மோடியின் நான்கு ஆண்டு வேதனைகள்
பிரதமர் நரேந்திர மோடியால் தலைமை தாங்கப்படும் பாஜக அரசாங்கத்தின் கடந்த நான்காண்டு கால ஆட்சி, 2014ஆம் ஆண்டில் அளித்த வாக்குறுதிகள் அனைத்துக்கும் முழுமையாக துரோகம் செய்திருக்கிறது. கடந்த நான்காண்டுகளில், நாட்டின் மீதும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வருகிறோம். நாட்டின் பொருளாதார அடிப்படை களுக்கு வலுவாக இருந்தவற்றை, ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பும் ஜி.எஸ்.டி. அமலாக்கம் என்னும் இரட்டைத் தாக்குதல்கள் சின்னாபின்னமாக்கிவிட்டன. இவ்விரண்டும், மீட்கமுடியாத அளவிற்கு நம் பொருளாதாரத்தை அழித்துள்ளது. இந்தியாவில் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு, பாதிக்குப் மேல் பங்களிப்பினைச் செலுத்திவந்த, வேளாண்மைக்கு அப்பால் உள்ள தொழில் களில் ஈடுபட்டுவந்த அதிகபட்ச எண்ணிக்கை யிலான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வந்த முறைசாராத் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் சின்னாபின்னமாகிக் கிடக்கிறது. ஜிஎஸ்டியும் அது அமல்படுத்தப் பட்ட விதமும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களுக்கு வழிவகுத்து வந்த இந்தியாவின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களை கிட்டத்தட்ட...