அரிசி, பருப்புக்கு ஜிஎஸ்டி வரி: தவறான செய்திக்கு நிதியமைச்சர் மறுப்பு
அரிசி, தயிர் உள்ளிட்ட உணவுப் பொருட்கள் மீது ஜிஎஸ்டி வரி விதிக்க தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்தது என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் அளித் துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: அரிசி உள்ளிட்ட, பேக்கிங், லேபிள் செய்யப்பட்ட பல உணவுப் பொருட்கள் மீது சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிக்கப்பட்டது குறித்து பல்வேறு தவறான செய்திகள் உலவி வருகின்றன. ஆதலால் இந் நிகழ்வு குறித்த உண்மை நிலையை தெரிவிப்பது அவசியமாகும். சரக்குகள் மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் 45 வது கூட்டத்தில் முடிவு செய்தவாறு, பின்வரும் இனங்களை பரிசீலித்து, பரிந்துரைகளை அளித்திட அமைச்சர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. வரி விகி தங்களை எளிமைப்படுத்தி வரி கட்டமைப்பினை சீரமைத்தல். தற்போதைய வரி விகிதங்களை மறு ஆய்வு செய்து வரி வருவாயினைப் பெருக்குவதற்கான வழிமுறைகளை ஆராய்தல். இக்குழுவில் கர்நாடகா மாநில முதல்வர் ஒருங்கிணைப்பாளராக வும், பீகார், கோவா, கேரளம்,...