பெங்களூரில் கழகம் எடுத்த தமிழர் திருநாள் விழா மாட்சி

கருநாடக மாநில திராவிடர் விடுதலைக் கழகம், பெங்களூர் சித்தார்த்த நகரில் தமிழர் திருநாள், தமிழ்ப் புத்தாண்டு விழாவை மிகச் சிறப்பாகக் கொண்டாடியது.
17.1.2015 அன்று நடந்த விழாவில் தோழர் வே.மதி மாறன் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று உரையாற்றினார்.
விழாவுக்கு சித்தார்த்தன் தலைமை தாங்கினார். தோழர்கள் சரவணன், இராமநாதன், சிவக்குமார், இலட்சுமணன், ‘கற்பி-ஒன்றுசேர்’ அமைப்பின் பொறுப்பாளர்கள் ஜார்ஜ், நாகரத்தினம் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். வே. மதிமாறன் தனது உரையில், தமிழருக்கான புத்தாண்டு தை முதல் நாள்; சித்திரை அல்ல என்பதை ஆதாரங்களோடு எடுத்து விளக்கி, பெரியார்-அம்பேத்கர், ஜாதி இந்து மத பார்ப்பன எதிர்ப்பு கருத்துகளை விரிவாக விளக்கி உரையாற்றினார்.
கழகத் தோழர் இல. பழனி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

12540572_10205553541059973_8885069853506664634_n 6599_10205553541219977_4206191289517420565_n

பெரியார் முழக்கம் 21012016 இதழ்

You may also like...