Category: குடி அரசு 1935

சொர்க்கம்

சொர்க்கம்

  சித்திரபுத்திரன் கேள்வி@ சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை ஒப்புக் கொள்ளுகின்றாயா? இல்லையா இரண்டில் ஒன்று சொல்லு. பதில்@ இவ்வளவு அவசரப்பட்டால் நம்மால் பதில் சொல்ல முடியாது. பந்தியில் உட்காரவே அனுமதி இல்லை என்றால் ஓட்டை இலை என்று சொல்லுவதில் பயன் என்ன? சொர்க்கலோகம் என்பது எந்தப் பூகோளத்தில் இருக்கிறது? கீழே ஆயிரக்கணக்கான மைல்களுக்கும் மேலே பதினாயிரக்கணக்கான லட்சக்கணக்கான மைல்களுக்கும் வானசாஸ்திரிகள் விவரம் கண்டுபிடித்து விட்டார்கள். எங்கும் சொர்க்கலோகம் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்படவில்லை. ஆகவே சொர்க்கலோகமே சந்தேகத்தில் இருக்கும்போது சொர்க்கலோகத்தில் கடவுள் இருக்கிறாரா என்றால் என்ன பதில் சொல்லுவது? கே.@ அப்படியானால் மேல்லோகம், வைகுந்தம், கைலாயம், பரமண்டலம் முதலிய எதுவுமே இல்லை என்கின்றாயா? பதில்@ நான் இவைகளையெல்லாம் தேடித் தேடிப் பார்த்து இல்லை என்று சொல்ல வரவில்லை. பூகோள சாஸ்திரம், வான சாஸ்திரம், விஞ்ஞான சாஸ்திரம் ஆகிய எதற்கும் இந்த லோகங்களில் எதுவுமே தென்படவில்லையே என்றுதான் மயங்குகிறேன். கே.@ அப்படியானால் அண்ட,...

மே விழாவும் ஜூபிலி விழாவும்

மே விழாவும் ஜூபிலி விழாவும்

    மே மாதம் முதல் தேதியில் மே தினக் கொண்டாட்டமும், மே மாதம் 6ந் தேதி மன்னர் ஜூப்பிலியும் தமிழ்நாட்டில் ஏறக்குறைய ஒன்று போலவே எங்கும் கொண்டாடப்பட்டிருக்கும் விஷயம் தினசரிப் பத்திரிகைகளில் பரக்கக் காணலாம். மே தின விழாவானது உலகம் பாடுபட்டு உழைக்கும் மக்களின் ஆட்சியின் கீழ் வர வேண்டும் என்று ஆசைப்பட்டுக் கொண்டாடுவதாகும். ஜூப்பிலி விழா இன்று ஆட்சி புரியும் அரசரின் ஆட்சியைப் பாராட்டியும் அவரது ஆட்சிக்கு கால் நூற்றாண்டு ஆயுள் ஏற்பட்டதை பற்றி ஆனந்தமடைந்தும் இனியும் நீடூழி காலம் இவ்வாட்சி நீடிக்க வேண்டும் என்று ஆசைபட்டும் கொண்டாடியதாகும். இந்தியாவின் பிரதிநிதித்துவ சபை என்று சொல்லப்படும் இந்திய தேசீயக் காங்கிரசானது மேற்கண்ட இரண்டு தத்துவங்களுக்கும் விரோதமான மனப்பான்மையைக் கொண்டது. எப்படியெனில் முறையே (சூத்திரர்) தொழிலாளி, (பிராமணர்) முதலாளி அல்லது அடிமை எஜமான் என்கின்ற இரண்டு ஜாதிகள் பிறவியின் பேரிலேயே இருக்க வேண்டும் என்றும், அன்னிய ஆட்சி என்பதான பிரிட்டிஷ்...

அறிக்கை

அறிக்கை

  நமது பத்திரிகையில் ஒவ்வொரு ஊரிலுள்ள பார்ப்பன, பார்ப்பன ரல்லாத உத்தியோகஸ்தர்களின் எண்ணிக்கையைக் கேட்டிருந்தோம். அதன்படி கோபி, திருச்சங்கோடு, சூலூர் முதலிய இன்னும் பல ஊர்களிலிருந்து எண்ணிக்கை லிஸ்டு வந்து இருக்கிறது. இவ்வாரம் திருச்செங்கோட்டிலிருந்து வந்த செய்தியை மட்டும் பிரசுரித்திருக்கிறோம். அடுத்த வாரத்திலிருந்து தொடர்ச்சியாக மற்ற ஊர் செய்திகளைப் பிரசுரிக்கப்படும். பர். குடி அரசு  அறிக்கை  05.05.1935

மதம் போய் விடுவதால் கடவுள்  ஒழிந்துவிடாது

மதம் போய் விடுவதால் கடவுள் ஒழிந்துவிடாது

  ஓர் சமதர்மி சென்ற வாரத்திற்கு முந்திய வாரம் குடி அரசில் ஜாதிகள் ஒழிக்கப் படுவதினால் மதம் ஒழிந்து விடாது என்பதாக விளக்கி இருந்தேன். இவ்வாரம் இக்கட்டுரையில் மதம் போய்விடுவதால் கடவுள் ஒழிந்து விடாது என்பதைப் பற்றி எழுத ஆசைப்படுகிறேன். முதலில் மதம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். மதம் என்பதைப் பற்றி இருவிதமான அபிப்பிராயங்கள் மக்கள் உலகில் நிலவி வருகின்றன. ஒன்று: மதங்கள் என்பவைகள் பெரிதும் கடவுள்களாலும், கடவுளைக் கண்ட பெரியார்களாலும், கடவுள் குமாரர்களாலும், கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்களாலும், கடவுள் அவதாரங்களாலும், கடவுள் தன்மை கொண்ட ஆழ்வார்கள் நாயன்மார்களாலும் ஏற்பட்டவை என்றும், அம்மதங்களுக்கு ஆதாரமான வேதங்கள் என்று சொல்லப்பட்டவைகள் அக்கடவுள்களின் வாக்குகள் என்றும், கடவுள்களின் அபிப்பிராயங்கள் என்றும், கடவுள் அருள் பெற்றவர்களால், தீர்க்கதரிசிகளால் சொல்லப் பட்டவைகள் என்றும், கடவுள் கட்டளையின் மீது வெளியாக்கப்பட்டவை என்றும், அசரீரியாக ஆகாயத்தில் இருந்து சப்த மூலமாக வந்தவைகள் என்றும், அவை எக்காலத்துக்கும்...

வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்

வெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை மாகாணத் தலைவர்கள் அபிப்பிராயம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தீர்மானம் தென்னாட்டு பார்ப்பனரல்லாதார் மக்களை ஏமாற்றுவதற்காக தோழர் ராஜகோபாலாச்சாரியார்                 ஜப்பல்பூரில் 24ந் தேதி கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொள்ளப் பார்த்தார். அத் தீர்மானமாவது@ “”இந்திய சட்டசபையில் காங்கிரஸ் கட்சி மெம்பர்கள் பல கஷ்டங் களைச் சமாளித்து வெற்றிகரமாக செய்த வேலைகளைக் கண்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி திருப்தி அடைகிறது” என்பதாகும். இத் தீர்மானத்தைப் பற்றி பல மெம்பர்கள் பேசுகையில் தெரிவித்த அபிப்பிராயங்களாவன. சர்தார் சார்துல் சிங் “”சுயராஜ்ஜியம் பெருவதற்காக காங்கிரஸ் அசெம்பிளிக்குச் செல்லவில்லை” என்று பேசி இருக்கிறார். ஆனால் தேர்தலின்போது ஓட்டர்களுக்கு என்ன சொல்லி ஓட்டு வாங்கப்பட்டது என்பதை யோசித்தால் காங்கிரஸ் சட்டசபைக்குப் போனது வீண் என்பது புலப்பட்டுவிடும். “”சுயராஜ்ஜியம் வேண்டுமானால் சத்தியமூர்த்தி அய்யருக்கும், சாமி வெங்கிடாசலம் செட்டியாருக்கும் ஓட்டு போடுங்கள்” என்று கேட்டார்கள். இப்போது சுயராஜ்ஜியத்துக்கும் அசெம்பிளிக்கும் சம்பந்தமில்லை என்று ஆகிவிட்டது....

பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

பிரிட்டிஷ் ஆட்சியா? பார்ப்பன ஆட்சியா?

  இந்தியாவில் பிரிட்டிஷ் ஆக்ஷி ஏற்பட்டு 200 வருஷ காலத்தில் இந்தியர்களுக்கு ஏற்பட்ட நன்மை தீமைகள் என்பவை எவ்வளவோ இருந்தாலும் பிரிட்டிஷாரது ஆக்ஷியின் கொள்கைகள் பழய கால ஆரிய அரசர்கள் என்பவர்களின் ஆரிய மத சாஸ்திரங்கள் மனுநீதி தர்மங்கள் ஆகியவைகள் போல் அல்லாமல் “”இந்தியாவின் சகல பிரஜைகளையும், சமமாய்ப் பாவித்து நடத்துவது” என்கின்ற ஒரு கொள்கையை முக்கியமாய்க் கொண்டிருப்பதாகச் சொன்னது இந்திய மக்களுக்கு “”வரப்பிரசாதம்” போன்றது என்பதை நடுநிலைமைப் புத்தி கொண்ட எந்த மனிதனும் மறுக்க மாட்டான். ஆனால் அது காரியத்தில் கிரமமாய் நடந்து வந்திருக்கிறதா என்பதை எந்த நடுநிலைமைக்காரனும் ஒப்புக் கொள்ளத் தயங்கியே தீருவான். அப்படி அக் கொள்கை காரியத்தில் நடவாததற்குக் காரணம் பிரிட்டிஷாராய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது மேல் ஜாதிக்காரர்கள் என்று தங்களைச் சொல்லிக் கொண்டு சகல பிரஜைகளையும் சமமாய் மதிப்பது தோஷமானது, பாவமானது என்கின்ற நீதியை பின்பற்றுகின்ற  பார்ப்பனர்களாக இருந்தாலும் இருக்கலாம். எப்படி இருந்தாலும் சகல பிரஜைகளையும்...

சந்தேகக் கேள்விகள்

சந்தேகக் கேள்விகள்

  சரியான விடைகள் சித்திரபுத்திரன் வினா:  கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி? விடை:  ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் மதத்தின் பெயரால் குடிக்காதே. வினா:  மகம்மதியனாவதில் என்ன கெடுதி? விடை: ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே. வினா:  உண்மையான கற்பு எது? விடை:  தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கியிருப்பதே உண்மையான கற்பு. வினா:  போலிக் கற்பு என்றால் என்ன? விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாத போது இணங்கியிருப்பதே போலிக் கற்பு. வினா:  மதம் என்றால் என்ன? விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்து வதுந்தான் மதம். வினா:  பண்டிகை நாட்களில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் ஏன் “”லீவ்” கொடுக்கப்படுகிறது? விடை:  பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் மீதி வைக்காமல் பாழாக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான். வினா:  பெண்களைப் படிக்கக்கூடாதென்று ஏன் கட்டுப்படுத்தினார்கள்? விடை: அவர்களுக்கு அறிவு இல்லை; சாமர்த்தியமில்லை  என்று சொல்லிச் ...

ஏண்டா படிக்கவில்லை?

ஏண்டா படிக்கவில்லை?

  ஆசிரியர்:  அடே! கண்ணப்பா! ஏண்டா பாடம் படித்துக்கொண்டு வரவில்லை? மாணவன்:  நீங்கள் நேற்று சொன்னபடிதான் சார் நான் செய்தேன். ஆசிரியர்:  என்னடா சொன்னேன்? மாணவன்:  நேற்று சொல்லிக்கொடுத்த பாட்டில் உள்ளபடி நடந்து கொண்டேன். ஆசிரியர்:  என்ன  பாட்டு? மாணவன்:   பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்  இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத்தமிழ் மூன்றும் தா! என்றுச் சொல்லிக் கொடுத்தீர்கள்.  அதன்படி ராத்திரி, பால், தேன், சர்க்கரைப்பாகு, முந்திரிப்பருப்பு எல்லாம் பிள்ளையாருக்கு வைத்துப்படைத்தேன். ஆகையால் பாடம் வராதது என்  குற்றம் அல்ல சார்! ஆசிரியர்:  அடா முட்டாள்  பயலே ! இது மாத்திரம் போதுமாடா? புஸ்தகத்தைப் பார்த்துப் படித்தால்தாண்டா பாடம் வரும். மாணவன்:  புஸ்தகத்தைப் படித்தால்தான் பாடம் வரும் என்றால், பிள்ளையாரை ஏன் சார் கும்பிட வேண்டும்? அவரை  வணங்கினால்  ஆகாத  காரியம்  எல்லாம்  ஆய்விடும்  என்று சொன்னீர்களே! அதெல்லாம் பொய்தானே!...

அறிவின்  பயன்

அறிவின்  பயன்

  இப்படி மதிக்கப்படுவது சரியா தப்பா என்பது விவகாரத்திற்கு உரியதானாலும், இப்பகுத்தறிவை மனிதன் உடையவனாயிருப்பதின்  காரணமாய் மனித ஜீவனுக்கு ஏதாவது உண்மையான சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட்டிருக்கின்றதா என்று பார்ப்போமேயானால், இல்லை என்றுதான் சொல்லவேண்டியதிருக்கிறது. அதுவும் பகுத்தறிவு ஏற்பட்ட தாலேயே மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் ஏற்பட இடமில்லாமல் போய்விட்டது என்று கூட சொல்லவேண்டியது இருக்கிறது.  ஆனால் இதைச் சரியென்று யாராவது ஒப்புக்கொள்ளமுடியுமா என்று பார்த்தால் பகுத்தறிவின் காரணமாக மனிதனுக்கு சுகமும், திருப்தியும் இல்லையென்று சொல்லுவது நியாயமாகாது என்றாலும் பிரத்தியக்ஷத்தில் அப்படித்தான் காணப்படுகின்றது. ஆகவே இதற்கு ஏதாவது காரணம் இருந்தாகவேண்டும் அல்லவா? அந்தக் காரணம் என்னவென்றால் மனிதன் தன் பகுத்தறிவைச் சரியானபடி பயன்படுத்தாமலும், பகுத்தறிவுக்கு விரோதமான விஷயங்களை மனிதன் ஏற்றுக்கொள்வதாலும் மனித சமூகத்துக்குச் சந்தோஷமும், திருப்தியும் இல்லாமல் போய்விட்டது. மனிதன் உலக சுபாவத்தையே தப்பாய் நிர்ணயித்துக்கொண்டு, மனித ஜன்மமே சுகமனுபவிக்க ஏற்பட்டதென்றும், வாழ்க்கையே துக்கமென்றும், சம்சாரமானது “”சாகரம்” “”துக்கம்”  என்று கருதுவதன் மூலம்...

நமது பத்திரிகை

நமது பத்திரிகை

  குடி அரசுப் பதிப்பகத்தினின்று “”பகுத்தறிவு” என்ற பெயரால் ஒரு மாதப் பத்திரிகை வெளியிட வேண்டுமென்ற அபிப்பிராயம் 6, 7 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது.  காலஞ்சென்ற ஈ.வெ.ரா. நாகம்மாள் அவர்கள் 1928ம் ஆண்டிலேயே அரசாங்கத்தில் ரிஜிஸ்டர் செய்து “”பகுத்தறிவு”  மாதப்  பத்திரிகையைப்  பிரசுரஞ்  செய்ய அனுமதியும் பெற்றிருந்தார்கள் என்பதைக்  “”குடி அரசு”  வாசகர்கள் நன்கறிவர்.  ஆனால் பலப்பல காரணங் களால் அம்மையாரின் முயற்சி தடைப்பட்டுப் போய்விட்டது. தமிழ் மக்களிடையே அதிதீவிரமாக அறிவியல் கொள்கைகளைப் பரப்பவேண்டுமென்றும்,  அவ்வாறு பரப்புவதற்கு ஓர் தனிப் பத்திரிகை,  வேறு எவ்வித நோக்கமுமின்றி அறிவியற் கொள்கைகளைப் பரப்பும் நோக்கம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஓர் நல்ல ஸ்தாபனத்தினின்று பிரசுரிக்கப்பட்டு தொண்டாற்றி வரவேண்டும் என்ற அபிப்பிராயம் நமக்கு  மட்டுமல்ல  பல அறிஞர்களுக்குமிருந்து வந்தது. எனவே 1935ம் ஆண்டு மேமாதம் “பகுத்தறிவை’ நமது பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தினின்று வெளியிட வேண்டு மென்று தீர்மானிக்கப் பெற்று அவ்வாறே இப்பொழுது வெளி வந்திருக்கின்றது....

“”ஸ்ரீராம” நவமி

“”ஸ்ரீராம” நவமி

  ஸ்ரீராம நவமி உர்ச்சவத்தில் தமிழ்நாட்டு மக்கள் கலந்து கொள்வதைப் போன்ற சுயமரியாதை அற்ற தன்மை வேறு ஒன்று இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஸ்ரீராம நவமி என்பது ராமன் பிறந்ததை கொண்டாடுவதாலும், ராமன் பிரவியைப் பற்றி நாம் இப்போது ஏதும் பேச வரவில்லை. ராமன் சம்பந்தப்பட்டதாகச் சொல்லப்படும் கதையின் யோக்கியதை என்ன? அவன் எப்படிப்பட்டவன்? அவனுக்கும் தமிழ் மக்களாகிய திராவிட மக்களுக்கும் இருந்து வந்த சம்பந்தம் என்ன? என்பவைகளைப் பற்றி தமிழ்மக்கள் சிந்திக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இவ்வாரம் 22ந் தேதி தமிழ்நாடு பத்திரிகைகளில் காணப்படும் சேதிகளில் ஒன்று தோழர் ஜவார்லால் நேருவும் ராமாயணத்தைப் பற்றி எழுதிய ஒரு குறிப்பாகும். அதில் ராமன் ஆரியன் என்றும், ராமாயணத்தில் வானரர் என்று சொல்லப்படுபவர்கள் திராவிட மக்கள் என்றும் எழுதி இருக்கிறார். ராமன் திராவிடப் பெண்ணாகிய தாடகையை பெண் என்று கூட பாராமல் கொன்றவன். ராவணன் தங்கையாகிய ராஜ குடும்பத்தைச் சேர்ந்த சூர்ப்பநகையை மூக்கையும்,...

காரைக்குடியில் சு.ம. திருமணம்

காரைக்குடியில் சு.ம. திருமணம்

  பெண்கள்  நிலையம்  அவசியம் தோழர்களே! திருமணத்திற்கு பிறகு திருமணத்தை பாராட்டிப் பேசிய அநேகர் பல அரிய விஷயங்களை எடுத்துச் சொல்லி இருப்பதோடு அவற்றிலிருந்து பல புதிய விஷயங்களும் வெளியாகியிருக்கின்றன. இத் திருமண விஷயத்தில் தம்பதிகளுக்கு அநேக இடையூறுகளும் பல தொந்தரவுகளும் ஏற்பட்டிருப் பதாகத் தெரிகிறது. பெண் ஒரு மாத காலமாக தோழர் நீலாவதி அம்மாள் வீட்டில் இருந்திருக்கிறது என்பதும், பெண்ணைச் சேர்ந்தவர்கள் பெண்ணை திருப்பிக் கொண்டு போவதற்கு பலவிதமான தொந்தரவுகள் செய்து இருப்பதாகவும் பிறகு அங்கிருந்து பெண் வேறு இடத்திற்கு கொண்டு போகப்பட்டு ஒரு வாரம் வரையிலும் மறைத்து வைக்க வேண்டியிருந்தது என்பதும், தோழர் ராம சுப்பிரமணியம் பேசியதிலிருந்து தெரிய வந்தது. அதுபோலவே மணமகன் விஷயத்தில் மணமகனைச் சேர்ந்தவர்கள் திருமணம் நடக்கவொட்டாமல் செய்வதற்காக வேண்டிய முயற்சிகள் செய்யக் கருதி அதற்காக கோர்ட்டு நடவடிக்கைகள் நடத்தவும் தடையுத்தரவு வாங்கவும் முயற்சித்தார்கள் என்பதும் ஒன்றும் முடியாது போனதும், அதன் பிறகு மாப்பிள்ளையை சுமார்...

புதிய

புதிய

  “”தேசத் துரோகிகள்” நேற்று வரை காங்கிரசின் சர்வாதிகாரியாய் இருந்த தோழர் ராஜேந்திர பிரசாத்திடம் சார்ஜ் ஒப்புக் கொடுத்த தோழர் ஆனே அவர்கள் இன்று தேசத் துரோகக் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டார். அதாவது ஜயகருடன் சேர்ந்து விட்டாராம். அது மாத்திரமல்லாமல் ஆனே அவர்கள் வைசிராய் பிரபுவின் விருந்துக்குச் சென்று விட்டாராம். கடைசியாக ஒத்துழைக்கவும் போகிறாராம். இந்தக் காரணங்களால் அவர் தேசத் துரோகியாகி விட்டார். தேசத் துரோகிகளுக்கு சன்னதுகள் நமது காங்கிரஸ்காரர்களிடம் தான் இருக்கிறது போலும். காங்கிரஸ்காரர்கள் சட்டசபைக்குச் சென்று உத்தியோகம் ஏற்று சீர்திருத்தங்களை நடத்திக் கொடுப்பது என்பது ஒத்துழைப்பு அல்லவாம். சரணாகதி அல்லவாம். ஏனெனில் ஒத்துழைப்புக்கு அர்த்தம் சொல்லும் அகராதி காங்கிரஸ்காரர்களுடையது. அதிலும் சென்னைப் பார்ப்பனர்களுடையவும், அவர்களுடைய பத்திரிகைகளுடையவும் அவர்களது கூலிகளுடையதுமாய் இருப்பதால் அவர்கள் பார்த்து எதை வேண்டுமானாலும் ஒத்துழைப்பு என்று சொல்லி விடலாம்  எதை வேண்டுமானாலும் ஒத்துழையாமை என்றும் சொல்லி விடலாம். ஆகவே தேசத் துரோகிகளுக்கு முத்திரை இடும் அதிகாரம்...

மே தினக் கொண்டாட்டம்

மே தினக் கொண்டாட்டம்

  சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும்  மே மாதம் 1ம் தேதியை “”தொழிலாளர் தின”மாகக் கொண்டாடி வருகிறார்கள். ரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள். பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (உணூஞ்ணிtச்ஞிணூச்ஞிதூ) அதாவது தொழிலாளர் குடிஅர (கணூணிடூஞுtச்ணூடிச்ண ஞீஞுட்ணிஞிணூச்ஞிதூ) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது. சு.ம. வீரர்களே!...

சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்

சத்தியமூர்த்தியாருக்கு பிரைஸ்

  தோழர் எஸ். சத்தியமூர்த்தி அய்யர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இருந்து சென்னைக்குப் பிழைக்க வந்தவர். சரோஜினி அம்மையார் தலைமையில் நடந்த காஞ்சிபுரம் அரசியல் மகாநாட்டில் பெசண்டம்மையாரை வைததின் மூலம் முதல்முதலாக தலைகாட்டப்பட்டவர். அவரது வசவின் பெருமையை அறிந்து “இந்து’ “சுதேசமித்திரன்’ பத்திராபதிபர்களால் விலைக்கு வாங்கப்பட்டு அப்பத்திரிகைகளின் மூலம் தூக்கிவிடப்பட்டு பிரபலமடைந்தவர். அய்யர்  அய்யங்கார் சண்டையில் அய்யங்கார்களின் ஆயுதமாக இருந்து தோழர்கள் சி.பி. அய்யர், சீனிவாச சாஸ்திரி, பி.என். சர்மா, இந்தியன் ரிவ்யூ நடேசன் ஆகியவர்களை வைது ஐயங்கார்களால் பணமுடிப்பு முதலியவை பெற்று பெரிய அரசியல்வாதியாகி அப்புரம் ஒத்துழையாமையையும், நிர்மாணத் திட்டத்தையும் காரியத்தில் நடை பெருவதை ஒழிக்க இந்து, மித்திரன் பத்திராதிபர்கள், சத்தியமூர்த்தியை உபயோகித்துக் கொண்டதின் மூலம் அவர் எல்லா இந்திய அரசியல்வாதியாக விளம்பரம் பெற்று சுயராஜ்ஜியக் கட்சியால் அரசியல் தலைவர்கள் கூட்டத்தில் சேர்க்கப்பட்டு, இப்போது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முதல் வரிசையில் “”முதல்” ஆளாக தன்னை செய்து கொண்டு விளம்பரமும் பெற்று...

100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?

100க்கு 50 கூட பார்ப்பனரல்லாதார் கூடாதா?

  திருநெல்வேலி ஹிந்து காலேஜ்க்கு மதுரைத் தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரு லக்ஷ ரூபாய் தர்மமாகக் கொடுக்க முன் வந்து இருக்கிறார். இது அந்தக் காலேஜ் சாகுந் தருவாயில் இருப்பதைக் காப்பாற்ற இந்தச் சமயம் உயிர்ப் பிச்சை கொடுப்பதுபோல் ஆகும். இந்தப் பேருதவிக்கு தோழர் திரவியம் பிள்ளை அவர்கள் ஒரே ஒரு தயவைத்தான் நிர்வாகிகள் இடமிருந்து மாத்திரம் எதிர்பார்க்கிறார். அதாவது பள்ளி உபாத்தியாயர்களில் பகுதிப் பேர் பிரின்சுபால் உள்பட பார்ப்பனரல்லாதாராய் இருக்க வேண்டும் என்பதே. இதை தேசீயப் பத்திரிகை என்று வேஷம் போட்டுக் கொண்டு வாழும் பத்திரிகைகள் ஆ÷க்ஷபிக்கின்றன. ஆனால் இவை மனப்பூர்வமாக ஆட்சேபிப்பதாக நாம் நம்பவில்லை. பார்ப்பன ஆதிக்கத்துக்கு பயந்தே ஆட்சேபிக்கின்றன போலும். தோழர்கள் சிவசாமி அய்யர், வி. கிருஷ்ணசாமி அய்யர் முதலிய பல பார்ப்பனர்களால் நடத்தப்படும் பள்ளிக்கூடங்களில் எத்தனை பார்ப்பனரல்லாத உபாத்தியாயர்கள் இருக்கிறார்கள் என்பது இந்த பத்திரிகைக்காரர்களுக்கு தெரியாதா என்று கேட்கின்றோம். யாதொரு காரணமும் இல்லாமல் சிவசாமி...

பெண்கள் நிலையம்

பெண்கள் நிலையம்

  பெண்கள் நிலையம் என்பது பற்றி தோழர் இராகவன் அவர்கள் ஒரு அறிக்கை குடி அரசில் வெளியிட்டிருந்தார். அதைப் பற்றி பல தோழர்கள் நம்மை நேரிலும், கடித மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பல கேள்விகள் கேட்டு இருப்பதோடு தங்கள் தங்கள் அபிப்பிராயங்களையும், ஆதரவுகளையும் தெரிவித்து இருக்கிறார்கள். அதற்காக மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றோம். சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய நோக்கங்களில் பெண்கள் விடுதலையும், பெண்கள் முன்னேற்றமும் ஒன்று என்பது இயக்கத்தை அறிந்த தோழர்கள் யாவரும் உணர்ந்ததேயாகும். இயக்கத்தின் நோக்கத்தைக் குறிப்பிடும் போதெல்லாம் இதை தெரிவித்தே வந்திருக்கிறோம். இந்திய நாட்டில் பெண்கள் சகல துறையிலும் தீண்டப்படாத மக்கள் அடைந்து வரும் கஷ்டத்தையும், இழிவையும், அடிமைத்தனத்தையும்விட அதிகமாகவே அனுபவித்து வருகிறார்கள். இக்கொடுமைகளாலும், குறைபாடுகளாலும் பெண்கள் சமூகத்துக்கு ஏற்படும் கெடுதியைவிட ஆண்கள் சமூகத்துக்கே அதிகக் கெடுதி ஏற்பட்டு வருகின்றது. பெண்களை அடிமையாக வைத்து இழிவாய் நடத்துவதின் பயனாய் ஆண்களுக்கு ஒரு அளவு நன்மை இருக்கின்றது என்று மேலெழுந்தவாரியாய் தெரிகின்றதே...

யார் மாறிவிட்டார்கள்?

யார் மாறிவிட்டார்கள்?

  யார் இழி மக்கள்? சுயராஜ்யம் சூட்சியேயாகும் சென்ற வாரம் குடியரசில் “”காங்கிரஸ் ஒரு வியாதி” என்பதாகப் பெயர் கொடுத்து ஒரு தலையங்கம் எழுதி காங்கிரசானது ஆரம்ப கால முதல் இது வரையிலும் சிறப்பாக காந்தி அயனத்திலும் மக்களை எப்படி ஏமாற்றமடையச் செய்து வந்திருக்கிறது என்பதையும் அதனால் இதுவரையில் யாதொரு நன்மையும் நாட்டுக்கோ, மனித சமூகத்துக்கோ ஏற்படவில்லை என்பதையும் அவ்வளவோடு அல்லாமல் கிரமமாகவும், இயற்கையாகவும் ஏற்பட வேண்டிய முற்போக்குகளுக்கெல்லாம்கூட முட்டுக்கட்டையாய் இருந்து வந்திருப்பதுடன் உலக நாகரீகத்தில் நாட்டை ஒரு கால் நூற்றாண்டுக்குப் பின் தள்ளி விட்டது என்பதும் விளங்க எழுதி இருந்தோம். மற்றும் அதே தலையங்கத்திலேயே காங்கிரஸ் பாமர மக்களை வஞ்சித்ததைப் பற்றியும், அது பணக்காரர்களுக்கும், படித்துவிட்டுப் பட்டம் பதவி பெற ஆசைப்படும் அரசியல் வேஷக்காரருக்கும், சோம்பேறியாய் இருந்து கொண்டே ஊரார் உழைப்பில் வயிறு வளர்த்து வாழ்க்கை நடத்த இருக்கும் பார்ப்பனர்களுக்கும் எவ்வளவு தூரம் கையாளாக இருந்து துணை புரிந்து வந்திருக்கின்றது...

   கடனுக்காக சிறையில்லை?

  கடனுக்காக சிறையில்லை?

  கடனுக்காக சிறைக்கனுப்பும் முறையை ரத்து செய்வதற்காக மைசூர் சட்டசபை மெம்பர் ஒருவர் ஒரு மசோதா கொண்டு வந்திருக்கிறார். திருவாங்கூர் சமஸ்தான கெஜட்டில் விவசாயிகள் பாதுகாப்புக்காக சர்க்கார் வெளியிட்டுள்ள விளம்பரம் ஒன்று பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. அதன் சாரமாவது@ இந்த அறிக்கையானது 3 மாத காலத்திற்கு அனுஷ்டானத்திலிருந்து வரும். இதன்படி பந்தக டிக்ரிகளையாவது, அல்லது விவசாயிகள் மீது ஏற்பட்டுள்ள வேறு டிக்ரிகளையாவது  3 மாத காலத்திற்கு நிறைவேற்றி வைக்கக் கூடாதென்று கவர்ன்மெண்டார் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், 6 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டுள்ள டிக்ரிகளை நிறைவேற்றி வைப்பதாவது, அல்லது விவசாயிகளின் ஜங்கம சொத்துக்களை ஜப்தி செய்வதையாவது இது பாதிக்காது. அதனுடன் காலாவதிக் கணக்கில் இந்தக் காலம் சேராதென்றும் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள். விளைபொருள்களின் விலைவாசி மிகவும் குறைவாக இருக்கும் இந்தக் காலத்தில் விவசாயிகளுடைய நிலத்தை ஜப்தி செய்து ஏலத்திற்கு கொண்டு வருவதையோ, அல்லது அவர்களை வாரண்டில் பிடிப்பதையோ தடுக்க வேண்டுமென்பதே இந்த விளம்பரத்தின் நோக்கமாகக் காண்கிறது. குறிப்பு@ நமது...

   வேண்டுகோள்

  வேண்டுகோள்

  சுயமரியாதை இயக்க கிளைச் சங்கத்தாரும், தென் இந்திய நல உரிமைச் சங்க கிளைச் சங்கத்தாரும் தயவு செய்து அந்தந்த முக்கிய பட்டணங்களிலுள்ள நீதி நிர்வாகப் போலீசு, போஸ்டாபீசு முதலிய எல்லா உத்தியோகஸ்தர்களிலும், குமஸ்தாக்களிலும் பார்ப்பனர்கள் எவ்வளவு பேர் பார்ப்பனரல்லாதார் எவ்வளவு பேர் இருந்து வருகிறார்கள் என்பதையும் வக்கீல்கள் எவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்பதையும் பற்றிய லிஸ்டு ஒன்றை குடி அரசு பத்திரிகைக்கு அனுப்பிக் கொடுக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதை தயவு செய்து கவனிக்க வேண்டுகிறோம். குடி அரசு  வேண்டுகோள் 21.04.1935

ஜாதியை ஒழிப்பதால்  மதம் அழிந்து விடுமா?

ஜாதியை ஒழிப்பதால் மதம் அழிந்து விடுமா?

  ஓர் சமதர்மி இந்துக்களுக்குள் இன்றைய பழக்கங்களில் உள்ள ஜாதிப் பிரிவுகளுக்கு இந்து மதத்தில் ஏதாவது ஆதாரமிருக்கின்றதா என்று பார்ப்போமானால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்து வேதத்தில் பிராம்மணன் பிராமணரல்லாதார் என்கின்ற ஜாதிகள் தான் காணப்படுகின்றது. ருக் வேதத்தில் ஓரிடத்தில் நான்கு சாதிகள் கூறப்பட்டிருப்பதாகவும், அதுவும் இடையே பிற்காலத்தாரால் நுழைக்கப்பட்டதென்றும் ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். அந்த இரண்டு ஜாதியும் எப்படித் தெரிகின்றது என்று பார்ப்போமே யானால் பிராமணர்கள் இந்திரன் முதலிய தேவர்களைச் செய்யும் பிரார்த்தனைகளில் தஸ்யுகள் என்ற ஒரு சமூகம் அந்த பிராமணர்களுக்கு விரோதமாய் இருந்து அவர்களைத் துன்பப்படுத்துவதாகவும் அவர்கள் பிராமணர்களுடைய சுகபோகங்களுக்கு விரோதமாய் இருப்பதாகவும், ஆதலால் அந்த தஸ்யூகளை அழிக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பதே பெரிதும் அந்தப் பிரார்த்தனையில் இருந்து வருவதால் அப்பிரார்த்தனைகளே வேதத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதால் வேத காலத்திலும் வேத ஆதாரத்திலும் இந்தியாவில் ஆரியர், ஆரியர் அல்லாதார் என்கின்ற இரண்டு ஜாதிகள் மாத்திரமே இருந்ததாக விளங்குகின்றது. ஆகவே...

வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?

வக்கீலும் வட்டிக்கடைக்காரனும் பொதுநல சேவைக்கு லாயக்கானவர்களா?

  இந்திய நாட்டில் பொதுநல சேவை, ஜனப் பிரதிநிதித்துவம் என்பவை எல்லாம் 100க்கு 99 பாகம் வக்கீல் தொழில் செய்கின்றவர்களிடமும் பண லேவாதேவிக்காரர்களிடமும் தான் இருந்து வருகின்றன. வக்கீல்கள் என்பவர்கள் தம் தொழிலை நாணையம் ஒழுக்கம் என்பவைகளை ஒதுக்கி வைத்துவிட்டு எப்படி நடந்தால் பணம் சம்பாதிக்கலாம் என்கின்ற முறையையே முதலாக வைத்து வாழ்க்கை நடத்தும் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். இந்த தொழிலில் வெற்றி பெறுவதற்கும், விர்த்தி அடைவதற்கும் ஆகவே இவர்கள் பொதுநல சேவை என்கின்ற வேஷத்தை கையாள வேண்டியவர்களாகிறார்கள். இவர்களில் யாருக்காவது தற்செயலாக வக்கீல் தொழிலில் கிடைக்கும் ஊதியத்தைவிட இந்தப் பொதுநல சேவை வேஷத்திலேயே முழு நேரத்தையும் செலவழிப்பதின் மூலம் அதிக ஆதாயம் கிடைப்பதாய் இருந்தால் அப்படிப் பட்டவர்கள் வக்கீல் தொழிலை விட்டு விட்டு “”பொதுநல சேவைக்காரர்களாகவே” ஆகி விடுகிறார்கள். ஆன போதிலும் இவர்களது வக்கீல் தொழிலுக்காக தங்களை தகுதியாக்கிக் கொள்வதற்குப் பயன்படுத்திக் கொண்ட யோக்கியதைகள் இவர்கள் பொதுநல சேவை வேஷம் போட்டுக்...

காங்கிரஸ் ஒரு வியாதி

காங்கிரஸ் ஒரு வியாதி

  இந்திய தேசீய காங்கிரஸ் என்பது இந்தியாவுக்கு ஏற்பட்ட ஒரு வியாதியேயாகும். அது ஆரம்பித்த காலம் முதல் மனித சமூக முற்போக்கைத் தடை செய்து கொண்டே வருகிறது. அது ஏற்பட்ட இந்த 50 வருஷ காலத்தில் இந்திய நாடு பிற்போக்கடைந்திருக்கிறது என்று கூட சொல்ல வேண்டும். முதலில் காங்கிரசை ஏற்படுத்தியவர்களது நோக்கம் படித்தவர் களுக்குப் பெரிய பெரிய உத்தியோகம் வேண்டும் என்பதாக இருந்தது என்றாலும் அது நாளாவட்டத்தில் சமூகத் துறையில் பார்ப்பனர்களுக்கு உள்ள ஆதிக்கமும் மேன்மையும் குறையாமல் காப்பாற்றப்படவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. உதாரணம் வேண்டுமானால் இந்த 50 வருஷ காலத்தில் காங்கிரசினால் ஏதாவது ஒரு சமூக சம்பந்தமான காரியம் செய்யப்பட்டிருக்கின்றதா என்று பார்த்தால் நன்றாய் விளங்கும். அது மாத்திரமல்லாமல் சமூக சீர்திருத்த சம்பந்தமாக வந்த தீர்மானங்களை யெல்லாம் காங்கிரஸ் தலைவர்கள் என்று சொல்லப்படும் படியான தோழர் சத்தியமூர்த்தி அய்யர் போன்றவர்களும், காங்கிரஸ் தேசீயப் பத்திரிகைகளான இந்து, சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளும் எதிர்த்தும்...

கராச்சி  தீர்மானத்தின்  யோக்கியதை

கராச்சி  தீர்மானத்தின்  யோக்கியதை

  1931  ஜுலை  19  இல்  வெளியான  குடி  அரசில்  “”இன்னும்  என்ன  சந்தேகம்?  பிராமணா!  உன்  வாக்குப்  பலித்தது”  என்ற  தலைப்  பெயருடன்  வெளியான  தலையங்கத்தில்  கராச்சி  காங்கிரசின்  தீர்மானங்களைப்  பற்றி  எழுதியிருப்பதிலிருந்து சிலவற்றைக் கீழே குறிப்பிட்டிருக்கிறோம்.  இதைப்பார்த்த  பிறகாவது  காங்கிரஸ்  தீர்மானத்திலிருந்து  நாம்  திருடிக் கொண்டோமா?  அல்லது  நமது  கொள்கைகளிலிருந்து  காங்கிரஸ்காரர்கள்  திருடிக்  கொண்டிருக்கிறார்களா  என்பது  விளங்கும். 1931  ஜுலை  19  தேதி  தலையங்கக்  குறிப்புகள்: காங்கிரஸ்  காரியக்  கமிட்டியும்,  தோழர்  காந்தியும்  சேர்ந்து  27731ந்  தேதி  செய்த  பிரஜா  உரிமை  தீர்மானமானது  நாம்  காங்கிரசையும்  அதன்  தலைவர்கள்  என்பவர்களையும்  பற்றி,  அவர்கள்  எப்படிப்பட்ட  அபிப்பிராயக்காரர்கள்  என்று  குற்றம்  சொல்லி  வந்தோமோ?  அதே  அபிப்பிராயம்  இனி  வேறு  யாரும்  வேறு  எவ்வித  வியாக்கியானமும்,  தத்துவார்த்தமும்  செய்ய  முடியாதபடி  நன்றாய்  வெளிப்படையாய்  அழுத்தந்  திருத்தமாய்  சொல்லப்பட்டு  விட்டது. “”கராச்சிக் காங்கிரசில் சமதர்மக் கொள்கை ஏற்பட்டு விட்டது”  என்று  வாய்த்தப்பட்டை  அடித்ததெல்லாம் ...

ஆச்சாரியாருக்கு ஆப்பு

ஆச்சாரியாருக்கு ஆப்பு

  சம்மட்டி பொப்பிலி ராஜா மீதும் ஜஸ்டிஸ் கட்சியார் மீதும் குற்றம் சாட்டி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பத்திரிகைகளில் வெளியிட்டிருக்கும் ஒரு நீண்ட அறிக்கையைப் பல முறை படித்துப் பார்த்தேன். அந்த அறிக்கை முழுதும் வக்கீல் நியாயங்களும், குதற்க வாதங்களும், குறும்பு குறிப்புகளும் நிறைந்து இருக்கின்றனவே ஒழிய உண்மை பசை எள்ளளவேனும் காணவில்லை. தமிழ்நாட்டுச் சக்ரவர்த்தியான தாம் கூறும் புளுகுகளையெல்லாம் தமிழ்நாட்டார் நம்பிவிடுவார்கள் என்ற நம்பிக்கையின் பேரிலேயே அவர் அவ்வாறு ஒரு அறிக்கை வெளியிட்டு இருக்கிறார் என்று தோற்றுகிறது. அவ்வறிக்கையில் முதன் முதலாக அவர் கூறுவதாவது. ஜஸ்டிஸ் கட்சியார், ஹரிஜனங்களுக்குச் சேவை செய்வதற்கென்று ஒரு ஸ்தாபனம் வைத்திருந்து பன்னிரண்டு மாத காலத்தில் தாமாகவே வசூலித்த பணத்திலிருந்து பள்ளிக்கூடங்களுக்காக எழுபத்தாறாயிர ரூபாயும், ஹரிஜன ஆஸ்டல்களுக்காக இருபத்தொன்பதினாயிர ரூபாயும் செலவழித்து, குழந்தைகளுக்கு ஐம்பதினாயிர ரூபாய்க்குப் புத்தகங்களும், துணி மணிகளும் வாங்கிக் கொடுத்து இவ்வாறு ஒரு வருடத்தில் “”தீண்டாமை” வகுப்பினருக்கு நான்கு லக்ஷ ரூபாய் வரை செலவிட்டிருந்தால்,...

1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது

1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது

  குடி அரசு ஆபீசு உண்மை விளக்கம் பிரசில் பதிப்பிக்கப்பட்ட “”பாதிரிகளின் பிரமச்சரிய லக்ஷணம்” என்னும் புத்தகங்கள் சர்க்காரால் பறிமுதல் செய்யப்பட்டு 1550 புத்தகங்கள் போலீசாரால் கைப்பற்றி இரசீது கொடுக்கப்பட்டது. இனி அப்புத்தகம் குடிஅரசு பதிப்பகத்திலோ, பகுத்தறிவு நூற் பதிப்புக் கழகத்திலோ கிடைக்காது. குடி அரசு  அறிவிப்பு  14.04.1935

விருதுநகர் தீர்மானங்கள்

விருதுநகர் தீர்மானங்கள்

  ஜஸ்டிஸ் கட்சியார் விருதுநகரில் தங்கள் வேலைத் திட்டமாய் நிறைவேற்றிய தீர்மானங்களைப் பற்றி தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அவை சமதர்மத் திட்டங்கள் என்றும், பொதுவுடைமைத் திட்டங்கள் என்றும் இவை ஜஸ்டிஸ் கட்சியாருக்கு ஒத்துக் கொள்ளா தென்றும் அக்கட்சி அதை ஜீரணம் செய்ய முடியாதென்றும் எழுதினார். மறுபடியும் அதே மூச்சில் அவர் ராஜ பக்தியோடு கூடிய பொது உடமைத் திட்டம் என்றும் எழுதிவிட்டார். இவை எப்படியோ அர்த்தமில்லாமல் தேர்தல் வெறியால் உளருவதாகக் காணப்பட்டாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் இந்தத் தீர்மானங்கள் எல்லாம் கராச்சி தீர்மானங்களில் இருந்து திருடியவை என்று எழுதி இருக்கின்றன. இவைகளின் கருத்தெல்லாம் ஜஸ்டிஸ் கட்சியைப் பற்றி பொது மக்கள் கேவலமாய் நினைக்க வேண்டும் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்பதை எவரும் அறிவார்கள். தோழர் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தல் அவசியத்துக்காக எதையும் சொல்லலாம் என்கின்ற நியாயத்தின் மீது ஏதோ உளறிக் கொட்டினார் என்பது நமக்கு நன்றாயத் தெரியும். இனி அவர் கொஞ்ச...

சென்னைத் தேர்தலும்  பார்ப்பனர் உத்தியோகமும்

சென்னைத் தேர்தலும் பார்ப்பனர் உத்தியோகமும்

  சென்னையில் இம்மாதம் 9ந் தேதி நடந்த சென்னை சட்டசபை உபதேர்தலில் ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாய் நிறுத்தப்பட்ட தோழர் ரங்கராமானுஜம் அவர்கள் பெருவாரியான ஓட்டுகளால் தோற்கடிக்கப் பட்டுப் போனார். இந்தத் தோல்வி இந்திய சட்டசபைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி போலவே குறிப்பிடத் தகுந்ததொரு தோல்வியாகும். இந்திய சட்டசபைத் தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்றுப் போனதற்கு என்னென்ன காரணங்களிருந்தனவோ, அவை பெரும்பாலும் சென்னை சட்டசபைத் தேர்தலுக்கும் இருந்து இருக்கிறது. இந்தக் குறைபாடுகள் இப்படியே இருக்குமானால் இனியும் ஏற்படப் போகும் எல்லாத் தேர்தலுக்கும் இதே மாதிரி பலன் தான் எதிர்பார்க்க முடியும். எதிரிகளின் விஷமப் பிரசாரமே தோல்விக்குக் காரணமாய் இருந்தாலும் எதிரிகளை “”தயவு செய்து  இனிமேல் விஷமப் பிரசாரம் செய்யாதீர்கள்” என்று நாம் அவர்களைக் கேட்டுக் கொள்ள முடியுமா? அல்லது எதிரிகளின் விஷமப் பிரசாரம் இன்று நேற்றுத்தான் ஆரம்பிக்கப் பட்டதா? நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே ஏன் பல நூற்றுக்கணக்கான வருஷங்களாகவே நமது எதிரிகள் (பார்ப்பனர்கள்) செய்து...

குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்

குல்லூக பட்டரின் குயுக்தி வாதம்

  தோழர் ராஜகோபாலாச்சாரியார் வக்கீல் தொழிலை விட்டுவிட்டாலும், அவருடைய அரசியல் வாதங்களில் எல்லாம், வக்கீல் போலவே நடந்து வருகிறார் என்பது வெளிப்படை. அவருடைய வாதங்கள் எல்லாம் குயுக்தி வாதங்களும், குதர்க்க வாதங்களுமாகவே இருப்பது வழக்கம். பொது ஜனங்களை ஏமாற்றும் விதத்தில் பொருத்தமான புளுகுகளுடன் கூடிய வரட்டு வாதஞ் செய்வதில் அசகாய சூரர் என்பது புதிதல்ல. உதாரணமாக ஆலயப் பிரவேச மசோதா விஷயமாக அவர் கூறும் வாதத்தைக் கவனித்தால் உண்மை விளங்கும். பொப்பிலி ராஜா அவர்கள், தமது தேர்தல் பிரசங்கத்தில் ஆலயப் பிரவேச மசோதா பாழானதற்குக் காங்கிரசே காரணம் என்று உண்மையை உரைத்தார். அதற்கு தோழர் சி.ஆர்.சொல்லியிருக்கும் பதில் மிகமிக விசித்திரமானது. “”ஆலயப் பிரவேசம் சம்பந்தமான ஒரு வழக்கத்தை மாற்றுவதற்கு ஒரு அகில இந்திய சட்டந்தான் தேவை என்ற கஷ்டமான நிலைமையை ஏற்படுத்தியதற்குப் பிரதம மந்திரியும் அவர் கட்சியும் தான் பொறுப்பாளி” என்று குற்றஞ்சாட்டுகிறார். இதன் உண்மையை ஆராய்வோம். ஆலயப் பிரவேச மசோதாவுக்கு...

ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்

ஏழைகளை வதைக்கும் காங்கிரஸ்காரர்கள்

  உப்பு வரியும் அரிசி வரியும் இப்பொழுது உப்பு வரி மணங்குக்கு ஒரு ரூபாய் நாலு அணாவாகும். இதைப் பனிரண்டு அணாவாகக் குறைக்கும்படி காங்கிரஸ்காரர்கள் இந்தியா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்கள். இத்தீர்மானம் அரசாங்கத்தாரால் ஒப்புக் கொள்ளப்படுகிறதா? அல்லது வைசிராய் பிரபுவின் “”வீட்டோ” அதிகாரத்தினால் தள்ளப்படுகிறதா? என்பது வேறு விஷயம். அதைப் பற்றி நாம் இப்பொழுது முடிவு கட்டப் போவதில்லை. இந்தத் தீர்மானம் நிறைவேற்றியவுடன், காங்கிரசுக்கு ஜே போட்டு வயிறு பிழைக்கும் பத்திரிக்கைகளுக்குத் தலைக்கனம் தாங்க முடியவில்லை. தலைகால் தெரியாமல் கொட்டை எழுத்துக்களில் பிரசுரித்துக் காங்கிரஸ் வாலாக்களின் வீரப்பிரதாபங்களை புகழ்ந்து துள்ளிக் குதிக்கின்றன. இதனால் காங்கிரஸ்காரர்கள் என்பவர்களின் பத்திரிகைகள் ஏழைகளின் பொருளாதார நிலையை விருத்தி செய்து அவர்களைக் “”குபேரர்கள்” ஆக்கிவிட்டதாகக் கும்மாளம் போடுகின்றன. பொது ஜனங்களை எந்த விஷயத்தைச் சொன்னாலும் உண்மையென்று நம்பக்கூடிய “”சோணகிரிகள்” என்று உறுதியாக நம்பி இருப்பதனாலேயே இவைகள் இம்மாதிரி செய்கின்றன என்பதில் சந்தேகம் இல்லை. காங்கிரஸ் ஏழை...

* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

* தோழர் ஈ.வெ. ராமசாமி தீர்மானங்கள்

  விவசாயிகளை கடன் தொல்லையிலிருந்து விடுவிக்கவும், அவர்கள் மேலால் கடன்காரராகி கஷ்டப்படாமல் இருக்கவும் வேண்டிய காரியங்களை கடனுக்காக கடன்காரர்கள் பூமியை கைப்பற்ற முடியாமல் செய்வது முதலிய மார்க்கங்களைக் கொண்டு சட்ட மூலமாகவும் வேறு முறைகள் மூலமாகவும் கூடுமானதை எல்லாம் செய்ய வேண்டும். அனியாய வட்டி லேவாதேவிக்காரர்களால் விவசாயிகள் அழிந்து போகாமல் இருக்கும்படி கூட்டுறவு நாணைய ஸ்தாபனங்களையும், நில அடமான பாங்குகளையும் தாராளமாக பெருக்கவேண்டும். நில அடமான பாங்கை மாகாணம் பூராவும் நல்ல அமைப்பில் ஏற்படுத்தி அதை ராஜாங்கத்தாரே நடத்த வேண்டும். சொத்து உரிமை சம்பந்தமாக விவகாரங்களைக் குறைப்பதற்காக சொத்து பாத்தியங்களைக் குறிப்பிடத்தகுந்த தெளிவான ஆதாரங்களை சர்க்காரார் வைத்திருக்க வேண்டும். அன்றியும் நிமித்த மாத்திரமாகவும் மலரணையாகவும் எழுதி வைக்கப்பட்டது என்று எதிர் வழக்கு வாதாடும் (ஆஞுணச்ட்டி) முறையை இல்லாமல் செய்ய வேண்டியதோடு அப்படிப்பட்ட வாதங்களை கோர்ட்டுகளில் ஒப்புக் கொள்ளாமல் இருக்கும்படியும் ஏற்பாடுகள் செய்துவிட வேண்டும். விவசாயக்காரர்கள் விளைவின் பயனை அனுபவிக்காமல் தடுக்கும் தரகர்மத்திய...

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

  விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடு சென்ற மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் திவான் பகதூர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் நடந்த விபரங்கள் மற்ற பக்கங்களில் காணலாம். 1929ம் வருஷம் நெல்லூரில் ஜஸ்டிஸ் மாகாண மகாநாடு கூடிய பின்பு தஞ்சையில் தலைவர் தேர்தலுக்காக என்று ஒரு மகாநாடு கூட்டப்பட்டு, அதிலும் தலைவர் நியமனம் தவிர வேறு ஒரு காரியமும் நடைபெறாமல் கலைக்கப்பட்ட பிறகு ஜஸ்டிஸ் மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு இப்போதுதான் முதன்முதலாக விருதுநகரில் கூடியது என்று சொல்லலாம். அன்றியும் விருதுநகர் மகாநாடானது மற்ற மகாநாடுகளைப் போல் தலைவர் ஸ்தானத்துப் போட்டிச் சண்டை மகாநாடாகக் கூடிக் கலையாமல் தக்கதொரு வேலைத் திட்டத்தை நிறைவேற்றி அமுலுக்குக் கொண்டுவர முடிவு செய்து கொண்டு இனிது முடிந்த மகாநாடு என்று சொல்லத்தக்க மாதிரியில் கூடிக் கலைந்திருக்கிறது. மகாநாட்டுக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் ஏராளமான மக்கள் விஜயம் செய்து குதூகலத்துடனும், தீவிர...

தெரிந்ததா  பார்ப்பனர்  சங்கதி?

தெரிந்ததா  பார்ப்பனர்  சங்கதி?

  சென்ற  27335ந்தேதி  மாலையில்  சென்னையில் நடந்த  காங்கிரஸ்  தேர்தல் கூட்டத்தில் தோழர்  டி. பிரகாசம்: ஜஸ்டிஸ்  கட்சியினரைக்  காட்டிலும்  ஆங்கிலேயர்கள்  ஆயிரம்  மடங்கு  நல்லவர்கள்,  வகுப்புவாரி  பிரதிநிதித்துவப்படி  உத்தியோகம்  பெற  அது  (ஜஸ்டிஸ்  கட்சி)  பாடுபட்டு  வந்திருக்கிறது.  ஆனால்  காங்கிரசின்  நோக்கம்  இதை  ஒழிக்க  வேண்டுமென்பதே  என்று  பேசியிருக்கின்றார். இதைக்  கொண்டாவது  காங்கிரஸ்  பார்ப்பனர்களின்  உண்மை  எண்ணம்  என்ன  என்று  தெரிந்து  கொண்டீர்களா? “”வகுப்புவாரிப்  பிரதிநிதித்துவத்தை  முக்கிய  கொள்கையாகக்  கொண்ட  ஜஸ்டிஸ்  கட்சி  அதிகாரத்தில்  இருந்ததனால்  பார்ப்பனரல்லாத  வகுப்பினர்கள்  உத்தியோகத்திற்கு  வந்து  விட்டார்கள்.  இக்கட்சியில்லா  விட்டால் எல்லா உத்தியோகங்களையும்  பார்ப்பனர்களே  கைப்பற்றி  ஏகபோகமாக  ஆளலாம்.  ஆதலால்  பார்ப்பனரல்லாதார்  கட்சியை  அடியோடு  ஒழித்து  விட்டால்  எந்த  வழியிலாவது  ஆங்கிலேயர்களை  மயக்கி  எல்லா  உத்தியோகங்களையும்  பார்ப்பனர்களே  வாங்கிக்கொள்ளலாம்.” இதுவே காங்கிரஸ் பார்ப்பனர்களுடைய அந்தரங்க நோக்கம்  என்பதையும்,  இதற்காகவே  ஜஸ்டிஸ்  கட்சியை  ஒழிக்க  மான  ஈனமின்றிப்  பொய்யும்  புரட்டும்  கூறிப்  பொதுஜனங்களை  ஏமாற்றுகிறார்கள்  என்பதையும் ...

தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை

தோழர் சத்தியமூர்த்தியின் தற்பெருமை

  குட்டு வெளிப்பட்டது இந்தியா சட்டசபை அங்கத்தினர்களின் அந்தஸ்து அரசியல் வேலைகள் சம்பந்தமான விவரங்கள் அடங்கிய புத்தகம் ஒன்று மாகாண அரசாங்கங்கள் கொடுத்த தகவல்களைக் கொண்டு இந்திய அரசாங்கத்தாரால் தயாரிக்கப்பட்டு அச்சிட்டு சர்க்கார் அங்கத்தினர் களுக்கு மாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்புத்தகத்தில் தன்னைப் பற்றி என்ன எழுதியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள தோழர் சத்தியமூர்த்தி அவர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு இந்திய அரசாங்க ஹோம் மெம்பர் கொடுத்த பதிலும் வருமாறு@ சத்தியமூர்த்தி@  என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் என்ன தகவல் கொடுத்திருக்கிறார்கள்? சர் ஹென்றி கிரெயிக்@  நான் நினைத்திருப்பதைக் காட்டிலும் கனம் மெம்பர் தன்னைப் பற்றி பிரமாதமாக நினைத்துக் கொண்டிருக் கிறார் போலிருக்கிறது. உண்மையாகவே, நான் கனம் மெம்பரைப் பற்றிய தகவல்களை வாசிக்கவில்லை. (சபையில் பலத்த சிரிப்பு) சத்தியமூர்த்தி@  அத்தகவல்களை வாசிக்காத பட்சத்தில், வரி செலுத்து வோரின் பணத்தை வீணாகச் செலவழித்து அதை அச்சடிப்பானேன்? சர். ஹென்றி கிரெயிக்@  அப்புத்தகத்தில் சில அம்சங்களை...

கல்வி மந்திரிக்கு ஜே!

கல்வி மந்திரிக்கு ஜே!

  பள்ளிக்கூடங்களில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை ஆண் பள்ளிக் கூடமாயின் ஜில்லாக் கல்வி உத்தியோகஸ்தர்களின் உத்திரவின்றியும், பெண் பள்ளிக்கூடமாயின் இன்ஸ்பெக்டர்சுகளின் உத்திரவின்றியும் 5 வருஷத்திற்கு முன்னதாக மாற்றக்கூடாதென்று உத்திரவு பிறப்பித்ததற்காகக் கல்வி மந்திரியைப் பாராட்டுகிறோம். இவ்வுத்திரவுப்படி கல்வி விஷயத்தில் நாம் எதிர்பார்க்கும் முழுப் பலனும் கிடைத்து விடாதென்பது நிச்சயமாயினும் நாம் சென்ற 10.2.35ல் நமது பத்திரிகையின் உப தலையங்கத்தில் குறிப்பிட்டிருந்தபடி அரசாங்கத்தார் இந்த உத்திரவையாவது பிறப்பித்ததற்காகச் சிறிது சந்தோஷம் அடைகின்றோம். பாடப் புத்தகங்களை மாற்றும் அதிகாரத்தைக் கல்வி யதிகாரிகளுக்கு ஒப்பித்திருப்பதைப் புத்தக வியாபாரிகள் தங்களுக்குச் சாதகமாக உபயோகித்துக் கொள்ளுவார்கள் என்பது மறுக்க  முடியாததாகும். புத்தக வியாபாரிகள் தங்களுடைய பணத்தைக் கொண்டும், மேல் உத்தியோகஸ்தர் களின் சிபார்சுகளைக் கொண்டும், கட்சி செல்வாக்குகளைக் கொண்டும், 5 வருஷங்களுக்கு முன்னதாகவே ஏதோ நொண்டிச் சமாதானங்களைக் கொண்டு பாடப் புத்தகங்களை மாற்றச் செய்து தங்களுடைய புத்தகங்களை திணித்துக் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே முயற்சிப்பார்கள் என்பதிலும் இந்த முயற்சியில்...

எனது அறிக்கையின் விளக்கம்

எனது அறிக்கையின் விளக்கம்

  உண்மை விளக்கம் பிரஸ் பதிப்பாசிரியரான தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்கள் மீதும், தோழர் ப. ஜீவானந்தம் அவர்கள் மீதும் காலஞ்சென்ற பகத்சிங்கால் எழுதப்பட்ட “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்?” என்ற புஸ்தகத்தை முறையே பிரசுரித்ததற்காகவும், மொழி பெயர்த்ததற்காகவும் இந்தியன் பினல் கோர்ட் 124ஏ செக்ஷன்படி ராஜ துவேஷக் குற்றம் சாட்டி கைதியாக்கி சிறையில் வைத்து வழக்குத் தொடர்ந்திருந்தது வாசகர்கள் அறிந்ததாகும். அவ்வழக்கு மேல்கண்ட இரு தோழர்களாலும் ராஜ துவேஷத்தை உண்டாக்கவோ, அதைப் பிரசாரம் செய்யவோ எண்ணங் கொண்டு அப்புத்தகம் பிரசுரிக்கவில்லை என்று அரசாங்கத்திற்குத் தெரிவித்து ராஜதுவேஷம் என்று கருதத்தகுந்த காரியங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டதற்காக மன்னிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதின் பேரில் அரசாங்கத்தார் வழக்கை வாபீஸ் வாங்கிக் கொண்டு தோழர்கள் ஈ.வெ.கி., ப.ஜீ. அவர்களை விடுதலை செய்துவிட்டார்கள். இந்தப்படி இந்த இரு தோழர்களும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு விடுதலையடைந்தார்கள் என்பதற்கு அவர்களே முழு ஜவாப்தாரிகள் அல்ல என்பதையும் பெரும்பான்மையான அளவுக்கு நானே...

ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை

ஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை

  ஜஸ்டிஸ் ஜனநாயகக் கட்சியையும், ஜஸ்டிஸ் கட்சியையும் மீண்டும் ஒன்று சேர்க்க மும்முரமான முயற்சி நடைபெற்று வருகின்றன. 22.3.35 மாலை 2 மணிக்குக் கூடிய ஜஸ்டிஸ் கவுன்சில் கட்சி இவ்விஷயமாக யோசித்து ஓர் சமரசக் கமிட்டியை நியமிப்பதென்று தீர்மானித்து, ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும், ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து 5 மெம்பர்களும் அக்கமிட்டியில் அங்கம் வகிப்பதற்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். குடி அரசு  பெட்டிச் செய்தி  24.03.1935

இந்தியாவைப் பற்றி பிரசாரம்

இந்தியாவைப் பற்றி பிரசாரம்

  அமெரிக்காவில் 15 வருஷங்கள் இருந்துவிட்டு இந்தியாவிற்குத் திரும்பியிருக்கும் ஆசிரியர் டாக்டர் ஆங்கில்ஸேரியா இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் படங்கள், நாடகங்கள், ரேடியோ, பொதுக் கூட்டம், பத்திரிகைக் கட்டுரைகள் முதலியவைகளின் மூலம் செய்யப்படும் பிரசாரத்தைப் பற்றி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சாரம் வருமாறு@ “”இந்தியா பேசுகிறது” என்ற படம் 1933ம் வருஷம் மார்ச், ஏப்ரல் மாத வாக்கில் தயாரிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் அதைப் பார்த்தோம். அமெரிக்க ஜனங்கள் இந்தியாவைப் பற்றி இழிவான அபிப்பிராயம் கொள்வதற்காகவே இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக நாங்கள் அபிப்பிராயப்பட்டோம். உடனே நகரசபைக்குப் புகார் செய்து கொண்டோம். ஆனால் படத்தைத் தடை செய்யுமுன் ஒரு வாரம் காட்டப்பட்டுவிட்டது. வேண்டிய தீங்கு மிழைத்துவிட்டது. ஆகையால் இந்தப் படத்தை நான் குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மற்றொரு வாரத்திற்குக் காண்பித்து காட்சியின் முடிவிலும் படம் எவ்வளவு பிற்போக்கானதென்பதைப் பற்றி ஒரு பிரசங்கம் செய்தேன். படம் தயாரித்தவர்கள் இந்திய விஷயங்களைப் பொய்ப் பிரசாரம் செய்திருக்கின்றனர்...

காங்கிரசின் வெற்றி

காங்கிரசின் வெற்றி

  பார்ப்பனர்கள் வெற்றி! ஜஸ்டிஸ் கட்சி வெற்றி பார்ப்பனரல்லாதார் வெற்றி!! அதிகாரத்துக்கு வந்துவிட்டால் உள்ள பதவிகளை இரு கட்சியாரும் அனுபவிப்பார்களே ஒழிய ஒருவரும் வேண்டியதில்லை என்று சொல்லி விடமாட்டார்கள்!!! ஆனால் காங்கிரஸ் ஆதிக்கத்திற்கு வந்தால் பதவி  உத்தியோகம் எல்லாம் பார்ப்பனர்களுக்கே போய் விடும். இதற்கு ஆதாரம் வேண்டு மானால் காங்கிரஸ் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில் (ஜஸ்டிஸ் கட்சி ஏற்படுவதற்கு முன்) உள்ள பதவிகளையும், உத்தியோகங்களையும் யார் அனுபவித்தார்கள் என்பதை உத்தியோக ஜாபிதாவை எடுத்துப் பாருங்கள். ஜஸ்டிஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தால் பார்ப்பனரல்லாதார் பதவிக்கு வருவார்கள். உத்தியோகங்களும் கொஞ்சமாவது பார்ப்பனரல்லாத வாலிபர்களுக்குக் கிடைக்கும். பார்ப்பன சூழ்ச்சியில் பட்டால் அடியோடு பார்ப்பனரல்லாதார் சமூகமே பாழாய்ப் போய்விடும். குடி அரசு  பெட்டிச் செய்தி  24.03.1935

கோயிலுக்குள் போகலாம்

கோயிலுக்குள் போகலாம்

  திருச்செந்தூர் கோவில் பிரவேச வழக்கில் ஹைக்கோர்ட்டுத் தீர்ப்பு 19.3.35ல் நீதிபதிகள் ராமேசம், ஸ்டோன்ஸ் இருவர்களும் திருச்செந்தூர் ஆலயப் பிரவேச வழக்கில் தீர்ப்புக் கூறினார்கள். இந்த வழக்கு சட்ட சம்பந்தமான வியாக்கியானத்தைப் பற்றிய தகராறில் பிரிவி கௌன்சில் வரையில் போய் மறுபடியும் ஹைக்கோர்ட்டுக்கு வந்தது. இப்போது கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பின்படி திருநெல்வேலி ஜில்லாவில் உள்ள திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் “”எண்ணெய் வாணியர்” என்ற ஜாதியாருக்கு ஆலயப் பிரவேச உரிமை உண்டு. வழக்கின் வரலாறு திருச்செந்தூரிலுள்ள சில வாணியர்கள் தமது வகுப்பினருக்குப் பிரதிநிதிகள் என்ற ஹோதாவில் சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தர்மகர்த்தாக்களையும் ஸ்தலத்தார் என்று சொல்லப்படும் சில உரிமையாளரையும் பிரதிவாதிகளாக்கி, அந்த ஆலயத்தில் மற்ற மேல்ஜாதி ஹிந்துக்கள் போகும் இடம் வரையில் போய் தரிசனம் செய்யத் தமக்கு உரிமை உண்டென்று வழக்குத் தொடர்ந்தார்கள். முதலில் இது தூத்துக்குடி சப் கோர்ட்டில் நடந்தது. ஆ÷க்ஷபம் பிரதிவாதிகள் பின் வருமாறு தாவாச் செய்தார்கள். வெளிப் பிரகாரத்தில்கூட...

கிருஷ்ணசாமி  ஜீவானந்தம் விடுதலை

கிருஷ்ணசாமி  ஜீவானந்தம் விடுதலை

  நமது ஆசிரியர் தோழர் ஈ.வெ. கிருஷ்ணசாமி அவர்களின் மீதும் தோழர் பி. ஜீவானந்தம் அவர்கள் மீதும் தொடரப்பட்டு இருந்த ராஜத் துவேஷ வழக்கு முன் குறிப்பிட்டிருந்தபடி 18.3.35 ந் தேதியில் விசாரணை நடைபெறவில்லை. அன்று ஜில்லா மாஜிஸ்ரேட் அவர்கள் தான் இன்னும் வழக்கு சம்பந்தமான ரிக்கார்டுகள் முழுவதையும் படித்துப் பார்க்கவில்லை யென்று கூறி 23.3.35ந் தேதிக்கு வாயிதா போட்டிருந்தார். 23.3.35ந் தேதியில் தோழர்கள் ஈ.வெ. கிருஷ்ணசாமியும் ஜீவானந்தமும் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுத்ததனால் விடுதலை செய்யப்பட்டார்கள். அந்த ஸ்டேட்மெண்டில், “”நான் ஏன் நாஸ்திகன் ஆனேன்” என்று பகத்சிங்கினால் எழுதப்பட்ட கடிதம் லாகூரிலிருந்து வெளியாகும் “”பீபிள்ஸ்” பத்திரிகையில் பிரசுரிக்கப் பட்டிருந்ததை அரசாங்கத்தாரால் பறிமுதல் செய்யப்பட்ட விஷயம் தங்களுக்குத் தெரியாதென்றும், ஆகவே அதை மொழி பெயர்த்ததும், அச்சிட்டுக் கொடுத்ததும் ராஜ துவேஷத்தை உண்டாக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் அல்ல வென்றும் அதற்காக மன்னித்துவிட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. குடி அரசு  செய்தித் துணுக்கு   24.03.1935

கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்

கராச்சி கலகத்திற்கு மதமே காரணம்

  இந்த வாரம் கராச்சியில் நடந்த கலகத்தைப் பற்றிய செய்தி முழுவதையும் தினசரிப் பத்திரிகைகளில் அநேகர் படித்திருக்கலாம். இக் கலகத்தினால் நிரபராதியான மக்களில் 40 பேர்கள் வரையில் போலீசார் சுட்டதன் பயனாக மாண்டதோடு சுமார் 100 பேர் வரையில் காயம் அடையும் படியும் நேர்ந்துவிட்டது. இது நேரடியான இந்து முஸ்லீம் கலகமில்லாமல் போலீசாருக்கும், முஸ்லீம்களுக்கும் உண்டான கலகமானாலும் இதற்குக் காரணம் இந்து முஸ்லீம் மதவெறி தான் என்பதை யாரும் மறுக்க முடியாது. நாதுராம் என்னும் இந்து ஒருவர், முஸ்லீம் மார்க்கத்தைத் தூஷித்து எழுதியதற்காக அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு, வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போது, அவரை அப்துல்காயம் என்னும் முஸ்லீம் ஒருவர் நடுக்கோர்ட்டிலேயே கொலை செய்த குற்றத்துக்காக வேண்டி அப்துல் காயத்திற்குக் கோர்ட்டாரால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இதுவே கலகத்திற்கு அடிப்படையான காரணமாகும். இதற்கு முன் பல தடவைகளில் வடநாட்டில் நடந்த கலகங்களுக்கு எல்லாம் மத சம்பந்தமே காரணமாக இருந்திருக்கிறது என்பதும்...

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

விருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு

  விருதுநகரில் ராமநாதபுரம் ஜில்லா ஜஸ்டிஸ் முதலாவது மகாநாடு இம்மாதம் 30, 31ந் தேதிகளில் சென்னை திவான் பகதூர் எ.ராமசாமி முதலியார் அவர்கள் தலைமையில் கூடப் போகிறது. இந்த மகாநாடானது ஜஸ்டிஸ் கட்சிக்கு இந்திய சட்டசபைத் தேர்தலில் ஒரு பெரிய தோல்வி ஏற்பட்ட பிறகும் அதைக் காரணமாக வைத்து ஜஸ்டிஸ் கட்சியின் எதிரிகள் ஜஸ்டிஸ் கட்சியை அடியோடு ஒழித்துவிடச் செய்த சூழ்ச்சியாகிய நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முறியடித்துப் பெரியதொரு வெற்றி ஏற்பட்ட பின்னும், பொது ஜனங்கள் யாவரும் ஜஸ்டிஸ் கட்சியில் இனி என்ன நடக்கப் போகிறது பார்ப்போம் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற நிலையில், விருதுநகரில், முனிசிபல் சேர்மன் தோழர் வி.வி.ராமசாமி அவர்களுடைய பெரியதொரு முயற்சியில் அவரையே வரவேற்புத் தலைவராய்க் கொண்டு, முதல் முதலாக ராமநாதபுரம் ஜில்லா முதலாவது ஜஸ்டிஸ் மகாநாடாகக் கூடுகிறது. இது பெயருக்கு ஜில்லா மகாநாடு ஆனாலும் பெரியதொரு பொது மகாநாடு என்றே சொல்ல வேண்டும். ஆகவே இதை நாம் வரவேற்கிறோம்....

கொச்சி  பிரஜைகளுக்கு  ஜே!

கொச்சி  பிரஜைகளுக்கு  ஜே!

  சர். சண்முகம் நமது  இயக்கத்  தலைவராகிய  சர்.ஆர்.கே. சண்முகம்  ஓ.இ.ஐ.உ.  அவர்கள்  பார்ப்பன  விஷமத்தின்  பயனாய்  கொச்சி  திவானாக  நியமனம்  பெற்றிருப்பது  கேட்டு  மகிழ்ச்சியடைகிறோம். தெளிந்த  அரசியல்  ஞானமும்,  நிர்வாகத்  திறமையும், பேச்சு  வன்மையும்,  பொருளாதார  நிபுணத்துவமும்,  சமதர்ம  உணர்ச்சியும்  அமையப்பெற்றவர்களில்  நமது  சண்முகம்  அவர்களுக்கு  மேம்பட்டவர்  இந்தியாவில்  வேறு  எவரும்  இல்லை  யென்பது  நமது  விரோதிகளாலும்  மறுக்க  முடியாததாகும். ஒரு  மாகாணத்தின்  கவர்னர்  பதவியை  வகிக்கக்கூடிய  யோக்கியதையும்  திறமையும்  உடைய  அவர்  ஒரு  சமஸ்தானமாகிய  கொச்சிக்கு  திவானாக  ஆனது  பற்றிக்  கொச்சி  சமஸ்தானம்  சந்தோஷம்  அடைய  வேண்டுமே  ஒழிய  தோழர்  சண்முகமோ  நாமோ  ஒரு பெரிய  பாக்கியமாகக்  கருதி  சந்தோஷமடைவதற்கில்லை. ஆயினும்,  வைதீகம்  நிறைந்த  சமஸ்தானமாகிய  அதில்  பாழும்  வைதீகக்  கொடுமையில்  பரம்பரையாகக்  கஷ்டப்பட்டு  வரும்  ஏழை  மக்களுக்கும்,  தாழ்த்தப்பட்ட  மக்களுக்கும்,  தாராள  மனப்பான்மையும்,  சமரச  நோக்கமும்  உடைய  சர். சண்முகம்  அவர்களின்  ஆட்சி  காலத்தில்  விமோசனம்  ஏற்படக்கூடும் ...

நம்பிக்கையில்லாத் தீர்மானமும்  70000 ரூபாயும்

நம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும்

  பார்ப்பன சூழ்ச்சிக்குச் சாவு மணி சென்னை ஜஸ்டிஸ் கட்சி மந்திரி சபையின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு 70 ஆயிரம் ரூபாய் செலவு செய்தும் மூன்று மாத காலமாக தெருத் தெருவாய் திரிந்து அலைந்து கட்டாதவர்கள் கால்களையெல்லாம் கட்டியும், கெஞ்சாதவர்கள் கைகளை இழுத்தெல்லாம் கெஞ்சியும், தொடக்கூடாதவர்கள் என்று கருதியிருந்தவர்களின் கால் தூசிகளையெலாம் பஞ்சாட்சரமாக நெற்றியில் தானே அணியும்படி செய்தும், போடாத கரணமெல்லாம் போட்டும், செய்யக்கூடாத அயோக்கியத் தனங்களை எல்லாம் செய்தும், காசு பெறாத அயோக்கியர்களையெல்லாம் ஆப்த நண்பர்களாகக் கொண்டு அலைந்தும் கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானமானது கடைசியில் கொண்டு வந்தவர்களையே நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் நம்பிக்கையில்லாதவர்களாக ஆக்கிவிட்டது. “குரங்கு தான் கெட்டதுமல்லாமல் வனத்தையும் கெடுத்தது’ என்று சொல்லும் பழமொழிபோல், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வர முயற்சி செய்த தோழர் முத்தைய செட்டியார், தான் கெட்டதுமல்லாமல் தோழர் சுப்பராயன் அவர்களையும் இழிவுபடுத்தி, அவருக்குக் கொஞ்சம் நஞ்சம் இருந்த மரியாதையையும் கெடுத்து...

பெண்கள்  நாடு

பெண்கள்  நாடு

  ஆண்களுக்கு  வேலையில்லை பாலித்தீவு  என்பது  கிழக்கிந்திய  தீவுகளில்  ஒன்றாகும்.  அந்த  நாட்டின்  நடவடிக்கை  மிகவும்  ஆச்சரியப்படத்தக்கதாகும்.  பெண்கள்  எந்த  வேலைக்கும்  லாயக்கற்றவர்கள்;  சமையல்  செய்வதற்கும்,  பிள்ளை  பெறுவதற்கும்  தான்  லாயக்கானவர்கள்  என்று  எண்ணிக்  கொண்டிருக்கும்  முழு  மூடர்களுக்கு  வெட்கத்தை  யுண்டாக்கத்தக்க  நாடாகும். அந்தத்  தீவில்,  பெண்மக்களுக்கே  எல்லாச்  சுதந்திரமும்  இருந்து  வருகிறது.  நம்  நாட்டில்  ஆண்  மக்களுக்கு  இருக்கின்ற  எல்லா  உரிமையும்  அந்நாட்டில்  பெண்  மக்களுக்கு  இருக்கின்றது. அத்தீவில்,  வயலில்  கலப்பை  பிடித்து  உழுவதும்  பெண்மக்கள்.  பிறர்  வயல்களில்  பண்ணையாளாக  இருந்து  வேலை  செய்வதும்  பெண்மக்கள்.  இவ்வாறு பயிர்த்தொழில் வேலை முழுவதையும் பெண்மக்களே செய்கிறார்கள். தானியங்களைச்  சந்தைகளுக்கு  எடுத்துக்  கொண்டுபோய்  விற்பனை  செய்து அதன் மூலம் வரும் பணத்தை வரவு செலவு செய்வதும் பெண்மக்கள்தான்.  இந்த  வேலைகளுடன்,  புருஷன்  மார்களையும்,  குழந்தைமார்களையும்  வைத்துப்  பாதுகாத்து  வருகின்ற  வேலையையும்  பெண்மக்களே  செய்து  வருகிறார்கள். இன்னும் தென்னைமரம் ஏறுதல், சந்தைகளிலும் கடைகளிலும்  வியாபாரம் ...

வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்

வைசு. ஷண்முகம் உண்ணாவிரதம்

  கானாடுகாத்தான் தோழர் வைசு. ஷண்முகம் அவர்கள் உண்ணாவிரதம் இருந்து வருவதன் நோக்கம், தனது கடன்காரர்கள் எல்லோருக்கும் நஷ்டமில்லாமல் ரூபாய் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், இன்சால்வெண்டாவதால் தனக்குக் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது; கடன்காரர்களுக்கும் கஷ்டமும் நஷ்டமும் உண்டாகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்பதற்காகவும்தான் உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்பதை முன்பே தெரிவித்திருக்கிறோம். அவர் உண்ணாவிரதம் ஆரம்பித்து சுமார் 16 தினங்களாகியும் அவருடைய ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்துச் செய்ய வேண்டிய கடன்காரர்கள் வீணாகத் தவணை கூறிக் காலதாமதம் செய்து கொண்டே வருகிறார்கள். தோழர் ஷண்முகத்தின் நண்பர்களும், உறவினர்களும், கடன்காரர்களின் கையெழுத்து வாங்குவதற்கு எவ்வளவோ முயற்சித்தும் இன்னும் முழுதும் முடிந்தபாடில்லை. தோழர் ஷண்முகம் எந்த நோக்கத்தோடு உண்ணாவிரதம் இருந்து வருகிறார் என்ற உண்மையைக் கடன்காரர்கள் இன்னும் உணரவில்லை. அவர்கள் இதை உணராமல் இருக்கும்படி செய்வதற்காகவே சிலரால் சூழ்ச்சிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. கடன்காரர்கள் உண்மையை உணர்வார்களானால் ஒப்பந்த உடன்படிக்கையில் கையெழுத்திடப் பின் தாங்க மாட்டார்கள்....

அன்னிய அரிசிக்குத் தடையா?

அன்னிய அரிசிக்குத் தடையா?

  தோழர்களே! இந்திய சட்டசபையில் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க வேண்டு மென்று தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. அதைப் பற்றி பொது ஜனங்கட்கு கூற வேண்டுமென்றும், அதனால் ஏழைகட்கு ஏற்படும் கஷ்டங்களைப் பற்றி எடுத்துக் கூறி அன்னிய அரிசிக்கு வரி விதிக்கக் கூடாதென்றும் இது போன்ற சங்கங்களால் தீர்மானங்கள் செய்து சர்க்காருக்கு அனுப்ப வேண்டு மென்றும் குடிஅரசில் இதற்கு முன் எழுதப்பட்டிருந்தன. அதன்படியே கோவை, திருச்சி, சென்னை முதலிய பல இடங்களில் தொழிலாளர்களால் அன்னிய அரிசிக்கு வரி விதித்தால் எங்கட்கு மிகுந்த கஷ்டமேற்படும் என்று தீர்மானித்து அரசாங்கத்தாருக்கு அனுப்பி இருக்கிறார்கள். ஏழை மக்களை உத்தேசித்து வேண்டுமென்றேதான் அரசாங்கத்தார் அன்னிய அரிசிக்கு வரி விதிக்க முன்வரவில்லை. ஆனால் நமது பிரதிநிதிகளாக இந்திய சட்டசபைக்குச் சென்றிருப்பவர்கள் தான் அதற்குக் கவலை எடுத்துக் கொண்டு வரிவிதிக்க வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்கள். இதை நாம் கண்டிக்க வேண்டாமா? நமது உண்மையான நிலையை சர்க்காருக்கு எடுத்துக்காட்ட வேண்டாமா? இதை இப்படியே...

இது தர்மம் ஆகுமா?

இது தர்மம் ஆகுமா?

  இப்படிப்பட்ட ஹிந்து மதம் யாருக்கு நன்மை தரும்? “”மநு தர்ம சாஸ்திரம்” என்பது நமது மதத்திற்கே ஆதாரமாக கையாண்டு வருவதும், நடைமுறையில் அநுஷ்டிக்கப்பட்டு வருவதும், அரசாங்கத்தாரால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற சிவில் கிரிமினல் சட்டதிட்டங் களால் அநுசரிக்கப்பட்டதுமாகும். அதிலுள்ள நீதிகளும், விதிகளும், எந்தவிதமான ஒழுங்கு முறையில் முன்னோர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு மக்கள் அடிமைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதை யாரும் உணர்ந்து கொள்ளுவது அவசியமாகும். ஆதி திராவிட சமூகம் முதல், சகல அடிமைப்படுத்தப்பட்ட சமூகத்தார்கள் வரை இந்த மநுதர்மத்தை நீதியாகக் கொண்ட இப்படிப்பட்ட கொடுமையான இந்துமதத்தில் இருப்பதைவிட பிற மதத்தில் சேர்ந்து தங்களுக்கு விடுதலையைத் தேடிக் கொள்வது சரியா? பிசகா? என்பதையும் அல்லது இம்மாதிரியான அநீதியான சட்ட திட்டங்கள் அமைந்துள்ள “”இந்து” மதத்திலேயே அடிமைப்பட்டாகிலும் வாழ வேண்டுமா என்பதையும் கீழ்வரும் மநுதர்ம விதிகளைப் படித்து முடிவு செய்து கொள்ளும்படி கோருகிறோம். “பிராமண குலத்தில் பிறந்தவன் ஆசாரமில்லாதவனாயினும், அவன் நீதி செலுத்தலாம். சூத்திரன் ஒரு போதும் நீதி...

மடங்களுக்கு ஆபத்தா?

மடங்களுக்கு ஆபத்தா?

  சுயநலக்காரர்களின் எதிர்ப்பு நமது நாட்டில் சமயங்களைப் பாதுகாப்பதற்கு என்னும் பெயரோடு உள்ள மடங்களைப் பற்றியும், அந்த மடங்களின் அதிபர்களாக இருக்கின்ற ஆச்சாரியார்கள், தம்பிரான்கள், ஜீயர்கள் போன்ற அதிபதிகளைப் பற்றியும், அவர்கள் தங்களுடைய ஆதிக்கத்தில் இருக்கும் சொத்துக்களை எந்தெந்தக் காரியங்களுக்கு உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பதைப் பற்றியும், அவர்கள் மதத்தின் பெயரால் தங்களுக்கு இருக்கும் செல்வாக்குகளை எந்தெந்த சுயநலமுள்ள காரியங்களுக்காகத் துஷ்பிரயோகம் பண்ணி வருகிறார்கள் என்பதைப் பற்றியும் நாம் அதிகமாக எடுத்துக் கூற வேண்டிய அவசியம் இல்லை என்றே கருதுகிறோம். இன்று, இந்த மடங்களும், அவற்றின் பணமும், செல்வாக்கும், நமது நாட்டில், சாதிச் சண்டைகளையும், மதச் சண்டைகளையும் இப்பொழுது இருப்பதைக் காட்டிலும் இன்னும் பல மடங்கு அதிகமாக வளர்த்துப் பலப்படுத்தவே உபயோகப்படுகின்றன. இந்தச் சண்டைகளைப் பலப்படுத்துவதன் மூலம் தங்களை உயர்ந்த சாதியினராகவும், உயர்ந்த மத ஒழுக்கமுடையவராகவும் பாமரர்களாகிய பொதுஜனங்களுக்குக் காட்டி, அவர்கள் ஏமாறும்படி செய்து பணம் பறித்து வாழ்கின்ற பார்ப்பனர்களுக்கு இன்னும் செல்வாக்கையும்,...