படுகொலை குறும்படம் வெளியீடு

22-1-2016 வெள்ளி மாலை 6-00 மணியளவில், சேலம், மனிபால் மருத்துவமனை அருகே அமைக்கப் பட்டிருந்த நம்மாழ்வார் அரங்கில் சேலம் தோழர் பொன்.சண்முகவேல் இயக்கிய ‘படுகொலை’ என்ற குறும்படத்தை இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் சி. மகேந்திரன் வெளியிட, தோழர் பாலு மற்றும் அக்குறும்படத்தில் நடித்துள்ள சிறுவன் கவின்பூபதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்,

ஒரு விவசாயியின் தற்கொலையைக் காட்சிப் படுத்துவதன் வழியாக, வேளாண்மையில் ஆதிக்கம் செலுத்துகிற கார்ப்பரேட்டுகளின் இலாப வெறி, இயற்கைச் சூறையாடல், நீர்நிலைகளின் அவல நிலை, பொதுச் சமூகத்தின் அக்கறையின்மை போன்ற செய்திகளைச் சொல்கிறது அந்தக் குறும்படம்.

குறும்படத் திரையிடலைத் தொடர்ந்து, எழுத்தாளர் அஜயன்பாலா, சேலம் பியூஸ் மானுஷ், அ.முத்துகிருஷ்ணன், பவா செல்லதுரை, கொளத்தூர் மணி, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், சி.மகேந்திரன் ஆகியோர் படம் சொல்லும் செய்திகள் மீதான தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர்.

குறும் படத்தில் பங்காற்றியோர் பாராட்டப்பட்டனர்.

இயக்குநர் சண்முகவேல் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவடைந்தது

IMG_0706 IMG_0713 IMG_0718 IMG_0719 IMG_0721 IMG_0723 IMG_0726 IMG_0727 IMG_0729 IMG_0730 IMG_0734 IMG_0742 IMG_0743 IMG_0746 IMG_0749

You may also like...