இந்துராஷ்டிரத்திற்குள் அடங்க மறுக்கும் தமிழ்நாடு (4) – பேராசிரியர் ஜெயராமன்
(01.02.2024 இதழில் வெளியான உரையின் தொடர்ச்சி) 1953இல் ஆந்திரா தனி மாநிலமாகப் பிரிந்தது. 1956-இல் கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகியவை மொழிவழி மாநிலங்களாக அமைகிறது. இந்த ஐந்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து தட்சிணப் பிரதேசமாக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு கூறியபோது, பெரியார் இதை கடுமையாக எதிர்த்து, தற்கொலைக்கு சமம் என்றார். திருவனந்தபுரத்தில் நேரு இதைப்பற்றி கேட்கும்போது “பெரியார் இதை எதிர்க்கிறார், ஏற்க முடியாது” என்று கூறினார் காமராசர். நேருவுக்கு பெரியார் என்றால் யாரென்று தெரியும். அதனால் சத்தமில்லாமல் அந்தத் திட்டத்தை கைவிட்டார். இப்படி பெரியார் சொன்னவைகள்தான் நீதிக்கட்சி ஆட்சி முதல் சட்டங்களாக ஆனது, பெரியார் சொன்னதுதான் காமராசர் ஆட்சியில் திட்டங்களாக மாறின. மக்களுக்கு கல்வியை கொடுங்கள் என்று காமராசரிடம் பெரியார் சொன்னபோது அதை அப்படியே மறுக்காமல் நிறைவேற்றினார் காமராசர். ஒவ்வொரு ஊருக்கும் ஒரு பள்ளிக்கூடம், ஐந்து மைல் தொலைவுக்கு ஒரு மேல்நிலைப்பள்ளிகள் வந்தன. அப்பொழுதுதான் எல்லாரும் படிக்க வந்தார்கள். மயிலாடுதுறை...
