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர்)

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

 

 

 

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...