மயிலைப் பகுதி கழகம் எடுத்த கால்பந்து போட்டி – பெரியார் பிறந்த நாள் விழா

தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த நாள் விழா மயிலை கழகம் சார்பாக 27.9.2015 அன்று காலை 10 மணியளவில் செயின்ட் மேரீஸ் சாலையிலுள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் 3ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடைபெற்றது. போட்டியை ஜெ. அன்பழகன் (சட்ட மன்ற உறுப்பினர் தி.மு.க.) துவக்கி வைத்தார். போட்டியில் 16 அணிகள் பங்கேற்றன. இதனைத் தொடர்ந்து 28.92015 அன்று மாலை 6 மணிக்கு பெரியார் பிறந்த நாள் பொதுக்கூட்டம் மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பார்க் அருகே நடைபெற்றது.
ஆ. சிவா தலைமை வகிக்க, ஆ. பார்த்திபன், சி. பிரவீன் முன்னிலையில் இரா. மாரி முத்து வரவேற்புரையாற்ற சம்பூகன் குழு வினரின் இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
நா. நாத்திகன், ஆனந்தகுமார், கோவை இசைமதி ஆகியோர் ஜாதி ஒழிப்பு பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினர். கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, திரைப்பட இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் உரையாற்றினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினர். நிகழ்வின் முடிவில் கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு சிறப்புக் கோப்பைகளும் பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நாராயணன், இந்திரகுமார் நடுவராக இருந்து போட்டிகளை நடத்தினர். மாவட்ட செயலாளர் உமாபதி நிகழ்ச்சிகளை ஒருங் கிணைத்தார். பரணி நன்றி கூறினார். கழகத் தோழர்கள் அனைவருக்கும் மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் சிறப்பான மாட்டுக்கறி உணவை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 08102015 இதழ்

You may also like...