பெரியாரியல் பயிற்சி வகுப்பு தூத்துக்குடி 12022017
வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக
வருகிற 12-02-2017 அன்று (ஞாயிறு) தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. இடம்: முத்து மஹால் நேரம்: காலை 9 மணி. அனைவரும் வருக
குடியாத்தம் அருகே உள்ள இராமாலை கிராமத்தில் மாவட்ட கழக அமைப்பாளர் சிவாவின் முயற்சியால் அவருக்கு சொந்தமான தோப்பில் கழக சார்பில் பெரியார்-அம்பேத்கர் பயிலரங்கம், மே 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஒரே நேரத்தில் சிறுவர் சிறுமியர்களுக்கு தனியாகவும், தோழர்களுக்கு தனியாகவும் பயிற்சிகள் நடந்தன. கழகத் தோழர் ஆசிரியர் ஈரோடு சிவக்குமார், சிறுவர் சிறுமி யருக்கு பெரியார் குறித்தும், ஜாதி, கடவுள், மதம் குறித்தும் மிக எளிமையாக குழந்தைகளுக்கு புரிந்திடும் வகையில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசி கலந்துரையாடினார். இரண்டு நாள்களிலும் காவை இளவரசன், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சிகளை குழந்தைகளுக்கு நடத்தி பகுத்தறிவு அறிவியல் கருத்துகளை விளக்கினார். குழந்தைகள் மிகவும் ஆர்வமுடன் பங்கேற்றனர். தோழர்களுக்காக நடந்த பயிலரங்கத்தில் – முதல் நாள் விடுதலை இராசேந்திரன், ‘அம்பேத்கர்-பெரியார் தேவையும்- அவசியமும்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் அழகிய பெரியவன், ‘அடிப்படை வாதமும் ஜனநாயகம் எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியும்’ என்ற தலைப்பிலும், கொளத்தூர் மணி, ‘அம்பேத்கரும் இந்துமதமும்’...
ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் 2 நாள் பயிலரங்கம் பவானியில் தோப்பு துரைசாமி தோட்டத்தில் நடை பெற்றது. 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த பயிலரங்கில் பல்வேறு தலைப்பு களில் தோழர்கள் வகுப்புகளை எடுத்தனர். முதல் நாள் நிகழ்வு 17.04.2016 அன்று காலை துவங்கியது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். காலையில் “பெரியாரியல் ஓர் அறிமுகம்” எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மதியம் “இந்துத்துவா” எனும் தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வகுப்பெடுத்தனர். இரண்டாம் நாள் நிகழ்வு 18.04.2016 அன்று காலை துவங்கியது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தலைமை தாங்கினார். சாமிநாதன் நிகழ்வை ஒருங் கிணைத்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தராசு, “போக்குவரத்து விதிமுறைகள்” எனும்...
திருப்பூரில் கோவை-திருப்பூர் மாவட்டக் கழகங்களின் தோழர்களுக்காக மார்ச் 3ஆம் தேதி ஒருநாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்கும் ‘கெடுபிடி’ காட்டுகிறது. மேட்டுப்பாளை யத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிடப்பட்டது. கோவை மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், இதற்காக மண்டபங்களை அணுகியபோது, “தேர்தல் ஆணையம் அனுமதியின்றி மண்டபத்தில் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. இது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப் பாடு” என்று கூறி விட்டார்கள். இரண்டு நாள் பயிற்சி முகாமில் தோழர்கள் தங்குவதற்கும் அங்கே உணவு வழங்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கழகப் பொருளாளர் துரைசாமி தமது இல்லத் தோட்டத்திலேயே பந்தல் அமைத்து பயிலரங்கம் நடத்த முன் வந்தார். திட்டமிட்டபடி பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கத்தில் பெண்கள் உள்பட 70 தோழர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில் ராசு...
20-10-2016 அன்று காலை 11-00 மணியளவில் மேட்டூர் பாப்பாயம்மாள் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட கழக சார்பில் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை கவுதமன் ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங் களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர். வகுப்பின் துவக்கத்தில், திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு...
முற்பகல் அமர்வில் புலவர் செந்தலை ந.கவுதமன் வகுப்பின் துவக்கத்தில் , திராவிடர் இயக்கத்தின் அடிவேரான தென்னிந்திய நல உரிமைச் சங்கம் எனப்படும் அமைப்பின் தொடக்க நாளான 20-11-1916இன் நூற்றாண்டு நிறைவு நாளான அதே 20-11-2016இல் இப்பயிலரங்கம் நடைபெறுவது தனி சிறப்புக்குரியது என்பதை பெருமகிழ்வுடன் குறிப்பிட்டு வகுப்பினைத் தொடங்கினார். ”திராவிடர் இயக்க வரலாறு” என்ற தலைப்பில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் கருத்துரையாற்றினார். அதன் பின்னர் தோழர்கள் எழுப்பிய அய்யங்களுக்கு விளக்கம் அளித்தார். மதியம் 2-00 மணிக்கு அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டிருந்தது. மதிய உணவுக்குப் பின்னர் பிற்பகல் 3-00 மாணிக்கு தலைவர் கொளத்தூர் மணி “புதியக் கல்விக் கொள்கையும் பழைய குலக் கல்வித் திட்டமும் “ என்ற தலைப்பில் வகுப்பெடுத்தார். அய்யங்களைதலுக்குப் பின்னர் மாலை 5-30 மணியளவில் பயிலரங்கம் நிறைவுற்றது. பயிலரங்க ஏற்பாடுகளை மேட்டூர் நகரக் கழக செயலாளர் சுரேஷ்குமார், குமரேசன் ஆகியோர் சிறப்புற செய்திருந்தனர்.
//ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மலைப்பகுதி கடம்பூரில் நடைபெற்ற, பெரியாரியல் பயிற்சி வகுப்பு குறித்தும், தோழர்.கொளத்தூர்மணி அவர்களின் உரை குறித்தும் இன்றைய “தமிழ் இந்து” நாளிதழில் வந்துள்ள செய்தி//
2 நாட்கள் பெரியாரியல் பயிற்சி வகுப்பு சேலம் மாவட்டம் காவலாண்டியூர் அருகில் பாலமலை முன்பதிவுக்கு மே 5 தேதிக்குள் தொடர்பு கொள்ளவும் 9750052191
‘பெரியாரியல் பயிலரங்கம்’ கழக செயல்வீரர் தோழர் செ.பத்ரிநாராயணன் அவர்களின் 12ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ஒருநால் பெரியாரியல் பயிலரங்கம் ! நாள் : 30.04.2016 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு. இடம் : முருகேசன் திருமண மண்டபம்,இராயப்பேட்டை. துவக்கவுரை : தோழர்.பால் பிரபாகரன். பரப்புரை செயலாளர். திராவிடர் விடுதலைக் கழகம் தலைப்பு : ‘இந்துத்துவா’ தோழர். விடுதலை இராசேந்திரன். பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தலைப்பு : ”பெரியாரியல் – ஒரு பார்வை” தோழர் கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
பயிலரங்கம் ! திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கம்- ( ஈரோடு ) இடம்: தோப்பு துரைசாமி தோட்டம்> காலிங்கராயன் அணைக்கட்டு> பவானி> (ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி, கந்தன் டெக்ஸ் ரோடு) நாள்: 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை