செயல்படாத தீண்டாமை ஒழிப்பு பிரிவை முற்றுகையிட வாரீர்

ஜாதி வெறிக்கு எதிராக தொடர்ந்து சமரசமின்றி போராடிவரும் திராவிடர் விடுதலைக் கழகம் களத்தில் பல இன்னல்கள் இழப்புகளை சந்தித்து சிறிதும் தொய்வின்றி தொடர்ந்து துணிவுடன் போராடிவருகிறது.

உடுமலையில் நடைபெற்ற ஜாதிவெறிப்படுகொலை தமிழகத்தில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. இது போன்ற ஜாதிய வன்கொடுமைகளை தடுப்பதற்க்காகவே காவல்துறையில் தீண்டாமை ஒழிப்புப்பிரிவு என்றொரு தனிப்பிரிவு இயங்கிக் கொண்டிருக்கிறது. தனிப் பிரிவாக செயல்படவேண்டி உருவாக்கப்பட்ட இந்த பிரிவு செயல்பாடுகள் இன்றி,தங்கள் கடமைகளை செய்யாமல் கோமா நிலையில் கிடக்கிறது.

ஜாதி வெறிப்படுகொலைகளை தடுக்க அரசு எந்த முயற்சிகளையும் எடுக்காத நிலையில் தமிழக அரசின் காவல்துறையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகங்களை நாளை 16.03.2016 அன்று காலை திராவிடர் விடுதலைக் கழகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துகிறது.

சென்னையில் கழக பொதுச்செயலாளர் ”தோழர் விடுதலை ராஜேந்திரன்” தலைமையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள மாநில தீண்டாமை ஒழிப்பு பிரிவு தலைமை அலுவகமும்,

திருப்பூரில் கழக தலைவர் ”தோழர் கொளத்தூர் மணி” அவர்கள் தலைமையில் திருப்பூர் அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள மாவட்ட தீண்டாமை ஒழிப்பு பிரிவு அலுவலகமும் முற்றுகையிடப்பட இருக்கிறது.

ஜாதிவெறிக்கெதிரான சக்திகள் அனைவரும் இந்த போராட்டத்திற்கு தங்கள் மேலான ஆதரவை நல்கி முற்றுகைப்போரட்டத்தை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் !

”ஜாதியை ஒழிக்க,
எந்த இழப்பையும் சந்திக்க தாயாராக இருப்போம் !

எந்த எல்லை வரையும் செல்லவும் துணிவுடன் இயங்குவோம் !”

You may also like...