ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலை-சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசு

n7
ஆந்திராவில் 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ.விசாரணையை தடுக்கும் ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காடவும்,ஆந்திர சிறையில் வாடும் சுமார் 2000 தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு.
15.07.2015 அன்று சென்னையில் ம.தி.மு.க. தலைமையகமான ‘தாயகத்தில்’ மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில்,
மக்கள் கண்காணிப்பகம் ஹென்றி டிபேன்,தமிழக மக்கள் வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனர் வேல்முருகன், விடுதலைசிறுத்தைகள் அமைப்பின் தோழர் பாலசிங்கம்,தமுமுக தலைவர் பேராசியர் ஜிவாஹிருல்லா,மார்க்ஸிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சியின் சார்பில் தோழர் வீரபாண்டியன்,இந்திய கம்னியூஸ்ட் கட்சி சார்பில் தோழர் பீமாராவ்,திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி,தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் தோழர் ஆனூர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பத்திரிக்கையாளர் சந்திப்பில் இந்த ஆலோசனைக்கூட்டத்தின் நோக்கம் குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் பேட்டியளித்தார்.
ஆந்திராவில் 20 கூலித்தொழிலாள தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ.விசாரனைக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை எதிர்த்து ஆந்திர அரசு ஆந்திர உயர்நீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து சி.பி.ஐ.விசாரணைக்கு உத்தரவிட்ட மனித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை தடுக்கிறது.
இந்த வழக்கில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் நீதிமன்றத்தில் ஆந்திர அரசை எதிர்க்கவில்லை. இந்நிலையில் ஆந்திர அரசுக்கு எதிராக 20 தமிழர்கள் படுகொலையில் சி.பி.ஐ விசாரணைக்கு பரிந்துரைத்த தேசிய மணித உரிமைகள் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற ”தமிழக அரசு,ஆந்திர அரசுக்கு எதிராக வழக்காட முன்வரவேண்டும்” என்றும்,
”ஆந்திர அரசால் கைது செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பிணை மறுக்கப்பட்டு சிறையில் வாடி வரும் சுமார் 2000 தமிழர்களின் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழக அரசை வலியுறுத்துவது என மதிமுக தலைமையில் நடைபெற்ற பல்வேறு கட்சி,அமைக்கள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கோரிக்கைகளை தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்து வலியுறுத்துவது என ஒருமனதாக முடிவெடுக்கப்ப்ட்டுள்ளது.
இதற்காக நேரில் சந்திக்க நேரம் ஒதுக்கித்தருமாறு இவ்வாலோசனைக்குழு தமிழக முதலமைச்சரை கேட்டுக்கொண்டுள்ளது

You may also like...

Leave a Reply