Tagged: ஈரோடு திவிக
உலக மகளிர் தின விழா ! ஈரோடு 08032017
உலக மகளிர் தின விழா ! நாள் : 08.03.2017 புதன்கிழமை இடம்: ஈரோடு மாநகரம். நேரம் : காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை. அறிவுசார் வாழ்வியல் நிகழ்வுகளும், கருத்தரங்கம், தமிழர் கலை விழா பங்கு பெறுவோர் : மாண்புமிகு சுப்புலட்சுமி ஜெகதீசன், மேனாள் மத்திய அமைச்சர். பேராசிரியர் சரஸ்வதி, மக்கள் சிவில் உரிமைக் கழகம். கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக்கழகம். ஒருங்கிணைப்பு, தோழர் இரத்தினசாமி, அமைப்புச் செயலாளர், திராவிடர் விடுதலைக்கழகம்
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலை இடமாற்றம் – கழகம் மனு
ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலையை இடமாற்றம் செய்வது குறித்த விவகாரத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர்.இரத்தினசாமி ஈரோடு மாநகராட்சி ஆணையாளரைச் சந்தித்து விண்ணப்பம் அளித்தார்.. சிலை இடமாற்றம் தொடர்பாக எந்தப் பணிகளாயினும் திராவிடர் விடுதலைக் கழகத்தைக் கலந்து ஆலோசிக்காமல் எப்பணியையும் செய்யக் கூடாது என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் மாநிலத்தலைவர் தோழர்.கண குறிஞ்சி, திமுக மாவட்டப் பிரதிநிதி தோழர்.பகீரதன் ஆகியோர் உடனிருந்தனர் செய்தி பசி திவிக
கழகத்தின் போராட்ட எதிரொலி, ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே வெற்றி
இராமாநுசரின் ஆயிரமாவது ஆண்டு விழா என்ற பெயரில் இன்று 18022017 ஈரோடு பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள இருந்தார்கள். மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இது போன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, காலை 10 மணிக்கு பரிமளம் மகால் முன்பு அனைத்து முற்போக்கு இயக்கங்கள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற திராவிடர் விடுதலைக் கழக அமைப்புச் செயலாளர் தோழர் இரத்தினசாமி தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனிடையில் விழாவிற்கு எதிராய் மனு அளித்ததன் அடிப்படையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார்கள். கழகத்தின் முயற்சிக்கு வெற்றி
திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் திருப்பூர்-ஈரோடு-கரூர் மாவட்டங்களில் எழுச்சி
29.8.2012 புதன் மாலை 6 மணிக்கு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம், துரை சாமி இல்லத்தில் நடைபெற்றது. முகில்ராசு வரவேற் புரையாற்றினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க. இராசேந்திரன், மாநில அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் துரைசாமி, மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விசயன் ஆகியோர் உரையாற்றினர். பெரியார் முழக்கம் ஏட்டிற்கான 180 சந்தாக்களை பொதுச் செயலாளரிடம் வழங்கினர். விரைவில் ஒரு ஆயிரம் சந்தாக்கள் வசூலித்து தருவதாக அறிவித்துள்ளனர். இறுதியாக கீழ்க்கண்ட தோழர்கள் பொறுப் பாளர்களாக நியமிக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்டத் தலைவர் : சு. துரைசாமி, செயலாளர் – சு. அகிலன், பொருளாளர் – இரவிச் சந்திரன், அமைப்பாளர் – கிளாக்குளம் கு. செந்தில், தமிழ்நாடு மாணவர் கழக அமைப்பாளர் – செந்தில் குமார், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அமைப்பாளர் – மடத்துக்குளம் மோகன். சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழக...
பொங்கல் விழாப் பொதுக் கூட்டம் ஈரோடு 29012017
ஈரோடு மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 29,01,2017 ஞாயிறு அன்று லட்சுமி நகரின் அருகிலுள்ள அண்ணா நகரில் , அம்மக்களோடு இணைந்து பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நன்பகல் முதல் சிறுவர், இளைஞர் பொதுமக்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. மாலை சமத்துவப் பொங்கல் வைத்து ஊர்ப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 6-30 மணிக்கு தோழர். மா. ஜெயபாரதி (தமிழ்நாடு மாணவர் கழகம்) வரவேற்புரையாற்ற , தோழர் ப.இரத்தினசாமி (அமைப்புச் செயலாளர், தி.வி.க.) தலைமையிலும், அண்ணா நகரைச் சேர்ந்த இராமசாமி, தமிழ்மணி, தி.வி.க. மாவட்ட செயலாளர் கு.சண்முகப் பிரியன், வேணுகோபால், மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி , சித்தோடு எழிலன் ஆகியோர் முன்னிலையில், சித்தோடு முருகேசன் அவர்களின் பகுத்தறிவுப் பாடலுடன் கூட்டம் துவங்கியது. தொடர்ந்து மூத்த வழக்குரைஞர் பா.ப. மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலந்துகொண்டவர்களுக்கும்...
மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016
தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர். பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.. கண்டன உரையாற்றியோர்: பிரபு,தி.க குமரகுருபரன்,த.பெ.தி.க விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள் கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம் சித்திக், த.மு.மு.க பார்த்திபன், பி.யு.சி.எல் நிலவன்,தமிழ்த்தேச நடுவம் சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள் தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம் விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி லுக்மான், எஸ்.டி.பி.ஐ ஆதவன், தமிழக...
ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 10102016
திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில், காவிரி ஆணையம் அமைக்க முடியாது என கூறி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் மதவாத பாஜக வை கண்டித்து, நாள் : 10.10.16 திங்கட் கிழமை நேரம் : மாலை 4 மணி. இடம் : வீரப்பன் சத்திரம்பேருந்து நிலையம் அருகில், ஈரோடு. மேற்கு மண்டல தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் !
அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம் ஈரோடு 24072016
அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயண திட்டமிடல் மற்றும் பேச்சுப் பயிற்சி ஆலோசனைக்கூட்டம். நாள் : 24.07.2016 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை. இடம் : பெரியார் JCP சர்வீஸ் சென்டர், சூரம்பட்டி வலசு,ஈரோடு. தலைமை : தோழர் பால்.பிரபாகரன்,பரப்புரை செயலாளர். முன்னிலை : தோழர் ரத்தினசாமி,அமைப்புச் செயலாளர். தோழர் திருப்பூர் துரைசாமி,பொருளாளர். பொருள் : 1) பரப்புரை பயணத்தில் பேசுவதற்கான செய்திகளை திட்டமிடல். 2) மந்திரமா?தந்திரமா? செயல் விளக்கம் குறித்து அறிதல். 3) பயணத்திட்டங்களை வகுத்தல். பரப்புரை பயண திட்ட பொறுப்பாளர்கள் மற்றும் பயணத்தில் கலந்து கொள்ளவிருக்கும் கழக தோழர்கள் அவசியம் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : பரப்புரை பயணத்தில் பேசுபவர்கள் தாங்கள் பேசவிருக்கும் செய்திகளை தயார் செய்து கொண்டு வரவும். தொடர்புக்கு : 98650113393 – 9842712444
திவிக நடத்தும் இரண்டு நாள் பயிலரங்கம் ஈரோடு 17042016
பயிலரங்கம் ! திராவிடர் விடுதலைக்கழகம் நடத்தும் 2 நாள் பெரியாரியல் பயிலரங்கம்- ( ஈரோடு ) இடம்: தோப்பு துரைசாமி தோட்டம்> காலிங்கராயன் அணைக்கட்டு> பவானி> (ராயல் தியேட்டர் இரண்டாவது வீதி, கந்தன் டெக்ஸ் ரோடு) நாள்: 17.04.2016 (ஞாயிறு) மற்றும் 18.04.2016 (திங்கள்) – காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை
இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும் – கருத்தரங்கம் ஈரோடு 12032016
இன்று (12.03.2016) ஈரோட்டில், ”உலக மகளிர் நாள் சிறப்புக் கருத்தரங்கம் !” நாள் : 12.03.2016,சனிக்கிழமை,மாலை 5.30 மணி. இடம் : யாளி ரெசிடென்சி அரங்கு,பிரப் சாலை,ஈரோடு. மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்தும் இக்கருத்தரங்கில் தமிழ்நாடு அறிவியல் மன்ற மாநில அமைப்பாளர் ஆசிரியர் தோழர் சிவகாமி அவர்கள் ”இந்துத்துவாவும் பெண்களின் உரிமைகளும்” எனும் தலைப்பிலும் புரட்சி விடியல் பெண்கள் மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் தமயந்தி அவர்கள் ”மதவெறியும் ஜனநாயக உரிமைகளும்” எனும் தலைப்பிலும் சிறப்புரையாற்றுகிறார்கள்.
இந்து பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டு தீர்மானங்கள்
மாநாட்டு தீர்மானங்கள் ! 08.11.2015 அன்று கழகதலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் : 1) பீகார் சட்டமன்ற தேர்தலில் பிரதமர் மோடியும் பாஜக பரிவாரங்களும் மதவாத வெறுப்புக் கருத்துக்களை முன்வைத்து வெற்றி பெற்று விடலாம் என திட்டமிட்ட முயற்சிகளை முறியடித்து நிதிஷ்குமார் தலைமையிலான சமூக நீதி சக்திகளுக்கு பெறும் வெற்றியை குவித்துள்ள பீகார் மக்களுக்கு வாழ்த்துக்களையும், மகிழ்ச்சிகளையும் இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 2) குறைந்த விலையில் நிறைந்த புரதச் சத்தை வழங்கும் மாட்டிறைச்சி உணவை கேரள மக்கள் விரும்பி உண்பது போல, தமிழர்களும் தங்கள் உணவுப் பழக்கமாகக் கொள்ள வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டில் மாட்டிறைச்சி உணவை முன்வைத்து நடக்கும் பொதுநிகழ்வுகளுக்கு தமிழக அரசின் காவல்துறை தடை விதிப்பதற்கும்,கெடுபிடி காட்டுவதற்கும் வன்மையான கண்டனத்தை இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. 3)...