Tagged: சேலம் திவிக

உணவு உரிமை – கருத்துரிமையை பறிக்காதே! தடையை மீறி மாட்டுக்கறி உண்ணும் போராட்டம்: சேலத்தில் கழகத்தினர் கைது

மாட்டுக் கறியை உண்ணத் தடைபோடும் பார்ப்பன மதவாத சக்திகளுக்கு ஆதரவாகவே தமிழக காவல்துறையும் செயல்பட்டு வருகிறது. மாட்டுக்கறி உணவு – உழைக்கின்ற மக்களின் உணவு; புரதச் சத்து மிக்க உணவு; ஆடு மற்றும் கோழிக் கறியைச் சாப்பிடும் உரிமை இருக்கும்போது, உலகம் முழுதும் மக்களால் உண்ணப்படும் மாட்டுக்கறி உண்பதை மதத்தைக் காரணம் காட்டி, பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் தடை போட்டுள்ளதோடு, கண்காணிப்புக் குழுக்கள் என்ற பெயரில் காலித்தனத்திலும்  இறங்கி வருகிறார்கள். இந்த நிலையில் மே 12ஆம் தேதி சேலம் நகரில் மாட்டுக்கறி அரசியல் கருத்தரங்கம் ஒன்றுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் இரா. டேவிட் தலைமையில் மாநகரத் தலைவர் த.பரமேசு முன்னிலையில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வழக்கறிஞர் பொ.இரத்தினம் ஆகியோர் உரையாற்ற இருந்தனர். மதியம் ரூ.50 கட்டணத்தில் மாட்டுக்கறி உணவு வழங்க ஏற்பாடாகியிருந்தது. ‘லால் மஜித் மண்டபம்’ என்ற தனியார் அரங்கில் நடந்த...

மாட்டுக்கறி அரசியல் – மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் ! சேலம் 12052017

கருத்துரிமை உணவு உரிமைக்கு தடை போடும் தமிழ்நாடு காவல்துறையை கண்டித்து இன்று 12052017 காலை 11 மணியளவில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் மாட்டுக்கறி உண்ணும் போராட்டம் நடைபெற்றது. சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் காவல் துறையின் தடையை மீறி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் தடையை மீறி மாட்டுக்கறியை சாப்பிட்டார்கள். போராட்டத்தின் போது தோழர் கொளத்தூர் மணி பேச்சு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. இப்போராட்டத்திற்கு கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, கழக பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் கிழக்கு மாவட்ட தலைவர் சக்திவேல், மாவட்ட செயலாளர் டேவிட், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், அமைப்பாளர் டைகர் பாலன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் வைரவேல், மாவட்ட செயலாளர் சரவணன்,...

மாட்டுக்கறி அரசியல் – சேலம் 12052017

அன்பார்ந்த தோழர்களே! 23-4-2017 அன்று கொளத்தூரில் மாட்டுக்கறி அரசியல், மாட்டுக்கறி விருந்து என்றறிவித்தோம்; அனுமதி மறுப்பு என்றது காவல்துறை. 2-5-2017 அன்று ஈரோட்டிலதே நிகழ்வு. நாம் அனுமதி கேட்கவில்லை; பாதுகாப்பு மட்டும் கேட்டோம். ஆனாலும் அனுமதி இல்லை என்றது காவல்துறை; உயர்நீதி மன்றமோ அடுத்த மாதம்தான் விசாரிப்பேன் என்கிறது. 12-5-2017 அன்று சேலத்திலும் அதே நிகழ்வு. பாதுகாப்பு மட்டுமே கேட்டிருந்தோம். அனுமதி இல்லை என்று கூறிவிட்டது காவல்துறை. அரசியல் சட்டத்தின் 48ஆவது பிரிவு நேரடி சட்டம்கூட இல்லை; வெறும் வழிகாட்டும் நெறிமுறை மட்டும்தான். அப்பிரிவு “பால் கொடுக்கும் பசுக்களையும், பாரம் இழுக்கும் எருதுகளையும், இளங்கன்றுகளையும் வெட்டுவதை வேண்டுமானால் – தடை செய்ய விரும்பினால் – மாநில அரசுகள் சட்டம் இயற்றிக் கொள்ளலாம் என்றுதான் கூறுகிறது. நாமோ பால் கொடுக்காத, விவசாய வேலைக்குப் பயன்படாத மாட்டின் கறியைத்தான் உண்ணப்போகிறோம் என்பதை தெளிவாக – அடிமடையன் கூட புரிந்துகொள்ளும் வகையில் நமது பாதுகாப்பு கோரும்...

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேத மரபு மறுப்பு மாநாடு – ஏன்?

வேதங்களை பார்ப்பனர்கள் தங்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வேண்டும் என்பதால் அதை அச்சில் ஏற்றவில்லை. எனவே அதற்கு ‘கேளாக் கிளவி’ என்ற பெயரும் உண்டு. தங்கள் மூளைக்குள்ளே பரம்பரையாக வேதங்களை மனப்பாடம் செய்து வந்தவர்கள் கடவுள்களோடு பேசும் உரிமை தங்களுக்கும் தங்கள் வேதத்துக்கும் மட்டுமே உண்டு என்று சமூகத்தை நம்ப வைத்தார்கள். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே தோன்றிய இந்த பார்ப்பன மேலாதிக்க சூழ்ச்சி இன்று வரை தொடர்ந்து கொண்டுதானே இருக்கிறது? அர்ச்சர்கர் ஆகும் உரிமை; யாகம் நடத்தும் உரிமை; கும்பாபிஷேகம் செய்யும் உரிமை; மதச் சடங்கு, பரிகாரங்கள் செய்யும் உரிமை; ஆளுநர் குடியரசுத் தலைவர், பிரதமர், முதல்வர், உயர் அதிகாரிகளுக்கு எதை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்று ஆலோசனை வழங்கும் உரிமை அத்தனையும் இப்போதும் யாரிடம்? பார்ப்பன புரோகிதர்களிடம் தானே! இப்படி வேதத்தை கடவுளை அரசியல் தலைவர் களை வழி நடத்துதலை தங்கள் வசமாக்கிக் கொண்டவர்கள் ஒரு காலத்தில் படிப்பையும் இதேபோல்...

வேத மரபு மறுப்பாளர்கள் ஒன்று கூடுகிறார்கள்! ‘களை’ கட்டுகிறது சேலம் மாநாடு!

பூமியில் இருந்த கடவுள் களை விண்ணுலக கடவுள் களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில்  எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்? சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் – சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக்...

டிச.24-சேலத்தில் ‘வேத மரபு மறுப்பு மாநாடு’ தோழர்களே தயாராவீர்!

டிசம்பர் 24இல் பெரியார் நினைவு நாளில், சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒரு நாள் மாநாடு. “சித்தர்கள்-வள்ளலார்-பெரியார்-அடிச்சுவட்டில்… ‘வேத மரபு’ மறுப்பு மாநாடு காலை முதல் இரவு வரை கருத்தரங்குகள் – பேரணி – பொதுக் கூட்டம் – கலை நிகழ்ச்சிகள். கழகத்தின் வளர்ச்சிக்கான கட்டமைப்பு நிதி – முதல் தவணை யாக கழகத் தலைவரிடம்  வழங்கப்படுகிறது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு முதல் தவணையாக 5000 சந்தாக்கள் வழங்கப்படு கிறது. கழகத்தின் புதிய ‘மாத இதழ்’ வெளி வருகிறது. தமிழகத்தின் சிந்தனையாளர் கள் – பேச்சாளர்கள் – தலைவர் கள் பங்கேற்கிறார்கள். வேத மதமான பார்ப்பன மதத்தை பார்ப்பனர்கள் – பார்ப் பனரல்லாத மக்கள் மீது திணித்தார்கள். ‘இந்துக்கள்’ என்று பெயர் சூட்ட வைத் தார்கள். வேத மதத்துக்குள் வெகு மக்களை இழுத்துக் கொண் டவர்கள் அந்த மக்களின் சுய மரியாதையை மறுத்தார்கள். ஜாதிகளைத் திணித்து ஒடுக்கு முறை கட்டமைப்பை...

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே ஒரு கிராமத்தில் 70 ஆண்டு களாக மாடி வீடுகளே கட்டப்படுவது இல்லை; அது ‘சாமி குத்தம்’ என்று மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கழகத் தோழர்கள் அந்த கிராமத்தில் அறிவியல் பரப்புரை நடத்தி மக்களின் அச்சத்தைத் தகர்த்தனர். இது குறித்த செய்தி: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மல்லியக்கரை அஞ்சலுக்குட்பட்ட கருத்த ராஜப்பாளையம் என்ற கிராமத் தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அடுக்கு மாடி வீடும் கட்டப்படவில்லை.காரணம் அங்கு அனைவராலும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலின் கோபுரத்தின் உயரத்திற்கு மேல்  அந்த பகுதியில் எந்த ஒரு வீடு கட்டினாலும் அவர் இறந்து விடுவார் அதுபோல் இறந்தும் இருக்கிறார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையில் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த செய்தி ‘சன்’  மற்றும் ‘மக்கள்’ தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டுள்ளது. செய்தித்தாள் களிலும் வெளி வந்துள்ளது. அங்கு பொருளாதார வசதி...

சுற்றுச்சூழல் போராளி பியூஸ் மானுஸ் ஆதரவாக கழகம் சுவரொட்டி

தமிழக அரசே சுற்றுசூழல் ஆர்வலர் பியூஸ் மானுஸ் மற்றும் இருவர் மீது புனையப்பட்டுள்ள பொய் வழக்கைத் திரும்ப பெறு பியூஸ் மானுஸ் அவர்களை சிறையில் தாக்கிய சிறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய் சம்மந்தப்பட்ட சிறைத்துறையினர் மீது குற்றவியல் வழக்குப் பதிவு செய் இயற்கையை நாசப்படுத்தும் லாப வெளி பெருமுதலாளிகள், துணை நிற்கும் அரசு, அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக அணி திரள்வோம், இயற்கையை பாதுகாப்போம் திராவிடர் விடுதலைக் கழகம் சேலம் மாவட்டம்

சேலம் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு போராட்டம் 08072016

8-7-2016  வெள்ளியன்று காலை 11-00 மணியளவில், மத்திய அரசு பள்ளி, உயர்கல்வி நிலையங்களில் சமஸ்கிருதத்தைத் திணிக்க மேற்கொள்ளும் முயற்சிகளைக் கண்டித்தும், மக்களின் பேச்சு மொழியாய் இல்லாத செத்த மொழியான சமஸ்கிருதத்தை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அலுவல் மொழியாக சேர்த்திருப்பதை நீக்கக் கோரியும், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒருங்கிணைப்பில், சேலம் தலைமை அஞ்சல் அலுவலகத்தின் முன்னர் கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்ட முழக்கங்களுக்கு இடையிடையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் இரா.நாவரசன், ம.தி.மு.க. மாநகர செயலாளர் வழக்குரைஞர் ஆனந்தராஜ், அருந்ததிய மக்கள் இயக்க நிறுவுநர் வழக்குரைஞர் பிரதாபன், த.மு.மு.க. மாவட்ட செயலாளர் பி.சுல்தான், மக்கள் உரிமை பாதுகாப்பு மைய மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் மாயன், கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) மக்கள்விடுதலை தோழர் மணிமாறன், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட...

சேலத்தில் கழக தெருமுனைக்கூட்டம் !

சேலம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 19/06/16 அன்று மாலை 7 மணியளவில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம் அன்னதானப்பட்டி வள்ளுவர் நகர் பகுதியில் தோழர்கள் பிரபு, வெற்றி முருகன், மூ.பெ.சரவணன் மற்றும் பெரியார் பிஞ்சு தமிழ்செல்வன் ஆகியோரின் பறை இசை முழக்கத்துடன் நிகழ்ச்சி துவங்கப்பட்டது. தொடர்ந்து சேலம் மாநகர செயலாளர் தோழர் பிரபு குழுவினரின் வீதி நாடகங்கள் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து ஏற்காடு அய்யா தேவதாஸ் அவர்கள் பல வரலாற்று ஆதாரங்களுடன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பி.ஜே.பி யின் மக்கள் விரோத செயல்பாடு மற்றும் இட ஒதுக்கீட்டின் தேவை குறித்தும் சிறப்புரை ஆற்றினார். இறுதியாக மாநகர தலைவர் தோழர் பரமேஸ் குமார் நன்றி கூற நிகழ்வு முடிவுற்றது. இந்நிகழ்ச்சியை சுமார் 50 க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் செய்திகளை கேட்டறிந்தனர். . மேலும் வீதி நாடகத்தில் ஜாதி எதிர்ப்பு காட்சிகளின் போது மக்கள் பெருத்த கரவொலியோடு ஆதரவு அளித்தனர். செய்தி : தோழர் .பரமேஸ்...

படுகொலை குறும்படம் வெளியீடு

22-1-2016 வெள்ளி மாலை 6-00 மணியளவில், சேலம், மனிபால் மருத்துவமனை அருகே அமைக்கப் பட்டிருந்த நம்மாழ்வார் அரங்கில் சேலம் தோழர் பொன்.சண்முகவேல் இயக்கிய ‘படுகொலை’ என்ற குறும்படத்தை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் வெளியிட, தோழர் பாலு மற்றும் அக்குறும்படத்தில் நடித்துள்ள சிறுவன் கவின்பூபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர், ஒரு விவசாயியின் தற்கொலையைக் காட்சிப் படுத்துவதன் வழியாக, வேளாண்மையில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட்டுகளின் இலாப வெறி, இயற்கைச் சூறையாடல், நீர்நிலைகளின் அவல நிலை, பொதுச் சமூகத்தின் அக்கறையின்மை போன்ற செய்திகளைச் சொல்கிறது அந்தக் குறும்படம். குறும்படத் திரையிடலைத் தொடர்ந்து, எழுத்தாளர் அஜயன்பாலா, சேலம் பியூஸ் மானுஷ், அ.முத்துகிருஷ்ணன், பவா செல்லதுரை, கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சி.மகேந்திரன் ஆகியோர் படம் சொல்லும் செய்திகள் மீதான தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். குறும் படத்தில் பங்காற்றியோர் பாராட்டப்பட்டனர். இயக்குநர் சண்முகவேல் நன்றியுரையுடன் நிகழ்வு...

சேலம் மாநாட்டின் எழுச்சி!

சேலம் மாநாட்டின் எழுச்சி!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழகத் தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. ”மக்களைப் பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்ப மானது. குமரப்பா தபேலா வாசிக்க, சீனி தவிலும், காளியப்பன் உறுமியும் வாசித்தனர். கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர். மாநாட்டின் முதல் அமர்வாக கருத்தரங்கம் நடைபெற்றது.”தொடரும் பார்ப்பன வல்லாதிக்கம்” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கை தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் நெறிப்படுத்தினார்....

திரளான மக்கள் ஆதரவுடன் பெரும் வெற்றி பெற்ற கழகத்தின் சேலம் மாநாடு !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாட்டை” தமிழகமெங்கும் நடத்த திட்டமிடப்பட்டு முதல் மாநாடு ஈரோடு, அடுத்ததாக சென்னையில் நடைபெற்றதைத் தொடர்ந்து சேலத்தில் நடத்த அறிவிக்கப்பட்டு கழக தோழர்களால் மாநாட்டு பணிகள் துவங்கப்பட்டன. மாநாடு நடத்துவதற்கான 26-11-2015 அன்று கொடுத்தஅனுமதி கடிதத்திற்கு காவல்துறை நீண்ட அமைதிக்குப்பின் 17-12-2015 அனுமதி மறுத்தது. மாநாடு அறிவிக்கப்பட்ட முந்தையநாள் காவல்துறையின் தடையை உயர்நீதிமன்றத்தின் மூலம் கழகம் உடைத்தது. ”மக்களைப்பிரிக்கும் பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் 19.12.2015 சனிக்கிழமை காலை 9.30 மணி அளவில் துவங்கியது. மேட்டூர் டி.கே.ஆர்.இசைக்குழுவினரின் ஜாதி ஒழிப்பு,பகுத்தறிவுப் பாடல்களுடன் மாநாடு ஆரம்பமானது. தோழர் குமரப்பா தபேலா வாசிக்க, தோழர் சீனி தவிலும், தோழர் காளியப்பன் உறுமியும் வாசித்தனர். தோழர்கள் கோவிந்தராசு, முத்துகுமார், இசைமதி, அருள்மொழி ஆகியோர் சாதி ஒழிப்பு, பகுத்தறிவுப்...

சேலம் மாநாடு சுவர் விளம்பரங்கள்

நாளை 19.12.2015 சேலத்தில் நடைபெறவுள்ள ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” க்காக தோழர்களின் சுவர் விளம்பரங்கள் சில.

சேலத்தில் 19122015 அன்று பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு

சேலத்தில் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” திராவிடர் விடுதலைக்கழகம்,சேலம் மாவட்டம் நடத்தும் மக்களைப்பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” ‘காலை முதல் இரவு வரை முழு நாள் மாநாடு’ நிகழ்சி நிரல். நாள் : 19.12.2015 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம் சேலம். தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கம். காலை 10 மணி – ‘கருத்தரங்கம்.’ நண்பகல் 2 மணி – ‘பட்டிமன்றம்.’ ———————————————————– மாலை 6 மணி, இடம் : போஸ் மைதானம் சேலம். இளவரசன் – கோகுல்ராஜ் நினைவரங்கம், ”திறந்த வெளி மாநாடு.”