Tagged: முற்றுகைப் போராட்டம்

தோழர்கள் திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்களை விடுதலை செய்யக் கோரி தமிழக முதல்வர் வீடு முற்றுகை சென்னை 17062017

தமிழீழ இனப்படுகொலைக்கு நினைவேந்தல் நடத்தியதற்காக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் மீது குண்டர் சட்டம் ஏவப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனே விடுதலை செய்ய வலியுறுத்தியும் பாஜகவின் பினாமியான தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடு முற்றுகைப் போராட்டம் 17062017 சனி அன்று தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்பட்டது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலிருந்து நடைபெற்ற இந்த போராட்டத்தில் பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கங்களைச் சேர்ந்த தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் கலந்து கொண்டனர். அதில் 2000 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழர் விரோத பாஜகவின் அடியாளாக செயல்படும் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கண்டித்தும், தமிழக செயல்பாட்டாளர்களை ஒடுக்க குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், UAPA என அடக்குமுறை கருப்பு சட்டங்களை ஏவுவதைக் கண்டித்தும், 4 தோழர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தோழர்கள்...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

தீண்டாமை ஒழிப்பு பிரிவு முற்றுகை போராட்டம் மதுரை 31012017

அரியலூர் நந்தினிக்கு நீதிவழங்கு. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் செயல்படாத காவல்துறையின், “தீண்டாமை ஒழிப்பு பிரிவு” முற்றுகை போராட்டம்….! நாள்:31.01.2017. செவ்வாய்க்கிழமை. நேரம்:காலை11.00 மணி.  

பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை போராட்டம் ! சென்னை 07102016

தமிழர்க்கு எதிரான பா.ஜ.க வின் போக்கை கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க ஆணை பிறப்பித்தும், அதை மதிக்காமல் ஏற்க மறுக்கும் மத்திய பா ஜ க அரசை கண்டித்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகம் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக முற்றுகைப் போராட்டம் . தமிழக விவசாய் மக்களை விட கர்நாடக தேர்தலையே முக்கியமாக கருதும் மதவாக பாஜக அரசை கண்டித்து சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி தலைமையில் நடைபெறும் முற்றுகை போராட்டத்திற்கு தோழர்கள் தவறாமல் கலந்துக்கொண்டு மதவாத பாஜக விற்கு எதிரான பதிவை வலுப்படுத்த வேண்டும் . திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

முற்றுகைப் போராட்டம் ஏன்?

முற்றுகைப் போராட்டம் ஏன்?

தமிழ்நாட்டின் ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 82 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலோர் தலித் இளைஞர்கள். இளவரசன், கோகுல் ராஜ், இப்போது சங்கர். இன்னும் எத்தனை படுகொலைகள் தொடரப் போகிறதோ? நினைக்கவே நெஞ்சம் பதறுகிறது. தென் மாவட்டங்களிலும் கொங்கு மண்டலத்திலும் ஜாதி வெறி சக்திகள் சவால் விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு காவல்துறையோ, தமிழக அரசோ எந்தத் தீவிர நடவடிக்கையும் எடுப்பதில்லை. தமிழ்நாட்டில் ‘கவுரவக் கொலைகளே’ நடப்பது இல்லை என்று சட்டமன்றத்தில் அறிவித்தார், ஓ. பன்னீர்  செல்வம். மத்திய சட்ட ஆணையமும் மகளிர் ஆணையமும், ‘கவுரக் கொலைகளை’ தடுப்பதற்கான சட்டவரைவுகளை உருவாக்கி, மாநில அரசுகளின் கருத்து கேட்டு அனுப்பியது. தென் மாநிலங்களில் இதற்கு பதில் அளிக்காத ஒரே ஆட்சி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மட்டும் தான். தென் மாவட்டங்களில் 5 ஆண்டு களில் நடந்த 600 படுகொலைகளில் 70 சதவீதம் ஜாதி ஆணவக் கொலைகள், இதைத் தடுத்து...

சென்னை மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்

சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டம் அருகில் திராவிடர் விடுதலை கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெரியாரியல் சிந்தனையாளர் வாலாசா வளவன்(மா.பெ.பொ.க), தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கரு அண்ணாமலை,தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன்,அன்பு தனசேகர்,மாவட்ட செயலாளட் இரா உமாபதி,வழக்கறிஞர் துரை அருண் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்

தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் மருத்துவ படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு கொண்டு வர முயற்ச்சிக்கும் மத்திய அரசை கண்டித்தும், பொது நுழைவுத் தேர்வு கொண்டுவரும் திட்டத்தை கைவிட கோரியும் 07.07.2016 அன்று சென்னையில் தமிழக ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற தமிழ்நாடு மாணவர் கழகம் மற்றும் தோழமை அமைப்பு மாணவர் தோழர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டனர். கோட்டூர் புரம் தனியார் திருமண மண்டபத்தில் தோழர்கள் வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

சேலம் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் 08072016

8-7-2016  வெள்ளியன்று காலை 11-00 மணியளவில், மத்திய அரசு பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்தும், மக்களின் பேச்சு மொழியாய் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழியாக சேர்த்திருப்பதை நீக்கக் கோரியும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவுநர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட...

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் 07072016

ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம்!! மத்திய அரசு மருத்துவப் படிப்புக்கு பொதுநுழைவுத் தேர்வு கொண்டுவர தொடர்ந்து முயற்ச்சிப்பதை எதிர்த்து ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் . நாள் : 07/07/2016 (வியாழன்) நேரம் : காலை 10.00மணி இடம் :கிண்டி (ஆளுநர் மாளிகை) #தமிழ்நாடு_மாணவர்_கழகம் தொடர்புக்கு :9688310621,9092748645. இடஒதுக்கீட்டுக்கு எதிரானதும், கிராமப்புற உழைக்கும், ஏழை எளிய மக்களின் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதை முற்றிலும் தடுக்க நினைக்கும் மத்திய அரசின் மருத்துவ பொது நுழைவுத்தேர்வு (தகுதித் தேர்வு) என்பது மிகவும் ஆபத்தான ஒன்று. நம் வருங்காள தலைமுறையை காக்க மனிதநேயத்தோடு ஒன்று கூடுவோம். தமிழ்நாட்டில் பொது நுழைவுத் தேர்வை கொண்டுவர நினைக்கும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிவோம் .

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

ஜாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமரசமின்றி போராடிவரும் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் பல இன்னல்கள் இழப்புகளை சந்தித்து சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து துணிவுடன் போராடிவருகிறது. உடுமலையில் நடைபெற்ற ஜாதிவெறிப்படுகொலை தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இது போன்ற ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்க்காகவே காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு என்றொரு தனிப்பிரிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரிவாக செயல்படவேண்டி உருவாக்கப்பட்ட இந்த பிரிவு செயல்பாடுகள் இன்றி,தங்கள் கடமைகளை செய்யாமல் கோமா நிலையில் கிடக்கிறது. ஜாதி வெறிப்படுகொலைகளை தடுக்க அரசு எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தமிழக அரசின் காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகங்களை நாளை 16.03.2016 அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது. சென்னையில் கழக பொதுச்செயலாளர் ”தோழர் விடுதலை ராஜேந்திரன்” தலைமையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைமை அலுவகமும், திருப்பூரில் கழக தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி”...

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகை போராட்டம்!

முற்றுகைப் போராட்டம்! காவல்துறையின் தீண்டாமை ஒழிப்பு பிரிவு மாநில தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம்! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில். உடுமலை சங்கர் அவர்களை ஜாதி வெறியர்கள் ஆணவப் படுகொலை செய்ததை கண்டித்தும், தொடர்ந்து நடைபெறும் ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்கத் தவறும் செயல்படாத காவல்துறையின் தீண்டாமை ஒழிப்புப் பிரிவை கண்டித்தும், ஜாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க கடுமையான தனிச் சட்டம் இயற்றக்கோரியும் முற்றுகைப் போராட்டம். நாள் : 16.03.2016.புதன் கிழமை காலை 10 மணி. இடம்: காவல்துறை இயக்குனர் (I.G.) அலுவலக வளாகத்தில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகம்,மயிலாப்பூர், சென்னை. தொடர்புக்கு: தோழர் உமாபதி, செல் : 7299230363 சென்னை மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். ஜாதி வெறி ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக அணிதிரள்வோம் வாருங்கள்.

புதுச்சேரியில் முற்றுகைப் போராட்டம் 16122015

புதுச்சேரி அரசில் அரசுச் செயலாளராகப் பணியாற்றும் ராக்கேஷ் சந்திரா என்னும் அதிகாரி ஏராளமான ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் ஆவார். மருத்துவக் கல்லூரி இடங்களில் 50% இடங்கள் அரசு ஒதுக்கீட்டு அளித்தாக வேண்டும் என்ற விதியை 50 இடங்கள் அளித்தாக வேண்டும் என்று திரித்துக் கூறி இடஒதுக்கீட்டில் மாணவர்களுக்கு கிடைக்காமல் செய்தவர். ஆசிரியப் பணித் தேர்வில் தகுதி அடிப்படையில் தேர்வு பெற்றோரையும் ஒதுக்கீட்டுக் கணக்கில் வைத்து ஏராளமான பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வேலை வாய்ப்பைப் பறித்தவர். மேலும் சம்பள விகிதம் அதிகமாக உள்ள ஆசிரியப் பணியிடங்களை கெசட்டட் பதவி எனக் கூறி இடஒதுக்கீட்டில் வராது என்று நியமனங்களில் ஊழல் செய்தவர். புதுவைக் காகித ஆலைக்கு ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை, அவ்வாலை இயங்காததால் அர்டசுக்குத் திருப்பி அளிக்கவேண்டும் என்ற ஒப்பந்த விதிகளுக்கு முரணாக, அரசின் அனுமதியின்றியே தனியாருக்கு விற்றதால் 7.5 கோடி ஊழல் என்று 2014 ஜூலை மாதமே ஏமாற்றுதல் (420), அதிகார துஷ்பிரயோகம்...