Tagged: 21012016

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

ஜல்லிக்கட்டு வீரத்தின் அடையாளமா?

பழமைச் சிந்தனை – ஜாதியம் – பெண்ணடிமையோடு இணைந்து நிற்கும் மரபுகளை தமிழர் மரபுகளாக முன் வைக்கப்படும்போது அது வெகு மக்களின் உணர்வாக மாற்றம் பெற்றுவிடுகிறது. அதிலே ஒன்றுதான் ஜல்லிக் கட்டு. மனித உயிர்களுக்கு ஆபத்துகளை உருவாக்கும் போட்டிகளுக்கு எல்லாம் தடை விதித்து விட்டார்களா என்று ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் கேட்கிறார்கள். நாம் தரும் விளக்கம் இதுதான். எந்த ஒரு போட்டியும், போட்டியில் பங்கேற்கும், இரு தரப்பு ஒப்புதலுக்குப் பிறகுதான் அரங்கேறுகிறது. இந்தப் போட்டியில் காளைகளின் சம்மதம் பெறப்பட்டதா? அந்த மாட்டுக்கு தங்களை ஒரு போட்டிக் களத்தில் இறக்கி விட்டிருக்கிறார்கள் என்பது புரியுமா? ஒரு மாடு ஆவேசமடைவதற்கு அடிப்படை, அது அச்சமூட்டப்படுவதால் மட்டுமே, அச்சத்தினால்தான் மிரண்டு ஓடுகிறது, காளை. அது சரிசமமாகப் போட்டிக் களத்துக்கு வந்து, என்னை அடக்கிப் பார் என்று சவால் விட்டு பிடரியை சிலிர்த்துக் கொண்டு நிற்கவில்லை – காளைகளின் இந்த அச்சம் மிக மோசமான வதை. இந்தப் போட்டியில்...

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். பேசும் ‘அகண்ட பாரதம்’

ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகமான நாக்பூரில், இந்திய வரைபடம் மாட்டப்பட வில்லை. அங்கே மாட்டப்பட்டிருப்பது, ‘அகண்ட பாரதத்தின்’ வரைபடம். இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான், மியான்மார் ஆகிய நாடுகளை ஒரே தேசமாக சித்தரிக்கிறது, அந்த வரைபடம். இந்தியாவின் பிரதமர் மோடி மேற்கொண்ட திடீர் பாகிஸ்தான் பயணத்தின்போது உலகப் புகழ் பெற்ற அல் அஜிரா தொலைக்காட்சி, பா.ஜ.க. பொதுச் செயலாளர்களில் ஒருவரான இராம் மாதவ் என்ற பார்ப்பனரின் பேட்டியை ஒளி பரப்பியது. ‘பாகிஸ்தான் நாட்டுக்கு இறையாண்மை கிடையாது. அது இந்தியாவின் பகுதி’ என்று கூறி, அகண்ட பாரதத்தை நியாயப் படுத்தினார் இராம் மாதவ். ‘அகண்ட பாரத்’ என்ற ‘பாரத் வர்ஷா’ – கற்பனை உணர்வு அல்ல. இந்தியாவின் எல்லைகள் ‘பாரத் வர்ஷாவாக’ விரிவடைய வேண்டும் என்பதே தங்களின் இலட்சியம் என்று அந்த பேட்டியில் அவர் கூறினார். (இந்தியாவில் ‘தேசிய’ ஏடுகள் எதுவும் இந்த  பேட்டிச் செய்தியை வெளியிடவில்லை) இந்து ‘பாரத் வர்ஷா’ கொள்கையை 1934இல்...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (8) வடக்கு எல்லை மீட்பு போராட்டம்: ம.பொ.சி.யின் நிலை என்ன?

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (7.1.2016 இதழ் தொடர்ச்சி) வடக்கு எல்லைப் பிரச்சினையை இழுத்தடிக்க இராஜாஜி சூழ்ச்சி செய்தார். இதைக் கஜபதி நாயகர் கண்டித்தார். 25.2.1954 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய ஆ.கசபதி நாயகர் “தமிழ்நாட்டுடன் சேர்ந்திருக்க வேண்டிய பகுதிகளாகிய சித்தூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி போன்ற பிராந்தியங்களை ஆந்திர இராஜ்யத்தோடு இந்திய சர்க்கார் சேர்ப்பதற்கு அனுமதித்தது தவறு ஆகும். அதனால் நாட்டில் எழுந்த கேடுகளை, கிளர்ச்சிகளை குழப்பங்களை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். அந்த பிராந்தியங்களில் வசிக்கின்ற பெரும் பான்மையான தமிழ் மக்களின் கலாச்சாரத்தைப் பாதிக்கின்ற ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி அந்தச் சபையில் (ஹளளநஅடெல) என் நண்பர் விநாயகம் அவர்கள் பேசும்போது, சித்தூர் விஷயம் ஆந்திர சர்க்காரின் பொறுப்பும் அல்ல,...

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

பார்வதி ‘மேனன்’ பார்வதியாகிறார்!

தமிழ்த் திரைப்பட உலகை இப்போது பல மலையாள நடிகைகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒருவர் ‘பார்வதி மேனன்’ என்ற ஜாதி அடையாளத்தோடு வந்தார். அண்மையில் ஒரு தமிழ் நாளேடு, இது குறித்து அவரிடம் கேட்டது. “தமிழ் நடிகைகள் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போடுவது இல்லை. இந்தி, தெலுங்கு, மலையாள நடிகைகள் மட்டும் தங்கள் பெயருக்குப் பின்னால் ஜாதிப் பெயரைப் பயன்படுத்துகிறார்களே? என்பது கேள்வி. அதற்கு அந்த நடிகை இவ்வாறு பதில் அளித்திருக்கிறார்: “ஜாதி ஒரு பெருமையான விஷயம் கிடையாது. அதனால் எந்த மதிப்பும் வரப்போவது இல்லை. ஜாதிப் பெயரை வைத்துக் கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் என் பெயரிலிருந்து ஜாதி பெயரை நீக்கி விட்டேன். என் பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களில் மேனன் என்ற வார்த்தை கிடையாது. படங்களின் ‘டைட்டில்’களில் (பெயர் அறிவிப்புகளில்) பார்வதி என்றே குறிப்பிட வேண்டும் என்று கூறியிருக்கிறேன். எதிர் காலத்தில் என் குழந்தைகளுக்குக்கூட பள்ளிக்கூட...

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

ஜாதி எதிர்ப்பு: மார்க்சிஸ்ட் கட்சியின் நிலை என்ன?

கல்கத்தாவில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு மாநாட்டில் கட்சியின் எதிர்கால செயல் திட்டங்களில் ‘ஜாதி ஒடுக்குமுறை களுக்கு முன்னுரிமை தரப்படும்’ என்ற கருத்தை, பிரகாஷ் காரத், கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் வலியுறுத்தி யுள்ளது வரவேற்கத்தக்க ஒரு திருப்பம். இந்தியாவில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பதற்கு பொருளாதாரச் சுரண்டல் – சமூக ஒடுக்குமுறை என்ற இரண்டு பிரச்சினை களையே மய்யம் என்று தீர்மான நகல் கூறுகிறது. சமூக ஒடுக்குமுறை என்று பார்த்தால் பெண்கள், தலித், பழங்குடி யினர் மற்றும் மத அடிப்படையிலான மைனாரிட்டிகள் மீது காட்டப்படும் பாகுபாடுகள் என்று சீத்தாராம்யெச்சூரி விளக்கமளித்துள்ளார். அதே நேரத்தில், ஜாதி அமைப்புக்கு எதிரான கருத்தியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தெளிவாக்கப்படவில்லை.  ஜாதிய பாகுபாடுகள் – ஒடுக்குமுறைகள் குறித்து மட்டுமே நகல் தீர்மானம் பேசுகிறது. இன்னும் ஒரு நிலைக்கு மேலே போய் சீத்தாராம் எச்சூரி, கட்சியின் நிலையை இவ்வாறு தெளிவுபடுத்தியிருக்கிறார். “பொருளாதார அதிகாரத்தை...

தலையங்கம் ‘ரோகித்’களை காவு கேட்கும் ஜாதிவெறி!

படிக்கக் கூடாத கூட்டம் என்ற ‘மனு’ சாஸ்திரத்தால் தடை செய்யப்பட்ட சமூகம், சமூகப் புறக்கணிப்புகளைக் கடந்து, உயர் கல்வி வரை எட்டிப் பிடிக்கும்போது அங்கும் ஜாதியம், அவர்களின் உயிர்களைக் காவு கேட்டுக் கொண்டிருக்கிறது. இதுதான் இந்த ‘பாரத சமூகத்தின்’ பார்ப்பன ஜாதி தர்மம்! நெஞ்சு பதறுகிறது. அய்தராபாத் பல்கலைக் கழகத்தில் சமூகக் கல்வியில் ஆராய்ச்சிப் படிப்பு படித்து வந்த 26 வயது தலித் மாணவர் ரோகித் வெமுலா, ஜாதி வெறி கொடுமைகளை எதிர்கொள்ள முடியாது தனது உயிரைப் பலியிட்டுக் கொண்டார். பார்ப்பன ஆதிக்கத்தில் மூழ்கிக் கிடக்கும் உயர்கல்வி நிறுவனங்கள், இடஒதுக்கீட்டின் கீழ் வரும் ‘தலித்’ மாணவர்களை அவமதிப்பதும், புறக்கணிப்பதும் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. பார்ப்பன உயர்ஜாதிப் பேராசிரியர்கள் பலரும் இந்த மாணவர்கள் படிப்பை முடித்துவிட்டு வெளியேறிடக் கூடாது என்று தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி, இவர்களை ஒதுக்கி வைக்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தவுடன், ‘சங்பரிவார்’ மாணவர் அமைப்பான ‘வித்யார்த்தி பரிஷத்’ உயர்கல்வி வளாகங்களில்...

பெங்களூரில் கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழா மாட்சி

கருநாடக மாநில திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூர் சித்தார்த்த நகரில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது. 17.1.2015 அன்று நடந்த விழாவில் தோழர் வே.மதி மாறன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று உரையாற்றினார். விழாவுக்கு சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தோழர்கள் சரவணன், இராமநாதன், சிவக்குமார், இலட்சுமணன், ‘கற்பி-ஒன்றுசேர்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வே. மதிமாறன் தனது உரையில், தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்; சித்திரை அல்ல என்பதை ஆதாரங்களோடு எடுத்து விளக்கி, பெரியார்-அம்பேத்கர், ஜாதி இந்து மத பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை விரிவாக விளக்கி உரையாற்றினார். கழகத் தோழர் இல. பழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பெரியார் முழக்கம் 21012016 இதழ்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

கழகத்தினர் எடுத்த தமிழ்ப் புத்தாண்டு-பொங்கல் விழாக்கள்

சென்னை, சேலம், கன்னியாகுமரி உள்ளிட்ட பல ஊர்களில் கழக சார்பில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாளான பொங்கல் விழாக்கள் கொண்டாடப்பட்டன. சென்னையில் கடந்த 16 ஆண்டுகளாக திருவல்லிக்கேணி பகுதி கழக சார்பில் பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இவ் வாண்டு இந்த விழா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறும் விழாவாக நடந்தது. ‘ஜாதி மதம் கடந்து மனிதர்களானோம்; உதவிக் கரங்களை உயர்த்தி உறவுகளானோம்; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உள்ளங்களுக்கு ஓர் ஆறுதல் விழா தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா” – என்ற முழக்கத்தோடு விழா நடந்தது. 13.1.2016 மாலை 5 மணியளவில் புதுவை அதிர்வு கலைக் குழுவினரின் பறை இசை கிராமிய கலை நிகழ்வுகள் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பகுதி மாணவ மாணவிகள் பங்கேற்ற மாற்றுடைப் போட்டிகளைத் தொடர்ந்து காவல்துறை துணை ஆய்வாளர் பதவிக்கு முதன்முதலாக தேர்வு செய்யப்பட்டுள்ள திருநங்கை பிரித்திகாயாஷினி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து நகைச்சுவை, பாட்டு பட்டிமன்றம்...

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார்

பெரியார் குடும்பத்தின் ‘’மாப்பிள்ளை’’ சுயமரியாதை வீரர் தாதம்பட்டி இராஜு முடிவெய்தினார் வாழ்வின் இறுதி வரை சுயமரியாதைக் கொள்கைக்காரராகவே வாழ்ந்து காட்டிய ”தாதம்பட்டி இராஜூ”, தனது 94ஆவது வயதில் சென்னையில் 19.01.2016 அன்று காலை முடிவெய்தினார்.. தாதம்பட்டி இராஜூ, தந்தை பெரியாரின் மூத்த சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மருமகன் ஆவார். ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகள் செல்லா என்ற நாகலட்சுமியை திருமணம் செய்து கொண்டவர். செல்லா,மறைந்த ஈ.வெ.கி. சம்பத்தின் சகோதரி ஆவார். இளம் வயதில் கப்பற்படையில் பணியாற்றிய அவர், 1946இல் நடந்த கப்பற் படை எழுச்சிப் போராட்டத்தில்பங்கேற்றார். பிறகு, பெரியார் வாழ்ந்த காலத்தில் ‘விடுதலை’ நாளேட்டின் அலுவலக மேலாளராக 10 ஆண்டு காலம் பணிபுரிந்தார். இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்காக வடமாநிலத் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டிட தோழர் வே.ஆனைமுத்து அவர்கள், வடமாநிலங்களுக்கு சென்றபோது, அவருடன் சென்றவர்களில் ஒருவர் தாதம்பட்டி இராஜு.ஆங்கிலத்தில் புலமை மிக்கவர். வயதுமுதிர்ந்த நிலையிலும் இளைஞரைப்போல் தமிழகம் முழுதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பது அவரது வழக்கம். 2003ஆம்...

பட்டுக்கோட்டை சதாசிவம் இறுதி நிகழ்வு

19.01.2016 அன்று முடிவெய்திய தோழர் பட்டுக்கோட்டை சதாசிவம் (வளவன்) அய்யா அவர்களின் இறுதி நிகழ்வு 20.01.2016 அன்று பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. 20.01.2016 அன்று கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழக தோழர்கள்,திராவிடர் கழகம்.தந்தை பெரியார் திராவிடர் கழகம்,தி.மு.க உள்ளிட்ட அமைப்புகளின் தோழர்கள்,உறவினர்கள்,நண்பர்கள் ஆகியோர் பங்கேற்ற இறுதி ஊர்வலம் நடைபெற்றது.அய்யாவின் உடல் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த இறுதி நிகழ்வில் திராவிடர் கழகத்தின் சார்பில் பொதுச்செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட தலைவர் ஆர்.பி.எஸ் சித்தார்த்தன்,திருவாரூர் மாவட்ட தலைவர் ராயபுரம் கோபால்,பகுத்தறிவாளர்கழகத்தின் தரங்கை சா.பன்னீர் செல்வம்,பட்டுக்கோட்டை அண்ணாதுரை, இராம.அனபழகன்,மாங்காடு மணியரசு,சின்னத்தூர் சிற்றரசு, தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,ப.சு.கவுதமன், சேலம் மேற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ்,ஈரோடு மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ், மேட்டூர்...